Wednesday 3 June, 2009

மூன்று மாவட்ட தலைநகர்களில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஈழ ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டம்.

சென்னை, தஞ்சாவூர், தர்மபுரி மாவட்ட தலை நகரங்களில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஈழ ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டம்.

ENB செய்தியாளர் 02-06-09
தமிழகத்தின் வாக்குவேட்டை ஓட்டுப்பொறுக்கி பாராளுமன்றவாதக் கட்சிகள் எல்லாம் தமிழீழவிடுதலைப்போரை நசுக்கும் அமெரிக்க - இந்திய-இலங்கை அரசுகளின் பாசிச யுத்தத்தை மறைமுகமாக ஆதரித்து நின்று ஈழவிடுதலைப்புரட்சியை தற்காலிகமாக பின்தள்ளியுள்ளனர்.விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேரறுத்துள்ளனர். எனினும் காலம் காலமாக ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் தங்கள் விடிவுக்கான நட்சத்திரங்களாகக் கருதிவந்த அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளாலும் முதுகில் குத்தப்பட்ட நிலையில் தமிழக புரட்சிகர சக்திகள் ஈழ விடுதலைப் புரட்சியை இறுகப் பற்றி ஈழத்தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடித்து வந்துள்ளனர். இந்தவிடாப்பிடியான புரட்சிகரமான இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டை மீண்டும் ஈழத்தமிழர்களின் ஒரு மிக நெருக்கடியான தருணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.

சென்னை, தஞ்சாவூர், தர்மபுரி மாவட்ட தலை நகரங்களில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் ஈழ ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.அவ் ஆர்ப்பாட்டங்களில் பின்வரும்
அடிப்படை முழக்கங்களை அவர்கள் விண்ணதிர முழங்கினர்!

*விடுதலைப்போரில் உயிர்நீத்த விடுதலைப்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

*ராஜபக்சே அரசை நிர்மூலமாக்குவோம்!*ஈழவிடுதலைப்போருக்குத் துரோகமிழைத்த இந்திய ஆளும்கும்பலைக் கருவறுப்போம்!*தமிழீழவிடுதலைப்போரை நசுக்கும் அமெரிக்க - இந்திய-இலங்கை அரசுகளின் பாசிச யுத்தத்தை முறியடிப்போம்!
*விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தொடர்ந்து போராடுவோம்!

இப் புரட்சிகர மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆளும் வர்க்கப்பத்திரிகைகள் இச்செய்தியை முக்கியப்படுத்தி வெளியிட்டுள்ளன.விளம்பரத்துக்கு விலைபோகாத புரட்சியாளர்கள் தமது புரட்சிகரப் பிரச்சாரப்பணியை தமிழக உழைக்கும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச்செல்வதில் உறுதியும் உத்வேகமும் கொண்டுள்ளனர்.
=====================

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வீரகேசரி இணையம் 6/2/2009 7:49:50 PM -
இலங்கையின் இனப் படுகொலையையும், சோனியா கும்பலின் துரோகத்தையும் எதிர்த்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சார்பில் இன்று சென்னையில் உள்ள மெமோரியல் அரங்கத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் வ. டேவிட் செல்லப்பா தலைமை தாங்கினார். தோழர். மனோகரன் கண்டன உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் சிங்கள அரசிற்கு எதிராகவும், இந்திய அரசிற்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.முன்னதாக போராட்ட களத்தில் பலியான விடுதலைப்புலிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த ஆrப்பாட்டத்தின் போது, போர் நிறுத்தத்தை காணவும், புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஐ. நா குழுவினை அனுப்பவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ராஜபட்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தினமணி
First Published : 03 Jun 2009 12:36:35 PM IST
தருமபுரி, ஜூன் 2: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்ற ராஜபட்சேவை கண்டித்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் மாயக்கண்ணன்
தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ஞானம், சேலம் மாவட்ட அமைப்பாளர் சோமு, வேலூர் மாவட்ட அமைப்பாளர் குணாளன் ஆகியோர் பேசினர்
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தினமணி
First Published : 03 Jun 2009 10:37:47 AM IST

தஞ்சாவூர், ஜூன் 2: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் சார்பில், தஞ்சாவூர் ரயிலடி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் பாப்பாநாடு வட்டார அமைப்பாளர் தங்கமணி தலைமை வகித்தார்.

* இலங்கை ராணுவம் தமிழகப் பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்.
*தமிழ்ப் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்துவதை தடுத்து நிறுத்தி, அங்கு மீண்டும் தமிழர்களையே குடியமர்த்த வேண்டும்.
* நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐ.நா. குழுவையும், உண்மை நிலையைக் கண்டறியும் வகையில் மத்திய அரசு, அரசியல் கட்சிகள், உழைக்கும் மக்கள் அமைப்புகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட குழுவையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
* இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். உலக நாடுகளில் இலங்கை அகதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமைகளை வழங்க வேண்டும்.
* கண்காணிப்பு என்ற பெயரில் மீனவர்களை ஒடுக்கும் கடலோரக் காவல் படையை திரும்பப் பெற வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழக தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளர் குணாளன், தென்னார்க்காடு மாவட்ட அமைப்பாளர் தெய்வச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வீ. அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக, தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
External Links:
ராஜபட்சேவை+கண்டித்து+ஆர்ப்பாட்டம்


http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Trichy&artid=68671&SectionID=138&MainSectionID=134&SEO=&Title=விடுதலைப்+புலிகள்+மீதான+தடையை+நீக்க+வலியுறுத்தி+ஆர்ப்பாட்டம்

No comments: