Monday, 1 September 2008

சுமந்தகாலம் வரை வாழ்ந்த குழந்தை.

சுமந்த காலம் வரை வாழ்ந்த குழந்தை.
இயல்விழி (வயது 10 மாதம்)

ஷெல் வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 5 பொதுமக்கள் பலி; மூவர் காயம்
[31 - August - 2008] தினக்குரல்
* கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த அகதிகளுக்கு ஏற்பட்ட அவலம்
கிளிநொச்சி, புதுமுறிப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தும் மூவர் படுகாயமடைந்துமுள்ளனர். வன்னியில் அண்மைக் காலமாக படையினரால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் பெருமளவு மக்கள் புதுமுறிப்பு பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இப்பகுதியில் இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலிலேயே ஐவர் உயிரிழந்தும் மூவர் படுகாயமடைந்துமுள்ளனர்.
இடம்பெயர்ந்து புதுமுறிப்புக்கு அண்மையாக செறிந்து தங்கியுள்ள மக்கள் வாழ்விடத்தின் மீது படையினர் இந்த எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதில் மக்கள் மத்தியில் ஒரு ஷெல் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே இரு குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
மன்னார் பரப்புக்கடந்தானைச் சேர்ந்தவர்களான அழகேசன் நிலுக்கா பத்மலதா (வயது 28), கறுப்பையா ஆனந்தராசா (வயது28), இவரின் 2 வயதுக் குழந்தையான ஆனந்தராசா கௌதம், விசுவநாதன் திலகேஸ் (வயது 35), இவரின் ஒரு மாதக் கைக்குழந்தை ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கறுப்பையா ஆனந்தராசாவின் உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி (வயது 17), அசகேஸ்வரன் இயல்விழி (வயது 10 மாதம்), சிறுவனான விசுவநாதன் திவ்யன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

No comments: