வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 பேர்காயமடைந்துள்ளனர். பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பிற்பகல் 4:30 மணிவரை தீவிர தாக்குதலை நடத்தினர்.இத்தாக்குதலில் படைத்தரப்பில் இழப்புக்கள் ஏற்பட, அவர்கள் பின்வாங்கிச் சென்றனர்.
இதில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

வவுனியா மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவை படையினரிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா அரசு அவசர உத்தரவு
[ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008, 10:49 மு.ப ஈழம்] [க.நித்தியா]
வவுனியா மருத்துவமனையின் வெளி நோயாளர் பிரிவை உடனடியாக படையினரிடம் ஒப்படைக்குமாறு வவுனியா மருத்துவமனை பணிப்பாளருக்கு சிறிலங்கா அரசால் நேற்று சனிக்கிழமை அவசர பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிப்புரைக்கு அமைய வவுனியா பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் படையினருக்கான சிகிச்சைப் பிரிவாக மாற்றப்படுவதுடன் படையினர் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான அனைத்து வசதிகளும்
செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்த பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு இன்று முதல் புதிய கட்டடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
பொதுமக்களுக்கான சிகிச்சைகள் புதிய கட்டடத்திலுள்ள வெளிநோயாளர் பிரிவிலே இன்று முதல் நடைபெறும்.
வன்னியில் நடைபெற்று வரும் கடும் மோதல்களில் பெருமளவு படையினர் காயமடைந்து வருவதால் வவுனியா இராணுவ மருத்துவமனையிலும் அனுராதபுரம் மருத்துவமனையிலும் பாரிய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், வவுனியா மருத்துவமனையின் தற்போதைய வெளிநோயாளர் பிரிவு உடனடியாக 'வார்ட்' ஆக மாற்றப்பட்டு காயமடைந்த படையினர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்படவுள்ளது.
இதற்குரிய அவசர உத்தரவு நேற்று அரசிடமிருந்து வவுனியா மருத்துவமனை பணிப்பாளருக்கு கிடைத்துள்ளதுடன் பொதுமக்களுக்கான புதிய வெளிநோயாளர் பிரிவை இன்று காலை புதிய கட்டடத்தில் திறக்கும் விதத்திலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பழைய வெளிநோயாளர் பிரிவில் சகல வசதிகளும் செய்யப்பட்டு அங்கு போர்முனையில் காயமடையும் படையினருக்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.
ஆதாரம்: தினக்குரல்

No comments:
Post a Comment