Monday 29 December, 2008

கிளிநொச்சி: ஆக்கிரமிப்பாளர்களுக்கு பேரழிவு.

முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 68 படையினர் பலி; 75 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு
[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 04:10 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடனும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடனும் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.
இதில் சிறிலங்கா படையினர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:
ஏகே எல்.எம்.ஜி - 08,ரி-81 ரக எல்.எம்.ஜி - 01,ஆர்.பி.ஜி - 04,கவச எதிர்ப்பு எறிகணை செலுத்தி - 02
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 08,ரி-56 ரக துப்பாக்கிகள் - 02
உள்ளிட்ட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் பகுதியில் நேற்று காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலை பிற்பகல் 12:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.
இதில் சிறிலங்கா படையினர் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.
[படம்: விடுதலைப் புலிகள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் ஒரு பகுதி] கிளிநொச்சியை பிடிக்க சிங்களப் படை தீவிரம்- தக்க வைக்க புலிகள் வீராவேசமாக தாக்குதல்: பா.நடேசன் [சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:53 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]

கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழின் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள பா.நடேசனின் நேர்காணல்:
கிளிநொச்சி நகரத்தை நான்கு முனைகளில் இருந்தும் தாக்கும் இராணுவத்தின் முன்னேற்றம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தற்போது அங்கு நிலவரம் எவ்வாறு உள்ளது?
கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது. ஒரு முனையில் தாக்குவதால் பயனில்லை; பல முனைகளில் களங்களைத் திறந்து ஒரே சமயத்தில் தாக்குவதன் மூலம் நகரைப் பிடிக்கலாம் என சிங்களப் படைகள் கருதியிருந்தன. சிங்களப் படையின் இந்தப் புதிய வியூகத்தையும் புலி வீரர்களும், வீராங்கனைகளும் இப்போது முறியடித்து விட்டனர்.

பெருந்தொகை சிங்களப்படைகள் கொல்லப்பட்டதால் சிங்கள அரசும் அதிர்ந்து போயுள்ளது. ஆனாலும் அது தனது முயற்சியை கைவிடுவதாக இல்லை. இப்போது கிளிநொச்சி நகரம் மீதும் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மீதும் பெருமெடுப்பிலான வான்தாக்குதலை முடுக்கியுள்ளது. வானூர்திகளின் பேரிரைச்சலும் அவை போடும் குண்டுகளின் வெடிச்சத்தங்களும், காயமடையும் மக்களின் அவலக்குரலுமாக வன்னிப்பகுதி காட்சியளிக்கின்றது. விரைவில் கிளிநொச்சி அடுத்து முல்லைத்தீவு என புலிகள் பகுதியை முழுவதுமாக கைப்பற்றி விடுவோம். அப்பொழுது ஒழிந்துகொள்ள வேறு இடம் இல்லாமல் கடலுக்குள் சென்றுதான் புலிகள் தற்கொலை செய்யவேண்டும் என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இதற்கு தங்களின் பதில் என்ன? புலிகள் இயக்கம் கடலுக்குள் குதித்து அழிய வேண்டும் அல்லது சயனைட் அருந்தி சாகவேண்டும் என்று சிங்கள பேரினவாதிகள் ஆசைப்படுகின்றனர். இதேபோன்ற கருத்தை முன்னர் சந்திரிகா காலத்தில் அதன் இராணுவ அமைச்சராக இருந்த ஜெனரல் ரத்வத்தவும் கூறியிருந்தார். இதேபோன்றுதான் பண்டைய சிங்கள மன்னான துட்டகைமுனுவும் தமிழர்களை கடலுக்குள் தள்ளியழிக்க ஆசைப்பட்டிருந்தான். இனவாத மரபு சார்ந்த இராணுவ ஆசைகள் நிறைவேற புலிகள் இயக்கமும் எமது மக்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பலத்த இழப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேறி வருவது, இராணுவம் பலமடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறதா? கணிசமான நிலங்களை சிங்களப்படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு அகலக்கால் வைத்து சிங்களப்படைகள் பலவீனமடைந்திருக்கின்றன என்பதும் உண்மையாகும். ஒரு விடுதலை இயக்கத்தின் பலம் என்பது அது வைத்திருக்கும் நிலப்பரப்பு என்பதை விட அதனிடம் இருக்கும் படை பலம் தான். எனவேதான் நெருக்கடிகள் ஏற்படும் பொழுது நிலத்தை விட்டுக்கொடுத்து படை பலத்தை தக்கவைத்துக் கொள்வதை ஒரு மரபாக விடுதலை இயக்கங்கள் கொண்டிருக்கின்றன. ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல ஒருநாள் புலிகள் இயக்கம் தனது பாரிய தாக்குதலை தொடுக்கும்போது இழக்கப்பட்ட இந்த நிலங்கள் ஓரிரு நாட்களில் புலிகள் வசமாகும்.
சிறிலங்கா இராணுவத்தின் திடீர் பலத்துக்கு மற்ற நாடுகளின் உதவிதான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. எந்தெந்த நாடுகள் சிறிலங்காவுக்கு உதவுகின்றன?
தனது சொந்தப் பலத்துடன் நின்றபடி எம்முடன் சிங்களப்படைகள் மோதுவதாகவிருந்தால் ஒரு குறுகிய காலத்தில் வெற்றிபெற்று எமது இலக்கை அடைவோம் என்பது திண்ணம். ஆனால், நாங்கள் சிங்களப்படைகளுடன் மட்டும் மோதவில்லை. பல நாடுகளுடன் மோதியே எமது விடுதலையைப் பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வேண்டுமென்றே சில நாடுகள் சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் புரிகின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த நாடுகளுக்கு இங்கு நலன்கள் இருக்கின்றன என நாம் சந்தேகிக்கின்றோம். எமது விடுதலைப் போரை தடுப்பதன் மூலம் அந்த நாடுகள் நன்மையடைய விரும்புகின்றன போலுள்ளது.
வியட்நாம் போல் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, அவர்களும் போரில் குதிப்பது குறித்து முன்பு பேசப்பட்டது. இப்பொழுது நடந்து வரும் போரில் மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது? இப்போது இங்கே நடக்கும் போர் மக்கள் போர் என்ற வடிவில்தான் நிகழ்ந்து வருகின்றது. மக்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் போர்க்கடமைகளை இங்கு ஆற்றி வருகின்றனர். வலுவுள்ள அனைவரும் ஆயுதப்பயிற்சி பெற்றுள்ளனர். சுழற்சி முறையில் களமுனைப் பணிகளை மக்கள் தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றனர். ஆள் எண்ணிக்கையில் அதிகமுள்ள சிங்களப் படைகளை மக்கள் போர் என்ற இந்தப் போர் வடிவில் தான் எதிர்கொண்டு வருகின்றோம். சங்கத்தமிழர் காலத்து வீரமரபு ஈழமண்ணில் இன்று நிதர்சனமாக நடைபெறுகின்றது. வீரமும் - தியாகமும் - ஒருங்குசேர்ந்து வெளிப்படுத்தப்படும் புறநானூறுகள் ஒவ்வொருநாளும் களத்தில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்ற இலங்கைத்தமிழ் அரசியல்வாதிகள் தமிழகப் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் பேட்டிகளில் புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள்; தங்களை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளத்தான் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்கள் எனச்சொல்லி வருகிறார்கள். இதற்கு புலிகள் பதில் என்ன? எமது இனத்தின் வரலாற்றைப் பொறுத்த வரையில் இவர்கள் துரோகிகள். தற்போதைய அரசியலில் பிணம் தின்னும் கழுகுகள். எப்போது புலிகள் இயக்கம் அழியும், தமது வயிற்றுப்பிழைப்பு அரசியலை இங்கு நடத்தலாம் என ஏங்கிக்கொண்டிருப்பவர்கள். சிங்களப் படைகளால் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுகிறார்கள் என உலகமே உரத்துக் கூறிக்கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் அனைவரும் தமது முதன்மை எதிரியாக சிங்கள அரசையே கருதுகின்றனர். இந்த நிலையில் அற்பசொற்ப பதவி சுகங்களுக்காக சிங்கள அரசுடன் ஒட்டிக்கொண்டு கோடாலிக்காம்புகள் போல செயற்படுகின்றனர். எம்மைப் பற்றியும் எமது மக்களைப் பற்றியும் புலம்பித் திரிவதே இவர்களின் வேலை. இவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் எதுவித அர்த்தமும் இல்லை.
புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழகம் உட்பட உலகம் முழுக்க சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், அதை முறியடிக்க புலிகள் தரப்பில் என்ன செய்யப்படுகின்றது? நாங்கள் விடுதலைக்காகப் போராடும் ஓர் இயக்கம். உண்மையும் நேர்மையும் தான் எங்களுக்கு ஆதாரம். பொய்களும் புனைகதைகளும் எங்களுக்கு புதியவையல்ல. அது ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு பெரியவை. ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கின்றது. அதற்கெதிராக ஒரு விடுதலைப் போரும் நடக்கின்றது. இந்த அரசியல் உண்மையை கடந்த முப்பது வருடங்களாக உலகிற்கு நாங்கள் தெரியப்படுத்திவருகின்றோம். இப்போதும் அதையே செய்து வருகின்றோம். தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப்பொருட்கள் அங்கு மக்களுக்கு வழங்கப்படுகின்றனவா? அதற்கு சிறிலங்கா அரசு என்ன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது? புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த நிவாரணப்பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன?
தமிழக மக்களிடமிருந்து ஈழத்தமிழ் மக்களிற்காக அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடை வகைகளும் கட்டம் கட்டமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டுவரப்பட்டு இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் இந்த உணவு, உடை என்பவை தமிழக மக்களிடம் இருந்து வந்தவை என்ற வகையில் பெரும் ஆவலோடும் மகிழ்ச்சியோடும் இப்பொருட்களை பெற்றுச்செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மாவீரர் நாள் உரையில் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை அனைத்துலக நாடுகள் நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்; இதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சியில் புலிகள் அமைப்பு ஈடுபட்டுள்ளதா? அதற்கு வேண்டிய அனைத்து வகையான இராஜதந்திர அரசியல் நகர்வுகளை எடுத்து வருகின்றோம். குறிப்பாக இந்திய அரசிற்கும் பல்வேறு வழிகளின் ஊடாக எடுத்துரைத்து வருகின்றோம். எமது கோரிக்கைகளை இந்திய மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக பழ.நெடுமாறன், வை.கோ. போன்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பணம் கொடுப்பதாகவும் அவர்களை கோமாளிகள் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்;. இதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? சரத் பொன்சேகாவின் கூற்று ஈழத்தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வு மட்டுமல்ல தமிழக மக்கள் மீதும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் மீதும் அவருக்கிருந்த வெறுப்புணர்வையே எடுத்துக்காட்டுகின்றது. அண்மைக்காலமாக அவர் தமிழ் மக்கள் மீதான இன விரோதக் கொள்கையையும் கோட்பாடுகளையும் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றார்;. இதனை இந்திய அரசும் உலக நாடுகளும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க முன்வரவேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக முடிவானது. பிரணாப் முகர்ஜியின் வருகை ஏதாவது மாற்றத்தை உருவாக்குமா? இந்தியா ஒரு பலமான நாடு மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்தின் வல்லரசுமாகும். இந்திய மத்திய அரசு நினைத்தால் அதிகாரத்தையும் - செல்வாக்கையும் பிரணாப் முகர்ஜியுடாக பயன்படுத்தி போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான புறச்சூழல் ஒன்றையும் உருவாக்க முடியும். இந்தப் பிராந்தியத்தின் பெரு அரசு என்ற வகையில் இதைச்செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டென்பதும் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.
புலிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்? நாம் உலகின் சகல நாடுகளிடமும் அரசியல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இந்திய அரசுடனும் எமது நட்புறவை மீளக்கட்டியெழுப்ப விரும்புகின்றோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் விரைவில் வெளியிடப்படும்: திச விதாரன [சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:21 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]

இலங்கை இனப்பிரச்சினைக்கான மகிந்த அரசின் தீர்வுத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று சிறிலங்கா அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் திச விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக 13 கட்சிகளுடன் அனைத்து விடயங்களும் ஆராயப்பட்டு உள்ளன. தற்போது இனப்பிரச்சினை தொடர்பான தீர்வுப் பரிந்துரைகளை ஐக்கிய தேசியக் கட்சி அளிக்க உள்ளது. ஐ.தே.கவின் பிரதிநிதி சொக்சி, எதிர்வரும் திங்கட்கிழமை இதனைக் கையளிப்பார் என கருதுகிறோம்.
தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு தீர்வையும் அனைத்துக் கட்சி குழு ஆராய்ந்துள்ளது என்றார் அவர்.

உரிமைகள் எட்டப்படும்வரை போராட்டம் தொடரும் : தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் 'லக்பிம'வுக்கு பேட்டி வீரகேசரி இணையம் 12/29/2008 11:52:16 AM -

எமது மக்களின் அரசியல் உரிமைகள் எட்டப்படும்வரை போராட்டம் தொடரும். மிரட்டல் அல்லது பேரங்கள் மூலமாக இந்த புனிதப் போரை யாரும் நசுக்கிவிட முடியாது. எமது மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அனைத்து தியாகங்களையும் செய்து விட்டார்கள்.
இவ்வாறு 'லக்பிம நியூஸ்' என்ற சிங்களப் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பேட்டி விபரம் வருமாறு :
கேள்வி: கிளிநொச்சியை இராணுவம் பிடித்து விட்டதாகவும், புலிகளுக்கு முடிவு நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறதே... இது குறித்து...?
பதில்: எமது நெடிய போராட்ட வரலாற்றில் இதைவிட பெரிய நெருக்கடிகளை எல்லாம் சந்தித்திருக்கிறோம். இலங்கை அரசின் ஒருதலைப் பட்சமான பிரசாரங்களையும் பார்த்திருக்கிறோம். அவற்றை வெற்றிகரமாக முறியடித்துமிருக்கிறோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து நாங்கள் வன்னிப் பரப்புக்கு இடம்பெயர்ந்த போது மீண்டும் எம்மால் பாரம்பரிய இராணுவ அமைப்பாக செயல்படவே முடியாது என்று பிரசாரம் செய்தன அரச படைகள். ஆனால் அதற்குப் பிறகுதான் முல்லைத்தீவை மீண்டும் நாம் கைப்பற்றினோம். ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3-ஐ வெற்றிகரமாக நடத்தி ஆனையிறவு மற்றும் வன்னியின் பெரும் நிலப்பரப்புகளை மீட்டோம்.
இப்போதும் கிளிநொச்சியை நாங்கள் விரைவில் இழந்து விடுவோம் என்று இலங்கை அரசு பிரசாரம் மேற்கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் அரசுப் படைகளுக்கு புலிகள் ஏற்படுத்தியுள்ள பலத்த சேதமே சொல்லும், எமது இயக்கத்தின் எதிர்கால வெற்றிகள் எப்படிப்பட்டவை என்று.
கேள்வி: கிளிநொச்சியைப் பிடிப்பதாக ராஜபக்ஷ பகல் கனவு காண்பதாகக் கூறியுள்ளீர்கள். அதேநேரம் கிளிநொச்சியில் மிகுந்த நெருக்கடியுள்ளதாகவும், மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகவும் கூறப்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளவுமில்லை. எது உண்மை?
பதில்: எமது இயக்கம் மக்கள் சார்ந்த அமைப்பு. மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் போராடி வரும் இயக்கம் இது. மக்களின் பலமும் பேராதரவும் எமக்கிருப்பதால்தான் இது சாத்தியமானது. அவர்களின் ஆதரவுதான் எம்மை பெரும் நெருக்கடிகளையும் போர் திணிப்புகளையும் எளிதில் வெற்றி கொள்ள வைத்திருக்கிறது.
ஒட்டுமொத்த தமிழினமும் எம் பின்னால் உள்ளது. எம்மை மனமார ஆதரிக்கிறது. எமது போராட்டத்தின் பின்புல சக்தியாகத் திகழ்வது அவர்கள்தான். கிளிநொச்சி காக்கப்பட வேண்டும் என்பது எமது மக்களின் விருப்பம். அதற்காக அவர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களின் இந்த பேராதரவைக் கண்டு கோபம் கொண்டுள்ள இலங்கை இராணுவப் படைகள் எம் மக்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது. பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி அவர்களுக்கு நெருக்கடி தருகிறது. எமது மக்களுக்கு இந்த உண்மை தெரியும். அதனால்தான் பாதுகாப்பான மறைவிடங்களுக்கு அவர்கள் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
கேள்வி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டால் சந்தோஷமே என்ற எண்ணத்தில் தான் ஈழத் தமிழர்களுக்கு உதவ மறுக்கிறது இந்தியா. இந்தியாவின் முழுமையான ஆதரவை நீங்கள் இழந்துவிட்டதைத்தானே இது காட்டுகிறது...?
பதில்: இதை நாம் முற்றாக மறுக்கிறோம். தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் வேறுபாடுகளைக் கடந்து ஒருமனதாக எம்மையும் எமது போராட்டத்தையும் ஆதரிக்கிறார்கள். இவர்களில் எந்தத் தலைவரும் எமக்கான ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கவில்லை. இன்னமும் பல வடிவங்களில் தமது ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்திய அரசுடன் எங்களது உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான, ராஜாங்க வழிமுறைகளில் இறங்கியுள்ளோம். இந்தச் சூழலில் இந்தியாவின் மத்திய அரசும் எங்களது போராட்டத்தை ஆதரிக்கும் என்ற நிலை உருவாகி வருகிறது. இது பலருக்குத் தெரியாது. தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது நன்கு தெரியும் என்று நம்புகிறேன்.
கேள்வி: கிழக்குப் பகுதியை விடுவிக்க இலங்கை இராணுவம் முயற்சி எடுத்தபோது, வாயே திறக்காத கருணாநிதியும் மற்ற தலைவர்களும், திடீரென்று கிளிநொச்சி மக்களைப் பற்றி பேசி வருவது ஏன்? சரிந்து கிடக்கும் தங்கள் அரசியல் இமேஜைத் தூக்கி நிறுத்தி ஆதாயம் தேடும் முயற்சிதானே? இந்தக் கோணத்தில் நீங்கள் பார்க்கவில்லையா?
பதில்: தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் எமது விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள், மனமார. காரணம் எமது மக்கள் மீது அவர்களுக்குள்ள உண்மையான அன்பு. எந்த உள்நோக்கமும் இல்லாமல் அவர்கள் எம்மை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.
கேள்வி: கருணாவும் பிள்ளையானும் அரசில் இணைந்து பதவிகளைப் பெற்று கிழக்குப் பகுதி வளர்ச்சிக்குப் பாடுபடுவதன் மூலம், விடுதலைப் புலிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும், அவர்களுக்கு ஏராளமான மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுவது குறித்து...?
பதில்: கிழக்குப் பகுதி மக்களின் பூரண ஆதரவு எமது இயக்கத்துக்குத்தான் உள்ளது. எங்கள் அரசியல் பிரிவு அங்கே இன்னமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிழக்குப் பகுதி மக்களை இன்னமும் அவர்கள்தான் காத்து வருகிறார்கள். கருணாவையும் அவர் சார்ந்த சிலரையும் சிங்கள அரசு தனது இராணுவத்தைக் கொண்டு காப்பாற்றி வருகிறது. அவர்களை முன்னிறுத்தி பொய்ப் பிரசாரம் நடத்தி வருகிறது. அதற்குத்தான் அவர்கள் உதவுகிறார்கள். இதுவே களத்தின் உண்மை நிலை.
கேள்வி: விடுதலைப் புலிகளின் படை பலம் அப்படியே இருப்பதாக நீங்கள் சமீபத்தில் கூறியிருந்தீர்கள். ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகள் அமைப்பு பெரிய வெற்றிகள் எதையும் சாதிக்கவில்லை. இதனை அரசின் பொய்ப் பிரசாரம் என நீங்கள் கூறினாலும், சர்வதேச மீடியா, புலிகள் பலவீனமடைந்துள்ளதாகவே கூறி வருகின்றன. உங்கள் கருத்து...?
பதில்: நாங்கள் பலவீனமடைந்து விடவில்லை. மக்களே எங்கள் பலம். கிள்நொச்சியின் சமீப காலப் போர் நடவடிக்கைகள் எங்களின் பலத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. எங்களின் எதிர்கால வெற்றிகள் இந்த விமர்சனங்களுக்கு நிச்சயம் பதிலளிக்கும், எங்கள் நிஜ பலத்தையும் காட்டும்.
கேள்வி: நீங்கள் தஞ்சமடைய பல்வேறு நாடுகளிடம் உதவி கேட்டு வருவதாகவும், எரித்திரியா அல்லது தென் ஆபிரிக்காவுக்கு தப்பிச் செல்லக் கூடும் என்றும் வதந்தி பரவுகிறதே? உங்கள் சகாக்களை விட்டுவிட்டுச் சென்று விடுவீர்களா?
பதில்: இது அப்பட்டமான பொய். இலங்கை அரசின் மீடியா செய்யும் திட்டமிட்ட பிரசாரம். எமது மண்ணைவிட்டு ஓடுபவர்கள் அல்லர் நாங்கள். எமது மக்களின் உரிமைகளை மீட்க இறுதி வரைப் போராடுவோம்.
கேள்வி: இன்னும் விடுதலைப் புலிகள் எத்தனை பேர் உங்கள் படையில் உள்ளனர்?
பதில்: பல ஆயிரக்கணக்கில்.
கேள்வி: உங்களுக்கு வயதாகிக்கொண்ட வருகிறது. தமிழீழம் அவ்வளவு சுலபத்தில் கிடைப்பதாகவும் தெரியவில்லை. இதுபற்றி...?
பதில்: எங்களுடையது சுதந்திரப் போர். எமது அமைப்பு ஒரு தேசிய இயக்கம். அதற்கு கால வரையறை கிடையாது.
கேள்வி: ஆனால் இந்தப் போரால் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்களே... ஆயுதங்களைப் போட்டுவிட்டு சமாதானத்துக்கு நீங்கள் முன்வராதது ஏன்? ஆண்டுக்கணக்கில் துயருறும் தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறையிருந்தால் அந்த வழியிலும் நீங்கள் முயற்சிக்கலாமல்லவா?
பதில்: எமது மக்களின் அரசியல் உரிமைகள் எட்டப்படும்வரை போராட்டம் தொடரும். மிரட்டல் அல்லது பேரங்கள் மூலமாக இந்த புனிதப் போரை யாரும் நசுக்கிவிட முடியாது. எமது மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற அனைத்து தியாகங்களையும் செய்து விட்டார்கள். இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொண்டால் நிச்சயம் இனப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிட்டும்.
கேள்வி: தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம், மகிந்த ராஜபக்ஷவை அதிபராகத் தேர்வு செய்ய உதவியதை நினைத்து இப்போது வருந்துகிறீர்களா?
பதில்: இல்லை. தேர்தலைப் புறக்கணித்தது மக்களின் சொந்த விருப்பம். அவர்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதுகுறித்து தவறான பிரசாரமே நடந்து வருகிறது.
கேள்வி: உங்கள் பயங்கரவாதத்தைப் பார்த்து சர்வதேச சமூகம் உங்களைப் புறக்கணித்து வருகிறது. அனைத்து மட்டங்களிலும் ஆதரவை இழப்பது சரியா?
பதில்: இதில் உண்மையில்லை. இப்போதுதான் சர்வதேச சமூகத்துக்கு இங்குள்ள கள நிலவரம் புரியத் தொடங்கி இருக்கிறது. இது ஒரு உரிமைப் போராட்டம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை. முன்னெடுத்துச் செல்லவுமில்லை.
இலங்கை அரச படைகளின் விமான குண்டு வீச்சும், அநியாய பொருளாதாரத் தடைகளும் பயங்கரவாதமா? அல்லது நியாயமான உரிமைகளைப் பெற நாம் போராடுவது பயங்கரவாதமா?
தயவு செய்து இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சர்வதேச சமூகத்தையும் சிங்கள மக்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: சமீபத்தில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவைக் கொன்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இது பழிவாங்கலா அல்லது இந்தக் கொலையில் அரசுக்கு பங்கிருப்பதாகக் காட்டி மக்களைக் குழப்பும் முயற்சியா?
பதில்: இந்தக் கொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தமில்லை என்பதே உண்மை. சமீப காலமாக இலங்கை அரசுக்கும் ஜானக பெரேராவுக்கும் தீவிரமான கருத்து மோதல்கள் இருந்து வந்தன. அது சிங்கள மக்களுக்கும் நன்கு தெரியும். இந்த மாதிரி அரச பயங்கரவாதத்துக்கு எதிராக சிங்கள மக்களே பொங்கியெழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்குப் பெருமளவு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே...?
பதில்: எங்கள் இயக்கம் நேர்மையானது. உண்மையான காரணங்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கிறது. எங்களை யாரும் விலை பேசவும் முடியாது; லஞ்சம் கொடுத்து வாங்கவும் முடியாது.
கேள்வி: சின்னச்சின்ன தாக்குதலைத் தவிர பெரிதாக எதையும் உங்களின் விமானப்படை சாதிக்கவில்லையே... அல்லது இம்மாதிரி விமானப்படை உருவாவதை இந்தியா விரும்பாது என்பதால் அமைதி காக்கிறீர்களா?
பதில்: மீண்டும் சொல்கிறேன்... இலங்கை அரச படைகள்தான் இராணுவத் தாக்குதலை தமிழர் பிரதேசங்களில் நடத்தின. இந்தப் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்கிரம் காட்டுவது அவர்கள்தான். நாங்கள் தற்காப்பு நடவடிக்கையில்தான் ஈடுபட்டு வருகிறோம்.
மக்களைப் பாதுகாப்பதற்கு மட்டும்தான் எமது கடற்படையும், விமானப் படையும் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி யாரும் எமக்கு மிரட்டல் விடுக்கவில்லை. மகிந்த ராஜபக்ஷவின் படைகள்தான் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
கேள்வி: உங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் யார்? உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன?
பதில்: என்னைத் தங்களின் தேசியத் தலைவராகவும் எமது படையின் தலைவராகவும் எமது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு இதைமட்டும்தான் சொல்ல முடியும்.
கேள்வி: விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதாக இராணுவம் கூறுவது பொய்ப் பிரசாரம் என்கிறீர்கள். அப்படியானால் உண்மை நிலவரங்களை வெளியுலகுக்குச் சொல்வதிலும் உங்கள் தரப்பு தவறி விடுகின்றதே?அனைத்து மட்டங்களிலும் இந்தப் பின்னடைவு ஏன்?
கேள்வி:உங்கள் கணிப்பு தவறானது. அனைத்து மட்டங்களிலும், அரசியல், இராணுவம் மற்றும் ராஜாங்க உறவுகளை வளர்த்தல் போன்றவற்றில் எமது இயக்கம் வெற்றிநடை போட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
கேள்வி: சிங்கள மக்கள் இரு விஷயங்களில் தெளிவாக உள்ளனர். தனி ஈழம் என்பதைத் தவிர வேறு எந்த தீர்வுக்கும் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அடுத்து நீங்கள் தொடர்ந்து அப்பாவி சிங்களவர்களைத் தாக்குவதையும் நிறுத்த மாட்டீர்கள். இல்லாவிட்டால் தெற்கில் தொடர்ந்து பஸ்களில் குண்டு வைத்து சிங்கள மக்களை நீங்கள் கொன்றிருக்க மாட்டீர்களே?
பதில்: தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கவும், அவர்களின் சுதந்திரத்துக்காகவும்தான் எமது இயக்கம் பாடுபட்டு வருகிறது. நாங்கள் இனவாதம் பேசுவதில்லை. சிங்கள மக்களைக் கொல்வதும் எங்கள் நோக்கமில்லை. எங்கள் போராட்டத்துக்கு சிங்கள மக்களின் ஆதரவையும் நாம் நாடுகிறோம். இதைச் சிங்களவர்களே இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். எமக்கு ஆதரவாக செயல்படவும் சிங்களவர்கள் தயார்தான். ஆனால் இலங்கை அரசின் அடக்குமுறைக்குப் பயந்து அவர்கள் அமைதி காக்கிறார்கள்.
கேள்வி:அம்னெஸ்டி போன்ற அமைப்புகள், நீங்கள் அப்பாவி மக்களைக் கேடயமாக்கிப் போரிட்டு வருவதாகக் குறை கூறுகின்றதே?
பதில்: இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன். மக்களை ஒருபோதும் கேடயமாகப் பயன்படுத்தி நாங்கள் போரிடவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மக்களின் உரிமைகளுக்காகத்தானே நாம் போரிட்டுக் கொண்டிருக்கிறோம்.
கேள்வி: இலங்கையின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1978 முதல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண கடுமையாக முயற்சித்தும் தோற்று வருகின்றன. காரணம் இம்மாதிரி அரசுகளுக்குள்ள கால வரையறை. ஆனால் தீவிரவாதத்துக்கு இம்மாதிரி கால வரையறை கிடையாது. அதனால்தான் போர் இன்னும் நீடித்து வருகிறது. இது சரிதானே?
பதில்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் முழுமையாக நிலைமையைப் புரிந்து தீர்வு காண முற்பட்டிருந்தால் இந்த தேசத்தின் பொருளாதாரம் இப்படி மோசமாகியிருக்காது. அதிகாரத்துக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்கள் பழைய கோட்பாடுகளைத் தூர எறிந்துவிட்டு, தமிழ்த் தேசியத்தின் கேள்விகளுக்கு நிரந்தர தீர்வு காண முயற்சித்திருந்தால் பொருளாதாரம் இந்தளவு மோசமாகி இருக்காதே...? ஆக, எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் அவர்கள்தான்.

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதல் [புதன்கிழமை, 24 டிசெம்பர் 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

வன்னிப்பெரு நிலப்பரப்பு எங்கும் சிறிலங்கா படையினர் பரவலாக "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளனர். சிறிலங்கா வான்படையினர் நடத்தும் இந்த புதிய வகை "பரசூட்" கொத்து குண்டுகள் நிலத்திலிருந்து 50 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறி பொதுமக்களுக்கு பாரிய சேதங்களை உண்டாக்குகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமையும் இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இரண்டு தடவைகள் "பரசூட்" கொத்து குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்றிரவு 10:15 நிமிடமளவில் ஒரு தடவையும் இன்று காலை 8:00 மணியளவில் இன்னொரு தடவையும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் அப்பகுதியில் இருந்த கத்தோலிக்க கன்னியர் மடம், பொதுமக்களின் பல வீடுகள், வணிக நிலையங்கள் என்பன சேதமடைந்துள்ளதுடன் கால்நடைகள் பலவும் கொல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்திருந்த மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்தும் இன்று காலை 8:00 மணியளவில் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் பொதுமக்களின் இரண்டு வீடுகள் சேதமாகியுள்ளன.
இத்தாக்குதலையடுத்து அப்பகுதியில் காலைவேளை கடற்றொழில் பாதிக்கப்பட்டது.
சில வாரங்களுக்கு முன்பு கூட இதேபோன்ற "பரசூட்" கொத்துக் குண்டுகளை கிளிநொச்சி மருத்துவமனைக்கு அருகிலும் பரந்தன் கல்லாறு பகுதியிலும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வீசின என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளை மற்றும் கேப்பாபுலவுப் பகுதிகள் மீது சிறிலங்கா தரைப்படையினர் இன்று செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முள்ளிவளையில் இருந்து இடம்பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இக்கிராமங்களில் தங்கியிருந்த நிலையில் அப்பகுதி மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை குமாரபுரம் பகுதியில் தனது வீட்டினைப் பார்த்து வரச் சென்ற ஒருவர் அங்கு பதுங்கியிருந்த சிறிலங்கா படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குமாரபுரத்தில் உள்ள தனது வீட்டை இன்னொருவருடன் கடந்த சனிக்கிழமை (20.12.08) பார்வையிடச் சென்ற போதே படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
இதில் சோமசுந்தரம் தில்லைநாதன் (வயது 42) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து அவருடன் சென்றவர் தப்பி வந்துவிட்டார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சோமசுந்தரம் தில்லைநாதனுக்கு என்ன நடந்தது என இதுவரை தெரியவரவில்லை.

கொழும்பிலிருந்து மரக்கறிகள் குடாநாட்டுக்கு அனுப்பி வைப்பு [24 டிசம்பர் 2008, புதன்கிழமை 9:45 மு.ப இலங்கை]

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மரக்கறிப் பொருள்கள் ஏற்றுமதி செய்த காலம்மாறி, தற்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணச் சந்தைக்கு மரக்கறி எடுத்து வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மரக்கறிகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிலோ ஆயிரம் ரூபாவை சில மரக்கறி வகைகள் எட்டியுள்ளன. இந்நிலையில் கொழும்பில் இருந்து எடுத்துவரப்பட்ட கத்தரிக்காய், போஞ்சி போன்றவை யாழ். மருதனார்மடம் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்ததை அவதானிக்க முடிகிறது.
கத்தரிக்காய் கிலோ 600 ரூபாவாகவும் போஞ்சி கிலோ 700 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டன.

வன்னியிலிருந்து மக்கள் வெளியேற இடமளியாவிடின் புலிகள் மீது தடை [23 - December - 2008]

புத்தாண்டு வரை காலக்கெடு; ஜனாதிபதி அறிவிப் -டிட்டோகுகன்-
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள மக்களை புத்தாண்டுக்கு முன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கு இடமளிக்காவிடின் தடையை எதிர்கொள்ள நேரிடுமென எச்சரித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வரலாற்று ஏட்டிலிருந்து புலிகளை நிரந்தரமாக துடைத்தெறியும் வரை ஓய்வடையப் போவதில்லையெனவும் தெரிவித்திருக்கிறார்.
2009 ஆம் ஆண்டானது விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலிலிருந்து தாய் பூமியை முற்றுமுழுதாகவும் இறுதியாகவும் மீட்டெடுக்கும் ஆண்டெனவும் இதை "இராணுவ வெற்றியின் வருடம்' என பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
உலக பொருளாதார நெருக்கடி மற்றும் விரக்தியுற்றுப் போயுள்ள உலக பயங்கரவாத செயற்பாடுகள் முன்னிலையில் எம்முன்னிருக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக சர்வமத, அரசியல், வர்த்தக, கலை போன்ற பல்துறை சார்ந்த புத்தி ஜீவிகளுக்கு விளக்கமளிக்கும் முகமாக நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பேசும் போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்;
"ஐக்கிய தேசியக் கட்சியினரோ அல்லது ஜே.வி.பி.யினரோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் எதிரிகளல்லர். இந்த நாட்டிற்கு இருப்பது ஒரே எதிரிதான். பயங்கரவாதமே அந்த பொதுவான ஒரே எதிரி. அரசியல் எதிரிகளான எம்மிடம் இருப்பது எமக்கிடையேயான கொள்கை ரீதியான வாதப்பிரதிவாதங்கள் மட்டுமே.
அடுத்து நாம் 2009 ஆம் ஆண்டுக்கு முகம் கொடுக்கப் போகிறோம். இது எனது தலைமைத்துவத்தின் கீழ் நாடு முகம் கொடுக்கும் 4 ஆவது ஆண்டு. 2009 ஆம் ஆண்டு சகல வழிகளிலும் முக்கியமானதொரு ஆண்டாக இருக்குமென்பதே எமது நம்பிக்கை. எமது படையினர் தமது இறுதிப் போராட்டத்தின் வெற்றியை தாய் பூமிக்குப் பெற்றுக் கொடுக்கப்போவது இந்த ஆண்டில் தான் என நம்புகிறேன்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து தாய் நாட்டை முற்றாக விடுவிக்கும் ஆண்டாகும். எனவே, இந்த வெற்றியை தடுக்க பல்வேறு மோசடி சக்திகள் பல வழிகளிலும் சூழ்ச்சிகளை மேற்கொள்ளக்கூடும்.
2009 ஆம் ஆண்டை "இராணுவ வெற்றியின் வருடம்' என நான் பிரகடனப்படுத்துகிறேன். அதேபோல் இதற்கு எதிரான சூழ்ச்சிகளைத் தோற்கடித்து வெற்றியைப் பெற்றுக் கொள்ள எம்முடன் இணையுமாறு சகல தேசப் பற்று மிக்க அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன். தேசிய சுதந்திர முன்னணி, ஜே.வி.பி., ஐ.தே.க. என அனைவருக்கும் இதன் மூலம் நான் அழைப்பு விடுக்கிறேன்.
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டு மேற்கொள்ளும் எதிர்கால பயணத்தில் இணையுமாறு தமிழ்க் கட்சிகள் முதற்கொண்டு சகல அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க ஏற்புடையதற்ற பயங்கரவாதம் மீண்டெழுவதற்கு உதவி புரியும் எந்தவொரு போர் நிறுத்தத்திற்கும் நான் தயாராக இல்லை. எனவே, சிலர் படையினரை உளவியல் ரீதியாக வீழ்ச்சியுறச் செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கண்டு ஏமாற வேண்டாமென நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், 2009 ஆம் ஆண்டு புதுவருடம் பிறந்திருக்கும் போது விடுதலைப் புலிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் சிறைபட்டுக் கிடக்கும் அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். இல்லையேல் புலிகளை தடை செய்வதுடன் மட்டும் நின்று விடாது, வரலாற்றுப் புத்தகத்தில் அவர்களை நிரந்தரமாகவே துடைத்தெறிந்து விட நான் ஒரு போதும் பின் நிற்க மாட்டேன் என்பதை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேநேரம், உலகச் சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் எரிபொருட்களின் விரயங்களை கட்டுப்படுத்துவதற்கான எமது நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். எரிபொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருமானத்தை நிரந்தரமற்ற உலகச் சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயித்தால் வெகு காலம் செல்வதற்குள் எமக்கு மீண்டும் எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிவரும்.
கடந்த நவம்பர் மாதத்தில் பெற்றோல், டீசல் என எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கம் என்ற வகையில் நாம் சனத்தொகையில் 4 சதவீதமாக இருக்கும் கார் உரிமையாளர்களுக்கு பெற்றோல் நிவாரணத்தை வழங்குவதா அல்லது பஸ், ரயில் போன்றவற்றை போக்குவரத்துக்கு பயன்படுத்தும் 92 சதவீதமான பொதுப் பிரயாணிகளின் நலனுக்காக டீசல் நிவாரணத்தை வழங்குவதா? நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
அதிகாரம் மற்றும் பொறுப்பு தொடர்பாக தற்போது புதிய தர்க்கமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனக்கு பாரிய பொறுப்பு இருக்கிறதென்பது எனக்குத் தெரியும். அது தொடர்பான புரிந்துணர்வு எனக்கு இருக்கிறது. யார் எம்மாதிரியான தீர்மானம் எடுத்தாலும் மக்கள் சார்பான பொறுப்பு எனக்கே இருக்கிறது. பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், எரிஎண்ணெய் என எதில் வரி அறவிட்டால் நாட்டிற்கு முக்கியமானதாக இருக்குமென்பதானது பொறுப்புடன் எடுக்கவேண்டிய தீர்மானம். ஏதோ ஒன்றை மட்டும் பார்த்து எடுக்கவேண்டிய தீர்வல்ல. முழு பொருளாதாரத்தையும் கவனத்தில் கொண்டு எடுக்கவேண்டிய தீர்மானமிது. எனக்கு பொறுப்பு என்று ஒன்று இருப்பதால் புகழ் பெறுவதற்காக தீர்மானம் எடுக்க முடியாது.
நாம் சொகுசு வாகனங்களுக்கு 500 சதவீத வரி அறவிடுகிறோம். அதேபோல், சிகரட் மற்றும் மதுபானம் போன்றவகைகளுக்கும் 300 சதவீத வரி அறவிடுகிறோம். எனவே, எவராவது ஒருவர் நீதிமன்றம் சென்று இவற்றுக்கான வரியும் அநீதியானதென உத்தரவொன்றை பெற முடியும். இவ்வாறு அறவிடும் வரிகள் மூலம்தான் நாம் இலவச பாடசாலை புத்தகங்கள், இலவச சுகாதார வசதிகள் என பலதையும் வழங்குகிறோம். நாட்டு மக்களுக்கு நியாயமானவற்றை வழங்கி அவர்களை பாதுகாப்பதே எனது பொறுப்பு. எனவே, புகழ் பெறுவதற்காக என்னால் தீர்மானம் எடுக்க முடியாது.
நாடு சரியான வழியில் செல்ல பாராளுமன்றமும் நிறைவேற்று அதிகாரமும் (ஜனாதிபதி), நீதிமன்றமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். அப்படியில்லாவிட்டால் நாட்டை நிர்வகிக்க முடியாது. நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும் நாம் எமது அதிகாரத்தின் எல்லையை அங்குலமேனும் கடந்து செல்லவில்லை. செல்லவும் மாட்டோம். எனினும், பொது மக்களுக்கு பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரமும் பாராளுமன்றமும் பொதுவாக நாட்டைப் பற்றி சிந்தித்தே தீர்மானம் எடுக்கின்றன.
விடுதலைப் புலிகளைப் பிடிக்கவென ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளை அகற்றுமாறு நீதிமன்ற உத்தரவு வந்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தும் நாம் அந்த உத்தரவை நிறைவேற்றினோம்.
அமைச்சர் த.மு. தசநாயக்க படுகொலை, பிலியந்தல அப்பாவி மக்கள் படுகொலை என பல சந்தர்ப்பங்களிலும் நாம் சட்டத்தை மதித்தோம். இதேபோல் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை அகற்றுமாறு கூறியதும் நாம் படையினரது உயிராபத்துகளையும் பாராது அதற்கு இணங்கினோம். இரவில் வீடுகளில் சோதனையிட வேண்டாமென்று கூறிய போதும் நாம் அதற்கு இணங்கினோம். ஏனெனில், இவற்றுக்கெல்லாம் எம்மிடம் மாற்று நடவடிக்கைகள் இருந்தன.
எனினும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம், உரமானியம், சமுர்த்தி, அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கு நிதிகளைத் தேடிக் கொள்ளும் அரச வருமானத்தை நிறுத்துவது தொடர்பில் எமக்கு சிந்தித்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.
ஓரிரு மணித்தியாலங்களில் பேசி எடுக்கக்கூடிய தீர்மானமல்ல இது. அதனால் தான் அமைச்சரவையை கூட்டி பேசுகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாம் இதைச் செய்யவில்லை. கலந்தாலோசிக்க வேண்டுமென்பதற்காகவே நாம் இதை செய்கிறோம்' என்றும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதி மக்கள் ஷெல் தாக்குதலினால் இடம்பெயர்வு வீரகேசரி நாளேடு 12/23/2008 8:24:42 PM -

முல்லைத்தீவு நகரைச் சூழவுள்ள பகுதிகளில் வசித்து வந்த மக்கள், கடும் ஷெல் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று நேற்று நகரை அண்டிய பகுதிகளில் பெருமளவு ஷெல்கள் வீழ்ந்து வெடித்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நகரில் மிகக் குறைந்தளவிலான அரசாங்க ஊழியர்களும் பொது மக்களுமே தங்கியுள்ளதாகவும், ஏனையவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் முல்லைத்தீவு சிலாவத்தையைச் சேர்ந்த பொன்னுத்துரை பொன்ராசா (வயது 31) என்ற பொதுமகன் காயமடைந்துள்ளார். கடந்த வாரம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஷெல் வீழ்ந்து வெடித்தøதயடுத்து இருவர் காயமடைந்திருந்தனர். இதனையடுத்து இப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது.

வலிந்த தாக்குதலைத் தொடங்குவதற்கு உரிய நேரத்துக்காகக் காத்திருக்கிறோம் - புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் வீரகேசரி நாளேடு 12/23/2008 11:15:08 PM

ஒரு தேசத்தின் விடுதலைப் போராட்டம் என்பது ஒரு நகரத்தை மட்டும் மையமாகக் கொண்டது அல்ல என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நிலப்பகுதிகளை இழப்பதும், மீளக் கைப்பற்றுவதும் பொதுவானது தான். எமது விடுதலைப் போராட்ட இலட்சியத்தை வென்றெடுக்கும் வரையில் தொடர்ந்து போர் நகரங்கள் உருவாக்கப்படும்.
அமைதிப் பேச்சுக்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனையை நிராகரிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் அதாவது ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைவிட்டு விட்டு சரணடைய வேண்டுமென்று கோரி வரும் நிலையில் பேச்சுவார்த்தைகள் என்பது சாத்தியம் அல்ல.
போரில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்ட போதும் இலங்கையின் 32 பில்லியன் டொலர் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதே எமது இலக்காகும். எமது தற்காப்புத் தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதி இலங்கையின் பொருளாதாரத்தை நிர்மூலப்படுத்துவதும் ஆகும். பொருளாதாரம் நிர்மூலமாக்கப்படும் போதுதான் தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் இனப்படுகொலையும் பலவீனப்படுத்தப்படும்.
கிளிநொச்சி போர்க்களத்தில் படையினருக்கு நாங்கள் பாடம் கற்பிப்போம். எமது வலிந்த தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்குவதற்கு உரிய நேரம், இடத்துக்காகக் காத்திருக்கிறோம். 2008ஆம் ஆண்டில் 2,250 போராளிகளை நாங்கள் இழந்திருக்கின்றோம்.
ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் எமக்கு எதுவித சிக்கலும் இல்லை. நாங்கள் இழந்த பகுதியை மீண்டும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.

ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களை எதிர்கொண்ட புலிகளின் படையணிகள் வீரகேசரி வாரவெளியீடு 12/21/2008 4:54:05 PM -

வன்னிக் களத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்புறத்திலும் ஒரே நேரத்தில் கடந்தவாரம் நடந்திருக்கின்ற சமர் படைத்தரப்பின் வலிமை பற்றி சர்வதேச இராணுவ ஆய்வாளர்களை கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது. கடந்த 15 ஆம் திகதி இரவு கிளாலிக் களமுனையில் ஆரம்பித்த படையினரின் நகர்வுகளை அடுத்து மறுநாள் அதிகாலை மிகப்பெரும் சமர் வெடித்தது.
வடக்கே கிளாலி முதற்கொண்டு முகமாலை வரையிலும் தெற்கே தெருமுறிகண்டி தொடக்கம் குஞ்சுப்பரந்தன் வரையிலுமாக சுமார் 15 கிலோ மீற்றருக்கும் அதிகமான முன்னரங்கில் நிகழ்ந்திருக்கின்ற இந்த பாரிய சமர் புலிகளின் பலம் குறித்து பலரையும் மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது. இராணுவத்தின் அதி உச்சத் திறன் கொண்ட நான்கு டிவிசன்கள் இந்தச் சமரில் தமது பெரும்பாலான பற்றாலியன்களை களம் இறக்கியிருந்தன.
அத்துடன் விமானப்படையின் உச்சக் கட்ட உதவித் தாக்குதல், பீரங்கிப் படைகளின் உச்சக் கட்ட சூட்டாதரவு என்று அனைத்து வளங்கøளயும் ஒன்று குவித்து நடத்தியிருந்த இந்தத் தாக்குதல் படைத்தரப்புக்கு வெற்றியை கொடுக்கத் தவறி விட்டது. இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கடந்த 18 ஆம் திகதி 59ஆவது பிறந்த தினம். அன்றைய தினம் அவருக்கு வட÷பார்முனையிலும், கிளிநொ ச்சி பரந்தன் போர்முனையி லும் முக்கிய இடங்களைக் கைப் பற்றி பிறந்தநாள் பரிசளிக்கும் திட்டம் வன்னி,யாழ். படைத்தளபதிகளிடம் இருந்தாகக் கூறப்படு கிறது.
ஆனால் இந்தப் படைத் தளபதிகளின் திட் டம் வெற்றி பெறாமல் போனது. பிரதானமாக வடபோர்முனை, கிளிநொச்சி போர்முனை, பரந்தன் போர்முனை என்று மூன்று முக்கிய கட்டங்களாக இந்த சமர் குறித்துப் பார்க்கலாம்.
வடபோர்முனை
வடபோர்முனையில் பிரதான சண்டைகள் நடந்தது கிளாலிக் களமுனையில் தான். பெரும் எதிர்பார்ப்புகளோடு 53 ஆவது டிவிசனுக்கு தளபதியாக நியமிக்கப்பட்டிருந்த பிரிகேடியர் கமால் குணரட்ணவின் தலைமையில் கிளாலி களமுனையிலும், முகமாலைக் களமுனையில் பிரிகேடியர் பிரசன்ன டி சில்வா தலையிமையில் 55ஆவது டிவிசனும் இந்த தாக்குதலில் பங்கேற்றிருந்தன.
யாழ்.படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்தத் தாக்குதலை நெறிப்படுத்தியிருந்தார். 15ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் பிரிகேடியர் கமால் குணரட்ணவின் தலைமையிலான 53 ஆவது டிவிசனின் 6 பற்றாலியன்கள் புலிகளின் நிலைகளை தகர்த்தழித்து முன்னேறும் நோக்கில் களம் இறக்கப்பட்டன.
எயர் மொபைல் பிரிகேட் எனப்படும் அதி உச்ச திறன் வாய்ந்த பிரிகேட்டும் அதில் அடங்கியிருந்தது. 1 ஆவது விஜயபா, 5 ஆவது விஜயபா, 6 ஆவது விஜயபா, 6வது சிங்க றெஜிமென்ட், 6 ஆவது கஜபா ஆகிய சிறப்பு தாக்குதல் பயிற்சிகளைப் பெற்ற காலாற் படை யணிகளின் முன்னகர்வுக்கு 2ஆவது இயந்திர காலாற்படை பற்றாலியன் துணையாக இருந்தது.
முன்னிருள் காலத்தை பயன்படுத்தி இரகசியமாக நகர்ந்து புலிகளின் நிலைகளுக்குள் அல்லது அதற்கு மிக நெருக்கமாக ஊடுருவிய பின்னர் நிலவு வெளிச்சத்தில் அதிரடித் தாக்குதலைத் தொடங்குவது தான் படைத்தரப்பின் திட்டமாக இருந்தது. ஆனால் படையினர் எதிர்பாராத வகையில் அவர்களின் இரகசிய நகர்வை மோப்பம் பிடித்திருந்த புலிகள், முன்னேறத் தொடங்கிய படையினர் மீது தாக்குதலைத் தொடுக்க, 15 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் சிறியளவிலான சண்டைகள் ஆரம்பித்தன. மறுநாள் அதிகாலை 1.20 மணியளவில் உண்மையான சமர் வெடித்தது. தொடர்ந்து 9மணி நேரத்துக்கு இது நீண்டது.
53 ஆவது டிவிசனுடன் இணைந்து முகமாலைக் களமுனையில் தாக்குதலைத் தொடங்க வேண்டியிருந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் 55 ஆவது டிவிசனின் முன்னகர்வு சீரற்ற காலநிலையால் தாமதமாகியது. அதற்கிடையில் சண்டை தொடங்கி விட்டதால் உசாரடைந்த புலிகள் கிளாலிமுகமாலைக் களமுனையில் சுமார் 9 கி.மீ நீளமான முன்னரங்கில் உச்சக் கட்ட தாக்குதலை நடத்த 55ஆவது டிவிசன் படையினரின் முன்னகர்வு ஆரம்பத்திலேயே முடங்கி போனது.
வடபோர்முனையில் படை நிலைகளுக்கும் புலிகளின் நிலைகளுக்கும் இடையில் குறுகிய தூரமே இருந்தது. சில இடங்களில் 100மீற்றர் குறுகிய இடைவெளி இருந்தது. வேறு சில இடங்களில் அது 500 மீற்றர் வரை தொலைவில் இருந்தது. படையினர் முன்னகர்ந்து இருதரப்புக்கும்“ இடைப்பட்ட பிரதேசத்தை அடைவதற்குள் சண்டை தொடங்கிவிட அவர்கள் காப்பு நிலைகள் ஏதுமின்றி சண்டையிட நேரிட்டது.
புலிகள் தொடர்ச்சியான எதிர்த் தாக்கு தல்களை நடத்திக் கொண்டிருந்தனர். புலிக ளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபனின் தலைமையில் தளபதிகள் முகுந்தன், ஜெரி போன்றோர் புலிகளின் அணிகளை வழிநடத்தியிருந்தனர். உக்கிரமான எதிர்த்தாக்குதலின் ஒரு கட்டத்தில் புலிகள் தமது தாக்குதல்கள் அனைத்தையும் நிறுத்தி விட புலிகள் பின்வாங்குகிறார்கள் எனக் கருதி படைத்தரப்பு தலையை நிமிர்த்திக் கொள்ள ஆட்டிலறி ஷெல்களும் மோட்டார் ஷெல்களும் சரமாரியாக வந்து விழத் தொடங்கின.
குறுகிய நேரத்துக்குள் புலிகள் பொழிந்து தள்ளிய ஷெல்களால் குழப்ப நிலை ஏற்பட்டது. படையினர் தரப்பில் இழப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. இதனால் முன்னேறிய படையினர் ஏற்கனவே கைப்பற்றியிருந்த சில பகுதிகளையும் கைவிட்டு பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. காலை 10.30 மணிவரை இந்தச் சண்டைகள் நீடித்தன. கிளாலி கடலேரியில் இருந்து கடற்புலிகளும் படையினர் மீது தாக்குதல் தொடுத்திருந்ததோடு படையினரின் பின்புல விநியோக மார்க்கங்களை ஆட்டிலறிகள், கனரக மோட்டார்கள் மூலம் புலிகள் தாக்கியிருந்தனர்.
இந்தச் சண்டைகளில் 18 படையினர் கொல்லப்பட்டதாகவும் 60 பேர் காயமுற்றதாகவும் படைத்தரப்பில் கூறப்பட்டது. ஆனால் புலிகளோ 40 படையினர் கொல்லப்பட்டு 100 படையினர் காயமுற்றதாகவும் அறிவித்திருந்தனர். 8 படையினரின் சடலங்களையும் 18 பல்வேறு வகை ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். இது இந்தச் சண்டை புலிகளுக்கு முற்று முழுதாகச் சார்பான நிலையில் இருந்தமைக்கான சான்றாக அமைந்தது.
பரந்தன் களமுனை
கிளாலியில் உக்கிர சண்டைகள் நடந்து கொண்டிருந்தபோது 16ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் பரந்தன் நோக்கிய முன்னகர்வு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் களமுனையில் 58 ஆவது டிவிசன் பிரிகேடியர் சவீந்திர டி சில்வாவின் தலை மையில் தனது முழுப் பலத்தையும் ஒன்று திரட்டி தாக்குதல் தொடுத்திருந்தது. குஞ்சுப் பரந்தனில் இருந்து உருத்திரபுரம் மற்றும் பூநகரிபரந்தன் வீதிக்கு வடக்கு பக்க மாகவுள்ள பகுதியைக் குறிவைத்தே இந்த டிவிசனின் நகர்வுகள் இருந்தன.
லெப்.கேணல் லால் சந்திரசிறி தலைமையிலான 9ஆவது கெமுனுவோச், மேஜர் உடஓவிற்ற தலைமையிலான 10ஆவது கஜபா, லெப்.கேணல் வஜிர வெலகெதர தலைமையிலான 8ஆவது கெமு னுவோச், லெப்.கேணல் சாலிய அனுமு னுகம தலைமையிலான 12ஆவது கஜபா ஆகிய நான்கு பற்றாலியன்களுடன் 8 ஆவது சிங்க றெஜிமென்ட்டின் இரண்டு கொம்பனிகளும் கிட்டத்தட்ட அரை பற்றாலியன் இந்த நடவ டிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தக் களமுனையில் படையினர் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்த போதும் பரந்தன் பூநகரி வீதிக்கு வடக்கே சிறியளவு பிரதேசத்தை கைப்பற்றியிரருந்தனர். இந்தப் பகுதியில் இருந்தே 15 புலிகளின் சடலங்களை தாம் மீட்டதாகப் படைதரப்பு கூறியது.ஆனால் குஞ்சுப்பரந்தனில் இருந்து உருத்திரபுரம் நோக்கிய சண்டையின் போது படைத்தரப்பில் பலத்த இழப்புகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் களமுனையில் இருந்தே புலிகள் 18 படையினரின் சடலங்களைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
பரந்தனில் இருந்து 7கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சொறிக்கன்குளத்தை படையினர் கைப்பற்றியதாக அறிவித்திருக்கின்றனர். இது ஒன்று தான் இந்தப் பாரிய சமரில் படைத்தரப்புக்கு கிடைத்திருக்கின்ற அனுகூலமாகும்.
கிளிநொச்சிக் களமுனை
மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57ஆவது டிவிசனின் 3 பிரிகேட் படையினர் கிளிநொச்சி நோக்கி நான்கு களமுனைகளைத் திறந்திருந்தனர். முறிகண்டியில் இருந்து இரணைமடு நோக்கி லெப்.கேணல் சேனக விஜேசூரிய தலைமையிலான 574பிரிகேட்டும், மலையாளபுரம், புலிக்குளம் பகுதிகளில் இருந்து லெப்.கேணல் தம்மிக ஜெயசுந்தர தலைமையிலான 572 பிரிகேட்டும், புதுமுறிப்பு நோக்கி கேணல் ரவிப்பிரிய தலைமையிலான 571பிரிகேட்டும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. இதில் முறிகண்டி, மலையாளபுரம், புலிக்குளம் ஆகிய நகர்வுகள் மாலை 4மணியுடன் நிறுத்தப்பட்டன.
இந்தப் பகுதிகளில் படையினர் முன்னேற முடியாத நிலையில் பழைய நிலைகளுக்குத் திரும்ப புதுமுறிப்பு களமுனையில் மட்டும் அடுத்த நாள் காலை வரையில் சண்டைகள் நீடித்தன.
புதுமுறிப்பில் முன்னேறிய ஒரு தொகுதிப் படையினர் புலிகளின் உக்கிர தாக்குதலுக்குள் சிக்கினர். அவர்களை மீட்கமுடியாத நிலை ஏற்பட்டதுடன் காயமுற்ற படையினரை வெளியேற்ற முடியாதளவுக்கு புலிகளின் ஆட்டிலறி, மோட்டார் தாக்குதல்கள் உக்கிரமாக இருந்தன.
இதனால் 571 பிரிகேட் பலத்த சேதங்களைச் சந்திக்க நேரிட்டது. குறிப்பாக லெப்.கேணல் ஜெயம்பதி பண்டாரவின் தலைமையிலான 12ஆவது சிங்க றெஜிமென்ட் டைச் சேர்ந்த படையினர் பலர் கொல்லப் பட்டதுடன் அவர்களின் சடலங்களை யும் மீட்கமுடியாத நிலை யேற்பட்டது.
இந்தநிலையில் மறுநாள் புலிகள் 12படையினரின் சடலங்களை புதுமுறிப்பில் இருந்து கைப்பற்றியதோடு பெருமளவு ஆயுதங்களையும் அவர்கள் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் புலிகள் கைப்பற்றிய ஆயுதங்களில் கனரக ஆயுதங்கள் மற்றும் ஆர்.பி.ஜி.கள் அதிகமாக இருந்ததுடன், சுமார் 50ஆயிரம் வரையான ரவைகளும் அடங்கியிருந்தன.
இந்த இரண்டு நாள் சமரின் போதும் கிளிநொச்சிபரந்தன் களமுனையில் படையினர் தரப்பில் 165 பேர் கொல்லப்பட்டு 375இற்கு மேற்பட்டோர் காயமுற்றதாக புலிகள் கூறியுள்ளனர். ஆனால் படைத்தரப்பு தமது தரப்பில் 60 பேர் வரை கொல்லப்பட்டு 250 பேர் வரை காயமுற்றதை உறுதிசெய்கிறது. ஆனால் இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இழப்பு 25 படையினர் பலி யானதாகவும் 10பேர் காணாமற் போனதாக வும் 160 பேர் காயமுற்றதாகவுமே இருக் கிறது. இது ஒட்டுமொத்த சண்டைகளின் சேத விபரம்.
அதேவேளை 145 படையினர் வரையில் இருநாள் சண்டைகளிலும் கொல்லப்பட்டதாகவும் 300பேர் காயமுற்றதாகவும் படைத்தரப்புடன் நெருங்கிய சில வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு பற்றி படைத்தரப்பு மிகைப்படுத்துவதாக சர்வதேச ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். 120 புலிகள் பலியானதாக படைதரப்பு கூறினாலும் 16, 17ம் திகதிய சண்டைகளில் அவர்கள் 25இற்கும் குறைவான போராளிகளையே இழந்திருக்கலாம் என்று தெரிகிறது. படைத்தரப்பில் 25 படையினரே கொல்லப்பட்டதாக கூறிய போதிலும் புலிகள் 38 படையினரின் சடலங்களை கைப்பற்றியிருந்தது இழப்புகளின் கனதியை வெளிக்காட்டியிருந்தது. கிளாலி கிளிநொச்சி பரந்தன் களமுனைகளில் நடந்திருக்கின்ற இந்தச் சண்டையில் நன்கு பயிற்றப்பட்ட 4 டிவிசன்கள் பங்கேற்றிருந்தன. அத்தோடு இராணுவத்தின் கெமுனுவோச், கஜபா, சிங்க, விஜயபா படைப்பரிவு என எல்லா காலாற்படைப்பிரிவுகளும் பங்கேற்றிருந்தன.
ஆனாலும் புலிகள் ஒரே நேரத்தில் நான்கு டிவிசன்களின் தாக்குதல்களை எதிர்கொண்டு படையினரின் நகர்வை தடுத்து நிறுத்தியமை அவர்களின் பலத்தை வெளிக்காட்டியிருக்கிறது. இது அடுத்துவரும் நாட்களில் இதை விட மோசமான சமர்கள் நடக்கலாம்.அதேவேளை இப்போதும் கிளிநொச்சியைச் சுற்றிவர அவ் வப்போது சண்டைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த வெள்ளியன்று காலையில் இரணைமடு நோக்கி 574 பிரி கேட்டைச் சேர்ந்த 3 பற்றாலியன்கள் ஒரு நகர் வைச் செய்திருந்தன.
இந்தச் சண்டையின் போது சிறியளவு தூரம் முன்னேறியதாகப் படைத்தரப்பு கூறியிருக்கின்ற போதும் புலிகளோ படையினரின் முன்னகர்வை முறியடித்து ஒரு இராணுவச் சிப்பாயின் சடலத்தையும் ஆயுதங்களையும் மீட்டதாக கூறியுள்ளனர்.
இப்போதைய சண்டைகளில் இரு தரப்புமே சடலங்களை கைவிட்டு பின்வாங்கும் நிலை அடிக்கடி நிகழ்நத வருகிறது. இது சண்டைகளின் வெற்றி என்பது தனியே ஒரு தரப்புக்கு சாதகமாக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது.

முக்கூட்டுத் தரப்பினரின் புதிய கட்சி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி [18 டிசம்பர் 2008, வியாழக்கிழமை 9:05 மு.ப இலங்கை]

முக்கூட்டு அணியினர் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற புதிய கட்சியினை ஆரம்பித்துள்ளனர். ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, சித்தார்த்தன் தலைமையிலான புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மாநாபா அணி ஆகியவை இணைந்தே இப்புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இக் கட்சியின் செயலாளராக தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடமையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது."மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளோம்.
இக் கட்சியைத் தேர்தல் ஆணையாளர், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகப் பதிவு செய்துள்ளார். இக் கட்சியின் அடிப்படை நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தனித்தனிக்கட்சிகளாகத் தனித்துநின்று காட்டுவதிலும்பார்க்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை ஒரே குரலாக எழுப்பவேண்டும் என்பதே ஆகும்.
இன்று இம் மூன்று கட்சிகளும் தற்போது இணைந்திருந்தாலும் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்" - என்றார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.

தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம்! : பா நடேசன்

மும்பை மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது என்று சுவிஸிலிருந்து வெளியாகும் “நிலவரம்’ வார இதழுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். பா.நடேசன் பேட்டியில் மேலும் கூறியதாவது;
மும்பை மீதான குண்டுத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான ஒரு சீரழிப்பு முயற்சியே அது. குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளை இந்தியப் புலனாய்வுத்துறை கண்டறிந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராகச் சில நாடுகள் திரைமறைவில் செயற்படுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிரான அந்தப் பகைமை நாடுகளுடன் இலங்கை அரசு உறவு பேணி வருகின்றது என்பது வெளிப்படை. இது இந்திய இராஜதந்திரிகளுக்கும் நன்கு தெரியும்.
ஒரு இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழீழம் போராடுகிறது. இதுவொரு விடுதலைப் போராட்டம். காலங்காலமாக அடக்கப்பட்ட இனங்கள் விடுதலை கோரிப் போராடுவது வரலாற்று வழமை. தமிழீழ மண்ணில் தமிழரின் நலன்களை முன்வைத்து எமது போராட்டம் நடக்கின்றது.
கிளிநொச்சி மீதான முற்றுகை இறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது கிளிநொச்சியைக் கைப்பற்றியே ஆவதென இலங்கையரசு சூளுரைத்துள்ள நிலையில் என்ன விலை கொடுத்தாவது கிளிநொச்சியைக் காப்பாற்றியே தீர்வதென விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள நிலைவரம் உண்மையில் எவ்வாறாக இருக்கின்றது?
படைகளின் சிறப்பு டிவிசன்கள் இரண்டின் படையணிகள் கிளிநொச்சிக்கான சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கிளிநொச்சியின் மேற்கே பல முனைகளில் கடும் சண்டைகள் நாள்தோறும் நடக்கின்றன. படைகளின் முயற்சியை முறியடிக்கும் எதிர்ச் சமரில் புலி வீரர்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். இதுவரை இரண்டு காலக்கெடுக்களை இராணுவத் தளபதிகள் கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு என்று விதித்தும் அது அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. கிளிநொச்சிக்கான சண்டைகளில் படைகள் கடுமையான உயிரிழப்புக்களைச் சந்தித்து வருகின்றன. புதிய வியூகங்கள், தந்திரோபாயங்களுடன் கிளிநொச்சியைப் பாதுகாக்கும் எதிர்ச்சமரில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சமாதானப் பேச்சுக்கள் பற்றிய எதிர்பார்ப்புக்கள் எட்டாத தொலைவில் உள்ளன. அதேவேளை, விடுதலைப் புலிகளைப் புறந்தள்ளி அரசியல் முனைப்புக்களில் ஈடுபட மேற்குலக நாடுகள் ஒரு சிலவற்றின் ஆசீர்வாதத்துடன் ஒரு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்.?
புலிகளையும் தமிழ் மக்களையும் பிரித்துப் பார்த்து குரூரமாக திருப்தியடையச் சில சக்திகள் விரும்புகின்றன. ஆனால், அவையெல்லாம் கற்பனைகளாகவே இருக்கும். தமிழரின் தலைமைச் சக்தி புலிகள் இயக்கம் தான். இதனைத் தமிழ் மக்களும் பல தடவைகள் தேர்தல் நடைமுறைகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியத்திற்கு விரோதமான சில தனிநபர்கள் தம்மைத் தலைவர்களாகக் கற்பனை செய்துகொண்டு திரிவது கேலிக்கூத்தானது. இதுபற்றி இயக்கம் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் எழுச்சி மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றது. இந்த எழுச்சி தமிழ் மக்களின் விடுதலையை எவ்வகையில் விரைவுபடுத்துமென நினைக்கின்றீர்கள்?
ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டுத் தமிழ் மக்களின் ஆதரவு ஒரு முக்கியமான விடயமாகும். நாம் தனித்து விடப்படவில்லை. உலகத் தமிழர்கள் எம்முடன் உள்ளனர் என்ற உணர்வோடு எமக்குச் செயல் வேகத்தையும் உற்சாகத்தையும் தரவல்லன. தமிழ்நாட்டின் இனவெழுச்சி சிங்களத்திற்கு அச்சமூட்டக்கூடிய வகையிலேயே உள்ளது. அத்துடன், அரசியல் ரீதியாக உலக அபிப்பிராயத்தை எம் பக்கம் திருப்பத் தமிழ் நாட்டின் இனவெழுச்சி உதவும். தமிழ்நாடு சட்டசபையில் எமது மக்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட அனைத்துக் கட்சித் தீர்மானம் எமது விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரமாகவும் உள்ளது.
இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவது தொடர்பில் விடுதலைப் புலிகள் தற்போது அதிக அக்கறை கொண்டுள்ளதைப் போன்று தென்படுகின்றது. அதேவேளை, இது சிலரால் பலவீனத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றதே?
ஈழத் தமிழருக்கும் இந்தியாவிற்குமான உறவு ஒரு வரலாற்று உறவாகும். இடையில் இலங்கை அரசின் சதியால் அந்த உறவு அறுத்திருந்தது. மீண்டும் அந்த உறவைக் கட்டியெழுப்பும் புறச் சூழல் இருதரப்பிலும் ஏற்பட்டு வருகின்றது. இந்த இருதரப்பு உறவைச் சிங்கள இனவாதிகள் விரும்பவில்லை. எனவே, இந்த முயற்சியை கொச்சைப்படுத்தி திருப்தி காண முயல்கின்றனர்.

வன்னிக்குள் நுழைகின்ற படையினரை திரும்பவிடமாட்டோம் என்கிறார் நடேசன் - அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு பேட்டி [17 டிசம்பர் 2008, புதன்கிழமை .ப இ10:10 முலங்கை]

வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் இலங்கை இராணுவத்தினரை மீளத் திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே மக்கள் போராடி வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய களநிலைமைகள் மற்றும் அங்குள்ள மக்கள் படும் இன்னல்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ’செய்தி அலைகள்’ நிகழ்ச்சிக்கு கடந்த 9 ஆம் திகதி அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அதில் மேலும் கூறியவை வருமாறு:-
கேள்வி: தாயக மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள் - குறிப்பாக தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்தும் அவர்களுடைய தற்போதைய நிலைமைகள் குறித்தும் கூறமுடியுமா?
பதில்: எங்களுடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் மன்னாரிலிருந்து தொடர்ச்சியாக அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களாக அல்லாமல் எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாவும் உள்ளனர். அரசினுடைய வான்குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், மோசமான பொருளாதாரத் தடைகள், மருந்துத் தடைகள், அத்தியாவசிய உணவுத் தடைகள் போன்ற மிகவும் மோசமான இந்த சூழலில் - எமது மக்களை இயற்கை அனர்த்தமும் பெரிதளவில் பாதித்திருக்கிறது. இதனால் இடம்பெயர்ந்த மக்களை பாடசாலைகள், ஆலயங்கள், உறவினர்களின் வீடுகள் எனப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களை மீளவும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை நாங்கள் தற்போது மேற்கொண்டு வருகிறோம். அரசு பாரியதொரு பொருளாதாரத் தடையை எங்கள் மக்கள் மீது மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 400 லொறிகளில் உணவுப் பொருட்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 218 லொறிகளையே அரசு வன்னிக்கு அனுப்பியுள்ளது. அதேபோல் கடந்த நவம்பர் மாதமும் 400 லொறிகள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வரவேண்டும். ஆனால் 112 லொறிகளுக்கு அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். எனினும், எங்களுடைய மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்ட அனுபவங்கள் - அவர்களின் நெஞ்சுரம் - போராட்ட வைராக்கியம் என்பன இத்தகைய சவால்களை கண்டு குறைந்து போகவில்லை. மாறாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இராணுவத்தை முன்னேற விடக்கூடாது, வந்தவர்களை மீளவும் அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிச்செல்ல விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எல்லைப் படைகளாக- சிறப்பு எல்லைப் படைகளாக - பின் களமுனைகளில் பணி செய்கின்றவர்களாக - எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாக - போர் வீரர்களாக உருவாகி வருவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
கே: தாயகத்தில் இத்தகைய அவலங்களைச் சந்திக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை - உதவிகளை - யார் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்?
ப: இந்த மக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான் அழைத்துச் சென்று அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றி, அவர்களுக்குரிய உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம், சுகாதாரக் கல்வியூட்டல் போன்ற வசதிகளைச் செயது வருகிறது. அது மட்டுமன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தமிழீழ சுகாதார சேவைப் பிரிவு, நலன்புரி அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய மக்களின் தேவைகளை - மிகப்பெரியதொரு மனிதாபிமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்த இடத்தில் மிகவும் மனவேதனையுடன் அனைத்துலக சமூகத்திற்கு ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அனைத்துலக நாடுகள் பல தடை செய்திருக்கின்றன. ஆனால், வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்து பார்த்தால் அதனது பணி எவ்வாறானதென்பது அந்த நாடுகளுக்கு தெரிய வரும்.
கே: தமிழக மக்களின் உணவு அவர்களுடைய உதவியாக தாயக மக்களுக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இது தாயக மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?
ப: தமிழக மக்களால் இந்திய மத்திய அரசின் ஊடாக தாயக மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் செஞ்சிலுவைச் சர்வதேசகுழு ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பொருட்கள் இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விநியோகம் செய்யப்படுகின்றன. எனினும், தமிழக மக்களால் அனுப்பப்பட்ட முழு உணவுகளும் இதுவரை இங்கு வந்து சேரவில்லை. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளையும் அரசு தடுக்கின்றது.
கே: வன்னிப்பெரு நிலபரப்பில் தற்போதுள்ள களநிலைமைகள் எந்த அளவில் உள்ளன?
ப: இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர். உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை. எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
கே: அரசினால் புலிகளின் தலைமை குறித்தும் புலிகளின் மனவுறுதி குறித்தும் சில விசமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து புலம்பெயர் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
ப: அரசு அவர்களுடைய ஊடகங்களும் இத்தகைய பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது குறித்து எங்களுடைய மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எங்களுடைய மக்கள் நீண்டகாலமாக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களைக் கண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்தபோதும் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. புலம்பெயர்ந்துள்ள மக்கள் எந்நேரமும் எங்களைப் பற்றிய சிந்தனையுடனும் பாசத்துடனும் இருப்பதால் இத்தகைய பொய்ப் பிரசாரங்களின் பிரதிபலிப்புக்கள் அவர்களுக்கு வருவது இயற்கை. ஆனால், புலம்பெயர் மக்கள் மிகவுறுதியுடன் - ஓர்மத்துடன் - வைராக்கியத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் எமது விடுதலைப் போராட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையிலான திருப்புமுனையை ஏற்படுத்தி அதனூடாக வெற்றிப் பாதையில் செல்வோம் என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கே: கிளிநொச்சி தற்போது ஒரு சூனியப் பிரதேசமாகி விட்டது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது?
ப: கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதும் மக்கள் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் வயல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரச வான்படையின் குண்டுகளும் எறிகணைகளும் பீரங்கிகளும் இவ்வாறான குடிமனைகளையும் வயல் நிலங்களையும் நோக்கியே ஏவப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய தாக்குதல்களுக்கு இயைபாக்கம் அடைந்து - பழகிப்போய் - மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
கே: விடுதலைப் புலிகள் சில இடங்களில் இருந்து தந்திரோபாய பின்நகர்வை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்படுகின்ற போதும் - புலிகள் பலமிழந்து விட்டனர் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு உங்களது பதில் என்ன?
ப: இவ்வாறான ஆய்வாளர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாம் எவ்வாறான தந்திரோபாய நகர்வுகளை பின்பற்றி வருகிறோம் என்பதை அவர்கள் பின்னர் அறிவர். தந்திரோபாயங்களை முன்னரே அறிவிப்பது விவேகமான செயற்பாடாக இருக்குமென நான் நினைக்கவில்லை.
கே: தென்பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இராணுவ ரீதியில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டமுடியுமென்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் வெளியிட்டுள்ளனர். இது எதனைக் காட்டுகிறது?
ப: தமிழ் மக்களின் இன அழிப்பைக் கணக்காகக் கொண்டு சிங்கள மக்கள் பிழையான பாதையில் செல்கின்றனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
கே: விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு குறித்து வெளிநாடுகள் எதனையும் வெளிப் படுத்தாதமை எதனைக் காட்டுகிறது?
ப: எங்களுடைய தலைவர் இதனைக் கருத்தில் கொண்டுதான் அனைத்துலக சமூகத்திடம் இந்தமுறை மாவீரர் நாள் உரையிலும் எங்களுடைய தடையை நீக்க வேண்டும் - எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளவேண்டும் - என்று அனைத்துலக சமூகத்திடம் கேட்டிருக்கிறார். இங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளையும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் அரச வெளியேற்றியதன் பின்னணியில் தமிழ் இன அழிப்பு குறித்து அனைத்துலக சமூகத்திற்கு சிறிது சிறிதாக வெளிப்பட்டு வருவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.
கே: அனைத்துலக நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் குறிப்பாக மலேசியாவிலுள்ள தமிழர்கள், தென்னாபிரிக்காவிலுள்ள தமிழர்கள் என உலகெங்கும் உள்ள தமிழர்கள் தற்போது மேற்கொண்டு வரும் உணர்வெழுச்சி போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய நம்பிக்கையை தந்திருக்கிறது?
ப: இது எங்களுக்கு மிகப்பெரிய ஆன்ம பலத்தை தருகிறது. உலகத் தமிழினம் ஒரே காலகட்டத்தில் ஒரே குரலாக - ஒரே ஒழுச்சியாக - ஒரே சக்தியாக ஒன்றுபட்டு நிற்பது எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகின்ற அங்கீகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியானது தமிழ்நாட்டை மட்டுமல்ல. அதையும் கடந்து இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களையும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது. அதுபோன்றே வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் வெறுமனே தமிழ்மக்களின் ஆர்ப்பாட்டமாக மட்டுமன்றி எதிர்காலத்தில் அந்தந்த நாட்டு மக்களின் ஆதரவும் எமக்கு கிடைக்கப் போகின்றது என்பதையே காட்டுகிறது.
கே: தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்கள் குறித்து என்ன செய்தியைக் கூறவிரும்புகிறீர்கள்?
ப: எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். நிறைவு அளிக்கக்கூடிய வகையில் அவர்களது செயற்பாடுகள் இருந்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை - உதவிகளை - தொடர்ச்சியாக அந்தந்த நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் எடுத்துச் சொல்லி - மிக விரைவாக எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிப்பதற்கான அந்த எழுச்சி நிலையை உருவாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.
கே: தமிழ் மக்கள் இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?
ப: தமிழ்மக்கள் தமது விடுதலை இயக்கத்தின் மீதான தடையை அகற்றி, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
கே: இந்தியாவிற்கு சிங்கள தேசம் நண்பர்களாக இருக்க முடியுமா?
ப: ஒருபோதும் இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக உண்மையான நண்பர்கள் நாங்கள்தான் என்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். வரலாறும் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவின் வரலாற்று நண்பர்கள் தமிழ்மக்கள்தான் என்பது இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்.
கே: தமிழ் மக்களுக்கு எதிராக பரப்புரை ரீதியாக அரசு தீவிரம் காட்டுவதாகவும் தமிழ் மக்கள் தரப்பில் பரப்புரை மந்தமாகவே இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து?
ப: பொருளாதாரத் தடைகள், இராணுவ நடவடிக்கைகள் என பல தடைகளுக்கு மத்தியில் இருந்தே நாங்கள் இந்த பிரசார வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். எனினும் புலம் பெயர்ந்துள்ள மக்கள் அங்கே எங்களுடைய பிரச்சினைகளை சிறப்பாக எடுத்து விளக்கி வருகின்றனர்.
கே: புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு தாயகத்திலிருந்து நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
ப: புலம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த காலத்தைப் போன்றும் நிகழ்காலத்தைப் போன்றும் எதிர்காலத்திலும் சோர்வடையாது மிகவும் உற்சாகமாக - மிகவும் உறுதியுடன் - தொடர்ந்தும் அந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் நாம் இங்கு இருக்கின்றோம் என்று பா.நடேசன் கூறியுள்ளார்.

மீண்டும் இன்று சிறிலங்கா படையினரின் தாக்குதல் முறியடிப்பு: புதுமுறிப்பில் 12 உடலங்களும் படையப் பொருட்களும் மீட்பு [புதன்கிழமை, 17 டிசெம்பர் 2008, 07:28 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இன்னுமொரு முன்நகர்வு முயற்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
புதுமுறிப்பு பகுதியில் இன்று புதன்கிழமை காலை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
இதன் போது படையினரின் 12 உடலங்களும் பெருமளவு படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆயுத விவரம் வருமாறு:
ஆர்.பி.டி எல்.எம்.ஜி - 02,பி. கே எல்.எம்.ஜி - 02,ஆர். பி. ஜி - 07,பி. ஏ 35 - 01,சி. டி 70 - 01,ஏகே ரவைகள் - 37,000,ஏகே ரவை இணைப்பிகள் - 1,230 பிகே இணைப்பிகளுடன் ரவைகளுடன் - 12,000,ஆர்.பி.ஜி எறிகணைகள் - 49,ஆர்.பி.ஜி புறப்ளர்கள் - 37,கைக்;குண்டுகள் - 132 மற்றும் படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மற்றும் கிளாலி களங்களில் ஐந்து முனைகளில் முன்னேறிய படையினரை விடுதலைப் புலிகள் முறியடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு நாள் மோதல்களில் மொத்தமாக சிறிலங்கா படைத்தரப்பில் 165 போ் கொல்லப்பட்டுள்ளதுடன் 375 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் 38 உடலங்களையும் பெருமளவு படையப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

No comments: