எஞ்சியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலருக்கும் இந்திய நக்சல்பாரி தேசபக்த இயக்கத்தினருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.ஊடகங்களின் தொப்புள் கொடி உறவின் சார்பு நிலைக்கேற்ப இவை மிகைப்படுத்தியும், திரிபுபடுத்தியும் சொல்லப்பட்டுள்ளன.இதன் உண்மை நிலையும் அதன் சரியான அளவும் தெளிவாகவில்லை.வெளிவந்த செய்திகள் வருமாறு.
==================================================
The Times Of India
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-5161476,prtpage-1.cms
Maoists linking up with Tamil Tigers?
Siva G , TNN 26 October 2009, 12:25am ISTVISAKHAPATNAM:
Union home minister P Chidambaram’s assertion that Naxalites are acquiring arms from abroad is only the tip of the iceberg, as central intelligence agencies have found fresh
evidence of joint training camps and meetings conducted by the Red guerrillas with Tamil Tigers in the forests of south and central India.
Does it indicate that Maoists are getting logistic support and training from LTTE? Are the Maoists and the Tamil Tigers brothers in arms? If intelligence documents are to be believed, the answer is yes. Sources
said the country’s top intelligence wing has acquired some key information about the dangerous alliance between the Maoists and the Tigers.
In fact, the central intelligence top brass has warned the states of Andhra Pradesh, Tamil Nadu, Chhattisgarh and Orissa on the alleged intrusion of the Tamil Tigers into Indian territorial waters. According to
sources, a well-trained 12-member group of Tamil Tigers has recently sneaked into India to join hands with the Maoists. ‘‘They entered north coastal Andhra via Kerala after splitting into three groups,
one of which is suspected to have found a safe haven in Vizianagaram area,’’ sources said. This comes close on the heels of an intelligence alert to the coastal states on the East Coast about a possible
LTTE cadre intrusion.
But what is bothering the security agencies is the prowess of Tamil Tigers in triggering explosives and suicide bombing. ‘‘Imagine the expertise of Tigers coupled with the Maoists’ jungle warfare. It
will be a deadly combination for the security agencies to tackle with,’’ analysts said.
Will the Maoists stand to gain? ‘‘Of course, the Tigers have made sizable gains in guerrilla warfare fighting Lankan forces and they would pass on the expertise to the Maoists,’’ a security analyst
said. Security wings suspect that the Maoists could take the help of Tamil Tigers to prepare them to defend the all-out central forces’ attack codenamed ‘Operation Green Hunt’ on Abujmad, their
strategic base and stronghold in the Dandakaranya in Chhattisgarh. With Chidambaram insisting that the operation is aimed at defeating the top Maoist leadership, sources said the focus is on to nab or kill
Andhra Maoist leaders, who constitute 80% of Maoist top brass.
‘‘It will be again Andhra commandoes versus top Maoist leaders in Abujmad as and when the central forces corner the area. So, the chances of Maoists relying on Tigers cannot be ruled out,’’ a
source said.
Sources also said the Maoists could take the help of LTTE rebels for training their military wing, People’s Liberation Guerrilla Army (PLGA).
Analysts said LTTE game plan is double-edged. On one hand, it would help the Maoists to take on Indian forces, while on the other it would try to regain the lost ground in Sri Lanka by making South India
their new base to fight the Lankan forces in the northern parts of the island nation. ================
Daily Mirror lk
LTTE, Maoists working together in India- Indian intelligence
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=65862
VISAKHAPATNAM:
Indian Union home minister P. Chidambaram’s assertion that Naxalites are acquiring arms from abroad is only the tip of the iceberg, as central intelligence agencies have found fresh
evidence of joint training camps and meetings conducted by the Red guerrillas with Tamil Tigers in the forests of south and central India.
Does it indicate that Maoists are getting logistic support and training from LTTE? Are the Maoists and the Tamil Tigers brothers in arms? If intelligence documents are to be believed, the answer is yes. Sources
said the country’s top intelligence wing has acquired some key information about the dangerous alliance between the Maoists and the Tigers.
In fact, the central intelligence top brass has warned the states of Andhra Pradesh, Tamil Nadu, Chhattisgarh and Orissa on the alleged intrusion of the Tamil Tigers into Indian territorial waters. According to
sources, a well-trained 12-member group of Tamil Tigers has recently sneaked into India to join hands with the Maoists. “They entered north coastal Andhra via Kerala after splitting into three groups, one of
which is suspected to have found a safe haven in Vizianagaram area,” sources said. This comes close on the heels of an intelligence alert to the coastal states on the East Coast about a possible LTTE cadre
intrusion.
But what is bothering the security agencies is the prowess of Tamil Tigers in triggering explosives and suicide bombing. “Imagine the expertise of Tigers coupled with the Maoists jungle warfare. It will be a
deadly combination for the security agencies to tackle with,” analysts said.
Will the Maoists stand to gain? “Of course, the Tigers have made sizable gains in guerrilla warfare fighting Lankan forces and they would pass on the expertise to the Maoists,” a security analyst said. Security
wings suspect that the Maoists could take the help of Tamil Tigers to prepare them to defend the all-out central forces’ attack codenamed “Operation Green Hunt” on Abujmad, their strategic base and
stronghold in the Dandakaranya in Chhattisgarh. With Chidambaram insisting that the operation is aimed at defeating the top Maoist leadership, sources said the focus is on to nab or kill Andhra Maoist
leaders, who constitute 80% of Maoist top brass.
“It will be again Andhra commandoes versus top Maoist leaders in Abujmad as and when the central forces corner the area. So, the chances of Maoists relying on Tigers cannot be ruled out,” a source said.
Sources also said the Maoists could take the help of LTTE rebels for training their military wing, People’s Liberation Guerrilla Army (PLGA).
Analysts said LTTE game plan is double-edged. On one hand, it would help the Maoists to take on Indian forces, while on the other it would try to regain the lost ground in Sri Lanka by making South India
their new base to fight the Lankan forces in the northern parts of the island nation.
(Times of India)
ஈழத் தமிழர்களுக்கு ஆயுதம் வழங்கி போராட்டத்தை தீவீரப்படுத்துவோம் ‐ நக்சல்பாரிகள் அறிவிப்பு
21 October 09 01:10 pm (BST)
http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16256&cat=2
வன்னிப் போருக்குப் பின்னர் அப்போர் குறித்தும், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்தும் உலகெங்கிலும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில்
மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கணபதி இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலில், முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களை
விடு விக்காவிட்டால் நாங்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கி ஈழ விடுதலைப் போரை முன்னெடுக்க உதவுவோம் என்றிருக்கிறார் கணபதி மேலும், உலகிலேயே மிகப்பெரிய இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இலங்கை அரசு கம்பிவேலிக்குள் அடைத்து சித்திரவதை செய்வதை அறிந்து வேதனைப்படுகிறோம்.
அவர்களுக்கு நாங்கள் நவீன ஆயுதங்கள் வழங்கி சுதந்திரப் போராட்டத்தை தீவீரப்படுத்துவோம். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் வகுத்து வருகிறோம். அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள்
கொடூர சித்திரவதை செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதி நவீன படகுகள் மூலம் கடல் வழியாக ஆயுதங்களை இலங்கைக்குக் கொண்டு செல்வோம்.இதை யாராலும்
தடுத்து நிறுத்த முடியாது. தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் இலங்கை இராணுவத்தினர் அங்குள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்யமாட்டார்கள். இளைஞர்களையும் சுட்டுக் கொல்ல மாட்டார்கள். எனவே
எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை தமிழர்களுக்கு வழங்குவோம். சித்திரவதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆயுத
உதவி செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கென்று தனிக் குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம். எங்களது நகசலைட் இயக்கத்தில் தமிழகம், கேரளாவைச் சேர்ந்த நிறைய இளைஞர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்காக
தமிழகம் கேரளா எல்லைப் பகுதிகளில் விரைவில் முகாம்கள் அமைப்போம். நாங்கள் தற்போது மேற்குவங்கம், ஒரிஸ்ஸா, பீகார்,ஜார்காண்ட், மாநிலங்களில் பலத்துடன் உள்ளோம். தென்
மாநிலங்களில் எங்கள் அமைப்பை பலப்படுத்தும் பணியை தீவீரப்படுத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
Lanka Sri Tamilwin
தமிழீழ விடுதலைப்புலிகளும் இந்திய மாவோயிஸ்ட்வாதிகளும் இணைந்து செயற்படுகின்றனர்: இந்திய புலனாய்வுத்துறை
[ திங்கட்கிழமை, 26 ஒக்ரோபர் 2009, 06:47.17 AM GMT +05:30 ]
இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கையின்படி, இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும், தென் மற்றும், மத்திய இந்திய காடுகளில், பயிற்சி மற்றும், கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இந்த தகவலை இந்திய எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வெளிநாடு ஒன்றில் இருந்து ஆயுதங்களை பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர், பி சிதம்பரம்
தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மத்திய புலனாய்வு பிரிவு, தமிழீழ விடுதலைப்புலிகள், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிஸ்கார் மற்றும் ஒரிசா, ஆகிய இடங்களில் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை
விடுத்துள்ளது.
அண்மையில், 12 பேரைக்கொண்ட, தமிழீழ விடுதலைப்புலிகளின் குழு, ஒன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளதாகவும் மத்திய புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மூன்று பிரிவுகளாக பிரிந்த இந்தக்குழுக்கள், ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளன. இந்தக்குழுக்களில் ஒன்று, விழிநகரம் ஏஜென்ஸி
பிரதேசத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அடுத்து, இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, மாவோயிஸ்ட் வாதிகளின் மக்கள் விடுதலை போராளி இயக்கம்,
தமிழீழ விடுதலைப்புலிகளின், உதவியை பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆய்வாளர்களின் கருத்துப்படி, தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த திட்டத்தின்படி இரண்டு அனுகூலங்களை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்திய படைகளுக்கு எதிராக மாவோ தீவிரவாதிகளை முனைப்புப்படுத்தல் மற்றும், இலங்கைப் படையினரிடம் சந்தித்த தோல்வியை சரிசெய்து கொள்வதற்காக, தென்னிந்தியாவில் புதிய தளங்களை அமைப்பது என்பதுவே அந்த அனுகூலங்களாகும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/view.php2eSWnf00bvj0C2edQG7N3bch9Es4d4E2h3cc27pY2d430QH2b02nLW3e
2ஆம் இணைப்பு‐
மாவோயிஸ்டுகளுக்கு பயிர்ச்சியளிக்க புலிகள் ஊடுறுவியுள்ளார்களாம்‐ இந்திய உளவுத்துறை
‐ 26 October 09 02:20 am (BST)
இந்திய மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அறிவிக்கப்படாத போர் ஒன்றை வட கிழக்கில் நடத்தி வருகிறது. இந்திய மத்திய அரசு. இந்நிலையில் மாவோயிட் தலைவர் கணபதி ஒரு நேர்காணலில் ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவோம் என்று அறிவித்திருந்தார். சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து
ஆயுதம், பணம் கிடைப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில், மாவோயிஸ்டுகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவும், பயிற்சியும் கிடைத்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் அடர்ந்த வனப் பகுதிக்குள் புலிகள் அமைப்பினர், மாவோயிஸ்டுகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.இந்திய கடல் பகுதி வழியாக விடுதலைப் புலிகள் இந்தியாவுக்குள் ஊடுறுவலாம். எனவே கவனமாக இருக்குமாறு ஆந்திரா,
தமிழ்நாடு, சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களை ஏற்கனவே மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருந்தது. ஆனால் இந்த பலத்த கண்காணிப்பையும் மீறி நன்கு பயிற்சி பெற்ற 12 விடுதலைப் புலிகள் சமீபத்தில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, மாவோயிஸ்டுகளுடன் இணைந்துள்ளனர். இவர்கள் கேரளா வழியாக வடக்கு கடலோர ஆந்திரா, வுக்குள் நுழைந்தனர். பின்னர் 3 பிரிவாக பிரிந்து சென்றுள்ளனர். ஒரு குழு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம்
கடலோரப்பகுதிக்குள் புகுந்துள்ளது. விடுதலைப் புலிகள், குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும், தற்கொலைப் படைத் தாக்குதலிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதாலும், மாவோயிஸ்டுகளுடன் அவர்கள் கரம் கோர்த்துள்ளதாலும் இந்திய பாதுகாப்புத் துறையினர் அச்சமடைந்துள்ளனர். மேலும், புலிகள் தற்போது சேர்ந்துள்ளதால், அது மாவோயிஸ்டுகளுக்கு பெரும் சாதகமாக அமையக் கூடும். காரணம், இலங்கை ராணுவத்தினரை எதிர்த்து பல ஆண்டுகளாக கொரில்லா போரில் வெற்றிகரமாக ஈடுபட்டிருந்தவர்கள் விடுதலைப் புலிகள் அதை தற்போது அவர்கள் மாவோயிஸ்டுகளுக்கு கற்றுத் தரக் கூடும் என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். மாவோயிஸ்டுகளின் படைப் பிரிவான மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க விடுதலைப் புலிகளை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தலாம் எனவும் கருதப்படுகிறது.ஒரு
பக்கம் இந்திய ராணுவத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகளை தூண்டி விடுவது மீண்டும் இலங்கையை ethirkkum பலத்தைப் பெறுவது ஆகிய இரட்டை நோக்கங்களுடன் மாவோயிஸ்டுகளுடன் புலிகள் கை கோர்த்திருக்கலாம் என்று அந்த செய்தி கூறுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், மாவோயிஸ தீவிரவாதிகளும் இணைந்து செயற்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்தியாவின் தென் மற்றும் மத்திய பிரதேசங்களில் உள்ள காடுகளில் புலிகளும், மாவோயிஸ் கெரில்லாக்களும் இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் இடையில் பல்வேறு மட்டத்தில் தொடர்புகள் காணப்பட்டமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம், தமிழகம், சட்டிஸ்க்ரா மற்றும் ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவல் காணப்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், புலிகள் மற்றும் மாவோயிஸ தீவிரவாதிகள் இணைந்து மேற்கொள்ளும் தீவிரவாத நடவடிக்கைகள் கடும் ஆபத்தாக அமையக் கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகளை பறிக்கும் திட்டமொன்றில் முனைப்பு காட்டுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாக இந்தியாவில் ஊடுறுவிக் கொள்வதற்கும், பின்னர் மீண்டும் இலங்கையில் யுத்தத்தை முன்னெடுக்கவும்
முயற்சிக்கப்படுவதாவ சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழகத்தை மையமாகக் கொண்டு தமது இராணுவ நடவடிக்ககைளை ஆரம்பிக்க புலிகள் உத்தேசித்திருக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மீண்டும் இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்தத்தை மேற்கொள்வதற்கு புலிகள் இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக்கு நக்ஸல் பிரச்னை பெரிய அச்சுறுத்தல்: மன்மோகன் சிங்
First Published : 26 Oct 2009 02:57:48 AM IST
Last Updated :
சாம் ஹுவா ஹின் (தாய்லாந்து), அக். 25
நக்சல் தீவிரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர், ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பும் முன் நிருபர்களிடம் கூறியதாவது:
நக்சல் தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த தேவையான அனைத்து
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதேசமயம் பொருளாதார, சமூக காரணங்களைக் கண்டறிந்து நக்சல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.
மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சல் தீவிரவாதம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவுடன் கடந்த வாரம் பேச்சு நடத்தியுள்ளேன். அதுபோல்
மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நக்சல் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
காஷ்மீர் பேச்சுவார்த்தை... காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத குழுக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
காஷ்மீரில் தொடர்ந்து அமைதியை நிலைநாட்ட பிரிவினைவாத குழுக்கள் அரசுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முன்வர வேண்டும். இதுதொடர்பாக மாநிலத்தில் உள்ள
அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் ஏற்க அரசு தயாராக உள்ளது.
ஹுரியத் குழுக்களுடன் ஏற்கெனவே இரண்டு மூன்று பேச்சு நடத்தியுள்ளோம். அவர்கள் சில ஆலோசனைகளுடன் மீண்டும் அரசுடன் பேச்சு நடத்துவதாக உறுதி அளித்திருந்தனர். அதை
எதிர்நோக்கி காத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு: தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகள், தீவிரவாதம் தொடர்பான தகவல்கள் மற்றும் ரகசியங்களை
பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
தாய்லாந்து, பிலிப்பின்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகியவை மட்டுமல்லாமல் ஆசிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் தீவிரவாதத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகிறது என்றார்.
மாவோயிஸ்டுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதம்! : சிதம்பரம்
First Published : 25 Oct 2009 01:13:39 AM IST
Last Updated :
புது தில்லி, அக். 24: மாவோயிஸ்டுகள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெறுகின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பு என்று எடுத்துக் கொண்டால், நக்ஸலைட்டுகள்தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி கிடைப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
ஆனால், மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து அவர்களுக்கு ஆயுதம் கிடைப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன. நேபாளத்தில் இருந்தும் அவர்களுக்கு ஆயுதம்
கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்திய- நேபாள எல்லை ஊடுருவல் செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மாவோயிஸ்டுகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தான் முத்திரை எதையும்
போலீஸôர் கண்டுபிடிக்கவில்லை.
நமது மக்களிடம் இருந்தே ஆயுதங்களையும், பணத்தையும் மாவோயிஸ்டுகள் கொள்ளை அடிக்கின்றனர்.
ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்: மேற்கு வங்கத்தில் அண்மையில் நடத்திய தாக்குதல் கூட இதே நோக்கத்துக்காகத்தான் என மாவோயிஸ்டுகள் கூறிய பின்னரும், சிலர் அவர்களுக்கு
ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். அத்தகையவர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்.
மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து சிலர் குரல் கொடுக்கின்றனர். மாவோயிஸ்டுகள் மீது இந்திய அரசு போர் தொடுப்பதாகக் கூட வெளிநாடுகளில் உள்ள சில மனித
உரிமை அமைப்புகள் கூறிவருகின்றன.
நக்ஸல்கள் உள்ள பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி கூறியிருக்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் அவர்.
அரசின் பிரதிநிதி நான். எனவே, அவருக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.
வன்முறையைக் கைவிட்டால் பேசத் தயார்: வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் மக்களவை முன்னாள் தலைவர்
ரபி ராய் மற்றும் சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பதில் அளிப்பது எனது கடமை என்பதால், இந்த விஷயத்தில் அரசின் கொள்கை என்ன என்பதைத் தெரிவித்து அவருக்கு கடிதம் எழுதினேன்.
வன்முறையைக் கைவிடும் எந்தக் குழுவுடனும், அவர்களது நியாயமான குறைகள் குறித்துப் பேசுவதற்கு அரசு தயாராக உள்ளது. இதையேதான் பிரதமரும் கூறியுள்ளார்.
அவர்கள் ஆயுதங்களை கீழே போடமாட்டார்கள் என்பதை நடைமுறைரீதியாக அறிந்தவன் நான். ஆனால், அவர்கள் வன்முறையை நிறுத்த வேண்டும்.
சாலைகள், ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்துதல், பள்ளிக் கட்டடங்கள், பாலங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்களைத் தகர்த்தல், அதிகாரிகளைக் கடத்துதல் போன்ற செயல்களை
அவர்கள் நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால், அவர்களுடன் மாநில அரசு பேச்சு நடத்தும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்யும்.
அரசியலுக்கு வர வேண்டும்: அஹிம்சையின் மூலம் மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்த பூமி இது. காலனி ஆதிக்க அரசைவிட கொடுமையான ஆட்சி தற்போது இருக்க
முடியுமா?
தங்களது செயல்களுக்கு பெரும்பான்மையான மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என நக்ஸலைட்டுகள் கருதினால், அவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, அவர்களுக்கு சரி எனத்
தோன்றும் கொள்கைகளை அமல்படுத்துவதை யார் தடுக்கிறார்கள்?
மக்களுக்கு உழைக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.
எனது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுகள் சவாலை சந்திக்க ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்ற கருத்து சரியல்ல.
மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், தடுப்பார் யாருமில்லாமல் அவர்கள் செயல்படும் நிலை உருவாகிவிட்டது. கடந்த 10-12
ஆண்டுகளில் அவர்களது ஆதிக்கத்தில் உள்ள பகுதி அதிகரித்து விட்டது.
மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள தங்களுக்கு என்ன தேவை என்பதை மாநில முதல்வர்கள்தான் மத்திய அரசிடம் கேட்க வேண்டும்.
மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை. மாவோயிஸ்டுகளின் தாக்கம் குறித்து இப்போதுதான் மாநில அரசுகள் உணரத் தொடங்கியுள்ளன.
மாநில அரசின் நடவடிக்கை- காலம் பதில் சொல்லும்: மாவோயிஸ்டுகளால் பிடித்துச் செல்லப்பட்ட போலீஸ் அதிகாரியை விடுவிக்க, கைது செய்யப்பட்ட பெண்களை ஜாமீனில் விடுதலை
செய்ய மாநில அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக என்னிடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை. மேற்கு வங்க அரசின் முடிவு சரியா, தவறா என காலம்தான் பதில் சொல்லும்.
இப் பிரச்னை குறித்து மிகவும் தாமதமாக மாநில அரசு பாடம் கற்றுள்ளது. இதை குறைகூறுவதற்காக நான் சொல்லவில்லை. இதுதான் உண்மை.
பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான கட்சிகளான காங்கிரûஸயும், திரிணமூல் காங்கிரûஸயும் கருதி, அக் கட்சிகளை ஆயுதரீதியாக எதிர்ப்பதில் மாவோயிஸ்டுகளும் தாங்களும் சகோதரர்கள்
என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இதுவரை கருதி வந்தது.
ஆனால், மாவோயிஸ்டுகள் தங்கள் எதிரிகள் என மாநில அரசும், மார்க்சிஸ்ட் கட்சியும் இப்போது உணர்ந்துள்ளன.
மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள கூடுதல் படைகள் வேண்டும் என மேற்கு வங்க அரசு கோரிக்கைவிடுத்தால், அதை அளிக்கும் கடமை எனக்கு உண்டு என்றார் ப.சிதம்பரம்.
No comments:
Post a Comment