பாசிஸ்டுக்கள் பைத்தியக்காரர்கள் சித்த சுவாதீனம் பிடித்தவர்கள்!
புஸ் சொன்னான் ஈராக்கின் மீது யுத்தம் தொடுக்கும்படி தனக்கு கடவுள் சொன்னாராம்!
99% பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக பிரகடனம் செய்து கொண்டு வைத்திய சாலையின் மீது கொத்தணிக் குண்டுகளை வீசும் முப்படைத்தளபதிக்கு பிடித்திருப்பது
அதிகாரப் பைத்தியம்!
இதோ இன்னொரு பிதற்றல்!
புலம்பெயர்ந்த இலங்கையரை நாடு திரும்ப ஜனாதிபதி அழைப்பு [05 - February - 2009]
புலிகள் சில தினங்களில் முற்றாக ஒழிக்கப்படுவர்; சுதந்திர தின உரையில் ஜனாதிபதி எம்.ஏ.எம். நிலாம்
விடுதலைப்புலிகள் இன்னும் சில நாட்களில் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் இந்த முக்கியமான தருணத்தில் போர் காரணமாக புலம்பெயர்ந்த சகல சமூகங்களையும் சேர்ந்த அனைத்து இலங்கையரும் தாய் நாட்டுக்குத் திரும்பி வரவேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை அழைப்பு விடுத்தார்.
நாடு ஒரே கொடியின் கீழ் வருகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இன, மத,குல, கட்சி பேதம் பாராது அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டுக்கான கடமையை நிறைவேற்ற முன்வருமாறு சகல கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பை விடுத்தார்.
இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்தையொட்டிய பிரதான வைபவம் நேற்றுக்காலை காலிமுகத்திடலில் நடைபெற்றபோது நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு பேசினார்.
காலை 9 மணிக்கு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட விசேட மண்டபத்தை வந்தடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்த பின்னர் 21 பீரங்கி வேட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர் சரியாக 9.10 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜனாதிபதியின் உரைக்கு நிகழ்ச்சி நிரலில் 30 நிமிடங்களே ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவரது உரை 50 நிமிடங்கள் வரை நீடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஜனாதிபதியின் சுதந்திர தின உரை வருமாறு;
இலங்கையர்களாகிய நாம் எல்லோரும் மனதால் பிரார்த்தித்த ஒன்றுபட்ட தாய்நாட்டிலிருந்து இன்று நாம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தோம் என்பதை மிகப் பெருமையுடன் தேச மக்களுக்கு கூற விரும்புகின்றேன். தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகவும் சுயாதீனத்திற்காகவும் உயிர்த் தியாகம் செய்ய முன்வந்த, அத்துடன் அப்போராட்டத்திற்கு மனதார ஆசீர்வாதம் வழங்கிய எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை பெரும் அன்புடன் அவதானிக்கின்ற தேசத்தின் எதிர்காலத்திற்குச் சொந்தக்காரர்களான அன்புள்ள மகளே, மகனே,
இற்றைக்கு 61 ஆண்டுகளுக்கு முன்னர் எமது பெருமைமிக்க தாய்நாடு பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடிக்குள் இருந்து சுதந்திரம் பெற்றது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய பல்வேறு ஐரோப்பிய இனத்தவர்களுக்கு முழுமையாகவோ அல்லது பாதியாகவோ ஆதிக்கத்துக்கு உட்பட்டு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியர்களினால் எமக்கு தேசிய சுதந்திரம் வழங்கப்பட்டது.
அந்த நேரமாகும்பொழுதுகூட, 1818 இலும், 1848 இலும் எமது மக்களால் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வீர மொணரவில கெப்பிட்டிப்பொல, வீர புரன்அப்பு ஆகிய வீரர்கள் அப்போராட்டங்களில் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். எமது சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கின்ற ஒவ்வொரு கணத்திலும், எமது நினைவுக்கு வருவது வேறெவரும் அல்ல, அந்த தியாக வீரர்களே.
ஆயினும், தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எமது தாய்நாடு ஆளாகியதினால், எமது தேசத்திற்கே உரிய எதிர்காலப் பயணம் பல சவால்களை எதிர்நோக்கியது. எமது அறிவு, தொழில்நுட்பம், பல்வேறு கலைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான அபிவிருத்தி இடைநடுவில் நின்றுவிட்டன. 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியர்கள் எமக்கு சுதந்திரம் வழங்கியதையடுத்து எங்களுக்குரிய விதத்தில் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபட எமக்கு சந்தர்ப்பம் உருவாகியது. ஆயினும், பேதங்களை ஏற்படுத்தி எமக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த சமூகத்தை, ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுத்தி சரியான வழியில் வழிநடாத்திச் செல்ல எம்மால் சரியாக இயலவில்லை. அதனால், சுதந்திரம் பெற்று 30 வருடங்கள் பூர்த்தியடையும்போது எமது தேசத்தைப் பிரித்துக் கூறுபடுத்துவதற்கு முயற்சி எடுக்கின்ற பிரிவினைவாத, இனவாத, பயங்கரவாத அரசியலொன்றின் பிறப்பு எம்முன் சம்பவித்தது.
கடந்த ஒவ்வொரு ஆண்டிலும் எமது தேசிய சுதந்திரத்தினை நாம் நினைவுகூர்ந்தோம். ஆயினும், சுதந்திரத்திற்குப் பிறகு, நாம் கடந்துவந்த 30 ஆண்டுகளில் சட்டவிரோத, ஆயுதந்தாங்கிய, பிரிவினைவாத பயங்கரவாதத்துடன் தான் நாம் வாழ்ந்தோம். எனவே, கடந்துபோன சரித்திரத்தில் எம்மால் உண்மையான சுதந்திரத்தை நினைவுகூர முடியவில்லை.
பிரிவினைவாத பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் தமது கிராமங்களையும் காணிகளையும் விட்டுச்செல்ல வேண்டிய நிலை வடக்கில் வாழ்ந்த முஸ்லிம், சிங்கள மக்களுக்கு ஏற்பட்டது. ஜயஸ்ரீ மகா போதிக்கு அண்மையில் பௌத்தர்கள் கூட்டமாக துப்பாக்கியால் கொலை செய்யப்பட்டார்கள். காத்தான்குடியில் பள்ளிவாசலுக்குள் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். பௌத்தர்களின் உயர் புண்ணியஸ்தலமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கண்டி தலதா மாளிகை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாகப் பல இடங்களில் கொலை செய்யப்பட்டார்கள்.
அதுமாத்திரமல்ல, எமது நாட்டின் சரித்திரத்தில் முதல் தடவையாக புலிப் பயங்கரவாதிகளினால் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டது. சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழாத, தமக்கு அடிபணியாத தமிழ்மக்களும் வாழாத, புதுவிதமான பாசிச அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டார்கள். தமிழ்மக்களின் ஜனநாயக மக்கள் தலைவர்கள் பலரை பயங்கரவாதிகள் கொலை செய்தார்கள். எமது நாட்டுக்கு தலைமைத்துவம் தாங்கிய மக்கள் தலைவர்கள் பலர் பிரிவினைவாத பயங்கரவாதிகளினால் கொலை செய்யப்பட்டனர். முழு நாடுமே பீதியில் மூழ்கியது.
உலகத்தின் பலம்வாய்ந்த பயங்கரவாத இயக்கத்தின் அச்சுறுத்தலுக்கு எமது நாடு இரையானது. அந்த பிரிவினைவாத பயங்கரவாதிகள் தமது குறிக்கோளான, அதாவது இந்த நாட்டைப் பிரித்து தமிழீழமொன்றை உருவாக்குவதற்கான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அண்மித்துக் கொண்டிருந்தது. தாய்நாட்டை இரு கூறுகளாக்கி பிளவுபடுத்துவதுடன், ஏற்படுகின்ற பயங்கரவாதத்தின் வெற்றியை ""சொல்லப்பட்ட சமாதானமாக' ஏற்றுக்கொள்ளுமாறு அன்றிருந்த ஆட்சியாளர்கள் எம்மை வற்புறுத்தினார்கள். நிலத்தின் அதிகாரம், கடலின் அதிகாரம், வான் பரப்பின் அதிகாரம் மாத்திரமல்ல, தற்கொலை பயங்கரவாதிகளின் அதிகாரத்துடன் பயங்கரவாத இயக்கமொன்றின் முன்னே அடிபணிதல், சமாதானத்தை வெற்றிகொள்வதற்கான வழிமுறையாக ஏற்றுக்கொள்ளும்படி பல்வேறு வெளிநாட்டுச் சக்திகள் கூட எமக்குப் புரியவைப்பதற்கு முயன்றன.
அத்துடன், சில சர்வதேச நிறுவனங்கள் எமது நாடு பலவீனமானதொரு நாடாக ஆளாகியுள்ளதென எடுத்துக்காட்ட முயற்சி செய்தமையினால் இலங்கையில் பிறந்த நாம் அனைவரும், எமது தாய்நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைகுறித்து பெரும் வேதனைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்கள் மனதால் அழுதார்கள்.
எமது மகத்துவம் மிக்க தாய்நாட்டினால் தாங்கிக்கொள்ள முடியாத அந்த துரதிர்ஷ்டவசமான நிலைக்கு இறுதியில் நாம் சவால் விடுத்தோம்.
அன்று 2005 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் என்னை இந்த நாட்டின் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவந்தது, அந்த துரதிர்ஷ்டவசமான நிலையுடன் போராடுவதற்கே அந்தத் துரதிர்ஷ்டமான நிலையைத் தோல்வியுறச் செய்து தேசத்திற்கு வெற்றியைப் பெற்றுத் தருவதற்கே பிரிவினைவாத பயங்கரவாதத்தின் வெற்றியினால் ஏற்படுகின்ற வெட்கமற்ற சமாதானத்திற்குப் பதிலாக பிரிவினைவாத பயங்கரவாதத்தின் தோல்வியினால் ஏற்படுகின்ற கௌரவமான சமாதானத்தை இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்கே ஆகும்.
காலத்தினால் முன்கொண்டுவரப்பட்ட இந்தச் சவாலை வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு, 2005 ஜனாதிபதி தேர்தலின்போது நீங்கள் என்மீதும் எமது அரசின்மீதும் ஒப்படைத்தீர்கள். கஷ்டமானதும் ஆபத்தானதுமான சவாலை எதிர்நோக்கி எப்படியாவது அதனை வெற்றிகொள்வேன் என்ற உறுதியுடன் நாம் அதனை எதிர்கொண்டோம்.
தோல்வி என்பது வெற்றியின் தாய் என்று சொல்லப்படுகின்றது. கடந்த காலங்களில் இருந்த பல அரசாங்கங்களினாலும் பல தலைவர்களினாலும் பிரிவினைவாத பயங்கரவாதத்துடனான இப்பிரச்சினையை யுத்தத்தின் மூலமும் பேச்சுவார்த்தைகளின் மூலமும் தீர்த்துக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன என்பது ஒரு இரகசியமல்ல. அந்தத் தோல்வியினூடாக வெற்றியை நோக்கிச் செல்லவேண்டுமென நான் தீர்மானித்தேன். அன்று, 2005 ஜனாதிபதித் தேர்தலில் ""மகிந்த சிந்தனை' கொள்கைப் பிரகடனத்தில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.
""கடந்த காலத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எல்லா நடவடிக்கைகளிலும் இருந்த நன்மை, தீமைகளை முறையாக விசாரித்தறிந்து புதிய வழியொன்றை மேற்கொள்ள நான் உத்தேசிக்கின்றேன். அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்பொழுது உரிய அடித்தளமான பிளவுபடாத நாடு, பெரும்பான்மை கருத்தொருமைப்பாடு, கௌரவமான சமாதானம் அமையும்'.
எவ்வாறாயினும், முழுத்தேசத்தையும் பல தசாப்தங்களாக பீதிக்கு ஆளாக்கிய கோழைத்தன பயங்கரவாதத்தை குறுகிய காலப்பகுதியான 21/2 ஆண்டுகளில் முழுமையாக தோல்வியடையச் செய்ய இன்று எம்மால் இயலுமாயிற்று.
பல ஆண்டுகளுக்குப் பின்னர், பிரிவினைவாத பயங்கரவாதத்தின் கருமைநிழலை கூடியளவு இல்லாமல்செய்த தேசமொன்றின் தேசிய சுதந்திர தினத்தினை நினைவுகூருவதற்கு எமது வீரமிக்க படைவீரர்கள் எமக்குச் சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள்.
சரித்திரம் பூராவும் காட்டிக்கொடுத்தல், அடிபணிதல் போன்றவை இருந்தன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் காரணமாக, அபகீர்த்திக்கு ஆளானவர்களும் எமது நினைவிற்கு வருகின்றனர். அதேபோன்று, வீரம், மகத்துவம், தேசப்பற்று ஆகியவற்றினால் முழுமையடைந்த துட்டகைமுனு, கஜபா, விஜயபாகு போன்ற மன்னர்களைப் பற்றி இன்றும் நாம் நினைவுபடுத்திப் பேசுகின்றோம் அல்லவா?
எமது படைகள் அந்த கடந்தகால வீரமிக்க கௌரவத்தை உயர்ந்த மட்டத்தில் பாதுகாத்து எதிர்காலத்திடம் ஒப்படைத்துள்ளது. உலகத்தின் கொடூரமான பயங்கரவாத இயக்கமாக அழைக்கப்பட்ட புலிகள் இயக்கம் நாட்டின் ஒற்றையாட்சிக்கும் சுயாதீனத்திற்கும் ஏற்படுத்திய பயமுறுத்தலைச் சுக்குநூறாக்குவது எளிதானதொரு காரியமல்ல.
நாட்டின் கௌரவமான சமாதானத்தை உருவாக்கக்கூடியதொரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிசிறந்த சந்தர்ப்பத்தை தமது தாய்நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அவர்கள் தமது உடலின் அங்கங்களை மாத்திரமல்ல, தமது உயிரையே தாய்நாட்டுக்காகத் தியாகம் செய்தார்கள். அப்பாவித் தமிழ் மக்களுக்கு கஷ்டமேற்படுவதற்கு இடமளியாமல், மிகக் கவனமாக பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை எமது படைவீரர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றார்கள். உருவாகிக் கொண்டிருக்கின்ற கௌரவமான சமாதானம் வேறு எந்த நாட்டிலும் வாழுகின்ற மக்கள் அனுபவிக்கின்ற சமாதானத்தைவிட மிக முக்கியத்துவம் வாய்ந்ததற்கான காரணம், அந்தப் படைவீரர்களின் அளப்பரிய தியாகத்தினால் இந்தச் சமாதானம் ஏற்பட்டமையே.
இந்த வெற்றியின் பின்னால் பல காரணிகள் உள்ளன. பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழுகின்ற எமது சகோதர மக்கள், எவ்வித பேதமுமின்றி இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள். எங்களுக்கு ஒத்தாசை வழங்கினார்கள். பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக சரியானதொரு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்பதை அவர்கள் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்கள். சரித்திரத்தில் எந்தவொரு காலத்தையும்விட எமது நாட்டின் தாய்மார், தந்தைமார் தமது பிள்ளைகளைப் பாதுகாப்புப் படைகளுக்கு, பொலிஸுக்கு, சிவில் பாதுகாப்புச் செயலணிக்கு பெருமளவில் பெற்றுத் தந்திராவிட்டால் எமக்கு இந்தப் போராட்டத்தில் ஒருநாளும் வெற்றிபெற முடியாது போயிருக்கும். அவர்களுடைய பாரிய அர்ப்பணிப்பு எந்தவிதத்திலும் வீண்போகவில்லை. அந்தப் பாரிய அர்ப்பணிப்பின் பெறுபேறாகவே இன்று நாடு பூராவிலும் தேசிய கொடி பறக்கின்றது.
தமது அறிவின் மூலமே எமது படையினர் இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தார்களே தவிர, வேறெந்த வெளிநாட்டு விசேட நிபுணர்களின் உதவியை எமது படைகள் பெற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று எமது படையினுள் விசேட தன்மைகள் நிலவின.
அதனால்தான், எந்த நேரத்திலும் அவர்கள் எங்களால் முடியாது என்று சொல்லவில்லை. ""நாட்டுக்காக நாங்கள் இப்பணியை எப்படியாவது செய்துமுடிக்க வேண்டும்' என்பதை மாத்திரமே அவர்கள் எப்போதும் சிந்தித்தார்கள். அவ்வாறு சிந்தித்து பணியாற்றக்கூடிய தைரியம் எமக்கு இருந்தமையினால் தான் எமது நாட்டுக்கு இந்த வெற்றி கிடைத்தது.
No comments:
Post a Comment