Friday 13 July, 2007

ஈழச்செய்திகள்: 130707

Posted on : Fri Jul 13 8:11:45 EEST 2007
அரசியல் ரீதியான வெற்றியாகவே தொப்பிகல மீட்புப் பார்க்கப்படுகிறது இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்

இலங்கையின் கிழக்கே உள்ள தொப்பிகல பகுதியை இராணு வம் கைப்பற்றியுள்ளமை இராணுவரீதியாக முக்கியமானதுதான் ஆனால், இது அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிரபல பாதுகாப்பு விமர்சகரும் ஆய்வாளருமான இக்பால் அத்தாஸ் தெரி வித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:சம்பூர், வாகரை போன்ற பகுதிகளில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தொப்பிகல பகுதிக்கு வந்த பின்னர் அங்கிருந்து இராணுவம் அவர்களை வெளியேற்றியமை, இலங்கை அரசைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றிதான். பதில் இனிவரும் வாரங்களில் தெரியும்ஆனாலும், கைப்பற்றிய பிரதேசங்களை அரசு எவ்வளவு காலம் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது கேள்விக்குரிய ஒன்று. இதற்கான பதில் இனிவரும் வாரங் களில் அல்லது மாதங்களில் தெரியவரும். 13 வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்றதொரு நிலைமை ஏற்பட்டது. அப் போது கிழக்குப் பகுதி முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என அன் றைய அரசு அறிவித்திருந்தது. இருந்தபோதும் மெல்ல மெல்ல முன்னேறி சிறுசிறுதாக்கு தலை நடத்திய விடுதலைப் புலிகள் தற்போது இருந்த நிலைக்கு தமது ஆதிக்கத்தைக் கொண்டுவந்தனர். இந்த இராணுவ நடவடிக்கையானது அரசியல் ரீதியானதொரு வெற்றியாகக் காண்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று. அரசு எதிர்பார்த்த பலனைத் தருமா?ஆனால், அரசு எதிர் பார்த்த அரசியல் பலனை இது தருமா என்பதற்கு இன்னும் ஒரு சில வாரங்களில் பதில் கிடைக்கும். விடுதலைப் புலிகள் இராணுவரீதியாகப் பலமிழக்கும்வரை இதுபோன்ற இராணுவத் தாக்குதல்கள் நடக்கும் எனக் கூறப்படுகிறது. கிழக்கைப் போன்றே வடக்கிலும் இராணுவம் இதுபோன்ற தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இராணுவத் தாக்குதல்கள் அதிகமாகும்போது, புலிகள் பின்வாங்குவதும், பின்னர் எதிர்த்துத் தாக்குதல் நடத்துவதும் கடந்த 25 வருடகால யுத்தத்தில் இருந்து தெரியவரும் ஒரு யுக்தியாகும். அதேபோன்றதொரு நிலைமையை விடுதலைப் புலிகள் எடுப்பார்கள் என்பதும் சந்தேகமில்லை. எனத் தெரிவித்துள்ளார்.

அரசுடன் பேசுவது சாத்தியமே இல்லை
புலிகளின் அரசியல் பொறுப்பாளர்

போர்த் தீவிரத்தில் வெறிகொண்டு, யுத்த முனைப்புடன் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ வின் இந்த அரசுடன் அமைதிப் பேச்சு சாத்தி யப்படாது. சமாதான முயற்சிகளுக்கும் வாய்ப்பு இல்லை.இவ்வாறு விசனத்துடன் கூறியிருக்கின் றார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன்.கிளிநொச்சியில் வெளிநாட்டுச் செய்தி யாளர் ஒருவருக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என இணையத்தளச் செய்திகள் குறிப்பிட்டன.போர்த் தீவிரத்தில் ஒரே முனைப்பாக மஹிந்த ராஜபக்ஷ அரசு இருக்கின்றது. அத னோடு அமைதிப் பேச்சுகளை நடத்துவது என்பது அபத்தமானது.சர்வதேசப் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமே எந்த அமைதிப் பேச்சுக்கும், எத்தகைய சமாதான முயற்சிக்கும் அடிப்படை இழையாக இருக்க முடியும்.அந்த ஒப்பந்தத்தை முழு அளவில் ஏற்று நடைமுறைப்படுத்த மஹிந்தரின் அரசு தயாரில்லை. அதனால், அமைதி முயற்சிகளோ, சமாதானப் பேச்சுகளோ இந்த அரசுடன் சாத்தியப்படப்போவதேயில்லை. என் றார் தமிழ்ச்செல்வன்.இதேவேளை இலங்கை அரசின் இரா ணுவ பொருளாதார மையங்கள் மீதும் கேந்திர நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலம் இலங்கை அரசின் பொருளாதாரத்தை தமது இயக்கம் சீர்குலைக்கப்போகின்றது என்று தமிழ்ச்செல்வன் எச்சரித்ததாக கிளிநொச்சியிலிருந்து ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்தார். ரொய்ட்டருக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:""மஹிந்த அரசு தனது இராணுவ நடவடிக்கைகள் மற்றும் இராணுவ ஆட்சியைத் தாக்குப் பிடித்துத் தொடர்வதற்கு அடிப்படையாக அமையும் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர நிலையங்களும், கட்டமைப்பு களுமே இனிமேல் எங்கள் இலக்குகளாகும்'' .இவற்றுள் ஸ்ரீலங்கா எரிபொருள் குதங்களும் உள்ளடக்கப்படும். இவ்வாறான பொருளாதார இலக்குகளை இலக்கு வைப்பதன் மூலம் பொருளாதாரத்தையும் இராணுவ படைவலுவையும் குறைப்பது சாத்தியமாகும் என்றார்.
யாழ்: உதயன்