Tuesday, 10 July 2007

ஈழச்செய்திகள் 100707

''நாடு இருக்க வேண்டும். நாடு இருந்தால்தான் எதனையும் செய்யமுடியும். கழுத்து இருந்தால்தான் தாலிகட்ட முடியும் என்று ஒரு பழமொழி உண்டு. நமக்கு நாடு இருந்தால்தான் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும், அபிவிருத்தியையோ, ஏனைய வளர்ச்சிப் பணிகளையோ மேற்கொள்ள முடியும். எமது நாட்டைக்காக்க, அதனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார். ''
ராஜபக்ச

''தலைவர் பிரபாகரன் திருகோணமலை துறைமுகம், பொருளாதார மையங்கள் இல்லாத ஈழம் குறித்து சிந்திக்கவே மாட்டார்.''
ரம்புக்கல

''யுத்த நிறுத்த உடன்படிக்கையே தமிழ்மக்களை அழிவிலிருந்து காக்கும்''

தமிழ்ச்செல்வன்


தற்போது கிழக்கை கைப்பற்றியுள்ளோம் வடக்கில் பிரச்சினையென்றால் அதற்கும் நடவடிக்கை
வீரகேசரி நாளேடு

எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும். தற்போது கிழக்கை கைப்பற்றியுள்ளோம், வடக்கிலும் பிரச்சினை என்றால் அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நதிநீர் பிரச்சினை தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது:
நமக்கு முதலில் நாடு இருக்க வேண்டும். நாடு இருந்தால்தான் எதனையும் செய்யமுடியும். கழுத்து இருந்தால்தான் தாலிகட்ட முடியும் என்று ஒரு பழமொழி உண்டு.
நமக்கு நாடு இருந்தால்தான் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும், அபிவிருத்தியையோ, ஏனைய வளர்ச்சிப் பணிகளையோ மேற்கொள்ள முடியும்.
எமது நாட்டைக்காக்க, அதனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார். 98 வீதமான நடவடிக்கைகள் முடிவு நரக்காமுல்லவில் படையினர் வீரகேசரி நாளேடு கிழக்கு மாகாணம் முழுவதையும் படையினர் இன்னும் சில நாட்களுக்குள் தம்வசப்படுத்திவிடுவார்கள் அதன் பின்னர் கிழக்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான இராணுவ நகர்வுகளை தெளிவுபடுத்துவோம்.படையினர் தொப்பிகலையிலிருந்து ஐந்து, ஆறு கிலோமீற்றருக்கு முன்னாலுள்ள நரக்காமுல்ல என்ற இடத்திலேயே தற்பொழுது நிலைகொண்டுள்ளனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் எஸ். ஏ. பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
தொப்பிகலையை கைப்பற்றுவதற்கான 98 வீத படை நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டன மிகுதியாகவுள்ள இரண்டு வீதமான நடைநடவடிக்கைகள் மிகவும் கடினமானதாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தில் புலிகளின் இறுதி முகாம்கள் அமைந்துள்ள தொப்பிகல காட்டுபகுதியிலிருந்து ஆறு கிலோ மீற்றருக்கு முன்னாலுள்ள நரக்காமுல்ல என்ற இடத்திலேயே இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கின்றனர் தொப்பிகலையை அண்மித்த பகுதிகளிலிருந்து புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் குறைந்துள்ளன.
அண்மைகாலமாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் குண்டு தாக்குதல்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதனால் புலிகள் அந்த பிரதேசங்களிலிருந்து தப்பியோடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் கடுங்காட்டு பகுதிகளில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன அதனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர். தொப்பிகலையை கைப்பற்றுவதற்காக 98 வீதமான படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிந்து விட்டன மீதமுள்ள 2 வீத படை நடவடிக்கைகள் மிகவும் கடினமானதாகவே அமையும்.
தொப்பிகøலயை அண்மித்த பகுதியிலுள்ள புலிகளின் டோரா போரா முகாம்களை படையினர் கைப்பற்றி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை டோரா போரா பல முகாம்களை கொண்டுள்ள முகாம் தொதியாகும் அத்தொகுதியில் சிறு பிரிவையே படையினர் நேற்று தம்வசப்படுத்தியுள்ளனர்.

கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை
வீரகேசரி நாளேடு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கிழக்கு மாகாணத்துடனான ஈழத்தை பெற்றுக்கொள்வதற்கே கனவு கண்டு கொண்டிருக்கின்றார் அந்த கனவு பலிக்காது என்பதுடன் சகல வசதிகளையும் கொண்டுள்ள கிழக்கு மாகாணம் இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையே இல்லை என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கின்ற போது எந்த அரசாங்கம் இருந்தால் என்ன புலிகள் கிழக்கு மாகாணத்தையே தங்களது யுத்ததளமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தினர். கடந்த காலங்களில் புலிகளின் யுத்த பலம் கிழக்கிலேயே வெளிப்படுத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
பெறுமதியில்லாத கிழக்கு மாகாணத்தை அரசாங்கம் கைப்பற்ற முயற்சிக்கின்றது, அது முன்னரே படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதி என்று கூறி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் படைநடவடிக்கைகளை வைத்து அரசியல் இலாபம் தேடுவதற்கான முயற்சிகள் ÷மற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணம் எட்டு மாவட்டங்களை எல்லைகளாக கொண்டிருக்கின்றது இந்த மாகாணத்தில் தான் சிங்கள,தமிழ், முஸ்லிம், ஆகிய மூன்று இனங்களை சேர்ந்தவர்களும் சமமாக வீதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மாகாணத்தில் தான் கலை காலாசாரம் பொருளாதாரம் அரசியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கு முக்கியதுவம் பெற்ற இடங்களும் இருக்கின்றன. கடந்த கால வரலாற்றை எடுத்து பார்க்கின்ற போது எந்த அரசாங்கம் இருந்தால் என்ன புலிகள் கிழக்கு மாகாணத்தையே யுத்ததளமாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கும் படையினருக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சி காலத்தில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக்கொண்டிருந்த போது கிழக்கில் 400 மேற்பட்ட பொலிசாரை கைதுசெய்து இரத்தத்தை எடுத்துக்கொண்டு பின்னர் சுட்டுக்கொலைச்செய்திருந்தனர். அறந்தலாவ தாக்குதல் முஸ்லிம்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதõன தாக்குதல்க கிழக்கு மாகாணத்திலேயே கொள்ளப்பட்டன.
புலிகளின் பாரிய தாக்குதல்கள் கிளிநொச்சியிலோ முல்லைத்தீவிலோ மேற்கொள்ளப்படவில்லை கிழக்கை படையினர் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அரசியில் கட்சிகள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரநடவடிக்கைகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முயற்சித்து வருகின்றன.
விடுதலைப்புலிகள் தங்களது யுத்த பலத்தை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் காண்பிப்பதற்கு கிழக்கு மாகாணத்தையே பயன்படுத்தினர். கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மையங்கள், வெளிநாட்டு முதலீடு செய்வதற்கான இடங்கள், சுற்றுலாத்துறை, கடற்படையினரின் முகாம் மற்றும் வடக்கிற்கு உணவு வழங்குவதற்கான முக்கிய பாதைகள் இருக்கின்றன
அத்துடன் மாவிலாறு, சம்பூர்,பவள்பொயின்ட் ஆகிய இடங்களிலிருந்தே புலிகள் கடற்படையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டனர். எனினும் அரசாங்கம் கிழக்கை முழுமையாக மீட்டு அந்த மாகாணத்திற்கு தலைவர் ஒருவரை நியமிக்கும் வகையில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனினும் சிலர் கிழக்கு மாகாண படை நடவடிக்கைகளை தங்களது அரசியல் இலாபத்திற்கான பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் திருகோணமலை துறைமுகம், பொருளாதார மையங்கள் இல்லாத ஈழம் குறித்து சிந்திக்கவே மாட்டார். ஆனால் அவரது அந்த கனவு பலிக்காது 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பயங்கரவாத செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தை முற்றுப்புள்ளி வைப்பதற்கான முதல் படி ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு இல்லாத ஈழம் பிரபாகரனுக்கு தேவையில்லை இந்நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியலை பயன்படுத்துவது சாதாரணமானதல்ல என்பதுடன் அரசியல் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக தொழில்வாய்ப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றங்கள் இருக்கின்றன.
புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களுக்கான திட்டங்கள் முறியடிக்கப்படுகின்றன புலகளிலிடமிருந்து தப்பி வந்தவர்களும் படையினருக்கு தகவல்களை வழங்குகின்றனர் தகவல்களை யார் கொடுக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல தகவலே முக்கியமானதாகும் அவ்வாறான தகவல்களின் பிரகாரம் படையினர் செயற்பட்டமையினால் பாரிய தாக்குதல்களுக்கான திட்டங்கள் முறியடிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச ரீதியில் ஒடுக்குவதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைத்து வருகின்றது அதன்பிரகாரம் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளின் நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் புலிகளுக்கு நிதிசேகரிக்கும் ஒருவர்(இன்று காலலை) நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Posted on : Tue Jul 10 7:09:17 EEST 2007

பொருள்களின் விலை உயர்வை ஈடுசெய்ய 25 சதவீத ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கவும்

ஜனாதிபதியிடம் குடாநாட்டு அரச ஊழியர் கோரிக்கை குடாநாட்டில் அத்தியாவசிய மற்றும் எரிபொருள்களின் விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில் சகல அரச ஊழி யர்களுக்கும் 25 சதவீத விசேட ஊக்கு விப்புக் கொடுப்பனவு வழங்கவேண்டும்.மத்திய, மாகாண அரச முகாமைத் துவ உதவியாளர் சங்கம் மேற்கண்ட கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளது. ஜனாதிபதி, நிதி அமைச்சர், பொது நிர்வாக அமைச்சர் ஆகியோருக்கு சங் கம் அனுப்பியுள்ள கடிதத்தில் இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:2002ஆம் ஆண்டு செய்துகொள் ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் அத்தியாவசியப் பாவனைப் பொருள்களின் விலைகள் குறைவடைந்த தோடு, தரைவழிப் போக்குவரத்தும் இலகுவாகவே இருந்தது. இந்நிலைமை தொடருமென நாம் அனைவரும் எண்ணியிருந்த வேளையில், துரதிஷ்ட வசமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஏற்பட்ட யுத்தம் காணரமாக தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டதோடு, அத்தியாவசியப் பொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டதோடு அவற்றின் விலைகளும் விஷம் போல் அதிகரிக்க லாயிற்று. குடாநாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்கள் கப்பல் மூலம் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்டபோதிலும் கப்பல் கட்டணம், பொதிசெய் கூலி போன்றவற்றின் கார ணமாக அவற்றின் விலைகளும் ஏனைய சகல பொருள்களின் விலைகளும் அதி கரித்த வண்ணமே உள்ளன. இந் நிலை நீடித்துக்கொண்டிருப்பதனால் இந்த மேல திக விலை அதிகரிப்பினை ஈடுசெய்வ தற்காக 1990 களில் யுத்தப் பிரதேசங் களில் பணியாற்றிய அரச உத்தியோ கத்தர்களுக்கு அவர்களது திரட்டிய சம் பளத்தின் 25% தொகையை ஊக்குவிப் புப்படியாக வழங்கியது போன்று, தற் போதைய நிலைமை சீராகும் அல்லது வழமைக்குத் திரும்பும் வரை யாழ். குடாநாட்டில் பணியாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் அவர் களது தற்போதைய மொத்த சம்பளத் தின் 25% இனை ஊக்குவிப்புப்படியாக வழங்கியுதவுமாறு மேதகு ஜனாதி பதி,கௌரவ நிதி அமைச்சர் மற்றும் கௌரவ பொது நிர்வாக அமைச்சர் ஆகியோரைக் கோருகிறது என்றுள் ளது.

ஈ.பி.டி.பி.யும் கருணா அணியும் பகைமை தவிர்ப்பு கூட்டறிக்கை
வீரகேசரி நாளேடு

ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் (ஈ.பி.டி.பி.) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் (கருணா அணி) இடையில் அண்மையில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளதாக இரு அமைப்புக்களும் இணைந்துவிடுத்துள்ள பகைமை தவிர்ப்பு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினையடுத்து இரு அமைப்புக்களுக்கிடையேயும் பெரும் முறுகல் நிலையேற்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இருதரப்பு உயர்மட்ட கருத்து பரிமாற்றத்தின் பின்னரே சுமுக நிலைக்கான உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் பகைமை உணர்வினை மறந்து இருதரப்பும் தத்தமது வழியே செயற்படுவதென தீர்மானித்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பால் யாழ். மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
வீரகேசரி நாளேடு

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து யாழ். மாவட்ட விவசாயிகள் தாம் பயிர்ச் செய்கையில் ஈடுபட முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ். மாவட்டத்தில் பயிர்ச் செய்கைக்கு நான்கு தினங்களுக்கு ஒரு தடவை நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்யப்படுவது வழமை நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கு மண்ணெணெய் மட்டும் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் மண்ணெண்ணெயின் விலை திடீரென 16 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பெருமளவில் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களுக்கு பொருத்தமான விலை நிர்ணயம் மற்றும் சந்தைப் படுத்தல் வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையும் காணப்படுவதால் விவசாயிகள் பெரும் நட்டம் அடைகின்றனர். பெருமளவில் பொருட் செலவு செய்தே விவசாய உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.
யாழ். மாவட்ட விவசாயிகள் கணிசமான அளவு வெங்காயம் செய்கையில் ஈடுபடுவது வழமை ஏ 9 பாதை மூடப்பட்டதை அடுத்து யாழ். மாவட்டத்தில் இருந்து எந்த விதமான உற்பத்திப் பொருட்களும் வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.

No comments: