Tuesday 24 March, 2009

TNA:தமிழ்த் தேசிய கூட்டமைப்பே, செய்து முடி, அல்லது செத்துமடி!!

ஓடுகாலித் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே, செய்து முடி, அல்லது செத்துமடி!!
செய்தி:தினக்குரல் 24-03-09
வியாழன் மாலை தமிழ் கூட்டமைப்பை ஜனாதிபதி ராஜபக்ஷ சந்திக்கிறார்
[24 - March - 2009]
22எம்.பி.க்களுக்கும் தனித்தனியே அழைப்புக் கடிதம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்.பி.க்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தனித்தனியாக கடிதங்களை அனுப்பியுள்ளார்.
"அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு' என்ற தலைப்பிலேயே கூட்டமைப்பினருக்கான அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தச் சந்திப்பில் ஆராயப்படுமெனவும் அந்த அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வதா என்பது குறித்து கூட்டமைப்பினர் இதுவரை முடிவெடுக்கவில்லை. நாளை புதன்கிழமை பாராளுமன்றில் நடைபெறும் விஷேட அமர்வின் போது கூட்டமைப்பு எம்.பி.க்கள் கூடி இது தொடர்பாக முடிவெடுக்கவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது போன்ற சந்திப்புக்காக ஜனாதிபதி முன்னரும் ஓரிரு தடவைகள் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவர்கள் அந்தச் சந்திப்புகளில் கலந்து கொள்ளாததும் குறிப்பிடத்தக்கது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஓடுகாலித் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே,

1) நாளொன்றுக்கு 50 தமிழரைப் படுகொலை செய்யும் சிறீலங்காப் பாராளுமன்றம் ஜனநாயக ஆட்சியல்ல பாசிச நிர்வாகமே என்பதை அம்பலப்படுத்து!

2) வீட்டுக்குப் போக வீட்டுக்கு போடுங்கள் [வாக்களியுங்கள்] என்று சொல்லி மக்களை ஏய்த்து ஏமாற்றி பதவி சுகம் பெற்றவர்களே தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி போராடுங்கள்!

3) வன்முறையின் எதிரிகளே தங்கள் ஜனநாயக பாராளமன்ற கோவிலின் வாசலில் 22 பேரும் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை பட்டினிச்சாவு போராட்டத்தை நடத்துங்கள்!

4)ஈழவிடுதலைப் போராளிகளின் தியாகவேள்வியில் பாராளுமன்ற சிம்மாசனம் பெற்றவர்களே,விஸ்தரிப்புவாத இந்திய இலங்கை ஒப்பந்தத்தை, ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கக் கோரி தீக்குளியுங்கள்!

4)ஈழவிடுதலைப் புரட்சியின் தற்காலிக பின்னடைவைப் பயன்படுத்தி துரோகம் இழைக்காதீர்!தமிழீழ விடுதலைப் புரட்சியைக் காட்டிக் கொடுக்காதீர்! கட்சி மாறாதீர்!

5) சுதந்திரப் போரை வைத்து சூதாடி சுருட்டிக்கொண்ட அனைத்துச் சொத்துக்களையும் வன்னி மக்களின் நிவாரணத்துக்கு ''வாரி வழங்குங்கள்''!

6) தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண

அ)தமிழின அழிப்புத் தேசிய படுகொலைத் திட்டத்தைக் கை விடச் சொல்!

ஆ) இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழ்பேசும் வடக்கு கிழக்கு மக்களிடையே பொது ஜன வாக்கெடுப்பை நடத்தக் கோரு! 1977 தமிழர் தீர்ப்பை மீறாதே!

இ) ஆயுதம் ஏந்துவது ஒடுக்கப்படும் ஈழதேசத்தின் அரசியல் உரிமை என்று உனது எஜமானர்களுக்கு எடுத்துச் சொல்!
ஈ) சமஸ்டி வேடம் ஆடாதே, பிரிவினைக்கோரிக்கையை உயர்த்திப் பிடி!
7) அந்நிய ஏகாதிபத்திய எதிரிகள் மீதும், இந்திய விஸ்தரிப்புவாத அரசு மீதும் உனது வர்க்கத் தன்னலங்காரணமாக தமிழ் மக்களுக்கு ஆசை காட்டாதே!
8) மேற்கண்ட ஜனநாயகக் கோரிக்கைகளை கையில் ஏந்தி மக்கள் பிரதி நிதிகள் என்பதை நிரூபி!
9) ஓடு காலிகள் ஒழிக! போலிப் பாராளமன்ற மாயை அகல்க! போராடும் புலிகள் வாழ்க! புரட்சிகர ஈழப் போர் தொடர்க!
தமிழ் பேசும் மக்களின் தேவை தனி ஈழ மக்கள் ஜனநாயக குடியரசு!
10) ஓடுகாலித் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே செய்து முடி அல்லது செத்துமடி!

No comments: