Thursday, 14 May 2009

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கை விட்டாக வேண்டும் - ஹுசைன் ஒபாமா

============================
LTTE must "lay down their arms and let civilians go," and stop using civilians as human shields, as well as recruiting civilians as fighters. U.S. President Barack Obama ================================
ஒபாமா உரையைக் கேட்க உருவப் படத்தில் இரட்டை அழுத்தம் செய்க.
Obaama presses Sri Lankan gov't to alleviate humanitarian crisis
2009-05-14 05:53:05
WASHINGTON, May 13 (Xinhua) -- U.S. President Barack Obama urged Sri Lankan government on Wednesday to alleviate humanitarian crisis in the country by taking urgent action, warning that the crisis could turn into a catastrophe otherwise.
"I've been increasingly saddened by the desperate news in recent days," the president told reporters in the White House, referring to the conflict between Sri Lankan government forces and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels.
Reports here said hundreds of civilians have been killed during the weekend fighting, and the fighting has intensified in the conflict area that the International Committee of the Red Cross (ICRC) can not get into for carrying out assistance.
Warning the humanitarian crisis could turn into a catastrophe, President Obama said the LTTE must "lay down their arms and let civilians go," and stop using civilians as human shields, as well as recruiting civilians as fighters.
But the president, like his administration officials have reiterated recently on the Sri Lankan situation, exerted more pressure on the Sri Lankan government, asking Colombo to take urgent steps to alleviate the humanitarian crisis.
"First, the government should stop the indiscriminate shelling that has taken hundreds of innocent lives, including several hospitals. The government should live up to its commitment to not use heavy weapons in the conflict zone," said Obama.
"Second, the government should give United Nations' humanitarian teams access to the civilians who are trapped between the warring parties so that they can receive the immediate assistance necessary to save lives," he said.
"The government should also allow the United Nations and the International Committee of the Red Cross access to nearly 190,000 displaced people within Sri Lanka so that they can receive additional support that they need," he added.
The LTTE, who has waged a violent campaign for decades for an independent country in the north and east of Sri Lanka, has been declared a terrorist organization by the United States, the European Union and some 30 other countries.
The violent conflict between the Sri Lankan government forces and the LTTE militants has claimed some 70,000 lives since 1983.
Editor: Mu Xuequan
=====================
தமிழர்களுக்கு குரல் தந்த ஒபாமாவுக்கு நன்றி:
விடுதலைப்புலிகள்
திகதி: 14.05. 2009
தமிழீழம் இலங்கை அரசை எச்சரிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பேச்சை வரவேற்கின்றனர், நன்றி கூறுகின்றனர். ஈழத்தில் தமிழர்கள் படும் துயரம் குறித்து அவர் பரிவுடன் பேசியதற்காகவும், மனிதாபிமான நெருக்கடியை நிறுத்த அவர் விடுத்துள்ள கோரிக்கைக்காகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அதேபோல, ஐ.நா. பாதுகாப்பு சபையும், ஐ.நா. அவையும், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான முறையில் விவாதித்ததையும், ஈழத் தமிழர்களைக் காக்க விடுத்த வேண்டுகோளையும் நாங்கள் வரவேற்கிறோம். மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அதிபர் ஒபாமாவின் தலையீட்டை ஈழத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.
அதிபர் ஒபாமா கூறியதுபோல, பாதுகாப்புடன் கூடிய, நீடித்த அமைதிக்கு சிறீலங்கா அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்பதை நாங்களும் ஆதரிக்கிறோம். மேலும், அமைதியை நோக்கிய நிரந்தர போர் நிறுத்தத்திற்கும் நாங்கள் ஆதரவு தருகிறோம். நாங்கள் வைத்துள்ள ஆயுதங்கள், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அமைதியான இறுதித் தீர்வை பாதுகாப்பதற்காகத்தான்.
இன்று சிறீலங்கா அரசு, ஈழத்தில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களையும் ஒட்டுமொத்தமாக தண்டித்துக் கொண்டிருக்கிறது. தங்களது சுய நிர்ணயத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழர்களை அது தண்டித்துக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களை அவர்களது சொந்த நிலத்திலிருந்து சிறீலங்கா அரசு அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறது. எந்தவித மரியாதையும், கௌரவமும் இல்லாத முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது.
தமிழர்களின் நிலங்களுக்குள் ஊடுறுவிக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் இருக்கும் தமிழர்களையும், அரசுப் பகுதிகளுக்கு வந்த தமிழர்களையும் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அழித்து வருகிறது. இடம் பெயர்ந்து வரும் அப்பாவி மக்களை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்களைக் காணவில்லை. இவற்றை எந்தவித சாட்சியமும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது சிறீலங்கா அரசு.
அதிபர் ஒபாமா கூறுவதைப் போல, தமிழர்களை பேரழிவிலிருந்து காக்க, மனிதாபிமான நெருக்கடியிலிருந்து மீட்க அவசர நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. சர்வதேச சமுதாயத்தின் கண்களை மூடி விட்டு, சிறீலங்கா அரசு தனது தாக்குதல்களை தங்கு தடையின்றி தொடர்ந்து கொண்டிருக்கிரது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி உலக சமுதாயத்தை அது ஏமாற்றி வருகிறது. மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைக் கூட அது ஏற்கவில்லை. அனுமதிக்கவில்லை.
இந்த சமயத்தில், மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிறீலங்கா அரசுக்கு அதிபர் ஒபாமா கோரிக்கை விடுத்திருப்பதற்கு நாங்கள் நன்றி கூறிக் கொள்கிறோம். தற்போது போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுயேச்சையான மனிதாபிமான உதவிப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். அவர்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுக்காக பேசிய அதிபர் ஒபாமாவுக்கு நாங்கள் மீண்டும் நன்றிகளைக் கூறிக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் நடேசன்.
==============
சிறிலங்கா விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து மிக நெருக்கமாக அமெரிக்கா செயற்படும் - ரிச்சட்
௧௪௦௫௦௯
தமிழீழம் சிறி லங்காவின் தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக அமெரிக்கா பெரிதும் கவலை கொண்டுள்ளதுடன், இந்த சூழ்நிலையில் சிறிலங்கா விடயத்தில், அமெரிக்கா இந்தியாவுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்படவுள்ளதாகவும் அமெரிக்க உப இராஜாங்க செயலர் ரிச்சட் பௌச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் ஆசிய ஊடகவியலாளர் குழுவொன்றை சந்தித்து கருத்து வெளியிடுகையிலேயே ரிச்சட் பௌச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலர் திருமதி கிலாரி கிளின்டன் அம்மையார் அவர்கள் சிறி லங்காவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தீவிர ஈடுபாடு கொண்டவராக உள்ளதாக தெரிவித்த பௌச்சர், சிறி லங்காவின் தற்போதைய சூழ்நிலையில் புது டில்லியுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட உத்தேசித்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிறி லங்காவுக்கு அருகில் இருக்கும் முக்கியமான பெரிய நாடு என்ற ரீதியில் ஒவ்வொரு இணைத்தலைமை கூட்டங்கள் சம்பந்தமாக இந்தியாவுடன் இணைத்தலைமை நாடுகள் கலந்துரையாடியும், கூட்டம் பற்றி அறிவித்தும் வருவதாகவும், அதேபோல தற்போதைய சிறி லங்காவின் விவகாரத்திலும் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட அமெரிக்கா எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: