புலிகளின் விமான தாக்குதலால் இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை! புலிகளை ஆதரிப்பவர்களை ஆசவாசப்படுத்துவதே புலிகளின் விமான தாக்குதல்!7 September 2008
புலிகள் நடத்திய விமான தாக்குதலில் எந்தவிதமான இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை.அவர்களை ஆதரிக்கும்
சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்காகவே புலிகள் திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திவயின சிங்கள பத்திரிகையின் வார வெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் விமானப்படையினர் இதுவரை ஆறு தடவைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எமது விமானப் படையினரோ இக்காலக் கட்டத்தில் ஆறாயிரம் தடவைகள் விமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
அவர்களின் விமானங்களில் முப்பது கிலோ எடை உள்ள குண்டை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எமது விமானங்களில்
250 கிலோ முதல் ஆயிரம் கிலோ எடை உடைய குண்டுகளை இலகுவாக கொண்டு செல்ல முடியும். புலிகள் இலக்கு தவறியே
குண்டுகளை போடுகின்றனர். எமது விமானப் படையினர்
குறித்த இலக்கை துல்லியமாக அறிந்து தாக்குதல் நடத்துகின்றனர். கிளிநொச்சிகளை கைப்பற்றுவதற்கு நாம் மேற்கொண்டுள்ள
இராணுவ நடவடிக்கை சற்று கடினமானது. எனினும் எப்படியாவது கிளிநொச்சியை கைப்பற்றியே தீருவோம். இது குறித்து கால
எல்லையை நிர்ணயிக்க முடியாது.
குறித்த இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டது. எமது முதல் குறிக்கோளாக இருந்தது
புலிகளின் வளங்களை அழிக்க வேண்டும் என்பதாகும். மன்னாரில் இருந்து ஆரம்பமான அவர்களின் வளங்களையே அழித்து
வந்தோம். கடற்புலிகளின் வளங்களை எமது கடற்படையினர் வெற்றிகரமாக அழித்தனர். அத்துடன் அவர்கள் ஆயுதங்களை
கொண்டு வந்த பாதைகளை தடை செய்தோம். அவ்வாறான சில இடங்கள் இன்னும் இருப்பதை நாம் அறிவோம்.
யுத்தத்தினால் கிளிநொச்சியில் உள்ள மக்களுக்கு உயிராபத்து ஏற்படாது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் போது அங்கு சுமார் ஐந்து
இலட்சம் மக்கள் இருந்தனர். யாழ். குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் ஒன்றரை வருட காலத்திற்குள் அவர்களை மீள குடியமர்த்தினோம். கிளிநொச்சியை பொறுத்தமட்டில் யாழ். குடாநாட்டில் இருந்த மக்களை விட அரைவாசி பேரே அப்பகுதியில் உள்ளனர் என்றார்

No comments:
Post a Comment