Saturday 23 August, 2008

புலம் பெயர்ந்த தமிழர்களின் அவலமான அரசியல்!

ழத்தில் நடப்பது மனித உரிமை மீறல் அல்ல, தேசிய ஒடுக்குமுறை!
ராக்கில் ஒஸ்ரேலிய துருப்புக்கள் செய்வதை, ஈழத்தில் சிறீலங்கா துருப்புக்கள் செய்கின்றனர்!!
புலம் பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகள் கட்டவிழ்க்கும் தேசிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடாமல் தங்கள் சொந்த தேசத்தின் விடுதலையை அடைய முடியாது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மெல்பேர்ணில் நடைபெற்ற
தவிக்கும் தாயக உறவுகளுக்கு தயவு கோரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 10:35 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா அரச படைகளின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு அழுத்தம் வழங்கும் முகமாக அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள விக்டோரியா மாநில நாடாளுமன்ற மண்டபத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.குளிர் காற்றுடன் கூடிய கடுமையான காலநிலையால் வெளியிடத்தில் மக்கள் ஒன்றுகூடலொன்று சாத்தியமாகுமா என்ற சந்தேகம் நிலவியபோதும், மெல்பேர்ண் தமிழ் இளையோர் அமைப்பினால் மிகக்குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், தயவின்றி தவிக்கும் தாயக உறவுகளுக்கு அவுஸ்திரேலிய அரசு உதவவேண்டும் என்று கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.சிறிலங்கா அரசின் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களின் உண்மை நிலவரத்தை எடுத்துக்கூறும் துண்டுப்பிரசுரங்களை இளையோர் அமைப்பினர் விநியோகித்தனர்.தாயகத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் பயங்கர படுகொலை சம்பவங்களின் ஒளிப்படங்கள் நிகழ்வில் வைக்கப்பட்டிருந்தன.நிகழ்வில் முதலில், மெல்பேர்ண் இளையோர் அமைப்பின் சார்பில் கெளரிகரனின் வரவேற்புரையைத் தொடர்ந்து, விக்டோரியா தமிழ் சங்கத் தலைவர் மகேன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மெல்பேர்ண் கலை, பண்பாட்டுக் கழகத்தை சேர்ந்த சந்திரன் பேசினார். அதனைத் தொடர்ந்து, தமிழர் புனர்வாழ்வு கழக தலைவர் ஈஸ்வரன் கணபதிப்பிள்ளையின் செய்தி அங்கு வாசிக்கப்பட்டது.அடுத்து, விக்டோரியா மூத்த குடிமக்கள் சங்கத்தின் சார்பாக குணரட்ணம் உரையாற்றினார். இவரைத் தொடர்ந்து, ஈழத்தமிழ் சங்க முன்னாள் தலைவர் நித்தியகீர்த்தி, மெல்பேர்ண் இளையோர் அமைப்பு சார்பாக றமணன், மெல்பேர்ண் கலை பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் நந்தகுமார், சோசலிச முன்னணியைச் சேர்ந்த கிரிஸ், மெல்பேர்ண் தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பில் ரமேஸ் ஆகியோர் உரையாற்றினர்.தாயகத்தில் தமிழ் உறவுகளுக்கு இழைக்கப்படும் இன்னல்களை உருக்கமாக எடுத்துக்கூறிய இவர்கள், வேறு நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கும் மனிதாபிமான தேவைகளுக்கும் ஓடோடிச் சென்று உதவும் அனைத்துலக சமூகம், இன்று லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்து பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களின் நிலைமையை கண்டும் காணாமல் இருப்பது கவலையளிக்கிறது என்று கூறினர்.புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இடப்பெயர்வுகளுக்கும் மனித அவலங்களுக்கும் முகம்கொடுத்தவர்கள் என்ற ரீதியில், தாயக உறவுகள் இன்று அனுபவிக்கும் துயரத்தின் உயரம் உணர்ந்து உதவிபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.நிகழ்வின் சிறப்புரையினை விக்டோரிய மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் பொறுப்பாளர் சபேசன் உரையாற்றினார்.அவுஸ்திரேலிய அரசிடம் முன்வைக்கவுள்ள கோரிக்கைகளை நிகழ்வின் இறுதியில் நிகழ்வினை ஏற்பாடு செய்த மெல்பேர்ண் தமிழ் இளையோர் சார்பாக கரன் சமர்ப்பித்தார்.நன்றியுரையுடன், இரண்டு மணி நேரம் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நிகழ்வு மாலை ஆறு மணிக்கு நிறைவடைந்தது.விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் மெல்பேர்ண் இளையோர் அமைப்பு அவுஸ்திரேலிய அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:
* சிறிலங்கா அரசு வடக்கு - கிழக்கில் கட்டவிழ்த்து விட்டிருக்கும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டு வர அவுஸ்திரேலிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
* வன்னியில் உணவுக்கும் உறையுளுக்கும் அல்லற்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள உதவி அமைப்புக்கள் மேற்கொள்ளும் மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு அவுஸ்திரேலிய அரசு உதவி செய்யவேண்டும்.
* மனித உரிமை மீறல்களை தொடரும் சிறிலங்கா அரசை பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து தடை செய்வது தொடர்பாக பரிசீலனை செய்யவேண்டும்.
* இலங்கை பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புக்களும் அரசியல் தீர்வு ஒன்றை காண்பதற்கு உதவி செய்யவேண்டும்.
ஆகியன முன்வைக்கப்பட்டன.

No comments: