16-05-2009 சனிக்கிழமை 10.30 ஜி..எம்.ரி
வன்னிக் கடலோரம் எதிரியின் பிடியில் யுத்தத்தில் திருப்புமுனை:
Sri Lanka army 'controls coast'
The army in Sri Lanka has said it has captured the last section of coastline held by Tamil Tiger rebels in the north-east of the country.
The rebels are cornered by troops in a tiny enclave in a final confrontation that has trapped many civilians.
The rebels have no more sea access and the army was "progressing" so that the rest of the rebel-held area would be cleared, Brig Udaya Nanayakkara
said.
More than 70,000 people have died in the 26-year war for a Tamil homeland.
Fighting on the shoreline itself was not very heavy compared with elsewhere, the brigadier told the BBC.
The BBC's Charles Haviland in Colombo says there is speculation that the rebels would launch suicide attacks against the army.
Trapped civilians
The Sri Lankan military said 10,000 civilians escaped the war zone on Friday, but our correspondent says there is huge concern for the fate of the many
thousands still trapped.
The UN Security Council has expressed "grave concern" at the "worsening humanitarian crisis" in the region.
Over the last week, US President Barack Obama has urged the army to stop shelling of civilian areas and called on the rebels to lay down their arms.
But the government in Colombo has consistently rejected calling a halt to the offensive saying it would give the rebels time to recover.
Meanwhile the UN Secretary General Ban Ki-moon's chief of staff, Vijay Nambiar, is due to arrive in Colombo later for a second attempt to press for a
negotiated end to the war.
More than 200,000 civilians who escaped the war zone over the last few months are living in government-controlled camps.
Aid charities say a growing number of traumatised, malnourished children were becoming separated from their families as they fled the war zone and
entered the camps.
The founder of the Liberation Tigers of Tamil Eelam organisation, Vellupillai Prabhakaran began the fight for a separate state for Sri Lanka's minority
Tamils in the early 1970s, progressing into a violent civil war in 1983.
The Sri Lanka military intelligence believe Prabhakaran and other senior leaders are in the remaining rebel-held territory, Reuters news agency reported Brig
Nanayakkara said.
But analysts say Tamil complaints of discrimination by Sinhalese majority which date back to 1948 when Sri Lanka gained independence from Britain will not
be resolved by arms alone.
'மக்கள் பாதுகாப்பு வலயம்' கொலைக்களமாக எரிந்து கொண்டிருக்கிறது: அனைத்துலக தொடர்பக பேச்சாளர் திலீபன் [வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 06:08 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அப்பகுதியில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அப்பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பேச்சாளர் திலீபன் தெரிவித்துள்ளார். வன்னியில் உள்ள தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் இது தங்களது கடைசி வேண்டுகோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் இன்று வெள்ளிக்கிழமை மிகச்செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல்களையும் வெள்ளைப் பொஸ்பரஸ் அடங்கிய இரசாயன ஆயுதங்களையும் கொண்டு தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கிறது. இதனால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி தொடர்ந்தும் எரிந்து கொண்டிருக்கிறது.
உயிரிழந்த மக்களின் உடலங்கள் வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன. படுகாயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான எந்தவித வசதியும் இங்கு இல்லை. மருத்துவமனைகள் அற்ற நிலையிலும் மருத்துவ வசதிகள் அற்ற நிலையிலும் படுகாயமடைந்த மக்கள் வீதிகளில் கிடந்தவாறு கெஞ்சி அழுதவண்ணம் உள்ளனர். ஆனால் எந்த வசதியும் அற்ற நிலையில் அவர்களுக்கு எதுவுமே செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இங்குள்ள ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேரை காப்பாற்ற வேண்டுமாயின் அனைத்துலக சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இதனை எமது கடைசி வேண்டுகோளாகக் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.
உணவு விநியோகத்தையும் சிகிச்சை வசதிகளையும் இடைநிறுத்துவதாக ஐ.சி.ஆர்.சி. அறிவிப்பு: மனிதப் பேரவலத்திற்குள் வன்னி மக்கள் [வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 05:03 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் வன்னியில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தையும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றும்
மனிதாபிமான நடவடிக்கையையும் இடைநிறுத்திறுத்தியிருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த முடிவையடுத்து வன்னியில் சிக்குண்டுள்ள மக்கள் மேலும் பாரிய மனிதப் பேரவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
வன்னியில் உள்ள மக்களுக்கு உரிய உணவுப் பொருட்களுடன் கடந்த புதன்கிழமை சென்ற அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல் அங்கு படையினரின் தாக்குதல்கள் கடுமையானதாக இருந்ததால் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொருட்களை இறக்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கப்பல் அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்றது.
இந்த இரண்டு நாட்களும் மூன்று தடவைகள் பொருட்களை தரையிறக்குவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் முயற்சித்தபோதும் சிறிலங்கா படையினரின் இடைவிடாத
தாக்குதல்களால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இது குறித்து படைத்தலைமையுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தொடர்புகொண்டபோதும் பொருட்களை இறக்குவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க படையினர் தவறியதையடுத்து, மேற்படி கப்பல் மீண்டும் நேற்று வியாழக்கிழமை இரவு திருகோணமலைக்கு பொருட்களை இறக்காமலேயே திரும்பியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்தே வன்னியில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தையும், படுகாயமடைந்த மக்களை சிகிச்சைகளுக்காக வெளியேற்றும் நடவடிக்கையையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிமாக இடைநிறுத்தும் முடிவை எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் போர்ப் பிரதேசத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக வெளியேற்றப்பட வேண்டிய நூற்றுக்கணக்கானோர் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
எனினும் அவர்களை வெளியேற்றுவதற்கு அங்கு இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தடையாக இருக்கின்றன.
மோதல் இடம்பெற்று வரும் பகுதிகளில் கரையோரமாகவுள்ள சிறிய பகுதிக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் பதுங்குகுழிகளுக்குள் சிக்குண்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த முடிவையடுத்து மக்கள் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள மக்கள் பசிக் கொடுமையாலும் சிகிச்சைகள் இன்றியும் உயிர்மடியும் மனிதப் பேரவலம் நிகழவிருப்பதாக அஞ்சப்படுகிறது.
மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு உரிய உணவுப் பொருட்களை இறுதியாக கடந்த 9 ஆம் நாள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் மூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரை, கடல், வான் வழியாக சிங்களப் படை பெரும் தாக்குதல்: நான்கு பக்கமும் கடும் சமர்; தெரு எங்கும் நூற்றுக்கணக்கில் தமிழர் உடலங்கள்; தூக்க ஆளற்று காயமடைந்தோர் கதறல் [வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 08:24 பி.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
வநனி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா
தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான
சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுகின்ற சூழலில் - அந்தச் சண்டைகளில் சிறிய ரக தாக்குதல் துப்பாக்கிகள் தவிர பெரும் கனரக ஆயுதங்களைப் பாவிக்கக முடியாத நிலை இருந்தும்
- நெடுந்தூர மற்றும் குறுந்தூர கனரக பீரங்கள், பல்குழல் வெடிகணை ஏவிகள் கொண்டு தரைப்படையினரும், மிகை ஒலி வேக போர் வானூர்திகள் மற்றும் தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு வான் படையினரும், அதிவேக தாக்குதல் படகுகளின் கனரக பீரங்கிகள் கொண்டு கடற்படையினரும் - சாதாரண தமிழ் பொதுமக்களை இலக்கு வைத்து ஈவு இரக்கமற்ற கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 'இறுதி தாக்குதல்' இதேவேளையில் கொழும்பு படைத் தலைமையக உயர் வட்டாரங்களில் இருந்து மிக நம்பகமான ஒரு வழியில் தற்போது கசிந்த தகவலின் படி - தற்போதைய இந்த தாக்குதல் ஒர் 'இறுதித் தாக்குதல்' என்ற வகையில், அரச மற்றும் படை உயர் பீடங்களினால் சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டதாகவும் - அத்தகைய ஒர் 'இறுதித் தாக்குதல்' மேற்கொள்ளப்படும்போது 30 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என கணிக்கப்பட்டதாகவும் - அந்த அளவுக்குப் பெரும் தொகையில் மக்கள் கொல்லப்படும் நிலை இருந்தாலும், இந்த திட்டத்தை முன்னெடுத்து இந்த 'இறுதித் தாக்குதலை' மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாவும் தெரிய வருகின்றது. இந்தப் பின்னணியிலேயே - சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் - அடுத்து வரும் 48 மணிநேரத்தில் 'மக்கள் பாதுகாப்பு
வலய'த்திற்குள் படையினர் நுழைவர் என்று கடந்த சில நாட்களுக்குள் அறிவித்திருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது 'பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழையும் தாக்குதலை அடுத்து வரும் 48 மணிநேரத்தில் படையினர் மேற்கொள்வர் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து - ஜோர்தானில், நேற்று நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அடுத்த "48 மணி நேரத்தில் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இத்தகைய பின்னணியிலேயே - 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீதான மூர்க்கத்தனமான இன்றைய தாக்குதலை தமது மூன்று சிறப்புப் படையணிகளான - 53, 58, 59 ஆகிய படையணிகள் இணைந்து தொடங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. வரலாற்றின் உச்ச மனிதப் பேரவலம் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் அனுப்பிய ஆகப்பிந்திய தகவலின் படி - கரையமுள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மிகக் கடுமையான நேரடிச் சண்டை நடைபெறுகின்றது. இவற்றுக்கு அப்பால் - ஏனைய பகுதிகளில் இருக்கும் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான தாக்குதலை சிங்களப் படைகள் நடத்துகின்றன. இந்த தாக்குதல்களில் - கனரக ஆயுதங்களை மட்டுமன்றி - வீழ்ந்து வெடிக்கும் இடங்களைப் பற்றி எரிய வைக்கும் ஒருவிதமான இரசாயனக் குண்டுகளையும் சிறிலங்கா படையினர்
பொதுமக்களை நோக்கி பெருமளவில் வீசுகின்றனர். 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எங்கும் நெருப்புப் பற்றி எரிவதுடன் - வான் பரப்பு புகை மண்டலமாகி இருக்கின்றது. இந்த கரும்புகை மண்டலத்திற்கு மேலே பறக்கும் சிங்களப் போர் வானூர்திகள் - கீழே எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத நிலையில் - கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுகின்றன. தாக்குதலுக்கு அஞ்சி சிதறி ஓடிய மக்கள் மீது தொடர்ந்து குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் - தெருத் தெருவாக தமிழர்கள் கொல்லப்படுவதுடன், அவர்களது நூற்றுக்கணக்கான அவர்களது
உடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே குவியல் குவியலாகக் கிடக்கின்றன. பல இடங்களில் - பதுங்குகுழிகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால், பலர் அவற்றிற்குள் மூடுண்டும் கொல்லப்படுகின்றனர். பீரங்கி குண்டுச் சிதறல்களினாலும் இரசாயனத் திரவங்களாலும் - படுகாயமடைந்தும் உடல் அவயவங்களை இழந்தும் கொதிக்கும் எரிகாயங்களுடனும் ஆயிரக்கணக்கானவர்கள் தெருத் தெருவாகவும் பதுங்கு குழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அப்படி அப்படியே கிடந்து கதறுகின்றனர். இவர்களை தூக்கி எடுக்கவோ, சிகிச்சைகள் அழிக்கவோ எவரும் இல்லை. யாருக்கும் யாரும் உதவ முடியாமல் எல்லோர் மீதும் குண்டுகள் வீழும் பெரும் மனித அவலம் நிகழ்கின்றது. சில இடங்களில் படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்த மக்களுக்கு மேலாகவும் பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பு தேடி பதுங்கியிருந்த மக்களுக்கு மேலாகவும் சிங்களப் படையினர் தமது கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளை ஏற்றிச் சென்றதை தாம் நேரில் கண்டதாக தப்பி வந்த மக்கள் சிலர் கதறலோடு கூறுகின்றனர். இதேவேளையில் எற்கெனவே அண்மைக்காலமாக குடிதண்ணீர், உணவு எதுவுமே கிடைக்காத நிலையில் பசிக்கொடுமையால் வாடிய மக்கள் பலர் இப்போது பட்டினியாலும்
செத்துக்கொண்டிருக்கின்றனர். ஐ. நா.வும் நம்பியாரும் இதேவேளையில் ஐ.நா.வின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியாரையே கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் - இவை எல்லாமே ஐ. நா. போன்ற ஒரு பெரும் அனைத்துலக தலைமை நிறுவனத்திற்குள் இருக்கும் செயற்திறனற்ற தன்மையை மூடி மறைக்கும் ஒரு கண்துடைப்பு முயற்சி என சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஐ.நா.வின் தூதுவராக நியமனம் பெற்ற நம்பியார் - ஐ.நா.வுக்கு உண்மையானவராக இல்லாமல், தனது சொந்த நாடான இந்திய அரசாங்கத்தின் ஒரு முகவர் போலவே செயற்படுகின்றார் என்ற கருத்து நோக்கர்கள் மத்தியில் நிலவுகின்றது. அத்தகைய ஒருவரை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பும் பின்னணியிலேயே - இன்றைய 'இறுதித் தாக்குதல்' படையெடுப்பையும் பார்க்க வேண்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள்
கூறுகின்றனர். புலிகளும் ஆயுதங்களும் இதேவேளையில் இந்த போரை முடிவுக்கு கொண்ட வருவதற்காக விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுமாறு அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் கூறியிருந்தார். இது பற்றி கருத்து வெளியிட்ட அரசியல் நோக்கர்கள் சிலர் அவ்வாறு தவறிவிட்டார் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்ட பின்னர் தமிழர்களின் அடுத்த நிலை என்ன என்பதை அவர் விளக்கத் தவறிவிட்டார் என கருத்து வெளியிட்டனர். புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் தான் - தமிழர்களுக்கு அவர்களது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரே ஆதார சக்தியாக இப்போது இருக்கின்றன. அந்த ஆயுதங்களையும்
புலிகள் கீழே போட்டுவிட்ட பின்னர் தமது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழர்களுக்கு இருக்கும் உத்தரவாதம் என்ன?... என கேள்வி எழுப்பிய அந்த நோக்கர்கள் - புலிகளின் ஆயுதங்கள் தொடர்பான விடங்கள் தமிழர் போராட்டத்தின் இறுதித் தீர்வு பற்றிய பேச்சுக்களின் போதே எடுக்கப்பட வேண்டும். அதற்கு முன்னால் அவை பற்றிப் பேசுவது,
இத்தனை ஆண்டு காலப் போராட்டத்தையே அர்த்தமற்றதாக்கிவிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆயுதங்களைக் கீழே போடுமாறு புலிகளிடம் கேட்பதற்குப் பதிலாக - உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான தனது உச்ச நடவடிக்கையையே அவர் இப்போது செய்ய வேண்டும் எனவும் அந்த நோக்கர்கள் மேலும் தெரிவித்தனர்.
48 மணிநேர சூளுரைப்பின் பின்னணியில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது சிறிலங்கா படையினர் பாரிய தாக்குதல்கள்
[வெள்ளிக்கிழமை, 15 மே 2009, 03:56 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்]
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அடுத்து வரும் 48 மணிநேரத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் படையினர் நுழைவர் அறிவித்த பின்னணியில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது மூன்று படையணிகள் இணைந்து இன்று அதிகாலை தொடக்கம் கடுமையான தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக
சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. சிறிலங்கா படையணிகளின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களால் 'மக்கள் பாதுகாப்பு வலய'ப் பகுதி மீண்டும் பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளதோடு தாக்குதல்கள் இடம்பெற்று
வரும் பகுதி கரும்புகை மண்டலமாகக் காட்சியளிப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோது அடுத்துவரும் 48 மணிநேரத்தில் படை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ஜோர்தானில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் அடுத்த 48 மணிநேரத்தில் படையினர் 'பாதுகாப்பு வலய;ப் பகுதிக்குள் நுழைந்து விடுவர் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச என்று
தெரிவித்திருந்தார்.
இவர்கள் இருவரினதும் இந்த சூளுரைப்புகளின் பின்னணியிலேயே சிறிலங்கா படையினர் தமது மூன்று படையணிகளை ஏவி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது பாரிய தாக்குதல்களை
தொடங்கியிருக்கின்றனர்.
சிறிலங்காவின் 53, 58, 59 ஆகிய படையணிகளே இந்த தாக்குதல்களை தொடங்கியிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளன.
இந்த படையணிகள் கனரக ஆயுதங்களையும் போர் டாங்கிகளையும் பீரங்கிகளையும் இரசாயன ஆயுதங்களையும் கொண்டு மக்கள் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்தை நோக்கி அகோரமாகத் வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக கரையோரமாக தாக்குதல்களை நடத்தியவாறு நகர்ந்த 53, 58 ஆவது படையணிகள் கரைய முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலைகொண்டவாறும்- 59 ஆவது படையணி வெள்ளமுள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை அண்மித்து நிலைகொண்டவாறும்- மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலால் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' கரும்புகை மண்டலமாகக் காட்சியளிப்பதுடன் அங்கு இருந்த பெருமளவிலான மக்கள் இதில்
சிக்குண்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் அப்பகுதியிலேயே காணப்படுவதாக தெரிவித்த வன்னித் தகவல்கள், எரிகாயங்களுக்கும் உடல் அவயவங்கள் இழந்தும்
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைகள் இன்றி பெரும் மனிதப் பேரவலத்தை அங்கு எதிர்கொள்வதாகவும் தெரிவித்தன.
அத்துடன், இந்த தொடர் தாக்குதல்களால் பதுங்கு குழிகளுக்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கு நீண்ட நாட்களாக குடிதண்ணீர், உணவு எதுவுமே கிடைக்காத நிலையில் பசிக்கொடுமையாலும் உயிர் மடிந்து வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் 48 மணி நேரத்தில் 1,700 பேர் கொலை": விடுதலைப் புலிகள் [வியாழக்கிழமை, 14 மே 2009, 06:29 பி.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆட்லெறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள்
கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளை கைவிட்டு பதுங்குகுழிகளுக்குள் அடைக்கலம் புகுந்திருக்கும்
மருத்துவர்கள், மருத்துவமனைகளை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதல்களால் கடந்த 48 மணி நேரத்தில் வன்னிப் பகுதியில் 1,700 பொதுமக்கள்
கொல்லப்பட்டு, 3,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருப்பதாக உள்ளுர் உதவி நிறுவனங்களின் பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த அவலமான நிலை உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டினால் மேலும் மோசமடைந்திருக்கின்றது.
உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் அவசர உதவிப் பொருட்களுடன் வந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உணவுக் கப்பல், விடுதலைப் புலிகள் பாதுகாப்பு
உத்தரவாதத்தை வழங்கிய போதிலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்காமையால் உணவுப் பொருட்களை விநியோகிக்காமல் திரும்பிச் சென்றது. அவசர மருத்துவ
உதவி தேவையானவர்களை ஏற்றிச்செல்வதற்காக வந்த மற்றொரு கப்பலும் இதே காரணங்களுக்காக தடுக்கப்பட்டது.
இடைவிடாத தொடர்ச்சியான குண்டுத் தாக்குதல்களால் 1,400 நோயாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் நோயாளர்களைப் பராமரிப்பதற்காக யாரும் இல்லாமையினால் சொல்ல
முடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அனைத்து மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனையைக் கைவிட்டு பதுங்குகுழிகளுக்குள் சென்றுவிட்டனர்.
இந்த மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு முற்பட்ட உள்ளுர் மருத்துவர்கள், அவற்றை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் மருத்துவமனைகள் மீதான குண்டுத் தாக்குதல்கள் தவிர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே இந்தத் தீர்மானத்தை அவர்கள்
எடுத்திருக்கின்றனர்.
அனைத்துலகத் தலைவர்களால் வெளியிடப்பட்ட கண்டனங்களுக்கு மத்தியிலும் சிறிலங்கா ஆயுதப் படையினர் தொடர்ச்சியாக பொதுமக்களையும் அவர்களுடைய குடியிருப்புக்களையும்
இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.
தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதப் படுகொலையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவற்றைச் செயற்படுத்துமாறு
அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த மனிதாபிமானப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்படுவதற்கு விடுதலைப் புலிகள்
அமைப்பு தயாராகவிருக்கின்றது."
இவ்வாறு இந்த அறிக்கையில் therivikkappattullathu
முழுமையான உச்ச ஆயுதவலுவை பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்: இளந்திரையன் [ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009, 07:27 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] 'மக்கள் பாதுகாப்பு வலயம்' அமைந்துள்ள பகுதிகள் மீது முழுமையான உச்ச ஆயுத வலுவைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினர் பொதுமக்களை படுகொலை செய்வதாக தமிழீழ
விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு: உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா?
நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம்
கிடைத்துள்ளது.
தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா?
களத்தில் மிகவும் தீவிரமான சூழ்நிலைதான் காணப்படுகிறது.
களத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்பது என்பதைவிட, தருணம் கிடைக்கும்போது எல்லாம் பொதுமக்களை படுகொலை செய்வது என்ற கொலைவெறியோடு
சிங்களப் படையினர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
சுதந்திரமான நிலத்தில் சிங்களவர்களுக்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்வதை விரும்பி எமது போராட்டத்தோடு இணைந்து நிற்கின்ற மக்கள், சாவிற்கும் பட்டினிக் கொடுமைக்கும்
மத்தியில் தமிழினத்தின் தலையை நிமிரவைத்துக்கொண்டு இங்கு இருக்கின்றனர்.
இந்த மக்களை பாதுகாப்பதற்காக எமது போராளிகள் மிகவும் தீரமுடன் - முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் - தலைவரின் வழிகாட்டலில் மிகவும்
திறமையாகப் போராடி வருகின்றனர்.
மிகவும் குறுகிய பகுதிக்குள் புலிகளையும் மக்களையும் படையினர் நெருக்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?
நிலம் குறுகிவிட்டதை வைத்துக்கொண்டு நாம் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுவது பொருத்தமற்றது. நாம்
நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை.
சிங்களவர்கள் இன்னமும் வெற்றியீட்டவில்லை, தமிழர்கள் இன்னமும் தோல்வியடையவில்லை. அதனையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.
இப்போதுள்ள சூழ்நிலை நெருக்கடிமிக்கதுதான். போராளிகளைப் போன்றே மக்களும் இந்த போரை எதிர்கொண்டுள்ளனர். பசிக்கொடுமை என்ற கொடிய நிலையை முன்னிறுத்தி ராஜபக்சவும்
அவரது படைகளும் கொடிய போரை திட்டமிடப்பட்ட வகையில் நடாத்திக்கொண்டிருக்கின்றன.
எனினும் நாம் போராடுவதற்கான மன உறுதியை இழக்கவில்லை.
கனரக ஆயுதங்களை களத்தில் படையினர் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பில் கூறப்படுவது உண்மையானதா?
இத்தகைய கருத்துக்களை சிங்களத்தரப்பில் இருந்துவரும் ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது
ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர்
கூறியிருக்கிறார்.
இங்கே முழுமையான உச்ச ஆயுதவலுப் பயன்பாட்டுடன்கூடிய போரைத்தான் சிறிலங்கா அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.
களத்தில் சிறிலங்கா படையினரின் பலம் குறித்து?
மாவிலாற்றில் இருந்து இன்றுவரை நாங்கள் போரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். சிங்களப் படைகள் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தாலும் எமது தரப்பில் இன்னமும் போரிடும்
ஆற்றல் நிற்கவில்லை. சிங்களப் படைகள் முன்னேறி வந்த ஒவ்வொரு அங்குலத்திற்கும் பலத்த இழப்புகளைச் சந்தித்தன. பல டிவிசன்கள் நொந்து நூலாகி பின்களத்தில் ஓய்வில்
விடப்பட்டுள்ளன, பற்றாலியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு படையணிகளை முன்னே வைத்தே சிறிலங்கா அரசாங்கம் போரை தற்போது முன்னெடுத்து வருகிறது.
விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறதே?
வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு தாக்குதலை செய்யவேண்டுமா, இல்லையா
என்ற முடிவு தலைமையால் எடுக்கப்படுவது. எனவே அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து தற்போதைய நிலையில் அனைத்துலக ரீதியில் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து?
அவசரப்பட்ட - பக்கச்சார்பான - முடிவை அனைத்துலகம் பரப்புரை செய்வதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஒரு பாரிய
விடயம். எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். பக்கச்சார்பான கருத்துக்களை சில ஊடகங்கள்
தூக்கிப்பிடிப்பதால்தான் இத்தகையதொரு தோற்றப்பாட்டு நிலை ஏற்படுகிறது.
தரையால் மூன்று பக்கத்தால் படை நடவடிக்கைகள் இடம்பெறும்போது நான்காவது பக்கமான கடலில் கடற்புலிகளின் பலம் தற்போது எப்படியிருக்கிறது?
கடந்த வாரம் இண்டு தடவைகள் கடல்வழியாக தரையிறங்க சிறிலங்கா படை முயற்சி மேற்கொண்டது. கடற்புலிகள்தான் அந்த முயற்சியை வழிமறித்து நின்றார்கள். அந்த மோதல்களில்
கடற்படையினர் பலர் உயிரழந்துள்ளனர். குறிப்பாக சிறப்பு படையணியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு படையணியைச் சேர்ந்த இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியும் இதில்
உயிரிழந்திருக்கிறார்.
கடல்பகுதியில் சிறிலங்கா கடற்படை அத்துமீறாத வகையில் கடற்புலிகள் இப்போதும் காவல் காத்து வருகின்றனர்.
மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் பீரங்கிகளை வைத்திருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறதே?
சிறிலங்கா படையினர் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என்ற ஒன்றை தாங்களே அறிவித்து, அங்கே மக்களை வருமாறு கூறினர். அங்கு சென்ற மக்கள் மீது உலகில் மிக மோசமான ஆயுதங்கள்
எனக்கூறப்படும் கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், இராசாயன விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
ஆனால், 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என்று கூறப்படும் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களையோ அல்லது தமது சேனைகளையோ வைத்திருக்கவில்லை. மாறாக, மக்களை
பாதுகாப்பதற்காக எல்லைகளில் நின்று போராடிக்கொண்டிருக்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்திருப்பதாக, தளபதிகளை அழித்திருப்பதான பரப்புரைகளால் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளமை குறித்து?
"சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்" என ஒரு பழமொழி இருக்கிறது. இழப்புக்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் இந்த போராட்டம் எத்தனை
நாட்களானாலும், எத்தனை ஆண்டுகளானாலும், ஏன் தலைமுறைகளானாலும் தொடரும்.
நாம் அடிமை வாழ்வு வாழப் போவதும் இல்லை, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, மண்டியிடப் போவதும் இல்லை.
உலகத் தமிழர்கள் அனைவரும் எம்முடன் நிற்கும்வரை -
வன்னி மக்கள் பசிக்கொடுமைக்கு மத்தியிலும் எம்முடன் நிற்கும்வரை - எமது போராட்டம் வீறுநடை போடும். தலைவர் அதனை வென்று முடிப்பார் என்ற நம்பிக்கையை நான் கூறுகிறேன்.
களத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை புலிகள் வெளியிடாமல் தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன?
ஒவ்வொரு எறிகணைக்கும் பொதுமக்கள் செத்து மடிகின்ற கொடூரம் இங்கே நடக்கின்றபோது - பசியாலும் பஞ்சத்தாலும் இங்கே குழந்தைகள் வாடுகின்றபோது - நாங்கள் இறந்த
சிங்களவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட வாழ வேண்டிய எமது மக்களின் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் மக்கள் குறித்த செய்திகளையே
நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?
ஊடகங்கள் பெரும்பணியை இங்கே ஆற்ற வேண்டியுள்ளது. அவை பக்கச்சார்பின்றி உண்மையைச் சொல்ல வேண்டும், ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், நியாயத்திற்கு
குரல்கொடுக்க வேண்டும்.
உதாரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இங்குள்ள மக்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர்களை போரில் சிக்கியுள்ள மக்கள் என்றே கூறுகிறது. அது தவறு. அவர்கள்
அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகின்ற மக்கள். மக்கள் இங்கே படுகொலை செய்யப்படும்போது போரில் சிக்கி உயிரிழப்பதாகவே கூறுகிறார்கள். இது தவறு. சிங்களப் படைகளால்
அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை ஊடகங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்.
சிறிலங்கா படைத்தரப்போடு மட்டும் மோதவில்லை என்று புலிகள் கூறி வருகின்றனர். இது குறித்து?
சிங்களப் படையினர் தனியே எம்முடன் மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை எப்பொதோ வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்.
புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் செய்திகள் இல்லை. ஆனால் எமது உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்தான் உள்ளன. வன்னியில் உள்ள சிறிய
குழந்தைகளினதும் மனதை தளராமல் வைத்திருக்கும் முதியவர்களினதும் அன்பை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.
எமது மண் விடிய வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டம்தான் இங்கே எம்முடைய கால்களை உறுதிப்படுத்தி எம்மை நிமிர்ந்து நடக்க
வைத்திருக்கின்றது என்றார் இளந்திரையன்.
புலிகள் அலை அலையாக தற்கொலை தாக்குதல்
*பாதுகாப்பு தரப்பு தெரிவிப்பு [14 - May - 2009] தினக்குரல்முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முன்னேற முயற்சிக்கும் படையினர் மீது புலிகள் அலைஅலையாக வந்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக படைத்தரப்பு
தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயம் அமைந்துள்ள கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் கடும் சமர் நடைபெற்று வருகையில் நேற்று புதன்கிழமை தொடர்ந்து நடைபெற்ற கடும் சமரின் போது
புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் அலை அலையாக வந்து இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக படைத்தரப்புத் தெரிவித்தது.
புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் படையினர் நுழைந்துள்ளதாகவும் அங்கு தொடர்ந்தும் முன்னேற்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கையிலேயே புலிகள் இந்தத் தாக்குதல்களை
நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பு வலயத்தில் வட்டுவாகல் பகுதியில் கடற்புலிகளின் படகுகள் கரையோரத்திற்கு வந்து படையினர் மீது
தாக்குதல்களை நடத்த முயற்சித்ததாகவும் எனினும் படையினர் அதனை முறியடித்துவிட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது.
கடல்வழியாக பலபடகுகளில் வந்து தரையிறங்கி தற்கொலைத் தாக்குதலை நடத்த அவர்கள் முயன்ற போது, கடற்புலிகளின் நான்கு படகுகள் அழிக்கப்பட்டு பத்துக்கு மேற்பட்ட புலிகள்
கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறுகின்றனர்.
படகுகளில் வந்து தரையிறங்கி கரையோரத்தில் நிலைகொண்டுள்ள படையினரை சிறு சிறு குழுக்களாக பிரித்துவிட்டு அவர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதே
கடற்புலிகளின் நோக்கமாயிருந்துள்ளது. காரிருள் நேரத்தில் கடற்புலிகளின் இந்த கடல் தரைவழித்தாக்குதல் திட்டத்திற்கு எதிராக படையினர் இரவு 9.30 மணி முதல் நேற்று அதிகாலை 01.30
மணிவரை மிகக்கடுமையாகப் போராடினர். இதன் போது கடற்புலிகளின் நான்கு படகுகள் அழிக்கப்பட்டன. அத்துடன் கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கடற்புலிகள் தங்கள் படகுகளுடன் நடுக்கடலுக்கு பின் வாங்கிச் சென்றுவிட்டனர். எனினும் கடற் புலிகள் மற்றொரு படகு அணி மீண்டும் இந்தப் பகுதியில் கடல் மற்றும்
தரைவழித்தாக்குதலை நடத்த முற்பட்டபோது படையினர் அதனை முறியடித்து விட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் பெருமளவு படையினர்
காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா, மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிட மறுத்துவிட்டார்.
(வன்னியில் இருந்து ஒரு இறுதிக்குரல்)
வன்னியில் கடுமையான தாக்குதலை சிறீலங்கா படையினர் ஆரம்பித்துள்ளனர்திகதி: 15.05.2009 // தமிழீழம் வன்னியில் சிறீலங்கா படையினர் மிகக் கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக அங்கிருத்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த படையினர், இன்று காலை முதல் தமது முழுமையான படைக்கல சக்தியைப் பயன்படுத்தி பாதுகாப்பு வலயம்
நோக்கி கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
இதனால் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாரிய மனித அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தனது முழுச்சூட்டாதரவையும் பாவித்து துடைத்தழித்தபடி முன்னேறி வரும் சிறிலங்கா இராணுவத்தினரை எதிர்த்து வீடுதலைப்புலிகள் அதிவீரம் செறிந்து போரை முன்னெடுத்துள்ளனர்.
ஆட்டிலறி, பீரங்கிகள், கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள் மற்றும் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்த வல்ல நச்சு ஆயுதங்கள் என கனரக ஆயுதப்பாவனையோடும் எமது மக்களை
கொன்றொழிக்கும் வெறித்தனத்தோடும் மிகக் கொடுமையான யுத்தம் ஒன்றை சிங்களப்படைகள் மேற்கொண்டுள்ளன.
பாதுகாப்பு வலயத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி மக்கள் பல்லாயிரக்கணக்கில் இறந்தும் காயமடைந்தும் உதவுவாரற்று சிதறிக் காணப்படுவதாகவும். பசி, தாகம் மற்றும்
சுற்றிவளைத்து தாக்கும் இனவெறி இராணுவத்தின் கோரத்தாண்டவம் ஆகியவற்றிற்கிடையே சிக்கி மிகப்பெரும் மனித அவலம் நடந்தேறுவதாக அறிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலைகள், உதவும் நிறுவனங்கள் யாவும் செயலிழந்துள்ள நிலையில் பாதுகாப்பு வலயமானது வரலாற்றில் யாரும் கண்டிராத மிகப்பெரும் அவலத்துள் தள்ளப்பட்டுள்ள நிலையில்
புலம்பெயர் தமிழர் வீதிகளில் உடனடியாக இறங்கிப்போராட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் 1700 பொது மக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் சிறிலங்கா இன்று ஆரம்பித்துள்ள கடும் தாக்குதல் முழுமையான பேரழிவை ஏற்படுத்தலாம் என்று
ஆஞ்சப்படுகின்றது.
ஏற்கனவே மருத்துவமனையும் செயலிழந்து போயுள்ள நிலையில் சிறிலங்காவின் இந்தத் தாக்குதல் பெரும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தவள்ளது. சர்வதேச நாடுகளின் அழுத்தங்களையும்
செய்து சிறிலங்கா பொது மக்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வன்னியில் இருந்து கிடைத்த இறுதிக் குரல்
No comments:
Post a Comment