கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவது இனிமேல்
நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
-அரசாங்க பேச்சாளர் உத்தியோகபூர்வ அறிவிப்பு
கொழும்பு நகர விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்படுவது இனிமேல்
நடைபெறமாட்டாது என்று உத்தரவாதம் வழங்க முடியாது. ஜன நாயக நாட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.இவ்வாறு நேற்று உத்தியோகபூர்வமாக அறி வித்தார் தகவல் ஊடகத்துறை
அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா.அமைச்சரவை முடிவுகளைத் தெரிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அச்சமயம் செய்தியாளரொரு வர்எழுப்பிய
கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது:கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மக்களை வெளியேற்றியமை குறித்து பிரத மர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்த கருத்தே அரசின் நிலைப்பாடாகும். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்த கருத்து அவரின் சொந்தக் கருத்தாகும். ஜனநாயக நாட்டில் தனது சொந்தக் கருத்தை வெளியிடும் உரிமை எவருக்கும இருக்கிறது. கொழும்பிலிருந்து தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிய விவகாரம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதை மேலும் கிளறிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றார்.
செய்தியாளர்: அரசில் அங்கம் வகிக்கும்
இரு முக்கியஸ்தர்கள் கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மக்களை
பலவந்தமாக வெளியேற்றியமை குறித்து இருவேறு கருத்துகளைத்
தெரிவித்துள்ளனர். ஏன் இந்தக் குளறுபடி?
அமைச்சர்: இதில் எதுவித குளறுபடியும் இல்லை. சிலர் இதை பெரிதுபடுத்த முனைகின்றனர். அரசின் நிலைப்பாட்டை பிரதமர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே இது குறித்து தமது சொந்தக்கருத்தையே தெரிவித்துள்ளார்.
செய்தியாளார்: இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறுமா?
அமைச்சர்: இதற்கு உத்தரவாதமளிக்க முடியாது. ஜனநாயக நாட்டில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துகள் தொடர்பாக எனக்கு எதுவும்
தெரியாது. அவர் ஏ.எவ்.பிக்கு கூறிய கருத்துகள் சில செய்திப்பத்திரிகைகளில் வெளிவந்திருப்பதைப் படித்தேன்.
No comments:
Post a Comment