Saturday, 20 December 2008

தேனீ இணையதளத்தில் கண்டெடுத்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் பிரசுரித்த கட்டுரை.

பிரபாகரன் சுற்றிவளைப்பு

புலிகளின் கீழுள்ள பகுதியில் இலங்கை இராணுவம் தீவிர தாக்குதலை நிகழ்த்துகிறது. – போர்க்களத்திலிருந்து இந்தியா ருடேயின் பிரத்தியேக ரிப்போர்ட். – ராஜ் செங்கப்பா-

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளிடமிருந்து பிரதேசங்களைக் கைப்பற்றுவதற்கு இலங்கை இராணுவத்திற்கு ஏன் பல மாதங்கள் ஆகின்றன என்று வன்னிக் காடுகளின் மீது பறக்கின்றபோதுதான் தெரிகிறது. புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியின் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தபிறகும் பாதுகாப்புப்படைகள் மினவும் மந்தமான வேகத்திலேயே முன்னேற முடிவதன் காரணமும் புரிகிறது. கிளிநொச்சியின் பிரதான நகரத்திலிருந்து இன்னும் 10.கி.மீ தொலைவிலிருக்கின்றது இலங்கை இராணுவம். அதைக் கைப்பற்ற திட்டமிட்ட நிலையில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி அவர்களை முடக்கிப்போட்டிருக்கிறது.
நகரைச்சுற்றியிருக்கும் மழைக்காடுகளில் உள்ள மரங்கள் 60 அடி உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருக்கின்றன. சூரிய ஒளியே ஊடுருவமுடியாத அளவுக்கு அவை அடர்த்தியாக உள்ளன. புலிகளின் இரணடாவது வீடு இந்தக் காடுகள்தான். ஒவ்வொரு பெரிய தாக்குதலின்போதும் இந்து பசுமைக்குக்குள் பசுமையாக மறைந்து கொள்ளும் அவர்கள் தங்களைச் சுற்றி கண்ணிவெடிகளைப் பதித்து அரச படைகளை மறைந்திருந்து தாக்குவார்கள்.
அதன் காரணமாகத்தான் இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகப்படர்க அனுராதபுரத்திலிருந்து போர் முனைக்குச்செல்லும் போது மரங்களின் உயரத்திற்கேற்ப பறந்து செல்கின்றது. இதைப்பற்றி ஸ்குவாட்னர் லீடன் தக்ஷின் பெரெரா பிறகு விளக்கினார். அதிக உயரத்தில் பறந்தால் பயங்கரவாதிகள் மிக எளிதாக குறிபார்த்து சுட்டு வீழ்த்துவார்கள். மரங்களுக்கு சற்று மேலே பறக்கும்போது எங்களை குறிபார்த்து சுட நேரமிருக்காது.
திடீரென வனங்களின் அடர்த்தி குறைகிறது. ஒரு வெட்டவெளி தெரிகிறது. அதன் எல்லைகளை இணர்டு ஆயுதம் தாங்கிய காவலர்கள் காக்கின்றார்கள். ஒரு ஈரமான நிலத்தில் ஹெலிகப்டர் தரையிறங்கிறது. புலிகள் கண்டுபிடித்து தாக்கக்கூடாது என்பதற்காக தரையிறங்கும் தளங்கள் அந்தத் தருணங்களில் முடிவு செய்யப்படுகிறது. 57ம் படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் ஜகத் டயசை சந்திக்க என்னை வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். ராணுவத்தின் பிரதான அதிரடிப்படையான அந்தப்பிரிவில் 10,000 ஜவான்கள் இருக்கிறார்கள். அவர்களும் அவர்களுக்கான ஆயுதங்களும் ஒரு தீர்மானத்துடன் கிளிநொச்சியை நோக்கி நகர்கின்றன. அதன் மண்டல தலைமையகம் துத்த நாகத்தால் செய்யப்பட்ட கூரை கொண்ட வரிசையாக இருக்கும் குடிசைகளில் அமைந்திருக்கிறது. அதில் ஒள்றை தனது அலுவலமாக பயன்படுத்துகிறார் டயஸ். அவரின் அறைக்குள்ளே தொடர்புக் கருவிகளும் ராணுவத்தின் நான்கு பிரிவுகளின் சில மணி நேர முன்னேற்றத்தை காட்டும் பெரிய வரைபடமும் இருக்கிறது. புதர் போன்ற தாடியைக் கொண்டிருக்கும் டயஸ் அவரது தலைமை அதிகாரி லெப். ஜெனரல் சரத்பொன்சேகாவைப் போலவே காரியத்தில் கில்லாடியாக இருக்கிறார். விடுமுறையில் இருக்கும் பொன்சேகா அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தாலும் கூட அங்கிருந்தபடியே போரின் முன்னேற்றங்களை தினம் தினம் கேட்டு அறிந்து கொள்கிறார்.
விடுதலைப்புலிகளை பல்வேறு பிரதேசங்களில் எதிர்கொண்டிருக்கிறார் டயஸ். முன்பை;போல நெடுஞ்சாலைகளை கைப்பற்றுவது, முழுத்தாக்குதல்களை தொடுப்பது ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தவில்லை. மாறாக புலிகள் நிபுணத்துவம் பெற்ற கெரில்லா போர்முறையை இவர் கையாள்கிறார். அதனால் சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து காட்டுக்குள் செல்லும் அவரது வீரர்கள் கண்ணிவெடிகளை அகற்றி வருகிறார்கள். 30க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் தாக்குதல் தொடுப்பதாக இருந்தால் விடுதலைப்புலிகள் தங்கள் தங்காற்பு படைகளை பரந்து விரிந்து நிலைப்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. – நாங்கள் வேண்டுமென்றே விடுதலைப்புலிகளை காடுகளுக்குள் இழுத்து போர் செய்ய இழுக்கின்றோம். வனப்போர்களில் அவர்களுக்கு முன்பைப் போன்ற திறமைகள் இருப்பதாக தெரியவில்லை. இப்போது நாங்கள் கெரில்லா யுத்தம் நடாத்துகிறோம். அவர்கள் வழக்கமான வழிகளில் யுத்தம் நடாத்துகிறார்கள் என்கிறார் டயஸ்
கண்ணி வெடிகளிலிருந்து காக்க இரும்பு அரண் கொண்ட டாடா லாரி ஒன்றில் நான் போர் முனைக்குச் செல்கிறேன். கைவிடப்பட்ட கிராமங்களத் தாண்டிச் செல்கிறோம். எனது பாதுகாவலரான கர்னல் பிரியந்தா குணரத்னே புலிகளின் பதுங்குகுழிகளையும் அரணமைக்கப்பட்ட மேடுகளையும் காட்டுகிறார். எதிர்ப்பை முறியடிக்க ராணுவம் அவற்றை அழிக்க வேண்டியிருந்தது. இங்கு வசித்தவர்களை மனிதக் கேடயமாக பிடித்து வைத்திருந்த புலிகள் தாங்கள் பின்வாங்கியபோது அவர்களையும் தங்களுடன் கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றதாக பிரியந்த கூறினார். அந்த மக்களில் இளையோரை படையில் சேர்ப்பதுதான் அவர்களி;ன் நோக்கம். என்றார்.
கூரைகள் இல்லாத வீடுகளாக காட்சியளிக்கும் மல்லாவி என்கிற ஊரை எட்டுகிறோம். ஒரு காலத்தில் மாவட்டத்தலைநகராக இருந்தது அந்த ஊர். 2002ல் அன்றைய இலங்கை அரசு போர்நிறுத்தம் அறிவித்தபிறகு புலிகளின் தலைவர் இங்கே நடாத்திய செய்தியாளர் கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். தன்னம்பிக்கை இழந்திருந்து இலங்கை இராணுவத்திற்கு அதற்கு முந்தைய ஆண்டுகளில் பலத்த தோல்விகளை ஏற்படுத்திய புலிகள் தலைவரின் கட்டுப்பாடு வடக்கு கிழக்கு மேற்கில் சில பகுதிகளில் ஓங்கி இருந்தது. அந்த போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி அந்தப்பகுதிகளில் தனியான சிவில் நிர்வாகக்கட்டமைப்பை உருவாக்கியதோடு தங்கள் ராணுவ பலத்தையும் பெருக்கிக் கொண்டார்கள். தமிழ் ஈழ சிவில் சேவைகள் பிரிவு, பொலிஸ் படையை உருவாக்கியி புலிகள் வரி வசூலிப்பில் கூட ஈடுபட்டார்கள். 2005ன் பிற்பகுதியில் மகிந்த ராஜபக்ஷா அதிபராக அமரும் வரை பிரபாகரனின் தனித்தமிழ் ஈழக்கனவுகள் நிறைவேறுவது போலவே தெரிந்தன.
அந்தப்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வந்த என்ஜிஓக்களின் மையமாகவும் மல்லாவி இருந்தது. தாக்குதல் தொடங்கிய செப்டெம்பரில் அங்கிருந்து வெளியேறுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. பின் இருக்கையில் துப்பாக்கி ஏந்தி பாதுகாவலருடன் பஜாஜ் பல்சரில் செல்லும் மேஜர் குணசெகரா அத்தகைய என்ஜிஓக்களில் பலர் புலிகளுக்கு ஆயுதமும் பணமும் கொடுத்ததாக குற்றம் சாட்கிறார். மாவீரர் கல்லறை என்று வர்ணிக்கப்படும் புலிகளின் சமாதிகளை அவர் காட்டுகிறார். பொதுமக்களின் மண்சுவர் கொண்ட குடிசைகளுக்கு மாறாக அந்தக்கல்லரறகள் சிமெண்டால் சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கின்றன.
போருக்குச் செல்வதாக காத்திருக்கும் படைப்பிரிவைக்கொண்ட கடைசிச் சோதைனச் சாவடியைச் சென்றடைகிறோம். தூக்கம் தொலைத்தவர்களாக இருக்கும் 20களில் உள்ள இளைஞர்கள் மன உறுதியுடன் இருப்பதாக தெரிகிறது. பீரங்கிகள் குண்டுகள் பொழிவதன் பேரிரைச்சல் நான் போர் முனையில் இருப்பதை முதல் முறையாக உணர்த்துகிறது. புலிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஒரு சிப்பாயிடம் கேட்கிறேன். புலிகள் முதலில் நன்றாக போரிடுவார்கள். ஆனால் நாங்கள் சிறப்பாக எதிர்ப்பைக்காட்டினால் அவர்கள் பின்வாங்கி ஓடிவிடுவார்கள். என்றார் அவர்.
என்னை திரும்ப அழைத்துச் செல்வதற்காக ஹெலிகப்டர் பக்கத்திலுள்ள வயலில் இறங்குகிறது. உள்ளே என்னுடன் காயமடைந்த மூன்று இளம் வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஏறியவுடன் எங்களை இறங்கச் சொல்கிறார் பைலட். காயமடைந்த மேலும் இணர்டு வீரர்களை ஏற்றிக்கொள்ள வேண்டுமாம். ஐந்தே நிமிடங்களில் காயமடைந்த இருவருடன் ஹெலிகப்டர் திரும்புகிறது. நான் சற்று முன்பு பேசிய இருவர் மோசமாக அடிபட்டு கீழே அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் கால் கண்ணி வெடியில் வைத்ததால் சிதைந்து போயிருந்தது. வலது கண் பறிபோயிருந்தது. இன்னொருவருக்கு உடம்பு முழுவதும் கண்ணி வெடி சில்லுகளின் காயம் இருந்தது. நாங்னய் அந்தப்பயணத்தை அசாதாரண அமைதியுடன் கழித்தோம்.
ஈவிரக்கத்திற்கு எங்த இடமும் இல்லாத போர் இது. ஏற்கனவே கடந்த இணர்டு வருடங்களில் 10,000 விடுதலைப்புலிகள் போரிட்டு இறந்திருக்கிறார்கள். இலங்கை இராணுவம் 2,000 பேரைப் பறிகொடுத்திருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கினர் கண்ணிவெடிகளில் இறந்தவர்கள்.- இப்போது புலிகளைத் தோற்கடித்து பிரதேசங்களை அவர்களிடமிருந்து மீட்டு பிரபாகரனை உயிரோடோ பிணமாகவோ பிடிக்க இலங்கை இராணுவம் இறுதிப்போரைத் தொடுத்திருக்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பு கொழும்பில் அவரது இல்லத்தில் ஜனாதிபதி கூறினார். எங்களைப்பொறுத்தவரை இந்தப்போர் பிரபாகரனும் அவரது துணையாட்களும் பிடிபடும்போதுதான் ஓயும்.
ராஜபக்ஷாவின் தலைமையில் இலங்கை அரசு பெரும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. அதில் கணிசமானவை அவரது தீர்க்கமான அரசியல் மன உறுதியும் பாதுகாப்பு படைகளுக்குக் கொடுத்த மாற்றமில்லாத ஆதரவினாலும்தான் சாத்தியமாகியிருக்கிறது. தனது சகோதரர் கோத்தபாயாவை பாதுகாப்பு செயலாளராக்கியதன் மூலம் வியுகத்திலும் நோக்கத்திலும் தெளிவு காணப்படுகிறது. இதன் பிரதிபலிப்பாக பிரபாகரனின் முன்னாள் தளபதியுமான கருணாவின் நம்பிக்கையைப் பெற்ற ராணுவம் கிழக்கு மாகாணத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. கடந்த மேமாதத்தில் அங்கு மாகாணசபைத் தேர்தல்கள் நடாத்தப்பட்டு முன்னாள் விடுதலைப்பலி சிறுவர் படையைச் சேர்ந்தவரும் கருணாவுடன் வெளியேறி வந்தவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவர் முதல்வராக தெரிவானார். இதற்கிடையே கருணாவிற்கு பரிசாக நாடாளுமன்றப் பதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.
ராணுவத்தின் தொடர் வெற்றியால் புலிகளின் கட்டுப்பாடு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மட்டும்தான உள்ளது. நாங்னய் இன்னமும் வலிமையான படைதான் என்று காட்டும் விதத்தில் கொழும்பில் பயங்கரவாத தாக்குதல்களையும் விமானத்தாக்குதல்களையும் அவர்கள் நடாத்துகிறார்கள். புலிகளிடம் இணர்டு இலகு ரக விமானங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதை உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் கருவியாக அட்டகாசமாகப் பயன்படுத்துகிறார்கள். அக்டோபர் 27ந்திகதி ராடருக்கு டேக்கா கொடுத்துவிட்டு கொழும்பின் மீது வான் தாக்குதல் நடாத்தியதில் இலங்கைத் தலைநகரத்தில் இணர்டு மணிநேரம் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த தாக்குதல்களை மீறி புலிகள் மோசமான நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை வல்லுனர்கள் ஏற்கிறார்கள். போரில் தாக்குப் பிடிக்குமாறு தங்கள் படைகளுக்கு அவர்கள் உத்தரவிட்டு வருவது வயர்லெஸ் செய்திகளை இடைமறித்து கேட்டபோது தெரிய வருகிறது. அரசுக்கு உளவுத்தகவல்கள் சிறப்பாக கிடைப்பதால் புலிகளின் பதுங்குமிடங்களில் தாக்கி அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் போன்றவர்களைக் கொல்ல முடிந்திருக்கிறது. அங்குமிங்கும் இடத்தை மாற்றி வரும் பிரபாகரன் புதுக்குடியிருப்பைச் சுற்றிய காடுகளில் இணர்டுலட்சம் தமிழ் அகதிகளை மனிதக்கேடயமாகக் கொண்டு பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. போர்க்களத்தில் பரந்து விரிந்து நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை இராணுவம் வன்னியில் முடங்கிப்போக வாய்ப்பிருக்கிறது என்றும் புலிகளால் மீண்டும் எழுந்து வர முடியும் என்றும் வேறு சில வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இலங்கைத் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் போராட்ம் நடாத்தி போர்நிறுத்தம் கேட்பதே புலிகள் தோற்று வருவதற்கான சாட்சி. தி.மு.க தலைமையிலான கட்சிகள் தந்த நெருக்கடிகளால் இந்த விவகாரம் குறித்தும் இந்திய மீனவர்கள் குறித்தும் ராஜபக்ஷாவிடம் பேசிய இந்தியப் பிரதமர் போர் நிறுத்தம் குறித்து எதுவும் பேசவில்லை. எனினும் இந்த இனப்பிரச்சினைக்கு ராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று ராஜபக்சே அரசு ஒரு நம்பகத்தன்மை கொண்ட ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினார் மன்மோகன் சிங்.
போரை நிறுத்த முடியாது எனக்கூறும் இலங்கை ஜனாதிபதி பிரபாகரன் தோற்கடிக்கப்பட்ட பிறகு அரசியல் தீர்வு உருவாகும் என்கிறார். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் மீட்கப்பட்டிருப்பதே தனது நேர்மையின் சாட்சி என்கிறார். பெரிய சிங்களக்கட்சிகளைக் கொண்ட அனைத்துக்கட்சி கமிட்டியை அமைத்திருப்பதாகவும் அவர்கள் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பது பற்றி விவாதிப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் பிரதான எதிர்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி அந்தப்பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிவிட்டது.
இதற்கிடையே இந்தப்போர் நடாத்தப்படும் விதம் குறித்து புலி ஆதரவு இலங்கைத் தமிழ் எம்பிக்களிடையே விமர்சனங்கள் உள்ளன. அனைத்துக் கட்சி கமிட்டி என்பதே ஒரு நாடகம். ஏமாற்றுவேலை என்று சொல்கிறார் சம்பந்தன் எம்.பி. முழுக்க முழுக்க ராணுவத்தீர்விலேயே அரசு உறுதியதாக இருக்கிறது. இந்தப் போர் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு எதிரானது. விடுதலைப்பலிகளுக்கு அரசியல் ரீதியான முறையான சவாலை முன்னிறுத்தும் முன்மொழிதல்கள் எதுவும் அரசிடம் இல்லை என்கிறார் அவர். கிழக்கு மாகாணம் தொடர்பான ராஜபக்ஷாவின் உதாரணத்தைக் குறிப்பிடும் அவர், இந்தியாவில் தமிழகம் போன்ற மாநிலமோ ஒரு யுனியன் பிரதேசமோ கொண்டுள்ளது போன்ற அதிகாரங்கள் கிழக்கு மாகாணத்திற்கு கிடையாது. அங்கு தன்னாட்சியும் இல்லை அதிகாரப்பகிர்வும் இல்லை. இலங்கை அரசின் கைப்பாவைதான் அந்த மாகண அரசு என்று சொல்கிறார்.இதுவரை இலங்கைப்பிரச்சினையைக் கண்டும் காணாமல் இருந்த இந்திய அரசு தற்போது தமிழக அரசியல் சூறாவளியால் தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் நிர்ப்பந்தத்தை சந்திக்கிறது. 1987ன் இந்திய இலங்கை ஒப்பந்தம், 1990ல் இந்திய அமைதிப்படை வெளியேற உத்தரவிடப்பட்டது ஆகியவற்றால் இலங்கை உள்நாட்டுப்போரில் இராணுவரீதியாக தலையிட இந்தியா விரும்பவில்லை. இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் விற்பதையும் இந்தியா தவிர்த்து வருகிறது. எனினும் சமீபகாலமாக உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, ராடர்கள் தருவது போன்ற உதவிகளைப் செய்து வருகிறது. ராஜீவ் காந்தி கொலை முதலிய சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு என்றே விடுதலைப்புலிகளை இந்திய அரசு மதிப்பிட்டு வந்தது. அதனால் ஆரம்பத்தில் புலிகள் மீது போர் தொடுக்க இந்திய அரசு அனுமதித்தது. ஆனால் இப்போது போர் நடக்கும் அதே சமயத்தில் தமிழர்களுக்கு நிஜமான சுயாட்சியையும் தருவதற்கான ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்குமாறு இந்தியா இப்போது இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது.
பணவீக்கம் 25சதவீதத்தை தாண்டிவிட்ட பிறகும் சிங்கள பெரும்பான்மையின ஆதரவு ராஜபக்ஷாவிற்கு கிடைத்து வருவதால் அவர் இராணுவ நடவடிக்கையை நிறுத்து வாயப்பில்லை. ஆனால் அடுத்த ஆண்டு மத்தி வரை போர் இழுத்துக்கொண்டே போனால் உயிர்ப்பலிகள் அதிகமானால் இலங்கை அரசுக்கு நெருக்கடி உருவாகும் . அதை அறிந்திருக்கும் பிரபாகரன் வேண்டுமென்றே போரின் வேகத்தை குறைத்து வருகிறார். தனக்கான நேரம் வரும் என அவர் காத்திருக்கின்றார். கடந்தகாலங்களிலும் இதே போல கைவிடப்பட்ட நிலையில் இருந்து அவர் மீண்டிருக்கிறார். இந்த முறை கடும் மன உறுதியுடன் இருக்கும் இலங்கை அரசு, தன்னம்பிக்கை மிக்க ராணுவம் புலிகளை விட சிறப்பாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இணையான வியுகங்களை முன்வைக்கிறது.
இன்றுபோல என்றும் பிரபாகரன் இவ்வளவு நெருக்கடியில் இருந்ததில்லை. இந்த முற்றுகையிலிருந்து அவர் மீள்வது கடினம்.
நன்றி தேனீ இணையத்தளம்

No comments: