கிளிநொச்சி நோக்கிய நான்கு முனை முன்நகர்வு முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 போ் காயம்; 18 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு [செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2008, 10:18 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப் -பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 18 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
குஞ்சுப்பரந்தனில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கியும் புலிக்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியும் மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கியுமாக நான்கு முனைகளில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.
செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் சூட்டாதரவுடன் முன்நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி முன்நகர்வுகளை முறியடித்தனர்.
இதில் 100-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். 250-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
படையினரின் 18 உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கிளாலியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்நகர்வினை முறியடித்த விடுதலைப் புலிகள் 40-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொன்று 120-க்கும் அதிகமானோரை
காயப்படுத்தி படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாலியில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 100-க்கும் அதிகமானோர் காயம்; 8 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு [செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2008, 02:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40
படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால்
கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கிளாலிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு சிறிலங்கா தரைப்படையின் 53 ஆவது டிவிசன் கொமாண்டோக்களின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையினர் பெரும் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
பெருமெடுப்பில் செறிவான பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் களப்பீரங்கிகளின் நேரடிச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி நோக்கிய சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 9:30 நிமிடம் வரை முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தி படையினரின் நடவடிக்கையினை முறியடித்தனர்.
இதில் 40 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.
படையினரின் எட்டு உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால்

கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத விபரம்:
ஆர்பிஜிக்கள் - 02 ,ரி-56 ரக துப்பாக்கிகள் - 14 ,ஏகேஎல்எம்ஜி - 01
40 மில்லிமீற்றர் குண்டு செலுத்திகள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய மோதல்களில் 23 படையினர் பலி; 56 பேர் காயம்: சிறிலங்கா படைத்தரப்பு [வியாழக்கிழமை, 11 டிசெம்பர் 2008, 08:16 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்]
கிளிநொச்சிக்கு மேற்குப்புறமாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற மோதல்களில் 23 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பை மேற்கோள்
காட்டி கொழும்பில் இருந்து இயங்கி வரும் பாதுகாப்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சிக்கு மேற்காக நான்கு கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதல்களில் 57 ஆவது படையணி கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளது.
இம்மோதல்களில் படையினர் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படையினரில் 12 பேரின் உடலங்கள் விடுதலைப் புலிகள் வசம் சிக்கியுள்ளன.
மோதல்களின் போது விடுதலைப் புலிகள் 12.7 மி.மீ, 14.2 மி.மீ போன்ற கனரக துப்பாக்கிகளையும், மோட்டார்களையும் அதிகம் பயன்படுத்தியிருந்தனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு வன்னி எதிர் நோக்கும் உக்கிர போர்
வீரகேசரி வாரவெளியீடு 12/1/2008 3:16:12 PM -
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இவ்வருட மாவீரர் தின உரையில் வன்னிப் போர் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணத்தில் ஏற்பட்ட பல சரிவுகள், திருப்பங்கள், பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், நாசச் செயல்கள், புயலாக எழுந்த நெருக்கடிகள் என்பவற்றுடன் ஒப்பிடும் போது இன்றைய சவால்கள் எமக்கு பெரியனவல்ல என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர் தினத்தன்று கிளிநொச்சியைக் கைப்பற்றி வெற்றிச் செய்தியை தென்னிலங்கைக்கு அரசாங்கம் அறிவிக்கப் போவதாக சிலர் கூறினர். ஆனால் கிளிநொச்சியை நோக்கி படையினர்
மும்முனைகளில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் யாவற்றையும் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தி புலிகள் முறியடித்தனர். குஞ்சுப் பரந்தன் நோக்கியும், புதுமுறிப்பு நோக்கியும், முறிகண்டி இரணைமடுச் சந்தி நோக்கியும் பெருமெடுப்பில் நகர்ந்த படையினர் புலிகளின் முறியடிப்பு படையணிகளின் வியூகத்தினுள் சிக்கியது. வடபோர்முனையில் கிளிநொச்சியும் அதனையடுத்த பரந்தனும் இன்றைய நிலையில் படைத்துறையினரின் உயர்ந்த பட்ச இலக்கு. இந்த இலக்கினை படையினர் அடைவதற்கு புலிகள் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்பார்கள் என்பது
கேள்விக்குறியே. ஏனெனில், நீண்ட நாட்களாக தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கி விட்டது. வன்னிப் பெருநிலப்பரப்பின் 25 சதவீதப்பகுதியே தற்போது அவர்களின் இறுக்கமான ஆளுகைக்குட்பட்ட பிரதேசமாக இருப்பதனால் மேன் மேலும் பின்நகர்வுகளை செய்ய முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.
இதனாலேயே படையினரின் முன்நகர்வு முயற்சிக்கு கடும் எதிர்த் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கிளிநொச்சி நகருக்கு மிக அண்மையாகவே படையினர் நிலையெடுத்திருக்கின்ற நிலையிலும் கண்ணுக்கெட்டிய தூரத்திலுள்ள கிளிநொச்சி நகரை நெருங்கமுடியாமல் உள்ளது.
புலிகளைப் பொறுத்தவரை கிளிநொச்சிப் பகுதியும், முகமாலைப் பகுதியும், மிக முக்கியமான போராட்ட களம். இப்பகுதியில் ஏற்படுகின்ற இராணுவ பாதகத் தன்மை கிழக்கு வன்னியின் இருப்பை தலைகீழாக மாற்றவல்லது. எனவே இப்பகுதிக்கான சண்டை என்பது புலிகளால் விட்டுக் கொடுக்க முடியாத அல்லது இழக்கப்பட முடியாத கேந்திர முக்கியத்துவத் தன்மை
வாய்ந்தது. எனவேதான் மேற்குவன்னியில் முழுமைப் பகுதியையும் படிப்படியாக விட்டுக் கொடுத்த புலிகள் இக்களமுனையில் கிளாலி தொடக்கம் நாகர் கோயில் வரையிலான முன்னரங்கப் பகுதியில் கடும் பதில்தாக்குதல்களை நடத்துகின்றனர்.
ஏ9 வீதியை முழுமையாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராமல் ஏ32 வீதி வழியே பூநகரியூடான யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப் பாதை பாதுகாப்பானதாக இருக்கப் போவதில்லை.
ஏனெனில், யாழ்க்குடாவுடன் ஏ32 வீதியை இணைப்பதற்கு சங்குப்பிட்டியிலிருந்து கேரைதீவுக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் சிறிது தூரத்திற்கு படகுப் பயணம் மேற்கொள்வது
சிரரமானதும், பாதுகாப்பற்றதும் கூட. எனவே தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்திற்கான பூநகரியூடான தரைவழிப்பாதை என்பது பெரிய அளவில் பயனற்றதொன்றாகவே கருத முடியும்.
படையினர் ஏ9 வீதியை இலக்கு வைத்து மாங்குளத்தில் ஊடறுப்புத் தாக்குதலைச் செய்து வீதியைக் குறுக்கறுத்து ஆறு மைல் தூரத்திற்கு பெட்டியடித்து நிலை கொண்டதனால் கிழக்கு
வன்னியின் தென் அரைப் பாகத்திலிருந்து புலிகள் பின்வாங்கி விட்டனர். இதனால் இன்று மாங்குளம் கிழவன்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான கிட்டத்தட்ட 25 மைல் தூரத்தில்,
இராணுவப் பெட்டிக்குள் அடங்கும் ஆறுமைல் தவிர்ந்த ஏனைய பகுதி இன்று யாருமற்ற சூனியப்பிரதேசமாகக் கிடக்கிறது. அதுமட்டுமல்லாமல் வவுனியா வடக்கு பிரதேசச் செயலகப்
பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான், நைனாமடு, சின்னடம்பன், கனகராயன்குளம், புளியங்குளம், புதூர், அனந்தர்புளியங்குளம், மருதோடை, வெடிவைத்தகல்லு, ஊஞ்சால்க்கட்டி,
மற்றும் பன்றிக்கெய்தகுளம், சேமமடு ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய பிரதேசம் சூனியப்பிரதேசமாக மாற்றமடைந்திருக்கின்றது. காரணம், மாங்குளத்திலிருந்து கிழக்கு நோக்கி
நகர்ந்த படையினர் ஒலுமடு கிராமத்தைக் கைப்பற்றியதோடு அங்கிருந்து நேர் கிழக்காக காடுகளுக்கூடாக நகர்ந்து தண்ணிமுறிப்புக் குளப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் 59ஆவது டிவிசன்
படையினருக்கிடையில் தொடர்ச்சியற்ற இணைப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
எனினும், இப்பகுதியினுள் படையினர் நுழைவதை தவிர்த்திருக்கின்றனர். காரணம் இப்பெரும்பகுதியில் நிலைகொள்வதற்கு பெருமெண்ணிக்கையிலான படையினர் தேவைப்படுகின்றனர்.
கிழக்கு வன்னியில் ஏ9, ஏ34, ஏ35 ஆகிய மூன்று வீதிகளும் இணையும் முக்கோணப்பிரதேசத்தினுள் தான் ஒட்டுமொத்த வன்னி மக்களும் தஞ்சமடைந்திருக்கின்றனர். எனவே இப்பகுதியில்
இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அங்கு தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலை ஆபத்தானதொன்றாகவே மாறிவிடும்.
இவ்வாறு மக்கள் செறிவாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற கிழக்கு வன்னியின் வட அரைப்பாக முக்கோண வலயத்தினை நோக்கி படையினர் நகர்வார்களேயானால் அதனை எதிர்த்து புலிகளும்
மூர்க்கமான தாக்குதலை மேற்கொள்வது தவிர்க்க முடியாததொன்றாகவே அமையும். அவ்வாறு சண்டைகள் உக்கிரமடைந்தால் படையினரின் கடுமையான ஆட்லறிப் பல்குழல் எறிகணை
வீச்சுக்கும், விமானத் தாக்குதலுக்கும் இப்பிரதேசம் உள்ளாகும் பட்சத்தில் மிகப்பெரும் மனிதப் பேரவலம் ஏற்படுவது மிகக்கசப்பான உண்மையே. படையினரின் இத்தந்திரோபாயத்தின் மூலம்
குறிப்பிட்டளவு வன்னிமக்களை தம்பக்கம் கவர்ந்துவிட முடியும் என நம்புகின்றனர். ஆனால் இதற்கெதிராக புலிகள் என்னதான் மாற்று வியூகம் எடுக்கப் போகிறார்கள் என்பதிலேயே
வன்னிமக்களின் வாழ்வு தங்கியுள்ளது.
அடுத்து, மணலாற்றுப் பகுதியினூடாக முன்னகர்ந்த 59 ஆவது டிவிசன் படையினர் மணலாற்றுக் காட்டுப்பகுதியின் பெரும்பகுதியில் நிலைகொண்டுள்ளதோடு தண்ணிமுறிப்புக்
குளப்பகுதியையும், குமுழமுனைப் பகுதியையும் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கின்றனர். கிழக்குக் கடற்கரையிலிருந்து குமுழமுனை, தண்ணிமுறிப்பு,
தட்டாமலை வரையான வீதிக்கு தெற்குப்புறம் முழுவதும் படையினர் நிலைகொண்டிருப்பதனால் முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய சனச்செறிவு மிக்க முள்ளியவளை, தண்ணீரூற்று
ஆகிய பகுதிகள் இராணுவ நிலையிலிருந்து ஆறு அல்லது ஏழு மைல்கள் தூரத்திற்குள்ளேயே உள்ளடங்குவதனால் இங்கிருந்தும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள்
உள்ளன.
இவ்வாறு மேற்கு வன்னியையும் இழந்து தற்போது கிழக்கு வன்னியின் தென்னரைப் பாகத்தையும் விட்டுக் கொடுத்து கிழக்கு வன்னியின் வடஅரைப்பாகத்தில் செறிவாக ஒதுங்கி
நிலையெடுத்திருக்கும் விடுதலைப்புலிகள் மேன்மேலும் பின்வாங்குவதற்கோ அல்லது விட்டுக் கொடுக்கவோ நிலப்பகுதிகள் இல்லை என்ற நிலையை அடைந்திருப்பதனால் வன்னிக் களமுனை உக்கிர மோதல்களை எதிர்நோக்கியிருக்கிறது.

வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளினால் சூழப்பட்டுள்ளது 500 படையினர் கால்களை இழந்துள்ளனர் என்கிறார் இராணுவத் தளபதி
வீரகேசரி நாளேடு 12/12/2008 9:45:26 PM -
வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறிவெடிகளினால் சூழப்பட்டுள்ளது. மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளில் 2,500 பேரே எஞ்சியுள்ளனர். எனினும், புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, போர் நிறுத்தம்
நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம்
எதிர்பார்த்தோம்.
இராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில்
ஈடுபடுத்தியிருந்தேன். எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை களமுனைக் கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.
உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம். ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15ஆவது
இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலாபலன்கள் அதிகம். அதனைப் போலவே 58ஆவது
படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா மூப்பு அடிப்படையில் 45ஆவது இடத்தில் இருப்பவர். அவர் தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆதரவும் எனக்கு இருந்தது. நாம் இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும்
கொள்வனவு செய்ததுடன் பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம். பதவிக்கு நாம் வந்தபோது 40,000 சிப்பாய்களுக்கு தலைக் கவசம் கிடையாது, பலரிடம் ஒரு தொகுதி
சீருடைகளும் ஒரு சோடி சப்பாத்துக்களுமே இருந்தன. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் நாம் சீர்செய்தோம்.
பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12 ஆயிரம் பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர். எனவே, அவர்களில்
தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவேதான் படைத்தரப்பு அதிகம்
இழப்புக்களை சந்தித்து வருகின்றது. மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறி வெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அது இலகுவான நடவடிக்கை அல்ல.

வன்னி நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் எட்டாவது படையணி [ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2008, 05:43 பி.ப ஈழம்] [பி.கெளரி]
நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 ஆவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 அவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.
இந்த படையணியானது வன்னி படை நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்டும் 8 ஆவது டிவிசன் ஆகும்.
இந்த புதிய படையணியின் கட்டளை அதிகாரியாக 56 அவது படையணியின் பிரதி கட்டளைத் தளபதியான கேணல் அதுல கலகமே நியமிக்கப்பட்டுள்ளார்.
65-1 பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாக லெப். கேணல் பிரியங்க பெர்னாண்டோவும் (இவர் 11 ஆவது கெமுனுவோச் றெஜிமென்டை சேர்ந்தவர்), 65-2 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக
லெப். கேணல் ரன்ஜித் அபயரட்னவும் (இவர் 7 ஆவது இலகு காலாட்படை றெஜிமென்டைச் சேர்ந்தவர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வன்னி படைக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
58 ஆவது படையணியின் சிறப்பு படைப் பிரிகேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் ஹரேந்திர ரணசிங்க 57-1 ஆவது பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
57-1 பிரிகேட்டின் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரிய மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்ட கட்டளைத் தளபதியான பிரிகேடியர் சானா குணதிலக்க 56 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
56 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்கோத்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி நெறிக்காக செல்லவுள்ளதனால் இந்த
மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

Sri Lanka, LTTE claim upper hand on battlefield
The Hindu - B. Muralidhar Reddy COLOMBO:
In a day of heavy fighting in Kilinochchi, the military and LTTE gave conflicting versions on the outcome of the confrontations and the casualty figures.
The Defence Ministry claimed at least 120 LTTE cadre were killed and 250 injured west of Paranthan, Admapan and Iranamadu, along the Kilinochchi
battlefront. The pro-LTTE TamilNet website, however, claimed more than 40 soldiers were killed and at least 120 injured when the LTTE “repulsed an
offensive push by the SLA [Army] along the Forward Defence Line [FDL] in Kilaali.”
The Ministry said the soldiers had gained control over a 5-km stretch of earth-bund west of Paranthan and Kilinochchi.
“Troops are now consolidating defences in the area,” said military spokesperson Udaya Nanayakkara.
Clashes broke out on Kilinochchi’s outskirts and northern FDLs as the military began artillery and heavy mortar attacks at LTTE locations, thus “shifting the Wanni battle phase into a decisive stage.”
The Ministry claimed “LTTE heavy-gun locations and concentration positions” were targeted, thereby leaving the Tigers manning defences south of A-9 Road at Kilaly FDL, in total disarray. It said 25 soldiers died and 10 were missing and 160 were injured.
Separately, troops claimed to have entered Chorikenkulam village, west of A-9 Road.
TamilNet said: “The LTTE has claimed to have seized weapons and recovered bodies of the SLA [Army] soldiers. After 9 hours of heavy fighting, the SLA was forced to pull back its troops, with heavy casualties.”

Note no.488 10-Dec-2008
SRI LANKA: The Slow Crawl to Kilinochchi
Update No. 159
Col R Hariharan
On Sunday December 7, the security forces were within "kissing distance" of the outer defence lines Kilinochchi, announced the defence spokesman. On Monday, December 8, it became "Troops in Kilinochchi are targeting the town and they are in the vicinity of the town." However, by December 9 it seems the security forces' strategic focus had shifted from Kilinochchi to Mullaitivu according to the defence ministry. This contradicts what the army commander
Lt Gen Sarath Fonseka said in his Sunday Observer interview on the same day; he said "after capturing Kilinochchi the security forces will definitely capture Mullaithivu..."
In military parlance, this kind of shift in 24 hours takes place only in tactical rather than strategic focus. Somebody is not getting the terminology right or the army is facing major problems in turning the "kiss" into reality in Kilinochchi. Its two pronged offensive on Kilinochchi by Task Force-I from the west and by 57 Division from the southwest was reported facing very heavy LTTE resistance. Could this have compelled them a change in the security forces'
strategy? The defence spokesman had acknowledged this at least on the Task Force-I front. In the Muhamalai sector also there appear to be no
substantial progress in spite of 53 Division's claims of having captured 800 m long and 8 km wide line of defences there. All these bits put together would indicate stalling of offensive.
A second possibility is that 59 Division was making better progress having captured Alampil on December 8. With Task Force-III making good progress on A34 Mankulam-Mullaitivu road branching off eastwards from A9 road 59 Division's offensive to Mullaitivu would be benefited. So a tactical shift of immediate focus from Kilinochchi to Mullaitivu is understandable.
But such a shift in axis would still be a tactical shift. Ultimately the security forces have to either capture Kilinochchi or force the LTTE to vacate it after they pay a heavy price. Then only the A9 Kandy-Jaffna road can be opened to restore some form of normal life for most of the population of Northern Province. Regaining A9 road from the LTTE control by evicting them from Kilinochchi –Elephant Pass would always remain the strategic objective of the
entire operation.
But these are all military semantics; in the absence of independent sources to verify operational information, semantics of both the defence spokesman and the LTTE become important; they indicate the issues hidden behind the words.
After the capture of Pooneryn on November 15, crossing Akkarayankulam bund on October 31, and capture of Mankulam on November 17, it is a month.
Evidently since then, momentum of advance has been stalled due to adverse weather on a few days, and stiff LTTE resistance that had been progressively
increasing. This would contradict repeated Sri Lankan assertion that the LTTE was on the run. If this is not so, what is holding up the troops?
Loss of momentum in an offensive means more time for the opponent to recoup, rest, repair and readjust defences, reinforce positions, launch counter
offensives and inflict more casualties. And cost of war in terms of men, material and money goes up as the clock ticks in days and days become months.
The more it is prolonged the better it is for the forces on the defence.
Fortunately, the army commander has cleverly put himself in an advantageous position with multiple options of axes to pick and choose. He also has
adequate troops for achieving the strategic objective. Even granting the monsoon rains that affected both sides comes in fits and starts the progress is
becoming slow and taking too long. This raises a few operational questions:
Why the offensive to Kilinochchi ending up as a slow crawl? Has the LTTE built up its strength beyond the ken of four divisions? Is the army commander facing a major operational dilemma or political rider interfering with his operations for reasons not known to the public? In this context, Lt Gen Sarath Fonseka's comments on India's role in Sri Lanka in an interview to the Sunday Observer is interesting for more reasons, than
his derogatory description of Nedumaran and Vaiko,(Tamil Nadu politicians who head the pro-LTTE political lobby in Tamil Nadu) as jokers who receive
money from the LTTE. Regarding the operations he sounded quite confident of capturing both Kilinochchi and Mullaitivu. He was not unduly worried about the
slow progress or any casualties. There was apparently no operational stress. Does it mean operations are going on smoothly at an accepted pace? In the
absence of access to information our questions still linger, unanswered.
The interview had a political content not usually found in interviews of army chiefs. His sarcastic comment was clearly provocative. As anticipated it drew
widespread condemnation from political parties in Tamil Nadu and Government of India protested to Sri Lanka on the issue. There was quick apology from
the Defence Secretary Gotabhaya Rajapakse the General's remarks. And in the corrective action that followed, Colombo axed the editor of Sunday Observer
while the errant General went scot-free. One cannot imagine the army commander casually tackling a political issue involving a sensitive neighbour without
some tacit official acceptance of his perceptions. The freedom of operation given by the President to Lt Gen Fonseka appears to go well beyond the military kind.
And this is not the first time Gen Fonseka has made a politically controversial remark His interview inn October 2008 to the National Post, a Canadian daily,
created enough concerns among Tamils when he said: "I strongly believe that this country belongs to the Sinhalese but there are minority communities and
we treat them like our people…We being the majority of the country, 75%, we will never give in and we have the right to protect this country…We are also
a strong nation … They can live in this country with us. But they must not try to, under the pretext of being a minority, demand undue things."
While that remark did not endear him to Tamils and caused more concerns in the ethnically polarised nation, Sinhala right wing lobbies applauded him.
Why is Lt Gen Fonseka making such controversial remarks repeatedly? Does he nurture political ambitions after he completes his extended tenure next
year? His latest remark on Tamilnadu politicians in the Sunday Observer interview definitely raises this question.
But whatever be the reason, such provocative remarks of the army commander only strengthen the Tamil suspicions of the ulterior objective of Sri Lanka
government's war against the LTTE.
(Col. R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90.He is associated with the South Asia Analysis Group and the Chennai Centre for China Studies.)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது
"எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது.
பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது."
"இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது. பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே
அன்றி வேறெதற்காகவும் அன்று."
"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
"இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக."
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.மாவீரர் நாள் உரை 271108

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
No comments:
Post a Comment