Wednesday, 2 May 2007

பிரித்தானிய அரசியல் தலையீடு ஐ.நா.சபையின் இராணுவ தலையீட்டுக்கு முதற்படி!

இலங்கை அரசு - விடுதலைப் புலிகள் - நோர்வே அரசுமுத்தரப்பினரின் உச்சிமாநாடு விரைவில் லண்டனில்

பிரிட்டிஷ் அனைத்துக் கட்சிக் குழுவின் ஆதரவில் நடத்துவதற்கு ஏற்பாடு லண்டன்,மே 2

இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, நோர்வே அரசாங்கம் ஆகிய முத்தரப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றும் உச்சி மாநாடு ஒன்று விரைவில் இங்கு நடைபெற உள்ளது.ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவுவதற்கான பிரிட் டிஷ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிக் குழு உச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கெய்த் வாஸ் தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (அ.க.நா.கு) நேற்றுக் கூடி இந்த முக்கிய முடிவை மேற்கொண்டது.இங்கைத் தமிழர்களுக்கு நீதியுடனும் கௌரவத்துடனுமான ஒரு தீர்வைப் பெற் றுக் கொடுப்பதற்கென பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று நேற்று உருவாக்கப் பட்டது.மேற்படி குழு நேற்று அதன் தலைவரும் முன்னாள் வெளிவிவகார காமன் வெல்த் அமைச்சருமான தற்போதைய தொழிற் கட்சி எம்.பியுமான கெய்த் வாஸ் தலை மையில் முதன்முறையாகக் கூடி மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தது.இலங்கை அரசு, விடுதலைப் புலிகள், நோர்வே அரசு ஆகியவற்றின் பிரதிநிதி களை லண்டனுக்கு அழைத்து உச்சி மாநாடு நடத்துவது என்பதே அந்த முடிவுகளில் முதலாவதாகும். *காமன் வெல்த்தின் செயலாளர் நாய கம் டொனால்ட் மக்கினொனை அழைத்து இலங்கை இனப்பிரச்சினையின் தற் போதைய நிலை, இப்போதைய தடங்கல் நிலையை நீக்குவது என்பன குறித்து முத்தரப்புப் பிரதிநிதிகளுடனும் கலந்து ஆராய்வது.* மோதல்களால் மக்கள் பாதிக்கப் பட்ட, அதிலும் மிக மோசமாகப் பாதிக் கப்பட்ட இடங்களுக்கு அ.க.நா.குழு விஜ யம் செய்து நிலைமையை நேரில் கண்ட றிவது.ஆகிய ஏனைய இரண்டு முடிவுகளும் அனைத்துக் கட்சிக் குழுவில் நேற்றைய முதலாவது கூட்டத்தில் மேற்கொள்ளப் பட்டன. ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அனைத்துக் கட்சிக்குழு ஒன்று தமிழர் பிரச்சினைத் தீர்வுக்கு உதவும் பொருட்டு நியமிக்கப்பட்டது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றென அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கட்சிக் குழுவின் உதவித் தலைவராக சைமன் உறியுக் (எம்.பி), பிர தித் தலைவராக பேர்ன் பேர்ட்ஸ்ரோ (எம்.பி), செயலாளராக அன்ரூ பெல்லிங்கும் பணிபு ரிவர்.முக்கியமான முதற்படிஈழத் தமிழர் நலன் கருதி அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பது இலங்கைப் பிரச் சினைக்கு சமாதான வழியில் நீதியான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு உள்ள அக் கறையை எடுத்துக் காட்டுகிறது. இது ஒரு முக்கியமான முதற்படியாகும்.அ.க.நா.குழுவின் முயற்சி, இரு தரப்பு களும் 2002 ஆம் ஆண்டின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதித்துச் செயற்பட்டு ஆக்க பூர்வமான புதிய சுற்றுப் பேச்சுக்களை ஆரம் பிப்பதற்குப் பெரிதும் உதவுமென நான் நம்பு கின்றேன் என்று அனைத்துக் கட்சிக் குழு வின் தலைவரும் முன்னாள் வெளிவிவ கார அமைச்சருமான கெய்த் வாஸ் கருத்துத் தெரிவித்தார். (அ)

No comments: