Friday, 22 August 2008

தமிழீழ தேசபக்த விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்

* தமிழீழ தேசபக்த விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!
*விடுதலைப் புரட்சியை வளர்த்தெடுப்போம்!
*விடுதலைப்புலிகள் தலைமையின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை முறியடிப்போம்!!
''சர்வதேச சமூகம்'' கைவிட்டதால் மக்களைத்தேடும் புலிகள் தலைமை.ENB
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்: பா.நடேசன்
போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள்: தமிழினி
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழர்கள் ஒரே சக்தியாக அணிதிரண்டு எதிரிக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும்: பா.நடேசன்
[வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 08:32 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழ் மக்களின் எல்லாப்பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்று தமிழீழ
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக்குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றுகையில்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
போர் எழுச்சிக்குழுக்களின் கருத்துக்கள் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை தந்துள்ளது.
விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலும் மக்களின் பலத்தின் ஊடாகத்தான் விடுதலைப் போராட்டம்
பலமான அமைப்பாக வளர்ந்து விரிந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் முப்பது ஆண்டு காலமாக வல்லரசுகளின் உதவியுடன் இயங்கும் சிறிலங்காப் படைகளுடன் எதிர்
நின்று போரிட்டு வந்துள்ளது.
அக்கால கட்டத்தில் எல்லாம் போராட்டத்திற்கு மக்கள் பலமாக கவசமாக இருந்ததால்தான் தமிழீழ விடுதலைப் போராட்டம்
உலகத்தில் பேசப்படும் தேசியப் போராட்டமாக மாறியுள்ளது.
அறவழிப் போராட்டமாக இருந்தாலும் ஆயுதப் போராட்டமாக இருந்தாலும் தமிழ் மக்களின் உரிமையாக தமிழீழம் தான் தீர்வு
என்று உலகிற்கு சொன்னவர்கள் எமது மக்கள்.
மக்கள் சக்தி ஒரே சக்தியாக இருக்கும் வரையும் எந்த வல்லரசாலும் எந்த வல்லாதிக்க சக்திகளாலும் எந்த விடுதலைப்
போராட்டத்தையும் ஒடுக்கமுடியாது என்பது உலக வரலாறு எமக்கு சொல்லும் பாடமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக வியட்நாம்
விடுதலைப் போராட்டத்தை பார்க்கமுடியும்.
அந்த வகையில்தான் தமிழீழ விடுதலைப் போராட்டமும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எந்த வல்லரசுகள் உதவி செய்தாலும்
சிங்கள அரச பயங்கரவாதம் எந்த வடிவில் தமிழீழத்திற்கு வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து வெற்றிகொண்டவர்கள் எமது
மக்கள். இது வரலாறு தந்த உண்மை.
யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது விடுதலைப் புலிகள் பலவீனமாகி விட்டார்கள் என நினைத்தனர். அடுத்த
கட்டமாக முல்லைத்தீவை வெற்றிகொண்டு மக்கள் விடுதலைப் புலிகளுக்கு துணையாக நிற்கின்றனர் என்று நாம் உலகிற்கு
ஒரு செய்தியைச் சொன்னோம்.
ஓயாத அலைகள் ஒன்றின் மூலமும் மக்கள் போராளிகளோடு போராளிகளாக அணிதிரண்டனர்.
ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் மக்கள் படையாக தென்மராட்சிக்குள்ளும் ஒட்டுசுட்டான் கிளிநொச்சி
மாங்குளம் பிரதேசத்திலும் சிங்களப் படைக்கு எதிராக நின்று பல வரலாற்று சாதனைகளைப் படைத்தவர்கள் மக்கள் படையினர்.
ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் சிங்களப் படைக்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்தியவர்கள் மக்கள் படையினர்.
இவர்களுக்கு வரலாறு உண்டு.
தமிழீழ விடுதலைப் போராட்டாத்தை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் பக்கத்துணையாக இருந்து செயற்பட்டவர்கள் எமது மக்கள்
படையினர்தான்.
இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மக்களின் ஆதரவு இருக்கும் வரை
அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்று குறிப்பிட்டதுபோல் இது நல்ல எடுகோளாக அமையும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மக்களில் இருந்து அந்நியப்படுத்தலாம் என்று நினைத்து அவர்களால் முடியாமல் போனது.
மக்களும் புலிகளும் ஒன்றுதான் என்று உலகத்தில் உள்ள இராஜதந்திரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும். தமிழ் மக்கள்
அனைவரும் எல்லாப் பலத்தினையும் ஒருங்கிணைத்து எதிரிக்கு ஒரே சக்தியாக தக்க பதிலடி கொடுக்கமுடியும் என்பதை காட்டி
நிற்கின்றது.
மக்கள் அணிதிரண்டு விடுதலையுடன் ஒன்றிணைந்து நிற்கும் வரை எந்தச் சக்தியாலும் எம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
சிங்களத்தின் அரச படைகள் பலவீனமான நிலையில் தான் தற்போது அகலக்கால் வைத்துள்ளனர். இதன் எடுத்துக்காட்டாகவே
சிறிலங்காப் படையினர் தீவிர படைச்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள அரசியல்வாதி ஒருவர் "சிங்களப்படை புலிகளின் பொறிக்குள் கால் வைக்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார். இது
மீளமுடியாத கால்வைப்பு என்று உலகில் உள்ள அனைவருக்கும் இது தெரியும். அவர்கள் பலவீனமான நிலையில் அகலக்கால்
வைத்து வருகின்றனர். நல்ல பொறிக்குள் வருகின்றனர். இதனை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் மக்கள் படையாக
எழுச்சிகொள்ள வேண்டும்.
வீரத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்கள். மக்கள் அனைவருக்கும் ஆயுதம் புதிதல்ல. எதிரியின் எறிகணைகள் புதிதல்ல.
வானூர்திகள் புதிதல்ல. மக்கள் ஆயுதங்கள் எல்லாம் கற்றவர்கள். தற்போது மக்கள் படையாக எழுந்து பலவீனமாக அகல கால்
பதிக்கும் சிறிலங்காப் படைக்கு வன்னியில் புதைகுழி அமைத்து வல்வளைப்பில் உள்ள மக்களை மீட்கவேண்டும்.
சிறிலங்காப் படையின் வல்வளைப்பில் பாரிய இனச்சுத்திகரிப்பினை சிறிலங்காப் படைகள் மேற்கொண்டிருக்கின்றனர். ஊடகங்கள்
மூலம் உலகிற்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டு இங்கு இனச்சுத்திகரிப்பினை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
எமது மக்களை அழித்தொழிப்பதில் சிங்களப் படையும் அரசம் கங்கணம் கட்டி நிற்கின்றன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும்
காலம் இதுவாகும். சிங்களப் படையின் கொடூரத்திற்கு முடிவு கட்டவேண்டும் எனில் கடந்த காலத்தை போன்று எமது மக்கள்
அனைவரும் அணிதிரளவேண்டும் என்றார் அவர்.

போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள்
தமிழினி [வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2008, 07:53 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
தமிழ் மக்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின்
மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்நாள் புதன்கிழமை நடைபெற்ற போர் எழுச்சிக் குழுக்களின் சிறப்பு ஒன்றுகூடலில் கருத்துரை
நிகழ்த்துகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
தமிழீழ விடுதலைப் போர் எழுச்சிகொண்ட காலகட்டத்தில் இந்த போர் எழுச்சி ஒன்றுகூடல் நடைபெறுவது சிறப்பாகும். விடுதலைப்
போரின் நீண்ட பயணத்தில் முக்கியமான காலகட்டத்தில் இப்போது நாம் வந்துள்ளோம்.
தமிழ்மக்கள் இன்று இடம்பெயர்ந்து சொல்லொண்ணா துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இடப்பெயர்வு வாழ்வு என்பது தமிழருக்கு புதிதல்ல. ஆனால் இடப்பெயர்வால் அனுபவிக்கின்ற துன்ப துயரம் மிகவும்
கொடுமையானது.
தமது சொந்த இடங்களுக்கு மக்கள் செல்லவேண்டும் என்றால் எதிரியின் வன்பறிப்பில் உள்ள மண்ணை மீட்டு எமது மண்ணில்
காலூன்றி நிற்கும் எதிரியை எமது மண்ணுக்கு உரமாக்க வேண்டும். இதற்கு அனைத்து தமிழ்மக்களும் தயாராகவேண்டும்.
சிறிலங்காவின் அனைத்து வளங்களையும் எதிரி போருக்குள் ஈடுபடுத்துகின்றான். தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களப்
படைகள் எதனையும் செய்யத் தயாரான நிலையில்தான் உள்ளது.
தற்போது பெண்கள் என்ற விம்பத்தை உடைத்தெறிந்து போராளி என்ற புதிய தோற்றத்துடன் கையில் ஆயுதம் ஏந்தி
களமுனகளில் வீராவேசமாக எதிரிக்கு எதிராக தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் தமிழீழப் பெண்கள்.
தமிழ் மக்கள் அனைவரும் இங்கு ஏதோ ஒருவிதத்தில் பயிற்சி பெற்றவர்களாகத்தான் இருக்கின்றனர். தமிழ் மக்கள்
ஒவ்வொருவரும் களமுனையில் இருக்கின்ற உணர்வுடன் வாழ வேண்டும்.
அனைவரும் போருக்கு தயாராகவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். சிறிலங்காப் படைகள் தமிழ் மக்கள் மீது உலகத்தில்
எங்குமில்லாதவாறு மனித அவலத்தை நிகழ்த்துகின்றது.
போராடினால்தான் தமிழ்மக்கள் உயிர்களையும் வாழ்கையையும் பாதுகாக்க முடியும். இதற்காக அனைவரும் தயாராக வேண்டும்
தமிழ்மக்கள் அனைவரும் வீரியம் பெற்றவர்களாக செயற்பட்டு துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கு துன்பங்களைக் கொடுக்க
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார் அவர்.
57 ஆவது டிவிசன் மீது தாக்குதல் நடத்த கிளிநொச்சியில் புலிகளின் படையணிகள் குவிப்பு
[புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 06:56 பி.ப ஈழம்] [க.நித்தியா]
சிறிலங்காப் படையின் 57 ஆவது டிவிசன் படையணி மீது பாரிய தாக்குதலினை நடத்துவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது
சிறப்பு படையணிகளை கிளிநொச்சியில் குவித்திருப்பதாக படைத்துறை ஆய்வு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சிறிலங்காப் படையின் சகல படையிணிகள் மீதும் தாக்குதல் நடத்த முடியாவிட்டாலும், வலிந்த தாக்குதலை மேற்கொண்டு வரும்
முக்கிய படையணியான 57 ஆவது டிவிசன் மீது பாரிய தாக்குதலினை நடத்தி, சிறிலங்காப் படையணிகளின் மத்தியில் தற்போது
அதிகரித்துள்ள மன உறுதியை உடைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் தமது காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இதற்காக, மணலாறு பகுதியிலிருந்து தமது மோட்டார் படையணியை கிளிநொச்சிக்கு கொண்டுவந்துள்ளதுடன் தமது ஏனைய
படையணிகளை இணைத்து ஒரு பாரிய தாக்குதலை நடத்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதாயின் தமது வழமையான போர்த் தந்திரோபாயமான களமுனையில் பெட்டி அடித்து
தாக்குதல் நடத்தும் முறையையே புலிகள் கைக்கொள்வார்கள். ஆனால், அவ்வாறான கள உத்தியை படையினர் தமது பல்குழல்
ஏவுகணை தாக்குதல்கள் மூலம் உடைக்கும் உபாயத்தை படையினர் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது களமுனையில் முன்னேற்றம் கண்டுவரும் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தி, அவர்களின் மன
உறுதியை உடைத்து, அவர்களின் போர்த் தந்திரோபாயங்களை தவிடுபொடியாக்குவதற்கு விடுதலைப் புலிகள் விரும்பினால்
அவர்கள் உடனடியாக - தொடர்ச்சியான - தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.
இதேவேளை, நாச்சிக்குடாவை நோக்கி முன்னேறும் படையினருடன் சிறிலங்காப் படையின் சிறப்பு படையினரும் கொமாண்டோ
படையணிகள் மூன்றும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.
அவை புலிகளின் விநியோகப் பாதைகளை இலக்குவைத்து பதுங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

No comments: