'' அகசுநிர்ணய உரிமை '' அதிகாரப்பரவலாக்கம், என்றால் இந்த '' உலகத்தின் அசைவியக்கம் '' என்பது பொருளாதார உலகமயமாக்கலே!
இந்தப்பாதையில் தமிழீழம் காண்பது பகற்கனவே!! enb
இருமுனைப் போரை தமிழினம் இன்று சந்தித்து நிற்கின்றது
கணனி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்ச்செல்வன் உரை தமிழினம் இருமுனைப்போரை இன்று சந்திக்கின்றது என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் "கணனி நுட்பம்' என்னும் மாத மலரை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இப்படிக் கூறினார்.......
தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:தமிழினம் இரு முனைப் போரைச் சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாம் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக் கொள்ள முடியாவிட்டால் இந்தப் பூமிப் பந்தில் வாழ முடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்.இந்த உலகப் பந்தில் வாழ வேண்டுமாக இருந்தால், உலகப் பந்தில் நிலைக்கவேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கதோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தைப் பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணனி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் புகுந்துள்ளதால் கணனி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள்ளும் ஆழமாகக் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.மனிதனின் அசைவியக்கத்தின் ஓர் உறுப்பாக இன்று கணனி மாறிவிட்டது. கணனி யுகத்துக்குள் நாங்கள் புகுந்து கொள்ளாவிட்டால் இந்த உலகப் பந்தில் எங்களை நிலைப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம். எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு மலரப் போகும் எங்களுடைய தமிழீழம் இந்த உலகப் பந்தில் உயர்ந்து நிற்கும் என்ற உன்னதமான நம்பிக்கையை இன்று ஏற்படுத்தியுள்ளது. அதனுடைய உயர்ச்சியும் தொடர்ச்சியுமாகத்தான் இச்சஞ்சிகையின் வெளியீடு அமைந்துள்ளது. என்று சு.ப.தமிழ்ச்செல்வன் தனது சிறப்புரையில் தெரிவித்தார்
No comments:
Post a Comment