இந்தியாவின் இராணுவ உதவிகளே புலிகளை அழிக்கப் பெரிதும் உதவின!
[11 மே 2009, திங்கட்கிழமை 10:30 பி.ப இலங்கை-உதயன்]
"இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கி வரும் பெருமளவு இராணுவ ஒத்துழைப்பு களேவிடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தன. மிகவும் வலுவான நிலையில் இருந்த புலிகளை அழித்து ஒடுக்குவதற்கு அமெரிக்கா உட் பட பல்வேறு நாடுகளும் நல்ல ஆதரவை வழங்கி வருகின்றன."" இவ்வாறு வெளிப்படையாகத் தெரி வித்திருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. இந்தியாவின் "ரைம்ஸ் நவ்" தொலைக்காட்சிச் சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுக ளும் நான் பிரதமராக விருந்த காலத்திலி ருந்து உதவிகளை வழங்கி வருகின்றன. அதற்கு முன்னர் இவ்வாறான உதவிகள் இலங்கை அரசுக்குக் கிடைக்கவில்லை. எனினும் சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்க முன்வந்தன. புலிகளின் வலயமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டன உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகளின் கப்பல்களை நடுக்கடலில் அழிப்பது இந்தியாவினதும் அமெரிக்கா மற்றும் ஏனைய சில நாடுகளினதும் உதவியின்றி சாத்தியமாகியிராது. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் வலையமைப்புகள் பலவீனப்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் பயிற்சி, புலனா ய்வு ஒத்துழைப்பு போன்ற விடயங்களிலும் இந்தியாவும்வேறு பல நாடுகளும் இலங்கை அரசுக்கு ஒத்துழைத்தன. நாங்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம். உதவிகளைப் பெற்றோம். பயிற்சிகளும் கிடைத்தன. புலனா ய்வு விடயங்களில் ஒத்துழைப்புக் காணப்பட்டது. அத்துடன் இலங்கையின் வான்வெளி பாதுகாப்பிற்கான ராடர்களையும் இந்தியா வழங்கியது என்றார். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியப் பொதுத்தேர்தலில் இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்ற நிலையில் இலங்கை அரசுக்கு இந்தியா இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என்று ஆளும் காங்கிரஸ்கட்சி அடியோடு மறுத்துவரும் ‹ழலில் அந்த நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரணில் இத்தகைய கருத்தைப் பகிரங்கப்படுத்தியிருக்கின்றமை, பாரத அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து வெளி யிட்டுள்ளனர்.
இலங்கையின் வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு இந்தியாவே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் ‐ விக்ரமபாகு கருணாரட்ன: திகதி: 14.05.2009 // தமிழீழம் இலங்கையின் வடக்கில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளுக்கு இந்தியாவே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன குற்றம்சுமத்தியுள்ளார். விடுதலைப்புலிகளுடான யுத்தத்திற்காக இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு சகல விதமான உதவிகளையும் செய்தது. ஆயுதங்கள், பயிற்சிகள், இராணுவத் தளபாடங்களை வழங்கிய இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு இயன்றவு ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
அதனால் தற்போது தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கான பொறுப்பை இந்தியாவின் மன்மோகன் சிங்கின் அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஐக்கிய இடதுசாரிகளின் கூட்டமைப்பு கொழும்பில் இன்று நடத்திய ஊடக மாநாட்டில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையானது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக, தமிழர்களின் ஈழ நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்துள்ளது. யுத்தம் நிறுத்தப்படவில்லை எனில் மேற்குலக சக்திகளின் இராணுவங்கள் இலங்கைக்கு செல்லும் ஆபத்து உள்ளது எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிய நிலப்பரப்பிற்குள் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவதில்லை. அரசாங்கம் வழங்கும் புள்ளிவிபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பெருமளவிலான, படையினரும், விடுதலைப்புலிகளும், பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். அத்துடன் இடம்பெயர்ந்தவர்களின் பதிவுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த தினங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 2 ஆயிரத்து 600 பேர் வரை கொல்லப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவற்றுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை சரணடையுமாறு கூறும் அரசாங்கம், சரணடைந்த பின்னர் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை தெரிவிப்பதில்லை. தேசிய பிரச்சினைக்காக ஆயுதங்களை கையில் எடுத்தவர்கள் என அவர்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?. தற்போது அரசாங்கம் கூறுவது போல் தம்மிடம் சரணடைந்ததாக கூறிய 3 ஆயிரம் விடுதலைப்புலிகள் எங்கு இருக்கின்றனர்?. தெற்கில் சில குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை காவற்துறையினர் சுட்டுக்கொல்கின்றனர்.
விஜேவீர மற்றும் கமநாயக்க போன்ற போராளிகள் இராணுவத்தினரால் உயிருடன் பொரிக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் குறித்து கேட்க ஏதவாது இருக்கிறதா?. இதனால் விடுதலைப்புலிகள் சரணடைவார்கள் என நினைக்கின்றீர்களா?. மக்களை விடுவிக்குமாறு விடுதலைப்புலிகளிடம் கோருகின்றனர். அவர்கள் மக்களை விடுவித்தால், அவர் வெறுமனே இராணுவத்திடம் சிக்குவர். இது மரணத்தை வா என அழைப்பதாகும்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை நாம் பின்பற்றுவதில்லை. 2 லட்சம் மக்களை முகாம்களில் இறுக்கி தடுத்து வைத்துள்ளனர். இவர்கள் இந்த முகாம்களில் இருப்பதற்கும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இல்லை. இந்த முகாம்களை பார்வையிட எவருக்கும் அனுமதி வழங்குவதில்லை.
யுத்தமே இந்த நிலைமைக்கான காரணமாக அமைந்துள்ளது. இந்த யுத்தத்தை நிறுத்தி உடனடியாக பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு செல்ல வேண்டும் என தாம் அழுத்தம் கொடுப்பதாகவும் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய சோசலிக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, அரசாங்கம் கொடுக்கும் புள்ளிவிபரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, அரசாங்கம் கூறுவது பச்சைப் பொய் என குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளுடன் 70 ஆயிரம் பேரே இருப்பதாக கூறினர் ஆனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசாங்க பகுதிக்கு வந்தனர். இந்த நிலையில் பாதுகாப்பு வலய பகுதியில் 70 ஆயிரம் பேருக்கு மாத்திரமே உணவு அனுப்பபட்டு வந்தது. அதேவேளை தற்போதைய மோதல்களில் கொல்லப்படும் படையினர், காயமடையும் படையினர் குறித்த தகவல்களை தெற்கில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியாதுள்ளது. படையினரின் இழப்புகள் குறித்த விபரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன.
முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அங்கு அறிவிக்கப்படுவதில்லை. சரணடையும் விடுதலைப்புலிகளுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தாம் மேற்கொண்ட போராட்டத்திற்கு நியாயமான தீர்வு கிடைக்காமல், அவர்களை சரணடையக் கூறினால், சரணடைவார்களா? எனவும் சிறிதுங்க ஜயசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் தெற்கில் தேர்தல்களில் வெற்றிப் பெற்றாலும் பெரும்பாலான மக்கள் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என தாம் கூறுவதாகவும் தேர்தலில் உண்மையான மக்களின் கருத்து பிரதிபலிக்கப்பட்டதாக என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment