இந்தியாவிலிருந்து ஆயுதங்கள்; இரகசியப் பயணம் அம்பலம்!
இந்தியாவுக்குச் சென்ற அரசின் பாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வின் கோரிக்கைக்கு இணங்க சில இராணு வத் தளபாடங்கள் அடங்கிய பொருள்களை ஏற்றிய இந்திய விமானம் ஒன்று கொழும்புக்கு இரகசியப் பயணம் ஒன் றைமேற்கொண்டு அப்பொருள்களை இறக்கிவிட்டுச் சென்றிருக்கின்றது எனப் புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.நான்கு நாள் உத்தியோகபூர்வப் பய ணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்குச் சென்ற பாது காப்பு அமைச்சின் செயாலாளர் கோத்த பய ராஜபக்ஷ அங்கு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரா யணன், இந்திய கடற்படைத் தளபதி அட் மிரல் சுரேஸ்மேத்தா இராணுவத்தளபதி ஜெனரல் ஜே.ஜே.சிங் மற்றும் மூத்த பாது காப்பு அதிகாரிகளுடன் கடந்த மூன்று தினங் களாகப் பேச்சு நடத்திய பின்னர் கடந்த புதன்கிழமை நாடு திரும்பினார். புதுடில்லியின் இந்திய உயர் தரப் போடு கோத்தபய ராஜபக்ஷ நடத்திய பேச்சுகளின் போது புலிகளால் தற்போது ஸ்ரீலங்கா அரச படைகளுக்கு புதிதாக ஏற் பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து விரி வாக உரையாடியுள்ளார்.அப்போது அவற்றைச் சமாளிப்பதற் குத் தங்களுக்குத் தேவைப்படும் ஆயுத தளபாடங்களின் பட்டியல், இராணுவ உதவிகள் மற்றும் பாக்கு நீரிணையில் இந் தியா இலங்கை கடற்படைகளின் கூட்டு ரோந்து ஆகியவை குறித்த கோரிக்கைக ளையும் கோத்தபாய முன்வைத்தார்.இந்த நிலையில் இந்திய விமானப் படை யின் ஏ.என். 32 ரக விமானம் இரகசியப் பயணம் ஒன்றைக் கொழும்புக்கு மேற்கொண்டு சில இராணுவத் தளபாடங்களை வழங்கிவிட்டு திரும்பியிருக்கின்றது எனக் கூறப் படுகிறது.இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு பரந்த அளவிலான இராணுவத் தளபாட உதவி களை வழங்கி வருகின்றது. தாழப்பறக்கும் விமானங்களை கண்டு பிடிப்பதற்கு ஏற்கனவே இரண்டு ரடார் கரு விகளை வழங்கியிருந்தது. தற்போது மேலும் புதிதாக இரு ரடார் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
யுத்தத்தை நடத்திக் கொண்டே பேசலாம் என்கிறார் ஜனாதிபதி
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரச படைகள் ஒருபுறம் யுத்தம் நடத்திக்கொண் டிருக்கையிலே மறுபுறத்தில் அமைதித் தீர்வு குறித்து புலிகளுடன் பேசுவதற்குத் தாம் தயார் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.புலிகள் இணங்குவார்களானால் ஒக்டோ பர் 2006இல் பேச்சுகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அதனைத் தொடரலாம் என்றும் அதற்கு ஜனாதிபதி தயார் என் றும் அவரின் பேச்சாளர் சந்திரபால லிய னகே நேற்றுத் தெரிவித்தார்.""இன்று இப்போதுள்ள நிலைமை யில்கூட நான் பேசத்தயார். நான் முழுமை யான ஜனநாயகவாதி. அமைதித் தீர்வில் நம்பிக்கை கொண்டவன்'' என்று கூறி யிருக்கிறார் ஜனாதிபதி.""யுத்த நிறுத்த ஒப்பந் தம் சுமார் 8 ஆயி ரம் முதல் 9 ஆயி ரம் தட வைகள் மீறப்பட்டுவிட்டன. ஆனால் நாங்கள் இன் னும் யுத்த நிறுத்தத்தைக் கைவிட வில்லை. '' என்றார் ஜனாதிபதி
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை
கண்காணிப்புக் குழு அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக எந்த விதமான மாற்றமும் தம்மைப் பொறுத்தமட்டில் இல்லை என்று இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதனையா வது கொண்டுவருவதா அல்லது ஒப்பந் தத்தை ரத்துச் செய்வதா என்பது குறித்து அரசு தமக்கு எந்தவித அறிவுறுத்தல்களை யும் இதுவரை விடுக்கவில்லை என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்க ளுக்கு அமைய போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது என்றும் அது தெரிவித் துள்ளது.
No comments:
Post a Comment