Monday, 8 September 2008

விவசாயிகள் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை


வவுனியா பம்பைமடு விவசாயிகள் அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை
[06 - September - 2008]
வவுனியா, பம்பைமடு விவசாயிகள் அமைப்பின் தலைவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே கூட்டிச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பம்பைமடு பகுதியிலுள்ள இவரது வீட்டிற்கு வியாழக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வரே இவரை வீட்டிலிருந்து வெளியே கூட்டிச் சென்று பம்பைமடு பாடசாலைக்கு அருகில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு குடும்பத்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வீதியோரத்தில் இறந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பொன்னர் மகேந்திரன் (45 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவர் இப்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவராவார். இவரது சடலம் நேற்றுக் காலை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட நீதிபதி அ.யூட்சன் மரண விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பணித்தார்.

No comments: