Friday 30 January, 2009

வடபோர் முனையில் நடேசனின் நட்பு நாட்டு படை நிபுணர் நால்வர் படுகாயம்!

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

"நம்பமுடியவில்லை..நம்பமுடியவில்லை...
அவளா செய்தாள்; நடக்காது நடக்காது நடக்கவும் கூடாது!
அன்னை தந்த பால் விசம் ஆகலாம்...உப்புக்கடல் நீரும் சக்கரையாகலாம், அன்னை பாரதம் ஈழத்தமிழனைக் கொல்வதா? நடக்காது.......!''

+++++++++++++++++++++++++++++++++++++

ஓட்டுப் பொறுக்கிகளே எல்லோருமாகச் சேர்ந்து மீண்டும் நடத்தியிருக்கிறீர்கள். உங்கள் காலடியில் நெருப்பெரியும் காலம் வரும், விஸ்தரிப்புவாதம் விழும், ஈழம் மீண்டும் எழும்!-ENB

+++++++++++++++++++++++++++++++++++++

வன்னி போர் முனையில் நான்கு இந்திய இராணுவ நிபுணர்கள் காயம்!
30/01/2009, 12:55 [ கொழும்பு நிருபர் மயூரன்] பதிவு.கொம்
வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வன்னி பெரும் நிலப்பரப்பில் இந்த வாரத்தில் இடம்பெற்ற கடும் மோதலினால் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தின் நான்கு நிபுணர்கள் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயப்பட்ட இந்திய இராணுவத்தின் முழுவிபரங்கள் கிடைக்காவிட்டாலும் சிறிலங்காவுக்கு இந்தியா 3000 இந்திய துருப்புக்களை அனுப்பியுள்ளதாக இந்திய தமிழ் அரசியல் கட்சிகள்
தெரிவித்துள்ளது.
இதேவேளை அண்மைய நாட்களில் இந்தியா ராடர்கள் உட்பட இராணுவ தளபாடங்களை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் "யுத்த நிறுத்தம் அல்ல'

[29 - January - 2009]
ரொஷான் நாகலிங்கம் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்பு விஜயம் யுத்தநிறுத்தம் குறித்து பேசுவதற்காக அல்லவென்றும் வடக்கை முழுமையாக மீட்டதும் அடுத்தகட்டமாக அங்கு
மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராய்வதே முகர்ஜி வருகையின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளருமான கெஹலிய
ரம்புக்வெல நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் முகர்ஜியின் கொழும்பு பயணம் இடம்பெற்றதாகவும் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
இலங்கை நிலைவரம் குறித்து உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரான பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைத்தார்.
அவரை மட்டும் அழைக்கவில்லை. தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியே வந்துள்ளார். கருணாநிதி சுகவீனம் காரணமாக வரவில்லை. அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால் வேறு வேலை காரணமாகவோ என்னவோ ஜெயலலிதா வரவில்லை.
பிரணாப் முகர்ஜி இங்கு வருவதற்கு முன் இந்தியாவில் வைத்து தமிழ் மக்கள் குறித்தே தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் அதற்கான உதவிகளை நாம் வழங்குவதாகவும் எனினும், விடுதலைப்புலிகள் தொடர்பில் எதுவும் பேசப்போவதுமில்லையென தெரிவித்துள்ளார். இதிலிருந்து பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டுமென்ற உறுதியான தீர்மானத்தில் இந்தியா இருப்பது
தெரிகிறது.
ஜனாதிபதியுடனான முகர்ஜியின் சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் குறித்தல்லாமல் வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்குள்ள மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டம் முதல் அனைத்துவேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது குறித்தே பேசப்பட்டது. இதனை செய்வதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் என்றார்.
விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக வடபகுதியை மீட்டு நாடு ஒன்றிணைக்கப்படுவதை இலங்கை இரண்டாவது தடவையாக சுதந்திரம் பெறுவதாக உணர்கின்றேன். இதன்பின் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியர் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்கள் பயமின்றி சுதந்திரமாக வாழமுடியுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் தெரிவித்தார்.

புலிகள் மீது இந்தியா ஒருபோதும் அனுதாபம் காட்டாது போரில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் குறித்தே கவலை
தினக்குரல்
இந்தியாவின் கரிசனை அப்பாவித் தமிழ் மக்கள் மீது மட்டுமே : ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரணாப் முகர்ஜி
வீரகேசரி இணையம் 1/28/2009 1:44:41 PM -
இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இலங்கையின்
அண்மைக்கால நிலவரங்கள்;, இந்திய - இலங்கை உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்; தொடர்பாக ஜனாதிபதியுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடினார். இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது.
இலங்கையின் அண்மைக்கால நிலவரங்கள், அபிவிருத்திகள் தொடர்பான ஜனாதிபதியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையிலும் இருதரப்புக்குமிடையே மிகுந்த புரிந்துணர்வுடனும்
சிநேகபூர்வமாகவும் நடைபெற்றதாக முகர்ஜி கூறினார். இலங்கையின் வடமாகாண மீள் கட்டுமாணப் பணிகளில் பங்கேற்பதற்கும் அனைத்து சமூகங்களினதும் அபிலாi~களை உள்ளடக்கிய வகையிலான ஒரு நிரந்தர சமாதானத்திற்கான அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார அடித்தளங்களை இடவும் இந்தியா தயாராக இருப்பதாக இச்சந்திப்பின்போது முகர்ஜி தெரிவித்தார்.
புலிகளுடன் யுத்த நிறுத்தமொன்று செய்து கொள்ளப்பட வேண்டுமென பல்வேறு தரப்புகளில் இருந்து எழும் கருத்துகள் குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில்,
பயங்கரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்தியாவின் கரிசனை அப்பாவிப் பொதுமக்கள் மீது மட்டுமே என்று கூறிய முகர்ஜி, தமிழ் மக்களின் நலன்களைக் கவனிக்கும் பொறுப்பை ஜனாதிபதியிடமே கையளிப்பதாகக் கூறினார்.
புலிகளுக்கெதிரான அண்மைக்கால இராணுவ வெற்றிகள் இலங்கையின் வடக்கே இயல்பு வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒரு அரசியல் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்~ இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்தார். கலந்துரையாடலின் போது தமிழக முதல்வர் கருணாநிதி, அ.அ.தி.மு.கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் அவர்களின் கட்சி உறுப்பினர்களை இலங்கை வந்து இன்றைய நிலவரங்களை நேரில் கண்டறியுமாறு பிரத்தியேக அழைப்பு ஒன்றை விடுத்த ஜனாதிபதி,
ஆயுதங்களைக் கைவிட்டு எம்மோடு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு விடுதலைப் புலிகளை வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டார்

No comments: