வீரகேசரி நாளேடு-14/06/2007
தீவுப்பகுதிகளில் தற்போது கடும் வரட்சி நிலவிவருகின்றது.
இதனால் இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் தற்போது பவுசர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. புங்குடுதீவு, சரவணை, அம்பிகை நகர்போன்ற பகுதிகளிலேயே குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கென இடர்முகாமைத்துவ அமைச்சு 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, வேலணை பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கமைய மண்டைதீவுப்பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment