Thursday, 15 January 2009

அரசுத் தேனீயும் ஈழப்புதினமும்

தைப்பொங்கலை வெகுசிறப்புடன் கொண்டாட தமிழ்மக்கள் தயாராகி வருகின்றனர்! - பாரதிப்பிரியன்
இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலும் தமிழர்கள் வாழும் ஏனைய பிரதேசங்களிலும் தைப்பொங்கல் விழாவை வழமையைவிட இம்முறை வெகு சிறப்பாக கொண்டாடுவதற்கு மக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கு பிரதான காரணம், அவர்களை கடந்த கால் நூற்றாண்டாக பாறாங்கல்லாக அழுத்திவந்த புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு, மக்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதுதான்.யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு, மலையகப்பகுதிகள் போன்ற இடங்களில் மக்கள் பொங்கல் பொருட்களை இம்முறை பெருமளவில் வாங்கிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது. அதேவேளையில் புலிகளினால் தமது பாதுகாப்பு கருதி வன்னியில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள சுமார் இரண்டு லட்சம் மக்கள், பொங்கல் விழாவை கொண்டாடக்கூடிய சூழ்நிலையில் இல்லாதிருப்பதுடன், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் அடிப்படை வசதிகளை கூட பெறமுடியாமல் புலிகளினால் தடுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது வழமையாக வன்னியில் மற்றெந்த விழாவையும் விட,தைப்பொங்கலே சிறப்பாக கொண்டாடப்படுவது வழமை. பெரும்பாலும் விவசாயிகளான அவர்கள், தாம் சொந்தமாக உற்பத்தி செய்த புதிய அரிசியை பொங்கலிட்டு, மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுவது வழமை. ஆனால் புலிகள் வன்னியில் எப்பொழுது புகுந்தார்களோ, அன்றிலிருந்து அவர்கள் வாழ்வு இருளினால் சூழப்பட்டுவிட்டது. தாயகத்தில் பொங்கல் விழா களைகட்டி நிற்கும் சூழலைப் பொறுக்கமுடியாத புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் மிச்சசொச்சங்கள், தமது கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடகங்கள் மூலம் பொய்ப்பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
____________
பொங்கல் திருநாளில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 13 பொதுமக்கள் காயம் புதினம் [புதன்கிழமை, 14 சனவரி 2009, 03:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.
க.எலிபெத் (வயது 63) ஞானம் (வயது 34)த.தங்கச்செல்வன் (வயது 42)கு.மோகன்குமார் (வயது 33)சா.மஞ்சுளா (வயது 28)தா. நாகரத்தினம் (வயது 46செ.சொக்கன் (வயது 34) சி. தவமலர் (வயது 57)ல.அமரேசன் (வயது 42) சு.லக்சிகா (வயது 31) செ.றொக்சன் (வயது 34)சு.அருள்வரதன் (வயது 40) செ.சிவஞானம் (வயது 39)
ஆகியோர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments: