Thursday 30 April, 2009

பிரபாகரனைக் காப்பாற்றுவது சர்வதேசத்தின் நோக்கமல்ல

பிரபாகரனைக் காப்பாற்றுவது சர்வதேசத்தின் நோக்கமல்ல
மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறுகிறார் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்
(எம். எஸ். பாஹிம்) -Thinakaran LK -30-04-2009
பிரபாகரனை காப்பாற்றுவது சர்வதேச சமூகத்தின் நோக்கமில்லை. அங்கு சிக்கியுள்ள பொதுமக்கள் மீது அக்கறை கொண்டே செயற்படுவதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடனான சந்திப்பைத் தொடர்ந்து கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:
25 வருடமாக தொடரும் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் காலம் உருவாகியுள்ளது. யுத்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள போதும் சமாதானத்தின் மூலமே உண்மையான வெற்றி ஏற்படும்.
தடுத்து வைத்துள்ள பொதுமக்களை புலிகள் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
பாதுகாப்பு வலயத்திற்குள் சென்று பணியாற்ற ஐ.நா., ஐ.சி.ஆர்.சி. மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ப்படவேண்டும். அரசாங்கம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்திருப்பதை நாம் வரவேற்கிறோம். மனிதாபிமான செயற்பாடு களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம் நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை மீள்குடியேற்ற அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரித்தானியாவிலுள்ள தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரிட்டனில் வாழும் இலங்கை வாழ்தமிழ் மக்கள் தமது மக்களுக்காக இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசாங்கம் துரிதமாக மனிதாபிமான உதவிகளை வழங்குவதோடு அம்மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்று சம உரிமையுடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை சுதந்திரமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார்.
பிரான்ஸ் அமைச்சர்
இங்கு உரையாற்றிய பிரான்ஸ் தூதுவர் பேர்னாட் குச்னர் கூறியதாவது:
மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்கள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். 25 வருட காலமாக தொடரும் யுத்தத்திற்கு முடிவு கட்டப்படவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையான பொதுமக்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த மக்களுக்கு உதவி வழங்குவதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
மோதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ சகல நாடுகளும் முன்வரவேண்டும். பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களை பாதுகாக்கவும் மீட்கவும் ஆவன செய்யப்பட வேண்டும் என்றார்.

No comments: