Thursday 4 September, 2008

தேசபக்த ஈழவிடுதலைப் போர்: களமுனைச் செய்திகள்








தேசபக்த ஈழவிடுதலைப் போர்: களமுனைச் செய்திகள்
புலிகளின் பாரிய படகு தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசு பொய்ப் பிரச்சாரம் [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 09:57 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய படகினை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வான்படை தரப்பால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று கொழும்பில் உள்ள இராணுவ ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நாச்சிக்குடா மற்றும் வன்னேரி ஆகிய இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்களை மூடி
மறைப்பதற்காகவும் சிங்கள, ஆங்கில ஊடகங்களை திசை திருப்புவதற்காகவும் முல்லைத்தீவில் படகு தாக்கப்பட்டது எனும்
பொய்ப்பிரச்சாரத்தில் சிறிலங்கா வான்படை ஈடுபட்டிருக்கலாம் எனவும் அந்த இராணுவ ஆய்வாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் வான் தாக்குதல் நடைபெற்றிருப்பதனை உறுதிப்படுத்திய சிறிலங்கா வான்படை
அதிகாரி ஒருவர், புலிகளின் படகு தாக்கியழிக்கப்பட்டதா என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பாரிய படகு தாக்கியழிக்கப்பட்டதாக சிறிலங்கா வான்படையால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 45 படையினர் பலி; 50 பேர் காயம்; 7 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2008, 06:26 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால்
முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 45-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமான படையினர்
காயமடைந்துள்னர். 7 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நாச்சிக்குடாவை வல்வளைக்கும் நோக்குடன் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு நாச்சிக்குடா கடற்கரைப்பகுதியாலும் முழங்காவில் தொடக்கம் நாகபடுவான் வரை இருமுனகளில், கிபீர் மற்றும் எம்.ஐ - 24 ரக உலங்குவானூர்தி ஆகியவற்றின்
சூட்டாதரவுடன் முன்நகர முற்பட்ட சிறிலங்கா படையிருக்கு எதிராக கடும் முறியடிப்புத்தாக்குதல் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டது.
முன்நகர்வின் போது சிறிலங்கா படையினர் கனரக போர்க்கலங்களுடன் மிகச்செறிவாக பல்குழல் வெடிகணை, ஆட்டிலெறி
எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இம்முன்நகர்வுக்கு எதிரான தாக்குதலை இன்று அதிகாலை 2:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்தினர்.
விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கினர்.
இதில் 45-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். படையினரின் ஏழு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்கள் சிதறிக்கிடப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 05:54 பி.ப] நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் பகுதியில் நடைபெற்ற மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட
சிறிலங்கா படையினரின் உடலங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
வன்னேரிக்கும் அக்காராயனுக்கும் இடையில் புலிகள் முறியடிப்புத்தாக்குதல்:
30 படையினர் பலி; 50 பேர் காயம்; 10 உடலங்கள்
மீட்பு [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 01:17 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான இருமுனை முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத்தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் பத்து உடலங்கள் உட்பட பெருமளவிலான
படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் 8 ஆம், 9 ஆம், 10 ஆம் கட்டைப் பகுதிகளில் இரண்டு முனைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை பெருமெடுப்பில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் அதிகாலை 5:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணிவரை இரண்டு முனைகளில் கடும்தாக்குதலை மேற்கொண்டனர்.
சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இம்முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளின்
தீவிர எதிர்த்தாக்குதலால் முறியடிக்கப்படடன. இதில் இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 50-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
படையினரின் 10 உடல்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
பிகே எல்எம்ஜி - 02, ஏகே எல்எம்ஜி - 03, ஆர்பிஜி - 02, லோ-1, ஏகே ரக துப்பாக்கிகள் 12 ஆகிய கனகரக போர்க்கலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. --
உடும்பன்குளம் பகுதியில் மோதல்: சிறப்பு அதிரடிப்படையினர் நால்வர் பலி; ஏழு பேர் காயம்
[புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 08:25 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
அம்பாறை உடும்பன்குள வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்
சம்பவங்களில் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். எழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்திருப்பதாவது:
கஞ்சிகுடிச்சாறு முகாமிலிருந்து முன்நகர்ந்து வந்து உடும்பன்குளம் பிரதேசத்தில் முகாம் அமைத்துள்ள சிறிலங்கா சிறப்பு
அதிரடிப்படையினரின் பகுதிக்குள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணியளவில் ஊடுருவிச் சென்ற விடுதலைப் புலிகள்
நடத்திய பொறிவெடித்தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, சீற்றமடைந்த படையினர் அப்பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களின் விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கிருந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களினால் விவசாயிகளை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
அதன்பின்னர், தமது பிரதேசத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளை தேடியழிப்பதற்கு சிறப்பு அதிரடிப்படையினர் நேற்றைய
நாளே இரவோடு இரவாக காடுகளுக்குள்ளால் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இவ்வாறு தேடுதலில் ஈடுபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் இரண்டு அணிகள் இரண்டு இன்று காலை எதிர் எதிரே சந்தித்து,
பரஸ்பரம் புலிகளின் அணிகள் என்று சந்தேகித்து தமக்கிடையில் மோதிக்கொண்டதில் சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர் மூவர்
கொல்லப்பட்டுள்ளார். நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் ஊடுருவிய படையினர் மீது தாக்குதல்: 7 பேர் பலி 9 பேர் காயம்
[புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 08:22 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் ஊடுருவிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 படையினர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
நேற்று செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து மாலை 6:00 மணிவரை செறிவான எறிகணைச் சூட்டதாரவுடன் சிறிலங்காப்
படையினர் ஊடுருவல் தாக்குதலை மேற்கொண்டனர்.
ஊடுருவிய படையினர் மீது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தினர். இதில் 7 படையினர் கொல்லப்பட்டனர். 9 பேர்
காயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடிகாமத்தில் கண்ணிவெடித்தாக்குதல்: படைத்தரப்பைச் சேர்ந்தவர் பலி [புதன்கிழமை, 03 செப்ரெம்பர் 2008, 07:49 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். தென்மராட்சி கொடிகாமத்தில் சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த
ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் நோக்கி கப்பூதுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த படையினரின் யுனிகோர்ன் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது.
இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இருவர் காயமடைந்தனர். படையினர் பயணித்த யுனிகோர்ன் வாகனம் சேதமாகியுள்ளது.
உகந்தையில் சுற்றுக்காவல் படையினர் மீது புலிகள் தாக்குதல்: 4 படையினர் பலி; ஆயுதங்கள் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2008, 07:20 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
அம்பாறை - அம்பாந்தோட்டை எல்லைப்பகுதியான உகந்தையில் சன்னியாசிமலையடி பிரதேசத்தில் சுற்றுக்காவல் சென்ற
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித்தாக்குதலில் நான்கு படையினர்
கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். படையினரின் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்ததாவது:
இன்று பிற்பகல் விடுதலைப் புலிகள் நடத்திய இந்த அதிரடித்தாக்குதலில் இரண்டு படையினர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த படையினரில் இருவர் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலில் படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களின் விவரம்:
கோல் கொமாண்டோ ரக துப்பாக்கி - 01, கோல் கொமாண்டோ ரக துப்பாக்கிக்கான மகசின்கள் - 05 ,ரி - 56 ரக துப்பாக்கி - 01,ரவை தாங்கிகள் - 02, கைக்குண்டுகள் - 04 ,ஏ - கே. மகசின்கள் - 05 ,5.56 ரவகைள் - 180, ஏ.கே. ரவைகள் - 150 , தண்ணீர்த்தாங்கிகள் - 02 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் மீது பொறிவெடித் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்
[செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2008, 02:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இருவேறு இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய
தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகலும், மாலையும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் சிக்கினர்.
இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஐவர் காயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெல் வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 5 பொதுமக்கள் பலி; மூவர் காயம்
[31 - August - 2008] தினக்குரல்
* கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த அகதிகளுக்கு ஏற்பட்ட அவலம் கிளிநொச்சி, புதுமுறிப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் இரு
குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தும் மூவர் படுகாயமடைந்துமுள்ளனர். வன்னியில் அண்மைக்காலமாக படையினரால்
மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் பெருமளவு மக்கள் புதுமுறிப்பு பகுதியில்
தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இப்பகுதியில் இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கும் அப்பாவிப் பொதுமக்களை நோக்கி நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலிலேயே ஐவர் உயிரிழந்தும் மூவர் படுகாயமடைந்துமுள்ளனர்.
இடம்பெயர்ந்து புதுமுறிப்புக்கு அண்மையாக செறிந்து தங்கியுள்ள மக்கள் வாழ்விடத்தின் மீது படையினர் இந்த எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதில் மக்கள் மத்தியில் ஒரு ஷெல் வீழ்ந்து வெடித்ததில் அந்த இடத்திலேயே இரு குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
3 பேர் காயமடைந்தனர்.
மன்னார் பரப்புக்கடந்தானைச் சேர்ந்தவர்களான அழகேசன் நிலுக்கா பத்மலதா (வயது 28), கறுப்பையா ஆனந்தராசா (வயது28),
இவரின் 2 வயதுக் குழந்தையான ஆனந்தராசா கௌதம், விசுவநாதன் திலகேஸ் (வயது 35), இவரின் ஒரு மாதக் கைக்குழந்தை
ஆகியோரே கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் கறுப்பையா ஆனந்தராசாவின் உடல் சிதறிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி (வயது 17), அசகேஸ்வரன் இயல்விழி (வயது 10 மாதம்), சிறுவனான விசுவநாதன் திவ்யன்
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
புறக்கோட்டை குண்டுவெடிப்புக்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை: வெடிகுண்டு பகுப்பாய்வு நிபுணர்
[ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2008, 08:31 பி.ப ஈழம்] [க.நித்தியா]
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் புறக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை. பாதையோர கடைகளை அகற்றுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலே இது என்று வெடிகுண்டு பகுப்பாய்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்தையும் வெடித்த குண்டின் துகள்களை பகுப்பாய்வு செய்ததையும் வைத்து பார்க்கும்போது
இச்சம்பவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.
ஏனெனில், வெடிப்பதற்காக வைக்கப்பட்ட குண்டின் எடை 100 கிராமே ஆகும். இவ்வளவு எடையுள்ள குண்டை நிச்சயம்
விடுதலைப் புலிகள் பயன்படுத்தியிருக்கமாட்டார்கள்.
இது நடைபாதையோர கடைகளை அப்புறப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு மறைமுக தாக்குதலே ஆகும்.
இத்தாக்குதலின் மூலம் அப்பகுதி கடை உரிமையாளர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தால் காயமடைந்தவர்கள் பலர், குண்டு வெடித்தவுடன் பதற்றமடைந்து ஓடி விழுந்து சாதுவான சிராய்ப்பு
காயங்களையே அடைந்துள்ளனர். ஒரு சிலரே படுகாயமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tigers seize large number of weapons from SLA in Vanni clashes
[TamilNet, Wednesday, 03 September 2008, 15:40 GMT]
The Liberation Tigers of Tamileelam (LTTE) defensive formations have seized large number of arms, ammunition and military accessories in
the two-days fighting south and west in Ki'inochchi district in Vanni. Seven Light Machine Guns (LMGs), four RPG launchers, more than 25 AK / T-56 assault rifles, hundreds of LMG rounds, more than 120,000 of 7.62 mm rounds, more than 60 RPG shells, two Light Anti-Tank
Weapons (LAWs), around 80 hand grenades and 15 Claymore mines were among the arms being stockpiled by the Tigers, according to the reporters who were allowed to photograph the collection.
Magazines with rounds, booby traps, and military accessories such as bullet-proof jackets, kit bags, helmets and holsters were among the seized items after the clashes in Vannearikku'lam and Naachchikkudaa fronts.
8 SLA soldiers killed, 14 injured in Paalamoaddai, Vavuniyaa
[TamilNet, Thursday, 04 September 2008, 01:47 GMT]
Liberation Tigers of Tamil Eelam (LTTE) repulsed an attempt by Sri Lanka Army (SLA) to advance into LTTE territory Tuesday around 7:00
a.m, killing eight soldiers and injuring 14 at Paalamoaddai, LTTE Vavuniyaa command said.
LTTE combatants confronted SLA that began the advance with rocket launcher fire ground support until 6:00 p.m, Tuesday.
SLA troops withdrew to their positions unable to stand the onslaught of the LTTE, the source added.
2nd Claymore attack kills SLA soldier in Jaffna
[TamilNet, Thursday, 04 September 2008, 07:17 GMT]
Unidentified persons triggered a second Claymore attack Wednesday midnight, killing a Sri Lanka Army (SLA) soldier and injuring some
others, on a SLA vehicle on its way from Yaakkarai in Vadamaraadchi to Kappoothu in Thenmaraadchi on Point Pedro- Chaavakachcheari
main road at Vi’raali located on the boundary between Vadamaraadchi and Thenmaraadchi. The first attack Wednesday afternoon had
targeted a Bufflel Armored Personnel Carrier killing one soldier and injuring three in Kapoothu area, sources in Jaffna said.
SLA launched an extensive cordon and search Thursday from 7:00 a.m, in the area north of A9 road from Nu’naavil junction, enclosing
Madduvil, Charasaalai, Kappoothu, Kalvayal and Ke’rudaavil.
Vehicles were not permitted to use Point Pedro-Chaavakachcheari road from Thursday morning in the search which continued until afternoon.
Even NGO demining workers and governments officials on their way to work were not allowed by the SLA either to enter or exit the areas under its cordon and search.
The search was concentrated particularly in the mangrove land stretch between Charasaalai and Kapoothu areas.
SLA has officially said that one soldier was killed and three injured in the first Claymore attack Wednesday afternoon.

No comments: