Thursday, 5 February 2009

பாதுகாப்புவலையம்: ஒன்று திரட்டி கொன்று குவிக்கும் பாசிச யுத்த வடிவம்

பாதுகாப்புவலையம்: ஒன்று திரட்டி கொன்று குவிக்கும் பாசிச யுத்த வடிவம் நவாலியில் இருந்து முல்லைத்தீவு வரை நாமறிவோம்! நாமறிவோம்!!!

09.07.1995 அன்றுதான் அந்தக் கரியநாள்.
பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசியது. (யுத்த நிலைமையில் பாதுகாப்புக்காக பொதுமக்களை தேவாலயங்களில் ஒன்று கூடுமாறு இலங்கை அரசு உத்தியோக பூர்வமாக வேண்டியது-ENB)இலக்குத் தப்பவில்லை. சரியாகவே குண்டுகளை வீசியது. ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டன.தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களை யாழ்ப்பாண நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான வாகனங்கள்கூட இல்லை.அன்றிரவு எடுக்கப்பட்ட கொல்லப்பட்டோர் கணக்கெடுப்பு 100 ஐத்தாண்டிவிட்டது. போகப்போக அவை அதிகரித்துச் சென்றன.இதில் இறப்பு விவரங்கள் சரியாகத் தொகுக்கப்படாமைக்கு முக்கிய காரணம், தாக்குதலுக்குள்ளானோர் இடம்பெயர்ந்தவர்கள் என்பதே.பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள்தாம் பொறுக்கப்பட்டன. அத்தேவாலயத்தில் தங்கியிருந்த முழுப்பேரின் விவரமும் தொகுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. விவரத்தொகுப்பில் ஈடுபட்டிருந்த நான்கு கிராமசேவையாளர்களும் அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.இரண்டு கிழமைகள் வரை பொறுத்து, காணாமல் போனவர்களின் விவரங்கள் இந்தப் படுகொலை விவரத்தில் சேர்க்கப்பட்டன. இறுதிக்கணக்காக 140 பேர் மரணம் என்று வந்தாக நினைக்கிறேன்.
யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர். குறைந்த வசதிகள், மருந்துகளோடு அவர்கள் அயராது போராடினர். இரத்தச் சேமிப்பென்பது அப்போது முழுமையாக இல்லை. நிரந்தர மின்சார வசதியில்லை. மக்கள் இரத்தம் கொடுத்தனர்.யாழ்குடாநாடு பெரும் அவலத்தைச் சுமந்து நின்றது. ஒருபக்கம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வும் அவர்களின் பராமரிப்பும். இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட, காயமடைந்த கொடுமை.அதைவிட முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவும் குடாநாடு தன்னைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.09.07.1995 அன்றுதான் அந்தக் கரியநாள்.பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசியது. இலக்குத் தப்பவில்லை. சரியாகவே குண்டுகளை வீசியது. ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டன.தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்.காயமடைந்தவர்களை யாழ்ப்பாண நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான வாகனங்கள்கூட இல்லை.அன்றிரவு எடுக்கப்பட்ட கொல்லப்பட்டோர் கணக்கெடுப்பு 100 ஐத்தாண்டிவிட்டது. போகப்போக அவை அதிகரித்துச் சென்றன.இதில் இறப்பு விவரங்கள் சரியாகத் தொகுக்கப்படாமைக்கு முக்கிய காரணம், தாக்குதலுக்குள்ளானோர் இடம்பெயர்ந்தவர்கள் என்பதே.பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள்தாம் பொறுக்கப்பட்டன. அத்தேவாலயத்தில் தங்கியிருந்த முழுப்பேரின் விவரமும் தொகுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. விவரத்தொகுப்பில் ஈடுபட்டிருந்த நான்கு கிராமசேவையாளர்களும் அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.இரண்டு கிழமைகள் வரை பொறுத்து, காணாமல் போனவர்களின் விவரங்கள் இந்தப் படுகொலை விவரத்தில் சேர்க்கப்பட்டன. இறுதிக்கணக்காக 140 பேர் மரணம் என்று வந்தாக நினைக்கிறேன்.
யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர். குறைந்த வசதிகள், மருந்துகளோடு அவர்கள் அயராது போராடினர். இரத்தச் சேமிப்பென்பது அப்போது முழுமையாக இல்லை. நிரந்தர மின்சார வசதியில்லை. மக்கள் இரத்தம் கொடுத்தனர்.யாழ்குடாநாடு பெரும் அவலத்தைச் சுமந்து நின்றது. ஒருபக்கம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வும் அவர்களின் பராமரிப்பும். இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட, காயமடைந்த கொடுமை.அதைவிட முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவும் குடாநாடு தன்னைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.

No comments: