இலங்கை விவகாரத்தை இணைத்தலைமைகள் ஐ.நா. கொண்டு செல்லும் சாத்தியம்?
வீரகேசரி நாளேடு 19-06-2007
சர்வதேச சமூகம் யுத்தத்தை நிறுத்துமாறு விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்ததையடுத்து ஒஸ்லோவில் அடுத்த வாரம் கூடவுள்ள நான்கு இணைத் தலைமை நாடுகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளன.யுத்தத்தை நிறுத்துவதுடன் மனிதஉரிமைகள் மீறப்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு இணைத்தலைமை நாடுகள் கோரும் என்றும் அவ்வாறில்லாதபட்சத்தில் இலங்கைக்கான மேற்குநாட்டு உதவிகளை ஒடுக்குவது குறித்து பரிசீலிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இருநாள் கூட்டத்துக்கு ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஏனைய இணைத் தலைமை நாடுகளுக்கு நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இது ஒரு வழமையான சந்திப்பாக இருந்த போதிலும் முக்கிய தீர்மானங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றை இணைத் தலைமை நாடுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை நிலைவரம் மோசமடைந்து செல்லுமானால் ஒரு கட்டத்தில் இணைத் தலைமை நாடுகள் இலங்கை நிலைவரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment