Friday 5 February, 2010

சம்பந்தன் ஒரு சாக்கடை - ஜெர்மன் எழுத்தாளர் சங்கம்

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...
சம்பந்தன் - பொய்மைந்தன்
திகதி: 04.02.2010 // தமிழீழம் சங்கதி
தமிழீழத் தாய்மண்ணின் விலங்கொடிப்பதற்காக, தமிழ் மக்களின் விடிவிற்காக, தம்மையே தகர்த்துக்கொள்ளும் கரும்புலிகளையும், இரத்தமும் சதையும் பீறிட உயிர் நீர்த்த மாவீரர்களையும் விடுதலைப் போருக்கு உருவாக்கிய எம் தலைவனால், தமிழீழ அரசியல் போருக்காக, பிரிந்து நின்ற அமைப்புக்களையும், தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயத்துடனான தனித்தமிழீழ அரசுக்கோட்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

எங்கள் தேசியத்தலைவரின் விருப்பிற்கிணங்க தமிழத் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதால், அது தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுக்கொண்டது. அதற்குமுன் கூட்டமைப்பினரை யாரும் அடையாளம் கண்டதில்லை. அதிலும் சம்பந்தனை திருகோணமலையிலோ, அல்லது வேறெங்குமோ யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை.
அவர் மக்களால் தூக்கியெறியப்பட்டு, ஏற்கனவே தேர்தல்களில் முகம்கொடுக்க முடியாமல் இருந்தவர். மக்கள் துன்பப்பட்ட காலங்களில் அவர் மட்டும் சுகமாக இந்தியாவில் வாழ்ந்தவர்.
பதவிக்கும் புகழுக்கும் பேராசைகொண்டு கூட்டமைப்பில் இணைந்து, பழசு என்ற காரணத்தால் தலைமையையும் பெற்றுக்கொண்டவர்.
இன்று முள்ளிவாய்கால் இறுதிப் போரின்பின் எமது ஆயுதப்போராட்டம் மௌனித்திருப்பதால், சம்பந்தன் தனது பழைய அரசியல் வாழ்க்கையான, பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் விராலாகவும், இடத்திற்கேற்ற முறையில் நிறத்தை மாற்றும் பச்சோந்தித்தனத்தையும் தொடங்கியுள்ளார்.
தமிழீழத் தனியரசிற்காக மக்கள்முன் சத்தியம் செய்து புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வழிதடுமாறி வழுக்கி விழுகின்றது. தமிழ்மக்களுக்குப் பிழையான வழிகாட்டித் தன் பிழைப்பை நடத்தத் தொடங்கிய சம்பந்தன், தமிழீழ மண்ணையும், மக்களையும் மறந்து தனது மந்திரிப்பதவி நட்பாசைக்காக சரத்பொன்சேகாவிற்கு தன்னிச்சையாக ஆதரவுகொடுத்தார்.


இவ்வாறு தமிழ் மக்களை சரத்திற்கு வாக்களிக்க வைத்து, இனவெறியன் மகிந்தவின் தீராத பகையாளியாக்கியுள்ளார். இதுதான் தமிழ்மக்களுக்கு அவர் ஆற்றியதொண்டு. இலங்கைச் சட்டசபையில் தனித்தமிழீழத்திற்காக குரல் கொடுக்கவேண்டிய சம்பந்தன், எமது தேசியத் தலைமை மீது பலமுறை சேற்றை வாரி இறைத்துள்ளார். சிங்களத்தின் கறுப்புப்பணம் அவர்
பைகளை நிரப்பியதால், இனி தனிநாடு கேட்டுத் தனது சிங்கள நண்பர்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று கூறிச், சிங்களத்தின் வயிற்றில் பால் வார்த்துள்ளார்.


விலகித் தூரநின்று துரோகம் செய்பவன் கருணா என்றால் விலகாமல் கூட இருந்தே குழிபறிப்பவர் சம்பந்தன். தமிழ் மக்களின் தமிழீழத் தாகத்திற்கு ஆப்புவைக்கும் சம்பந்தன் போன்ற செயல் வீரர்கள் இருக்கும்வரை எங்கள் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கும்.
சாக்கடை நீரானது கடல்நீரைச் சேர்ந்தால் அதற்குப் பெயரும் வேறாகிப் புண்ணிய தீர்த்தமாகிவிடும். கடல் பொங்கும்போது கடல்நீர் சாக்கடையில் புகுந்தால் மீண்டும் அது சாக்கடைநீராகி அருவருப்புக்குள்ளாகிவிடும். சம்பந்தனும் இனி சாக்கடைநீர்தான், இனி தமிழ்மக்கள் அருவருப்புடன்தான் அவரை அவதானிப்பர்.
யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்.
யேர்மனி.
==============
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள உறுப்பினர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது
திகதி: 03.02.2010 // தமிழீழம்
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது.
கடந்த 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 10 பேர் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதுடன் அவர்கள் விடுதலைப் புலிகளால் சிபார்சு செய்யப்பட்டவர்கள். அவர்களில் ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையினால் சிபார்சு
செய்யப்பட்டவர்களாவர்.
கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதன் கொள்கைகளை முற்றாக கைவிட்டு தமிழ் தேசியம் பேசியபடி உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் இறைமையையும் ஏற்றுக் கொண்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரிக்க முற்பட்ட பொழுது அதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுவந்திருந்தனர் என்ற செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையில் திடீரென சனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் தமிழ் தேசிய எண்ணக்கருவை சிதைக்கும் நோக்கில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தபொழுது அந்த முடிவை கடுமையாக எதிர்த்து கூட்டமைப்பு தலைப்பீடத்தின்
தான்தோன்றித்தனமான நடவடிக்கையை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணமாக இருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.
இவர்களில் சிவாஐிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தனித்து செய்ற்பட்ட காரணத்தினால் எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அனுமதிப்பதில்லை என்று சம்பந்தன் தீர்மானத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேவேளை தமிழ் மக்களின் பூரணமான சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை, வடக்கு கிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம், தமிழ் மக்கள் தேசிய இனம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க கூடிய உறுப்பினர்களுக்கும் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காது என்று நம்பகமாக அறிய முடிகின்றது.
அவ்வாறான ஒரு முடிவை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் எடுக்கும் போது அதனால் பொது மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தலைமைப் பீடத்தின் மேல் ஏற்படக் கூடிய அதிருப்தியை சமாளிப்பதற்காக ஒரு தமிழ் ஊடகம் ஒன்றின் உதவியுடன் முன்கூட்டியே சில உறுப்பினர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படக் காரணம் இனிவரும் நாட்களில் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மாறாகவும் 76 ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு மாறாகவும், 77 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய மக்கள் ஆணைக்கு எதிராகவும் தான்தோன்றித் தனமாக தயாரித்து வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிக்க தடையாக இருக்க கூடியவர்கள் என்று கருதப்படும் அரசியல் கட்சிகள் எதனையும் சாராத கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களை இல்லாமல் தடுப்பதன் மூலம் அவர்களிடம் இருந்து தமது திட்டத்திற்கு வரக்கூடிய எதிர்ப்புக்களை இல்லாமல் செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

No comments: