Monday, 9 July 2007

ஈழச்செய்திகள் 090707

Posted on : Mon Jul 9 6:23:10 EEST 2007
இரு தரப்புகளும் விரும்பும் வரைக்கும் நோர்வேயின் அனுசரணை தொடரும் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர்

இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பும் வரைக்கும் இலங்கை அமைதி முயற்சிகளில் நோர்வே அனுசரணைப் பணியில் தொடர்ந்து ஈடுபடும்.இவ்வாறு தெரிவித்துள்ளார் நோர்வே தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கர். öகாழும் பில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.அனைத்துலகத்தின் அமைதி மற்றும் அபிவிருத்திப் பணிகளில் நோர்வே பல ஆண்டு காலமாக ஈடுபடுத்திக் கொண்டுள் ளது. அந்தப் பணியானது எமது நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் ஒருங்கி ணைந்த ஒன்றாகும்.முன்னாள் சிறிலங்கா அரச தலைவர் சந் திரிகா குமாரதுங்க மற்றும் விடுதலைப் புலி கள் வேண்டுகோள் விடுத்ததற்கமைய நாம் இலங்கை இனப்பிரச்சினையில் அனு சரணைப் பணியில் ஈடுபட்டோம். மஹிந்த ராஜபக்ஷவினாலும் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இத்தகைய வேண்டு கோள்களுக்கமைய இலங்கை இனப்பிரச் சினைக்கு தீர்வுகாண்பதற்கான எம்மா லான அனைத்து உதவிகளையும் செய்துவரு கின்றோம். பொருளாதார நோக்கத்துடன் அனுசரணைப் பணி செய்யவில்லைஎமது அனுசரணையாளர் பணியை எதிர்த்து கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் முன்பாக எமது நாட்டின் கொடிகளும் கொடும்பாவிகளும் எரிக்கப் பட்டன. எமது பணிப்பாக நாம் கொடுத் திருக்கும் ஒரு சிறிய விலை இது. ஐக்கிய இலங்கையில் அனைத்து இன மக்களும் அமைதியாக வாழவேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும். இந்த நாட்டில் எமக்கு என்று எதுவித பொருளாதார உத்தி யோடும் நாம் ஈடுபடவில்லை என்று அவர் தமது பேச்சில் குறிப்பிட்டார். ஹான்ஸ் பிரட்ஸ்கர் இம்மாதத்துடன் தமது தூதுவர் பணியை நிறைவு செய்து ஒஸ்லோ திரும்பவுள்ளமை தெரிந்ததே.

Posted on : Mon Jul 9 6:22:23 EEST 2007

தொப்பிகலவில் 60 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தையே இன்னும் மீட்கவேண்டுமாம்

தொப்பிகலப் பிரதேசத்தில் இன்ன மும் 60 சதுரக் கிலோமீற்றர் பிரதேசத்தையே தாம் மீட்கவேண்டி உள்ளதாக இராணு வத் தரப்புத் தெரிவித்துள்ளது.தொப்பிகல பிரதேசம் 860 சதுர கிலோ மீற்றர் விஸ்தீரணம் கொண்டது. இதில் 800 சதுரக் கிலோ மீற்றர் பகுதியைப் படை யினர் மீட்டுள்ளனர்.விடுதலைப் புலிகள் வசம் உள்ள 60 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணம் கொண்ட பகுதியை மீட்பதற்கு படையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.நாரமுல்ல வடக்குப் பகுதியில் இருந்து படையினர் தொப்பிகல நோக்கியும் தொப்பி கல தெற்குப் பகுதியில் இருந்து நார முல்ல நோக்கியும் இரு முனைகளில் முன் னேறி வருகின்றனர். மிதிவெடிகளை அகற்றி நிலப்பரப்புகளை மீட்டுக்கொண்டே படையினர் நகர்வதால் அவர்களின் முன் னேற்றம் மெதுமெதுவாகவே நடைபெறு கிறது என்று இராணுவத் தரப்பு தெரி வித்துள்ளது.

No comments: