Wednesday, 13 June 2007

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்து

ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங் கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான வி.நாராயண சாமி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார்.இலங்கையின் உள்விவகாரத்தில் மத்திய அரசு நேரடி யாகத் தலையிடவில்லை என்றாலும் அங்கு வாழும் மக் களின் பாதுகாப்பை அது உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச் சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியுள்ளதாக வும் அவர் மேலும் கூறினார்.

No comments: