செய்தி ஆய்வுரை விமர்சனக் கட்டுரை
இனவெறிப்பாசிச ராஜபக்ச அரசு கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு பலத்த கண்டனக் குரல்கள் கிழம்பியுள்ளன.
இதன் பின்னணி என்ன?
ராஜபக்ச அரசாங்கம் மிகச்சிறுபான்மை வாக்கு வேறுபாட்டால் ஆட்சிக்கு வந்து ஜே.வி.பி இன் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. பின்னால் யு.என்.பி பா.உ க்களை விலை கொடுத்து வாங்கி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது.
ரசியசமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின்னால், உருவாகிய ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்புக்குத் தலைமை ஏற்றிருக்கும், உலக ஜனநாயகக் கடவுள் அமெரிக்காவோ இக்காலத்தில், ஆப்கான் யுத்தத்தில் வட கூட்டமைபுடன் கூட்டு, சட்டவிரோத ஈராக் யுத்தம், ஈராக் யுத்தத்தில் இராணுவ சர்வாதிகாரி பாகிஸ்தான் முஸாரப்புடன் கூட்டு, குவாண்டனாமோ சிறை, சிறைச்சாலைச் சித்திரவதைகள், திரை மறைவுச் சிறைச்சாலைகள்.சதாம் படுகொலை...என இலங்கையின் ஜனநாயக சாதனைகளை ஒரு மூலையில் ஒதுக்கிவிட்டு முன்னணியில் ஓடுகிறது!
மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடிக்குள் ஏகாதிபத்தியவாதிகள் சிக்குண்டுள்ளதும், அதிலும் ஐரோப்பிய ஜூனியனுக்கு அமெரிக்கா பின்தங்கிவிட்டதும், மீண்டும் உலகை மறுபங்கீடு செய்துகொள்வதற்காக, மூன்றாவது உலகப் போரை நோக்கி உலகத்தை தள்ள, அமெரிக்காவை நிர்ப்பந்திக்கிறது.
இதில் ஆசியாவில் சீனாவின் சவாலைச்சமாளிக்க இந்தியாவை இராணுவ ஒப்பந்தத்தின் மூலம் அடிமைப்படுத்தி, சீனாவுக்கு எதிராக ஏவி விடத்திட்டமிட்டுள்ளது. இலங்கையை ஒரு இராணுவத்தளமாக்க முயலுகிறது. இதன் காரணமாக தனது பிராந்திய ஏஜெண்டான இந்தியாவை முதலில் அனுப்பி திருகோணமலை எண்ணெய்க்குதங்களை கைப்பற்றியுள்ளது. இப்போது கிழக்குமாகாண தமிழ் மக்களின் புவியியல் மற்றும் குடிசார் அமைப்பை அமெரிக்க இராணுவத்தளத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் ராஜபக்சவின் யுத்தத்திற்கு அமெரிக்க இஸ்ரேலிய இந்திய அரசுகள் பின்னணியில் இருந்து கூட்டு ஒத்துழைப்பு வழங்குகின்றன. ராஜபக்ச அரசு ''விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில்'' அந்நிய முதலீட்டுக்கு அழைப்பு விட்டிருக்கிறது. 'கொடையாளி' அகாஸி இம் முறை தனது பயணத்தை கிழக்கோடு நிறுத்திக் கொண்டார்!
ராஜபக்ச அரசு 'சர்வதேச சமூகத்தின்' துணையோடு தமிழர்தாயகத்தை, அமெரிக்காவின் ஒரு, மாதிரி மாகாண இராணுவத் தளமாக மாற்றி வருகின்றது.
இந்தப் புதிய, இதற்குமுன் எந்த இலங்கை அரசுத் தலைவருக்கும் கிடைத்திராத வாய்ப்பைப் பயன்படுத்தி, தனக்குள்ள எல்லைகளுக்குள் அரசியல் இரணுவ பொருளாதார வழிகளில் நாட்டை ஏகாதிபத்திய வாதிகளுக்கும் , இந்தியாவுக்கும் விற்று தானும் ஒரு முஸாரப் ஆகி முடிந்தவரையும் வாரிச்சுருட்டிக்கொள்ள கங்கணம் கட்டி நிற்கிறது ராஜபக்ச அரசு-MR Brothers &co
இந்த கேடுகெட்ட தேசத்துரோக மக்கள் விரோத குறிக்கோளை அடைய,

1) நாடு பிரிக்கப் படுவதைத் தடுப்போம்!
2)பயங்கரவாதத்தை ஒழி்ப்போம்!!
3)அபிவிருத்தியை நிறுத்தோம்!!!
என்கிற இலங்கை ஆளும் கும்பல்களின் வழக்கமான முழக்கங்களுக்குள் ஒழிந்திருந்து தற்போதைய சூழ் நிலையில் அவற்றை புதிய எல்லைகளுக்கு இட்டுச்சென்றுள்ளது.
முஸாரப்புக்கு அதிகாரத்தை மையப்படுத்த இரணுவச்சதியும் காக்கி சீருடையும் தேவைப்பட்டது, இந்த அசெளகரியத்தை 1978 அரசியல் யாப்பு நீக்கி இலங்கையின் ராஜாக்களையும், ராணிகளையும் வேட்டி சேலையோடு இராணுவ சர்வாதிகார பாசிச ஆட்சியை நடத்த வழியமைத்துள்ளது.
* பாசிச அரசுமுறையைப் பலப்படுத்த 2006 இல் 69.5 பில்லியன் ரூபாய்களாக இருந்த படைப்பெருக்கச் செலவினத்தை, 2007 இல் 139.6 பில்லியன் ரூபாய்களாக- இரு மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது.
* பயங்கரவாதச் சட்டத்துக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது,
* இராணுவத்துக்கு பொலிஸ் கடமைகளை ஆற்றும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன,
* பாசிச அவசரகாலச்சட்டம் மாதாமாதம் அமூலாகிறது,
* பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது,
* எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், மிரட்டப்படுகின்றனர், கடத்தப் படுகின்றனர், காணாமல் போகின்றனர், பின் சடலமாக கண்டெடுக்கப்படுகிறனர்,
* தேவைப் படும் போது ''புலிகளின் ஆதரவாளர்கள்'', ''புலிகளுக்கு உதவியவர்கள்'' என்ற குற்றச்சாட்டு கப்பம் வசூலிப்பதில் இருந்து கழுத்தறுப்பதுவரைக்கும் பயன் படுத்தப்படுகிறது,
* நீலம், காவி, சிவப்பு என ஒருபுறமும் வீணை தேவி, நெருப்பு என மறுபுறமும் பாதாளக்குழுக்கள் பல்வேறு வர்ணங்களில், வடிவங்களில்...ஒரு இரவு அரசாங்கம் நடத்துகின்றனர்.
* இந்த அரசாங்கத்தின், சட்டத்தின் முன் யாவரும் சமம். சட்ட வாதிகள், சமயவாதிகள், கல்வியாளர்கள்,கன்னிப்பெண்கள், போராளிகள் பொதுமக்கள்,
விவசாயிகள் வியாபாரிகள், களியாட்டக்காரர்கள் வெளிநாட்டுக்காரர்கள்...
எல்லோரும் மிரட்டப்படுவார்கள் கடத்தப் படுவார்கள், கப்பம் அறவிடப் படுவார்கள் இல்லையேல் கழுத்தறுக்கப்படுவார்கள் சில அதிஸ்டசாலிகள் மட்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்!!
இவ்வாறு பிற்போக்கும் பயங்கரமும் பாசிசமும் தலைவிரித்தாடுகிறது ராஜபக்சவின் ஆட்சியில்!
ஒரு சிறு கும்பலைத்தவிர எல்லோருமே அஞ்சி நடுங்கி வாழ்கிறார்கள்.
குறிப்பாக கொழும்பில் அனைவரது இருப்பும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் இவர்கள் அனைவரதும் வாழ்வுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் இவற்றில் எவையும் சட்டவிரோதமானவை அல்ல! தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் தேச பக்த நடவடிக்கைகளேயாகும்.
அண்மையில் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் '' புலிகள் தமிழர்களுடைய அமைப்பு மட்டுமல்ல அதில் முஸ்லிம், சிங்கள பயங்கரவாதிகளும் உள்ளனர் '' என ராஜபக்ச தெரிவித்திருந்தது அவர் இந்த யுத்தத்தை விஸ்தரிக்க திட்டமிடுகிற எல்லைகளைக் காட்டுகிறது.
சிறுபான்மைத்தேசிய இனத்தின் மீதான அடக்குமுறைக்கு துணைபோன சந்தர்ப்பவாதம் மீண்டும் ஒரு தடைவை பெருந்தேசிய இனத்தின் அனைத்து சமூகப்பிரிவுகளையும் ராஜபக்சவின் பாசிச அடக்குமுறைக்கும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கும், இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கும் அடிபணிய வைத்துள்ளது. இப்போதும் அவர்கள் வரலாற்றிலிருந்து படிப்பினை பெறவில்லை.
அவர்கள் ஒருசேர கிளர்ந்தெழுந்து '' தமிழர்களுக்கு கொழும்பில் வாழும் உரிமைக்காக'' போர்க்கொடி உயர்த்துகிறார்கள். இலங்கையில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முழங்குகிறார்கள்! இது எவ்வளவு வலுவான ஜனநாயக கோரிக்கை பாருங்கள்:
*அரசாங்கம் தவறான தகவலின் விளைவு என காரணம் சொல்லியுள்ளது!
* நீதி மன்றம் உடனடியாக இந்த விரட்டியடிப்புக்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
* உரிமைக்கு குரல் கொடுத்து நீதி விசாரணை நடக்குமென்றும், உறவுக்கு கை கொடுத்து மீண்டும் கொழும்புக்குத் திரும்பி வருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
* ஒரு பொலிஸ் அதிகாரி வவுனியா வந்து சேர்ந்த தமிழர்களை தன் 'தோளில் சுமந்தாவது' மீண்டும் கொழும்பில் கொட்டுவேன் என தனது கடமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு ராஜபக்ச அரசு சிங்களப்பெருந்தேசிய இன ஜனநாயகத்தின் பசியை இரண்டே நாளில் அடக்கிவிட்டது!!
ஆனால் இந்த சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு பெரிய விலை காத்துக் கிடக்கிறது;
பல்வேறு அரசுகள், அரசியல் கட்சிகளின் நிலை:
இடதுசாரிகள்
இடது சாரிகள் எனச்சொல்லப்படும் சிவப்புச்சட்டை அணிந்த சில மனிதர்கள் கோட்டைப் புகையிரதத்துக்கு முன்னால் கண்டனக் கர்ச்சனை செய்து இந் நடவடிக்கையை நாஜி ஜேர்மனியுடன் ஒப்பிட்டுள்ளனர்!
மனித உரிமைக் கோமகர்கள் சட்டவாதம் பேசி தற்காலிக தடை உத்தரவு பெற்றுள்ளனர். வழக்கம் போல இதையும் மனித உரிமை மீறல் எனக்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
SLMC
இந்நடவடிக்கையை 1983 ஜூல இனப்படுகொலையைக் காட்டிலும் மோசமானது எனக்கண்டித்துள்ளது. இந்தக் கட்சி இரண்டு தினங்கள் முன்புதான் அவசரகாலச் சட்ட நீட்டிப்பை ஆதரித்து வாக்களித்திருந்தது!
WPPF
அரசாங்கத்திற்கு தான் வழங்கும் ஆதரவை மறுபரிசீலிக்க நேரிடும் என எச்சரிக்கிறது. 1958, 1961, 1977, 1981, 1983 இவற்றையெல்லாம் பரிசீலிக்காமலா இந்தக் கட்சி ஆதரவு வழங்கும் முடிவை எடுத்தது?!
கொழும்பு நகரத்தின் பாதுகாப்புக்காக விடுதிகளில் தங்கியிருந்த 500 பேரை வடக்கு கிழக்குக்கு நாடுகடத்தியதற்கு எதிராக இந்தக்குதி குதிக்கும் ' கொழும்பு மனித நேய ஜனநாயகவாதிகள்' , கிழக்கு மாகாணம் தமிழர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப்பட்டு, அமெரிக்க இராணுவத்தளமாக மாற்றப்படுவதை எதித்து மூச்சே விடாதது ஏன்?? இவர்களுடைய அரசியல் யாப்பு பாதுகாப்பு எப்படி தமிழர் தாயகத்தைப் பறித்தெடுத்துக் கொண்டது?
கொழும்பில் இருந்து தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டது இதுதான் முதல் தடவையா என்ன?
விடுதி விவகாரம் ஒரு சம்பவம்! கிழக்கு மாகாணம் சரித்திரம்!!
இந்த கொடிய அநுபவங்களில் இருந்து, தமிழர்கள் 25 ஆண்டுகளாக இரத்தம் சிந்தியது கொழும்பில் வாழும் உரிமைக்காக அல்ல, பிரிந்து செல்லும் உரிமைக்காக!
அமெரிக்கா
இலங்கையின் அரசியல் யாப்பு உத்தரவாதம் செய்யும் '' இலங்
கையர் எவரும் இலங்கையில் எங்குவேணுமானாலும் வாழுவதற்கு உள்ள உரிமையை '' இது மீறுவதாக கண்டித்துள்ளது!
சில தினங்களுக்கு முன்னர் தான் இலங்கையில் இனப்பிரச்சனை இல்லை என்று இந்த நாடு அறிவித்தது. இரண்டே நாளில் மக்கள் ஒன்று கலந்து வாழ்ந்த உரிமை மீறப்பட்டது எப்படி?
பெரியாரின் திராவிடப் பிஞ்சுகளும், ஏன் பிரபல்ய இந்திய நாளேடுகளும் இந்தக்கும்பலோடு கோவிந்தா போடத் தவறவிலை. இந்த கோவிந்தாவுக்குப் பின்னால் ஐயகோ மீண்டும் இந்தியா!!
ஆசியாவின் மனித உரிமைகளுக்கான அமைப்பு; இந்திய மற்றும் தி.மு.க வின் தலையீட்டைக் கோரியுள்ளது. இதையே பெரியாரின் திராவிடப் பிஞ்சுகளும், இந்தியப் பத்திரிகைகளும் கோரியுள்ளன.....கூடவே ரணில் விக்கிரமசிங்காவும்!
500 தமிழர்களைக் காப்பாற்ற இந்தியா தலையிட வேண்டுமென்கிறார்.
ஒட்டு மொத்தமாக இந்த கும்பல் எல்லாமுமே இரண்டுவகையான அந்நிய தலையீட்டை இலங்கையில் கோருகின்றன.
1) இலங்கையின் மனித உரிமை மீறலில் ஐ.நா.தலையீடு!
2) புலிகளின் பயங்கர வாதத்தில் இருந்து இலங்கையை காப்பாற்ற இந்திய தலையீடு!
இந்த இரண்டு சூறாவளிகளும் ஒன்று கலந்து மற்றொரு சுனாமியால் இலங்கையை அடித்துச்செல்லும் திசை வழியில் தான் இந்த அரசியல் போக்கு நகர்கிறது.
ஐ.நா.வின் அமைதிப்படை தான் அது!
கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களைக் கூட்டி அள்ளி வட கிழக்கில் கொட்டியதும், கிழக்கு மாகாணத்தைத் துண்டாடியதும் இறைமையுள்ள இலங்கை அரசின் சட்டபூர்வ நடவடிக்கைகளே!
கேள்வியெல்லாம் இந்த இறைமையின் கட்டாயப்பிடி தமிழர்களுக்கு சுருக்குக் கயிறாக மாறிவிட்டதை நாளாந்த சம்பவங்கள் நிரூபிக்கிறபோது , அவர்களின் 25 வருடகால ஆயுதப்போராட்டத்தின் அடிபடைக் கோரிக்கையான பிரிந்து செல்லும் உரிமை சரியானதா? நீதியானதா? என்பதேயாகும்!!
இந்தக்கேள்வியை எழுப்பி விஞ்ஞான நேர்மையோடு தமது அரசியல் நிலைப்பாட்டை சீர்செய்துகொள்வதற்குப் பதில், ராஜபக்சவின் அடக்குமுறைதாண்டவத்தில் குளிர் காய்ந்து, மனித உரிமை, அரசியல் யாப்புரிமை என தமது சொந்த சரக்குகளை விற்கமுயலும் எவரும் தமிழர்களை ஏய்த்துப்பிழைப்பவர்களும், அவர்களை எதிரிகளின் சித்தாந்த சிறைக்குள் அடிபணிய வைக்க முயலுபவர்களுமே ஆவர்!!!

இதன் மூலம் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு துணை போவது மட்டுமல்ல, சிங்கள உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் துணையாகிறார்கள்!
No comments:
Post a Comment