Saturday, 30 August 2008

துணுக்காய் ஆலங்குளத்தில் முன்னகர்வு முறியடிப்பு.

ஆலங்குளத்தில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி; 25 பேர் காயம்; 4 உடலங்கள் மீட்பு
[சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2008, 08:03 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
துணுக்காய் ஆலங்குளத்தில் சிறிலங்காப் படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் நான்கு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் செறிவான எறிகணைச்சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்னகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் செறிவாக நடத்தினர்.
எறிகணைத் தாக்குதலை நடத்தியும் களத்தில் எதிர்த்தாக்குதலை தீவிரமாக நடத்தியும் படையினரின் முன்நகர்வினை விடுதலைப் புலிகள் முறியடித்து படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தினர்.
இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். 25 படையினர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட படையினரின் நான்கு பேரின் உடலங்களையும் படையப்பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

20 SLA killed, 32 wounded, 3 bodies recovered in Thu'nukkaay - LTTE [TamilNet, Saturday, 30 August 2008, 16:34 GMT]
Liberation Tigers of Tamileelam (LTTE) confronted Sri Lanka Army (SLA) that attempted to advance towards Aalangku'lam in Thu'nukkaay
division of Mullaiththeevu district from 9:40 a.m. till 4:00 p.m. Saturday. LTTE fighters have seized 7 T-56 automatic rifles and recovered 3 dead bodies of SLA soldiers after heavy fighting. The Tigers claimed that at least 20 SLA soldiers were killed and more than 32 wounded in
the clashes.
The attempt to advance through several fronts towards Aalangku'lam was repulsed after stiff resistance, the Tigers said.
Several ammunitions were also seized by the Tigers.
The LTTE officials didn't provide casualty details on their side. Meanwhile, heavy shelling by the SLA was reported in Akkaraayan, Vannearikku'lam, Aanaivizhunthaan and Skanthapuram villages on Saturday.

No comments: