3 வாரங்களுக்குள் வந்து மீளக்குடியமருங்கள் இல்லையேல் உங்கள் காணி உரிமை ரத்தாகும்!
இடம்பெயர்ந்த பன்குளம் மக்களுக்கு எச்சரிக்கை. மூன்று வாரங்களுக்குள் வந்து மீளக் குடியமருங்கள். இல்லையேல் உங்களது காணி உரிமைகள் ரத்துச்செய்யப்பட்டு அவை வேறு ஆள்களுக்குச் சொந்தமாக வழங்கப்படும்.இவ்வாறு பன்குளத்தைச் சொந்த இட மாகக் கொண்டு இப்போது திருகோண மலை நகரில் உள்ள நலன்புரி நிலையங் களில் தங்கி இருக்கும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எச்சரிக்கும் பணிப்புரை மொறவேவ(பன்குளம்) பிரதேச செயலரினால் நேற்று விடுக்கப்பட்டது. பன்குளம்(மொறவேவ) பிரதேசத்தில் வாழ்ந்த 200 தமிழ்க்குடும்பங்கள் அண் மைக் கால இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து, திருகோணமலை நக ரில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி யுள்ளனர்.அவர்களைச் சொந்த இடத்துக்குச் சென்று மீளக்குடியமருமாறு பல தடவை கள் அரச அதிகாரிகள் வற்புறுத்தி வந்தனர். தமக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று கோரியும் அடிப்படை வசதிகள் வழங்குமாறு கேட்டும் அப்பிர தேச மக்கள் மீளக் குடியமர பின்னடித்து வந்தனர்.அதனைத் தொடர்ந்தே மூன்று வாரங் களுக்குள் மீண்டும் அங்கு வந்து குடியமர வேண்டும் என்றும் இல்லையேல் காணி உரிமைகள் ரத்துச் செய்யப்பட்டு வேறு ஆள் களுக்கு வழங்கப்படும் என்றும் பிரதேச செயலர் நேற்று அறிவித்துள்ளார்.மேற்படி அறிவித்தலைத் தொடர்ந்து பன்குளம் தமிழ் மக்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் உள்ளனர்.
ரயில் நிலைய அறையில் அமர்ந்திருந்தவர்களே வெளியே கூட்டிச்செல்லப்பட்டுக் கடத்தப்பட்டனர்
மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் இருவரும் கோட்டை ரயில் நிலையத்தின் அறைக்குள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கே வந்த சிலர் தொண்டர் களை வெளியே அழைத்துச் சென்று அங்கு நின்ற வெள்ளை வானில் கடத்திச் சென்றனர்.இவ்வாறு செஞ்சிலுவைச் சங்க அதி காரி ஒருவர் உதயனுக்குத் தெரிவித்தார்.அவர் இச்சம்பவம் குறித்து மேலும் கூறியதாவது:கல்கிஸையில் இடம்பெற்ற இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையில் மட்டக்களப் புக் கிளையில் இருந்து ஆறு தொண்டர் கள் கலந்துகொண்டனர்.வெள்ளிக்கிழமை பிற்பகல் பயிற்சிப் பட்டறை முடிந்ததும் அந்த ஆறுபேரும் இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப் புக்குச் செல்லும் ரயிலில் மட்டக்களப்பு செல்வதற்காக பிற்பகல் 5.30 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.ரயில் நிலையத்தில் ஆண்கள் அமரும் அறையில் ஆறுபேரும் அமர்ந்திருந்த சமயம் வெள்ளைவான் ஒன்றில் அங்கே வந்த சிலர் அவர்களில் இருவரை கடத்திச் சென்றுள்ளனர். மீதி நான்கு பேரும் இந்தத் தகவலை எமது கொழும்புத் தலைமையகத்திற்கு அறிவித்தனர்.இதனைத் தொடர்ந்து நாம் பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக் கும் முறைப்பாடு செய்தோம்.மறுநாள் சனிக்கிழமை இவர்கள் இரத் தினபுரியில் கொலை செய்யப்பட்டு சட லங்களாகப் போடப்பட்டிருந்தனர். என்று தெரிவித்தார்.வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்புக்கு வருவதைக் கட் டுப்படுத்துவதற்காக பொலிஸார் புதிய பாது காப்பு ஏற்பாடுகளை அறிவித்த ஓரிரு நாள்களில் இவ்வாறு இரு தமிழ் இளை ஞர்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப் பட்டிருக்கின்றனர்.இலங்கையில் மனிதாபிமானப் பணி களில் ஈடுபடுவோரின் பாதுகாப்புக் குறித்த கவலைகள் சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காலகட்டத்தில் இந்தப் படுகொலை கள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.
நன்றி: யாழ் உதயன்
ஜப்பானிய விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வருகிறார்
நிஷாந்தி
சமாதான செயற்பாடுகளில் தற்போதைய நிலவரம், எதிர்கால நிலைமை குறித்து ஆராய்வதற்க்கு ஜப்பானின் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி 5 நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருவதாக ஐப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து அரச பிரதிநிதிகளுடன் யசுசி அகாசி சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார், அதேவேளை விடுதலை புலிகளது பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான முயற்சிகளை எடுக்கப்படுவதாகவும் எனினும் இது குறித்து இதுவரை எதுவித தீர்மானமும் மேற்கொள்ளபடவில்லையெனவும் ஐப்பான் தூதரகத்தின் முதலாது செயலாளரும், ஊடக இணைப்பாளருமான டகாஷியாட்டோ தெரிவித்துள்ளார்.
நன்றி: வீரகேசரி
No comments:
Post a Comment