Sunday, 17 June 2007

அகசுயநிர்ணயஉரிமை பெற்றுத்தந்த அடுத்த பரிசு!

''அகசுயநிர்ணய உரிமை''

தேசத்தின் கறை

திருகோணமலை, சம்பூர்,மூதூர்

அதிஉயர் பாதுகாப்பு வலயமானது!
ஆயிரக்கணக்கான தமிழர் மீள் குடியேற முடியாது!
[17 - June - 2007] தினக்குரல்
நீதிமன்றம் செல்ல தமிழ்க் கூட்டமைப்பு ஆராய்வு
பி. ரவிவர்மன்
==================
ENB 01 12 2006
Eastern war front and its politics:
More than 100,000 people displaced in east

Rajapaksa government waged an anti people war to remove Ceylon people from their land
by fire power, to make Trincomale harbour safe for USA's neo-colonial agenda in Asia.
UK, EU, ISRAEL and INDIA helping Rajapaksa's anti people war, UN, NORWAY, NGOs -imperialist agencies hiding this truth and raise their voice for " freedom of movement" for 'displaced people' !!

War front of the EAST, and its immediate aim is another High Security Zone in Eelam, around Trinco harbour.
Unite and defeat!
Our mother lands (Sri Lanka and Eelam)
shouldn't be an ISRAEL OF ASIA.
ENB
ENB 01122006
========================

தினக்குரல் 17/ஜுன்/2007

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் (கிழக்கு), சம்பூர் பிரதேசங்கள் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இது தொடர்பான சட்ட நடவடிக்கையெடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதுடன் இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மூதூர் (கிழக்கு), சம்பூர் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக விசேட வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டு இந்த உத்தரவை அமுல்படுத்தும் தகுதிவாய்ந்த அதிகாரியாக கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மூதூர் (கிழக்கு), சம்பூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக கிழக்கே மேற்குக் கரையோரப் பிரதேசங்கள் பவள் பொயின்ட், இலங்கக்கந்த, கல்லடிச்சேனை, உப்பூறல் அடங்கிய கடற்கரையோரப் பிரதேசங்களும் தெற்கே உப்பூறல், செல்வாநகர், தோப்பூர், பச்சனூர் பிரதேசங்களும் மேற்கே கல்லடிச்சேனை ஆற்றின் மேற்குக்கரை, பச்சனூர், கல்லடிச்சேனை தெற்கு, மூதூர், கல்லடிச்சேனை வடக்கை எல்லையாகவும் வடக்கே கொட்டியாக்குடா தெற்குக்கரை, கல்லடிச்சேனை ஆறு, சம்பூர், பவள்பொயின்ட் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகவே இந்த அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பான தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரி. துரை ரட்ணசிங்கம், இது குறித்து மேலும் தெரிவிக்கையில்;
மூதூர் கிழக்கு, சம்பூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலுள்ள சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் அபகரிக்கப்பட்டுள்ளது. 10 பாடசாலைகள், சம்பூரிலுள்ள புராதன பழைமைவாய்ந்த ஷ்ரீபத்திரகாளியம்மன் ஆலயம், 600 இற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் என்பன அழிக்கப்படவுள்ளன.
வளமான விளை நிலங்களையும் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாக கொண்ட இப்பிரதேச மக்கள் பாட்டாளிபுரம், நல்லூர் போன்ற தரிசு நிலப் பிரதேசங்களிலேயே குடியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.
பாரம்பரிய நிலத்தையும் வளமான விளை நிலங்களையும் இழக்கவுள்ள நிலையில் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பு வசதிகளுமின்றி இப்பிரதேச மக்கள் அரசின் இந்த நடவடிக்கையால் தவிக்கவிடப்பட்டுள்ளனர்.
அண்மைய கால போர் நடவடிக்கைகளால் தமது வாழ்விடங்களையும் உடைமைகளையும் இழந்து போயுள்ள இப்பிரதேச மக்கள் அதிஉயர் பாதுகாப்பு வலய பிரகடனத்தால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களையும் வளங்களையும் அபகரிக்கும் முயற்சியை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்திய அரசின் கவனத்திற்கும் கொண்டுவரவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், இந்த பிரதேசத்தை அரசு பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்த பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் வேறிடங்களுக்கு மீள் குடியேற்றப்படவுள்ளதாகவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: