இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து சகல கட்சிகளினதும் யோசனைகளிலிருந்து சரியான இணக் கம் ஒன்றினை ஏற்படுத்த முடியும் என்று அனைத்துக் கட் சிக் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண நம் பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் முன்வைக் கப்பட்டுள்ள நிலையில் அதிகாரத்தைப் பரவலாக்குவது தொடர்பான முனைப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா சு.கவின் யோசனையை ஜே.வி.பி. நிராகரித்திருக்கின் றது. மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அது அமைய வில்லை என்ற காரணத்திலேயே இந்த யோசனையை ஜே.வி.பி. நிராகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்த
சு.கவின் தீர்வு யோசனைகளையும்வைத்து அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு இறுதி ஆவணம் சமர்ப்பிக்கப்படும் பட் சத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான சரியான இணக்கம் ஏற்படும் என்று நான் நம்புகின்றேன் என்றார் திஸ்ஸ விதாரண.
நன்றி: யாழ் உதயன்
No comments:
Post a Comment