Monday, 8 September 2008

அகம் இழந்த தேசத்தில் முகம் இழந்த தெய்வம்.

அகம் இழந்த தேசத்தில் முகம் இழந்த தெய்வம்.

கொழும்பு இந்து ஆலயம் மீது பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் தாக்குதல் [வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2008, 04:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான காடைக்கும்பல் தாக்கி சேதமாக்கிள்ளது. இதில் ஆலயத்தின் முன்பக்க கோபுரமும் உட்பக்கத்தில் உள்ள விக்கிரகங்களும் சேதமடைந்துள்ளன. இந்த இந்து ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் ஆலயத்துக்குச்சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான காடைக்கும்பல் ஆயலத்தை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தாக்குதல் நடத்திய பௌத்த பிக்குவையும் மேலும் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் கெமல் மாவத்தையில் அமைந்துள்ள சிறீ முத்துமாரி அம்மன் ஆலயப்பகுதியில் பெரும்பான்மையான தமிழ் மக்களே வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆலயத்துக்கு அருகில் பௌத்த கோவில் ஒன்றும் உள்ளது. இந்த பௌத்த கோவிலைச் சேர்ந்த பௌத்த பிக்குவே சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பௌத்த பிக்கு சிறீ முத்துமாரி அம்மன் ஆயலத்தைச் சூழவுள்ள தமிழ் மக்களை அச்சுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பௌத்த பிக்கு பாலியல் வல்லுறவு உட்பட்ட வேறு பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: