Monday, 25 August 2008
நேபாளத்தில் புதிய மன்னர்
நேபாளத்தில் புதிய மன்னர்.
*நேபாள பழங்குடி விவசாயமக்களின் ஜனநாயக கிளர்ச்சியை இடைவழிச் சமரசம் செய்து அதிகாரத்தில் அமர்ந்துள்ளது பிரசாந்தா கும்பல்!
*மன்னராட்சி மீதான மக்கள் வெறுப்பைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரசாந்தா கும்பல் ஏகாதிபத்திய இந்திய விஸ்தரிப்புவாத நலன்களை நேபாள மக்கள் மீது திணிக்க முயல்கிறது.
* புரட்சிகர நேபாள பழங்குடி விவசாயமக்களால் பிரசாந்தா கும்பலின் எதிர்ப்புரட்சி முறியடிக்கப்படும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நேபாள பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்ட் தலைவர் பிரசந்தா
[16 - August - 2008]
நேபாளத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட தன்பின்னரான முதலாவது பிரதமராக மாவோவாத கம்யூனிஸ்டுகளின் தலைவர் புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் நிருணய சபையினால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். முடியாட்சிக்கு எதிராக ஒரு தசாப்த காலமாக ஆயுதப் போராட்டம் நடத்திய நேபாள மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான 53 வயதான பிரசந்தா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான ஷெர்பகதூர் டியூபாவை 351 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 601 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல்
நிருணய சபையில் நேற்றைய தேர்தலில் 577 உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். பிரசந்தாவுக்கு இதில் 464 வாக்குகள் கிடைத்தன. நேபாளத்தின் மற்றைய பிரதான இடதுசாரிக் கட்சியான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியும் மதேசி உரிமைகள் மக்கள் அமைப்பும் பிரசந்தாவை ஆதரித்தன. ஷெர்பகதூர் டியூபா சாதாரண பெரும்பான்மையைக்கூடப் பெறத் தவறிவிட்டார். அவருக்கு 113 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. அவரின் தோல்வி நேபாள அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்திவந்த நேபாள காங்கிரஸ் எந்தளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
பிரதமர் தெரிவு முடியாட்சியின் முடிவுக்குப் பின்னர் சமஷ்டி ஜனநாயகக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நேபாளத்தில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் கடந்த 4 மாதங்களாக நீடித்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
பிரசந்தாவுக்கு முன்னர் பிரதமராக இருந்த நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா மாவோவாதிகளின் நெருக்குதல்களையடுத்து பதவியை இராஜினாமா செய்துவிட்டு காபந்து பிரதமராகவே இருந்துவந்தார். நேபாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு சார்க் உச்சிமகாநாட்டிலும் அவர் கலந்துகொண்டார்.
பிரசந்தா தலைமையிலான நேபாளத்தின் புதிய அரசாங்கத்தில் மாவோவாத கம்யூனிஸ்டுகள் நிதியமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு உட்பட முக்கியமான பல அமைச்சுக்களைப் பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Of Maoism & markets
Published: August 15 2008 09:06 Last updated: August 15 2008 15:40
The world now has its first elected Maoist premier. Fittingly for a belief once dubbed “a third way” between communism and capitalism, investors cheered: the $6bn Nepal stock market rose ahead of Friday’s vote.
Communist leadership need not handicap stock markets. China, where Mao Zedong developed his ideology, was home to the world’s best performing market in 2007. Vietnam’s benchmark index, named after communist revolutionary Ho Chi Minh (now turning in his embalming
fluids), ranked top in 2006.
Prachanda, Nepal’s new leader, has a full agenda. Civil war has killed and displaced thousands. Inflation and unemployment are ravaging the $10bn economy. Perhaps Nepal’s stock market prospects are not so hot after all.
நேபாள மாவோயிஸ்டுகள்
ஆயுதப் போராட்டத்தை விட்டுவிட்டுத் தேர்தல் முறைக்கு வந்தபோது பேச்சுவார்த்தைகளில் நெகிழ்ச்சியுடன் பலவற்றை விட்டுக்கொடுத்த போதும் மூன்று அம்சங்களில் அவர்கள் உறுதியாயிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இவற்றை எதிர்த்த மைய நீரோட்டக் கட்சிகளையும் தம் பக்கம் இழுப்பதில் வெற்றி பெற்றனர். அந்த மூன்று அம்சங்கள்:
1. முடியாட்சி ஒழிக்கப்பட்டு குடியாட்சி அமைக்கப்பட வேண்டும்.
2. தேர்தல் மூலம் புதிய அரசியல் சட்ட அவை உருவாக்கப்பட வேண்டும்.
3. எல்லோரும் பங்கேற்கும் இடைக்கால அரசு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இவை நிறைவேற்றப்பட வேண்டும்.
மாவோயிஸ்டுகள் இது 21ம் நூற்றாண்டு என்பதைப் புரிந்துகொண்டு தமது புதியபாதையை வகுத்தனர். தம்மை மாவோயிஸ்டுகள் என அழைத்துக்கொண்டபோதும் 20ம் நூற்றாண்டுக்கான மாவோவின் பாதை அப்படியே இன்று பொருந்தாதென அறிவித்தனர்.
அதனாலேயே நேபாளப் பாதை ‘பிரசாண்டா பாதை’(மாவோ பாதையல்ல) என அழைக்கப்படுகிறது.
மாவோவின்
‘புதிய ஜனநாயக’த்திற்குப் பதிலாக 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம்” என்கிற கருத்தாக்கத்தை வைக்கின்றனர்.
‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்பதற்குப் பதிலாக “பல கட்சி ஆட்சிமுறையே பரவலான சகல மக்களின் அதிகாரத்திற்கும் வழிவகுக்கும்” என்கின்றனர்.
சொல்கிற அனைத்தையும் அவர்கள் நேர்மையாக நடைமுறைப் படுத்துகின்றனர். பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் முதலியவற்றைக் கால அவகாசம் பெறும் யுக்தியாகவின்றி மிக்க நேர்மையோடு அவற்றை செயல்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.மார்க்ஸ்
_______________________________
நன்றி சத்தியக்கடதாசி: ''1983 ஜுலைப் படுகொலைகளை நினைவுகூர்ந்து 27 ஜுலை 2008 அன்று பிரான்ஸில் நடைபெற்ற ‘நெடுங்குருதி’ நிகழ்வில் தோழர்.அ.மார்க்ஸ் ஆற்றிய உரைவீச்சு''
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment