இந்தியாவின் இரட்டைத் தனத்தை வெளிப்படுத்திய நிவாரணக் கப்பல்
[22 - November - 2008] [Font Size - A - A - A]
* கொழும்பின் இராணுவ நடவடிக்கையில் டில்லி தலையிடாது இலங்கையின் யுத்த அகதிகளுக்கு இந்தியா நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளமையானது இலங்கையின் மோதல்களை இராணுவ ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரும் கொழும்பின் திட்டத்தில் புதுடில்லி
தலையிடமாட்டாதென்பதற்கான தெளிவான அறிகுறியென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் வியாழக்கிழமை 1680 தொன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்திருக்கிறார். வன்னியில் இடம்பெயர்ந்த சுமார் 2 லட்சம் மக்களுக்கு
இப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இது 1987 இல் இந்திய விமானப் படையினர் வான்மார்க்கமாக விநியோகித்ததைவிட முற்றிலும் மாறுபட்டதாகும். அச்சமயம் இந்தியா விமானங்கள் மூலம் வீசிய நிவாரணமானது யுத்தத்தில் இந்தியாவின் நேரடித்தலையீட்டுக்கான
சமிக்ஞையாக இருந்தது.
அத்துடன் இந்த விடயம் எப்போதும் அரசியல் விடயமாகவும் தமது பாரிய அயல்நாடு தொடர்பாக இலங்கைத் தலைவர்கள் மனதில் வைத்திருக்கும் விவகாரமாகவும் இருந்து வருகிறது.
அதேசமயம், 1983 இல் யுத்தம் ஆரம்பமானதன் பின்னர் போர்முனையில் இப்போது மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளது. இது தனது அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
முன்கூட்டியே தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடுமென்ற எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. அதாவது போர் வெற்றிகளை அதிகாரத்தை ஸ்திரப்படுத்தும் மூலதனமாக்குவதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாமென
பேசப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் மே மாதத்திற்கு முன்னர் இந்தியா பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையிலும், இலங்கை யுத்தம் தொடர்பாக தமிழ் அரசியல் பங்காளிகளிடமிருந்து எழுந்துள்ள அழுத்தத்தாலும் மோதல் அதிகரித்துச்
செல்வது தொடர்பாக கடந்த மாதம் விமர்சித்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், தமிழர்களின் துயரங்களுக்கு அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தியிருந்தார்.
இரு நாடுகளுக்குமிடையில் துரிதமாக இடம்பெற்ற இராஜதந்திரரீதியான நடவடிக்கைகளின் விளைவாக, நிவாரணப் பொருட்கள் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகக் கையாள்வதற்கு
இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதென இலங்கையும் உறுதியளித்துள்ளது.
நிவாரணக் கப்பலின் வருகையானது புலிகளை அழிக்கவேண்டுமென்பதும் அதேசமயம், அப்பாவித் தமிழ் மக்களை நேர்மையான முறையில் நடத்தவேண்டுமென்பதுமான இந்தியாவின் இரட்டைத் தனமான கொள்கையை
வெளிப்படுத்துகிறது என்று அமெரிக்காவின் தனியார் புலனாய்வு நிறுவனமான ஸ்ரற்போரின் ஆய்வாளர் ரோவா பாலா தெரிவித்துள்ளார்.
""இந்த தெளிவானதும் துரிதமானதுமான செயற்பாட்டை அவர்கள் சமாளித்துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தாங்கள் ஆதரவென்ற உண்மையையும் அதேசமயம், மோதலிலுள்ள மனிதாபிமான விவகாரத்தை
முன்னிலைப்படுத்துவதையும் அதாவது பொதுமக்கள் இழப்புகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்புக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமது நிலைப்பாட்டை அவர்கள் அழுத்தியுரைத்துள்ளனர் என்று ரோவாபாலா
கூறுகிறார்.
""இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவளிக்கின்றது. இது அவர்களின் கூட்டறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு நிலைவர ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்திருக்கிறார்.
மன்மோகன்சிங்கின் அரசுக்கு ஆதரவளித்துவரும் தமிழ் கட்சிகள் பதவிவிலகப் போகும் அச்சுறுத்தலை கைவிட்டிருக்கின்ற போதிலும் போருக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து பேசி வருகின்றன.
தமிழ் மக்கள் தொடர்பான எமது கரிசனையையும் ஈடுபாட்டையும் நிச்சயமாக அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். அவர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த சகலவற்றையும் செய்துகொண்டிருப்பதும் நிவாரணத்தை
வழங்குவதும் இலங்கை அரசுடன் கிரமமாக கதைத்து வருவதும் அவர்களுக்கு (தமிழ் நாட்டு கட்சிகள்) தெரியும் என்று காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் ஆலோசகருமான வீரப்பமொய்லி கூறியுள்ளார்.
மேலும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு எதனையும் இந்தியா இலங்கைக்குக் கூறவில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.
சிங்களப் பெரும்பான்மையினர் தலைமையிலான அரசாங்கங்கள் தமிழ் மக்களின் நீண்டகால முறைப்பாடுகளுக்குத் தீர்வு காணும் அரசியல் நடவடிக்கைகளை ஓரம்கட்டி வந்தாலும் முழுமையாக நிராகரித்துவிட முடியாதெனவும் விரைவில்
அவை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ரோவாபாலா கூறுகிறார்.
இராணுவ ரீதியில் கொழும்பின் கை இப்போது ஓங்கியுள்ளது. அரசியல் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை இப்போது தீவிரமாக ஆரம்பிக்க முடியும். அது தமிழர்களின் உரிமைகளை வழங்க வேண்டுமென்ற மற்றும் பயங்கரவாதிகளை
கண்டிக்க வேண்டுமென்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சாதகமானதாக அமையும் என்றும் ரோவோபாலா கூறியுள்ளார
No comments:
Post a Comment