TNA:
ஆளும் கட்சியின் தீர்வு யோசனைதொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது!அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
கொழும்பு, மே 2
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது.இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.தனது இராணுவ இலக்கை அடைவதற்கான அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட காலத்தைக் கடத்திய பிறகு, ஜனாதிபதி மஹிந்தவின் கட்சி முன்வைத்திருக்கும் இந்தத் தீர்வு யோசனை இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.இனப்பிரச்சினைக்கான தனது தீர்வு யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நேற்றுமுன்தினம் நடத்திய தனது மேதினப் பொதுக்கூட்டத்தில் வெளியிட்டிருக்கிறது. மாவட்ட மட்டத்தில் மாத்திரமே அதிகாரங்களைப் பகிரும் திட்டத்தை உள்ளடக்கிய அந்த யோசனை தமிழர் தரப்புக ளில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியி ருக்கிறது. அர்த்தமற்ற யோசனைஇது குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தவையாவது:தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்றுப் பல திருப்புமுனைகளைத் தாண்டி இன்று முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது. சுயநிர்ணய உரிமைக்கான இந்தப் போராட்டம் உலகின் மனச்சாட்சியை தொட்டு நிற்கின்றது. இந்த சமயத்தில் சர்வதேச சமுகத்தையும், அயல் நாடான இந்தியாவையும் சமாளிப்தற்கான ஒரு திட்டமாக அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக் கிறது. மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களைப் பகிரும் அர்த்தமில்லாத யோசனை அது. மாவட்டசபைகள், கிராம சபைகள் என்பவற்றை என்றைக்கோ தமிழர்கள் நிராகரித்து ஒதுக்கிவிட்டனர். அர்த்தமில்லாத இந்த மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வை தமிழர்களுக்கு உரிமை வழங்குவதற்கான தீர்வாக அக்கட்சி இப்போது முன்வைத் திருக்கிறது. தமிழ் மக்களுக்கு இதன் மூலம் பலத்த ஏமாற்றத்தை அரசு தந்திருக்கிறது. இந்த யோசனைத் திட்டம் பரிசீலனைக்கு எடுப்பதற்குக்கூட தகுதியற்றது;அருகதை யற்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதனைப் பரிசீலனைக்குக்கூட எடுக்கவே எடுக்காது.இப்போது சர்வதேச சமூகம் ஒரு தெளிவான நிலைக்கு வரமுடியும். ஐக்கிய இலங் கைக்குள் தமிழர்களோடு கூடி வாழ்வதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் தயாராக இல்லை என்பதே தகுதியற்ற இந்த அதிகாரப்பரவலாக்கல் யோசனை மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற யதார்த்தம்.இலங்கைப் பிரச்சினையில் இனிமேலõ வது சர்வதேச சமூகமும் இந்தியாவும் சரி யான கணிப்பை செய்து தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய நீதியான தீர்வு ஒன்றை பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும். இத னையே தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சங்கரி சித்தார்த்தன் பத்மநாபா அணி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகள்தமிழர் போராட்டத்தை ஆரம்ப நிலைக்குத் தள்ளியுள்ளன
சங்கரி சித்தார்த்தன் பத்மநாபா அணி கருத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன் மொழிவுகள் தமிழ் மக்களின் 50 வருட காலப் போராட்டத்தை மீண்டும் தொடங் கிய இடத்திற்கே தள்ளியுள்ளன.மூன்று தமிழ் கட்சிகள் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளன.தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதா வது:ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இனப் பிரச்சினை தீர்வுக்காக வெளியிடப் பட்டிருக்கின்ற ஆலோசனைகள் எவ் விதத்திலும் தமிழ் பேசும் மக்களினுடைய அபிலாசைகளை அண்மிக்கவில்லை என் பதால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய மூன்று கட்சிகளும் இப் பிரேரணைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை தெட்டத்தெளிவாக கூறிக்கொள்கின் றன.இந்த பிரேரணைகள் இனப்பிரச்சினைக் கான தீர்வை எட்டமுடியாதவை என்பது மாத்திரமல்லாது சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தடையாகவே இருக்கும்.தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள்மேலும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆளுங்கட்சிப் பிரேரணைகள் ஏனைய கட்சிகளின் பிரேரணைகளைக்கூட பின் தள்ளிவிடும் வகையில் அமைந்துள்ளன. இன்று நடைமுறையில் இருக்கும் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத் தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங் கப்பட்டிருக்கும் அதிகாரங்களை காட்டி லும் மிகக் குறைவான அதிகாரங்களையே இப்பிரேரணைகள் கொண்டிருக்கின்றன.இம் முன்மொழிவுகள் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான 50 வருட காலப் போராட்டத்தை மீண்டும் தொடங்கிய இடத்திற்கே தள்ளியுள்ளது.பாரிய அழிவுகளுக்குப் பின்னரும் 50 ஆண்டுகளாக ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு காணப்பட முடியாத இனப்பிரச்சினைக்கு சமஸ்டிக்கு குறைவான எத்தகைய தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே யதார்த்தமாகும் என்றுள்ளது
மேலக மக்கள் முன்னணி
சு.க. தீர்வு யோசனைஓர் அரசியல் மோசடி
மேலக மக்கள் முன்னணி சாடுகிறது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள தீர்வு யோசனைத் திட்டம் ஓர் அரசியல் மோசடி என்று மேலக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:1980களில் தமிழ்த் தேசியப் போராட்டம் தீவிர நிலையை அடைவதற்கு முன்னரே முன்வைக்கப்பட்டு அன்றைய சூழ்நிலையிலே தோல்வியைத் தழுவிய ஒரு திட்டத்தை இன்று மீண்டும் ஆளும்கட்சி அறிவித்துள்ளது. 80களின் பின்னர் நடைபெற்றுள்ள பாரிய போராட்டம், இழப்புகள், சர்வதேச அவதானம், இடைக்காலத்தில் தமிழர் தரப்புக்கும் இலங்கை அரசுக்கும் காணப்பட்டுள்ள கொள்கை இணக்கப்பாடுகள் ஆகிய எவற்றையுமே பொருட்படுத்தாமல் இந்தத் தீர்வுத்திட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இலங்கை நாட்டின் இறைமையையும், ஆட்சி உரிமையையும் தமிழர்களுடன் சமமாகப் பகிர்ந்துகொள்ள முடியாது என்ற பழைமைவாய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையையே இந்த யோசனைகள் மூலம் ஆளும்கட்சி வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த்தேசிய தரப்பினரையும், தமிழ் பேசும் முஸ்லிம் தரப்பினரையும், மலையக மக்களையும் ஏமாற்றி தொடர்ந்து சிங்கள பௌத்த அடிப்படைவாத கொள்கையை முன்னெடுப்பது இங்கு உள்நோக்கம் ஆகியுள்ளது. தமிழ்த் தேசியத்தை திருப்திப்படுத்து முன் அரசசார்பு, பங்காளி தமிழ் கட்சிகளைக்கூட இந்த யோசனை திருப்திப்படுத்திவிட முடியாது. அதுமட்டும் அல்லாமல் இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையே உரிய தீர்வு என அன்றே தொலைநோக்கு பார்வையுடன் கூறிய சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகர் பண்டார நாயக்கவையும் அவமானப்படுத்தும் விதத்தில் இந்த யோசனைகள் அமைந்துள்ளன.இத்தகைய அரசியல் மோசடி தீர்வு யோசனைகள் இணைந்து வாழவேண்டும் என்று எண்ணும் தமிழர்களையும் கூட பிரிவினையை நோக்கியே தள்ளுகின்றது. எனவே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் நிலையில் நாம் இல்லை. இத்தகைய அரசியல் மோசடிக்கு துணைபோகும் நிலையிலும் நாம் இல்லை. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஷ்லிம் கட்சி
அரசின் யோசனையாக வெளிவந்தால்மட்டுமே பரிசீலனை செய்ய முடியும்
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை அரசின் யோசனை அல்ல. அரசின் யோசனையாக வெளிவந்தால் மட்டுமே ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி அதனைக் கருத்தில் கொள்ளும் என்று அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறினார்.பத்திரிகைகளின் விமர்சனத்திற்கு உரிய விடயமாக மட்டும் இல்லாமல் சர்வதேச சமூகமும் இந்த யோசனை குறித்து தங்கள் கருத்துகளை முன்வைக்கும் போது, மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை ஏற்படும்.இந்த யோசனை குறித்து எடுத்த எடுப்பில் தீர்மானம் ஒன்றுக்கு வந்துவிடாமல், இது அரசில் அங்கம் வகிக்கின்ற பிரதான கட்சியின் யோசனை மட்டுமே என்ற நிலையிலேயே அணுக வேண்டும்.இந்த யோசனை அரசாங்கத்தினது யோசனையாக அமைவதாக இருக்க வேண்டுமெனில் முஸ்லிம் காங்கிரஸும் ஆதரிக்கின்ற ஒன்றாக வந்தால் அன்றி, அரசில் அங்கம் வகிக்கின்ற ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் அங்கீகாரம் பெற்றதாக வெளிப்பட்டால் அன்றி, அரசின் யோசனை என்று எவரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றார் அவர்.
JVP
புலிகளின் வான் பலத்தை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கம் தற்போது தேவையா?
கேள்வி எழுப்புகிறது ஜே.வி.பி. ப. பன்னீர்செல்வம்
விடுதலைப் புலிகள் தமது இறுதி துருப்புச் சீட்டான விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டு மக்களை பீதிக்குள்ளாக்கி பொருளாதாரத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் புலிகளின் விமானங்களை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையா? எனக் கேள்வியெழுப்பும் ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அரசாங்கத்தின் இந்த யோசனைகளை ஜே.வி.பி. எதிர்க்கின்றது. ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதென்றும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை பாராளுமன்ற மைதானத்தில் இடம்பெற்ற ஜே.வி.பி. யின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கத்தினது யோசனைகளாகவே நாம் கருதுகிறோம். கூட்டணி ஆட்சியில் அக்கட்சியே பிரதானமாக உள்ளது. அன்று செனட் சபை முறைமையை எதிர்த்த சுதந்திரக் கட்சி அதனை இன்று தீர்வாக முன்வைத்துள்ளது.
புதிய யோசனைகள் மாகாண சபையையும் மீறிய அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும். அத்தோடு, பிரிவினைக்கும் வித்திடும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வென்ற இந்த யோசனைகள் உண்மையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் மேற்குலக நாடுகளை சந்தோஷப்படுத்துவதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியில் சபைகள், கிராம இராஜ்ஜியங்கள், செனட் சபைகள் இவையனைத்தும் இனத்துவ ரீதியில் பிரிவினைகளை உருவாக்கும். அத்தோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக பிரதமர். எனவே, வேறுபாடு கிடையாது. இலங்கையைப் போன்ற சிறிய நாட்டில் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி ஜனாதிபதி உலக சாதனையை படைக்க முயல்கிறார்.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு முன்வைக்கப்படும். இந்தக் குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளே உள்ளனர். ஐ.தே.க. விலிருந்து பிரிந்து வந்த 18 பேரும் இருக்கின்றனர். இக்குழுவில் இருக்கும் தொண்டமானும் ஹக்கீமும் தத்தமது பிரதேசங்களுக்கு தனி அலகுகள் வேண்டுமென்றும் வேறும் பல யோசனைகளையும் முன்வைப்பார்கள். அதனையும் ஜனாதிபதி இணைத்துக் கொள்வார்.
இறுதியில், நாடு இனத்துவ ரீதியில் பிரிக்கப்படும். இதற்கு சர்வகட்சிகளும் ஏற்றுக்கொண்ட யோசனைகளென ஜனாதிபதி நழுவிவிடுவார்.
புலிகள் வான் மூலம் பேயாட்டம் ஆடுகிறார்கள். அதனை அழித்தொழிக்காது அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை அரசு முன்வைக்கிறது. தமிழ் மக்கள் இது போன்ற தீர்வைக் கேட்டார்களா? அவர்களுக்கு யோசிப்பதற்கே அவகாசம் இல்லாமல் இருக்கின்றது. எனவே, முதலில் அவர்களுக்கு ஜனநாயகத்தை வழங்க வேண்டும். எனவே, சர்வதேசத்தை மகிழ்விப்பதற்காகவே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கில் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றுவோம் எனக் கூறிக்கொண்டு இதுபோன்ற யோசனைகளை முன்வைப்பதால் பிரிவினைவாதத்தை தோல்வியடையச் செய்ய முடியாது. புலிகளை தோல்வியடையச் செய்ய வேண்டுமெனில், அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை கைவிட வேண்டுமென்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
No comments:
Post a Comment