Thursday 1 January, 2009

ஈழம் 2009 மரணத்துள் வாழ்வோம்

''சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக."
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.மாவீரர் நாள் உரை 271108

முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 4 அப்பாவி பொதுமக்கள் படுகொலை; 15 பேர் படுகாயம் [புதன்கிழமை, 31 டிசெம்பர் 2008, 05:06 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். முரசுமோட்டையில் உள்ள முருகானந்தா மகா வித்தியாலயத்துக்குப் பின்புறமும் சேத்துக்கண்டி மக்கள் குடியிருப்புக்களையும் இலக்கு வைத்து இன்று புதன்கிழமை காலை 8:30 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.
இதில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்களின் ஆறு வீடுகள் அழிந்துள்ளதுடன் பாடசாலையும் சேதமடைந்துள்ளது.சிவானந்தன் (வயது 30), மரியம்மா (வயது 55), சகாயம் மக்கிரட்ஸ் (வயது 24) மற்றும் சந்திரபோஸ் (வயது 36) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இராகுலன் (வயது 21) சந்திரகுமார் (வயது 43 புலேந்திரன் (வயது 33) சரவணபவானந்தன் (வயது 62) றஞ்சிதமலர் (வயது 56) நிர்மலன் (வயது 17) சந்திரமாரி (வயது 42) சின்னக்குமார் (வயது 40) பழனியப்பன் (வயது 52) சுப்பிரமணியம் (வயது 52) ஜெயக்குமார் (வயது 38) பாலசுந்தரம் ராகசிறீ அன்னக்கொடி குமணன் தேவராசா ஆசீர்வாதம் றெனிநாத்
ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கிளிநொச்சி கரைச்சி பிரிவில் உள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மீது சிறிலங்கா வான்படை இன்று பிற்பகல் 12:30 நிமிடமளவில் நடத்திய குண்டுத் தாக்குதலில் நடமாடும் மருத்துவ சேவைப் பிரிவு சேதமடைந்துள்ளதுடன் பொதுமக்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
மாரிமுத்து வியாகலக்ஸ்மன் (வயது 24) யூக்காஸ் கொலம்பியன் (வயது 24) தவராசா தவநேசன் (வயது 36) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.மாவீரர் நாள் உரை 271108 )
எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது
"எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.
உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.
சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.
கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது."
"இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது. பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று."
"எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்."
"இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக."
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
(வே. பிரபாகரன்) தலைவர், தமிழீழ விடுதலைப் புலிகள்.மாவீரர் நாள் உரை 271108

No comments: