Wednesday, 17 December 2008

அமெரிக்கப் பொம்மை மலாகியே முந்தாடர் அல்சைடியை விடுதலைசெய்

அமெரிக்க அடிமை மலாக்கி அரசாங்கமே,

அரேபிய சுதந்திரப் பத்திரிகையாளன் முந்தாடர் அல்சைடியை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!





புஷ்ஷின் மீது சப்பாத்துக்களை வீசிய செய்தியாளரை விடுவிக்குமாறு கோரி ஈராக்கில் ஆர்ப்பாட்டம் [17 - December - 2008] அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மீது சப்பாத்துக்களை வீசியெறிந்த ஈராக்கிய செய்தியாளரை விடுதலை செய்யுமாறு கோரி ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாக்தாத்தின் சத்ர் நகரில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் முந்தாடர்அல்சைடி என்னும் செய்தியாளரை கதாநாயகனாக வர்ணித்ததுடன் அவரை விடுதலை செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, இச் செய்தியாளர் பணியாற்றும் அல் பாக்தாத்தியா என்னும் தொலைக்காட்சி நிலையத்தின் அதிகாரிகள், தமது செய்தியாளர் கருத்துச் சுதந்திரத்தையே வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவரை விடுதலை செய்யுமாறும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இதனையொரு வெட்கக்கேடான செயலெனத் தெரிவித்துள்ள ஈராக்கிய அரசாங்கம், ஜனாதிபதி புஷ்ஷை அவமதிக்கும் வகையிலும் சைடி சத்தமிட்டமை ஈராக்கிய ஊடகத் துறை மற்றும் ஊடகவியலாளர்களின் கீர்த்திக்கு பங்கம் விளைவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க படைகளின் பிரசன்னத்தை எதிர்க்கும் ஷியா மதகுரு மொஹ்டாடா சத்ரின் ஆதரவாளர்களே இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
பஸ்ரா மற்றும் நஜாப் நகரங்களிலும் சிறியளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி புஷ் மீது சப்பாத்துக்களை வீசுமாறு இச் செய்தியாளருக்கு எவராவது பணம் கொடுத்தார்களா என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ஈராக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
இதுதவிர இவரை விடுதலை செய்யுமாறு கோரிய பாக்தாத்தியா தொலைக்காட்சி நிறுவனம், இச் செய்தியாளருக்கெதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சர்வாதிகார ஆட்சியின் நடவடிக்கையாகக் கருதப்படுமெனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இச் செய்தியாளரை ஒரு பெருமைமிக்க அரேபியர் எனவும் வெளிப்படையான மனதைக் கொண்டவரெனவும் வர்ணித்தும் இத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தயாரிப்பாளர் அவரது பாதுகாப்பு குறித்து தாம் அச்சமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments: