
என முழங்கி,சர்வதேசமெங்கும் ஈழத்தமிழர்கள் நடத்தும் பக்சபாசிஸ்டுக்களின் இனப்படுகொலையை எதிர்த்த நீதியான மக்கள் எழுச்சி வாழ்க!
மூர்க்கம் கொண்டு தொடர்க!
பட்டி தொட்டி எங்கும் புலிக் கொடி பட்டொளி வீசிப் பறக்க!
அன்பார்ந்த தமிழ் மக்களே, தமிழர்கள் அகதியாய் வாழும் நாடுகளின் உழைக்கும் மக்களே, ஜனநாயக தேசிய ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட சான்றோரே அலை அலையாத் திரண்டு ஈழத்தமிழர் பிரிவினைப் போரின் நீதியை நிலை நாட்டுங்கள்!
இனவெறிப் பாசிச இலங்கை அரசே நாசகார ஈழ தேசியப் படுகொலை யுத்தத்தை நிறுத்து!
இந்திய விஸ்தரிப்புவாத அரசே சர்வதேச சட்ட முறைமைகளை மீறிய விச வாயு ஆயுதங்களை ஈழ தேசம் மீது வீசாதே!
இந்திய விஸ்தரிப்புவாத அரசே, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயே, விச வாயு வீசி ஈழப்புரட்சியைக் கொல்லலாம் என கனவு காணாதே!கடைசித் தமிழனும் உனது காலடியில் கண்ணி வெடியாய் இருப்பான் என்பதை மறவாதே!
ஒபாமா அரசே ஈழதேசப் படுகொலைக்கு IMF மூலம் நிதி உதவி வழங்காதே!இங்கிலாந்தின் பிறவுன் அரசாங்கமே,
இன்று ஈழத்தமிழரின் அவலத்துக்கு மூல காரணம் அன்று உன் நாடு- சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்-ஏற்படுத்திய கட்டாய இணைப்புத்தான்.
ஜனநாயகத் தேவதையே ஈழத்தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
விடுதலைப் புலிகள் நமது தேசிய விடுதலைப் போராளிகள் அவர்கள் மீதான தடையை நீக்கு.
லண்டனில் போராடும் ஈழத்தமிழர் மீது உனது பொலிஸ் குண்டர்கள் கட்டவிழ்க்கும் அராஜகத்தை உடனே நிறுத்து!
ஈராக்கின் தேசியத் தலைவர் சதாமின் சிலை மீது அமெரிக்கக் கொடி போர்த்திய ஈராக் யுத்தத்திற்கு தோளோடு தோள் நின்ற பிரித்தானிய அரசே ஈழத்தமிழர்களிடமிருந்து புலிக்கொடியைப் பறிக்காதே!
=================
1) இலங்கை ஒரு நாடு இரு தேசம்!
2) தாயக பூமியில் வாழ்வது ஈழத்தமிழரின் தேசிய உரிமை!
3) ''மக்கள் பலத்தில் ஆனையிறவை வீழ்த்தி,முன்னேற்றத்துக்கு இந்திய விஸ்தரிப்புவாத அரசு போட்ட முட்டுக்கட்டையை ஏற்று அடிபணிந்து, தடம் தவறி, Re Gaining Sri Lanka என்கிற அந்நிய ஆக்கிரமிப்புப் பொருளாதாரத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கி,வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் திம்புக் கோரிக்கைகளையும் புறம் தள்ளி ஒஸ்லோவில் அகசுயநிர்ணய உரிமை
என்ற அலங்கார வார்த்தையில்- அடிமைத்தனமான அதிகாரப் பரவலாக்கத்தின் மூலம் அரசு சுகம் காண-கைச்சாத்திட்டு-,ரணில் அரசுடன் பேரம் பேசி, அந்நிய ஏகாதிபத்திய சக்திகளை ஆரத்தழுவி,கை குலுக்கி,புன் நகைத்து அணைத்து முத்தமிட்டு,அரியாசனத்துக்கு அங்கீகாரம் கேட்டழுது, குறைந்தபட்சம் ISGA-(Internal Self Governing Authority) என்கிற அதிகாரப்பரவலாகத் திட்டத்தை
ஏற்கவைக்க-காய்நகர்த்தி போராடி,வெற்றி பெற நம்பின தெய்வங்கள் எல்லாம் ஒரு சேர மறுத்ததால்,வெறுத்ததால்,வெட்டி ஒதுக்கியதால் வெறுப்படைந்து, ஆர்வம் இழந்து, பின்னால் அழுது,தொழுது,அவலக்குரல் எழுப்பி சர்வதேச சமூகம், கொசொவோத் தமிழீழம், ''கை கொடுக்கும் தெய்வங்கள்'', ''காக்கும் கரங்கள்'' என்றெல்லாம் மக்களுக்கு போலி் நம்பிக்கையூட்டி'' ,வெட்கம் மானம் மட்டு மரியாதை எதுவுமின்றி இந்தியாவை நட்பு நாடு என்று பேசி, புதை குழியில் இருந்து திலீபனை இழுத்து வந்து மீன்றும் ஈனத்தனமாகக் கொன்று'' காய் நகர்த்தல் என்ற பேரால் ஆறு ஆண்டுகள் நடத்திய அரசியல் சந்தர்ப்பவாத பாதை பொறியாய் அமைந்து இன்று ஈழதேசம் எதிரியிடம் வீழ்ந்துவிட்டது!
4)எனினும் இந்த வலை விரிப்புக்காலத்தின் பெரும் பேரமான ஜப்பான் கூட்டத்தின் 4 பில்லியன் டொலருக்கு விலை போகாமல் மீண்டு வந்தது நமது தேசிய இயக்கம்.
5)நப்பாசை தோற்றுப்போனது! ஆனாலும் நம்பிக்கைத் துரோகம் நடந்தேறவில்லை!
6)இந்த ஊசலாட்டத்தின் விளைவாக,இன்று ஈழப்போர் தனது இலை உதிர்காலத்தில் உள்ளது, உதிர்வது இலைகள் தான் மரங்கள் அல்ல, மற்றும் அவற்றின் மண்ணடி வேரும் அல்ல!
7)கானக வன்னி காலம் காலமாய் எங்கள் வாழ் நிலம், ஏன் நாங்கள் ஓட வேண்டும் காட்டுமிராண்டி அந்நியனிடம்?
8)''யுத்தப் பிரதேசத்தில் இருந்து அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற இரு தரப்பும் உத்தரவாதம் செய்யவேண்டும்,மனித நேய யுத்தநிறுத்தம் ஏற்பட வேண்டும்,''என்பதெல்லாம் ஏகாதிபத்திய பம்மாத்தே! மறை முகமாக பக்ச பாசிஸ்டுக்களின் ஈழதேசம் மீதான அந்நிய ஆக்கிரமிப்புக்கு சேவகம் செய்வதே!''ஈழதேசம் நிராயுதபாணி ஆகவேண்டும்'' எனக் கோருகிற எவரும் எமது எதிரிகளே!
9) ஈழதேசியப் படுகொலை யுத்தத்தின் சூத்திரதாரி இந்திய விஸ்தரிப்புவாத அரசே! நடேசனுக்கு அது நட்பு அரசாக இருக்கலாம் ஆனால் தமிழருக்கு அது எதிரி அரசே!
10) அகசுயநிர்ணய உரிமை,சர்வதேச சமூகம், ஐ,நா.சபை, மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் என சித்தரிக்கப்படும் ஏகாதிபத்திய NGO க்கள், அணிசார்ந்த விதேசிய அந்நிய சார்புப்பாதையைக் கைவிடுவோம்!
11) பயிரும் களையும் அக்கம் பக்கமாக சமாதான சக வாழ்வு நடத்த முடியாது.அவ்வாறே தமிழீழத் தேசியமும் இந்தியவிஸ்தரிப்பு வாதத்தோடும், ஏகாதிபத்தியத்தோடும் நட்புறவு கொள்ளமுடியாது.அவை பகைமையான முரண்பாடுகள்.அவற்றை இனிமையாக கையாள முடியாது.
12) பிரிவினைக் கோரிக்கை, ஆயுதப் போர், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், திலீபன்மருத்துவமனை,தமிழீழ தொலைக் காட்சி,புதினம் செய்தி நிறுவனம்,வணங்கா மண், என வரிசை வரிசையாக சொந்தக்காலில் ஊன்றி நிற்போம்!
13)லண்டன் எழுச்சி உலகமெல்லாம் பரவ வகை செய்வோம்!
14) இந்த எழுச்சி பரவுவதை இடை நிறுத்தும் எல்லா சமரசங்களையும் எதிர்ப்போம்!
15) மக்களின் போர்க்குணத்தை மழுங்கடிக்கும், இந்திய விஸ்தரிப்புவாத சார்பு நடேசன் பேட்டிகளை அம்பலப்படுத்துவோம்!
16) மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவோம்!மக்களின் முன்முயற்சியை அவிழ்த்து விடுவோம்!மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!
No comments:
Post a Comment