Thursday, 26 July 2007

ஈழச்செய்திகள்:260707


Posted on : Wed Jul 25 5:48:13 EEST 2007 யாழ் உதயன்
உயர் பாதுகாப்பு வலயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு - கிழக்கு முழுவதிலும் இன்று பணிப் புறக்கணிப்புப் போராட்டம்
மூதூர் கிழக்கை அதி உயர் பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தியிருப் பதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முக மாக, வடக்கு கிழக்கிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழுகின்ற தமிழர்கள் இன்று பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடு படவுள்ளனர்.இந்தப் போராட்டத்துக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள் ளது.வடக்கு கிழக்கின் சகல மாவட்டங் களிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஒரே நேரத்தில் இன்று இந்தப் போராட்டத்தை நடத்த ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன என கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் கபளீகரம் செய்யப்படுகின்றன என்ற உண்மை நிலையை உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வ தேச மட்டத்திலும் அம்பலப்படுத்து வதற்கு இந்தப் பணிப் புறக்கணிப்பு வழிகோலும் என்றும் கூட்டமைப்பினர் கூறியுள்ளனர். தமிழர்கள் எல்லோரும் இன்று தமது பணி களை புறக்கணிக்க வேண்டும் என்று கூட் டமைப்பு அறிக்கை மூலம் தமிழ் மக்கள் எல்லோரையும் கேட்டுள்ளது.
Posted on : Wed Jul 25 5:47:58 EEST 2007 யாழ் உதயன்
கிழக்கு அபிவிருத்திக்கென 650 கோடி ரூபா ஒதுக்கீடு அமைச்சர் ரம்புக்வெல தகவல்
அரச படையினரால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவ டிக்கைகளுக்கென அரசு 650 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 180 நாள்களுக்குள் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின் றன என்று பாதுகாப்பு விவகாரங்கள் தொடர் பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம் புக்வெல தெரிவித்தார்.நேற்றுக் கொழும்பிலுள்ள தேசிய பாது காப்பு ஊடக மத்திய நிலையத்தின் கேட் போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இதுகுறித்து மேலும்தெரிவிக்கை யில்:எமது அரசு இரண்டு பிரதான விடயங் களுக்காக யுத்தத்தை தொடரவேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அரசியலில் சுதந்திரமான சிவில் நிர்வாகத்தை நிலை நாட்டுவதற்காகவும், பொருளாதார அபிவி ருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல் வதற்கும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அதனை முறியடிக்க அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும். கிழக்கு மாகாணம் படையினரால் விடு விக்கப்பட்டு அங்கு சிவில் நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் விஜித்த ஹேரத் அபேவர்தன படுகொலை செய்யப்பட்டார். இதிலிருந்து சிவில் நிர்வாகத்தை நிலை நாட்ட புலிகள் ஒருபோதும் விரும்பவில்லை என்று வெளிப்படுகிறது.மாவிலாறு தாக்குதலின்போது அரசு பொறுமையைக் கடைப்பிடித்தது. புலி களுக்கும் முன்னைய அரசிற்கும் இடை யில் செய்துகொள்ளப்பட்டதான உடன் படிக்கையைப் பேணுவதற்கே அரசு அத்தாக் குதலில் பொறுமை காத்தது.நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும்போது அரசினால் கைகட் டிப் பொறுமை காக்க முடியாது. எனவே தான் நாம் பதில் தாக்குதல்களை முன்னெ டுத்துச் சென்றோம். தற்போது அதில் வெற்றி கண்டுள்ளோம். கிழக்கு மாகாணம் முழமை யாக மீட்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு உள்ளூராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்தவிருக்கிறது என்றார்.
Posted on : Wed Jul 25 5:48:35 EEST 2007 யாழ் உதயன்
ஈழத் தமிழருக்கு நிம்மதியான வாழ்வை பெற்றுத்தர சர்வதேசம் தவறிவிட்டது!
அமெரிக்க தமிழ் அமைப்புகள் விசனம் அறுபது ஆண்டுகால இனப்படுகொலைக்குள் சிக்கி அழிந்து கொண்டிருக் கும் ஈழத் தமிழினத்துக்கு நிம்மதியான வாழ்வைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் தவறிவிட்டது என்று அமெரிக்காவிலுள்ள பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டி யிருக்கின்றன.ஈழத் தமிழர்கள் எதிர்நோக்கும் அவலங்களையும், அரசின் மனித உரிமை மீறல் செயற்பாடுகளையும் கண்டிக்கும் வகையில் வாஷிங்டனில் உள்ள தலை நகரக் கட்டடத்துக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடிய தமிழ் மக்கள் அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: தமக்கிருக்கும் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தமக் கென ஒரு சுய ஆட்சியை நிறுவித் தம்மைத் தாமே ஆள்வதைத் தவிர சுதந்திரத்தோடும் நிம்மதியோடும் வாழ்வதற்கு ஈழத் தமி ழர்களுக்கு வேறு வழியில்லை என்பதை அமெரிக்கத் தமிழர்கள் வெளிப்படையாகவும் உறுதியாகவும் வலியுறுத்துகின்றனர்.அறுபது ஆண்டுகால இனப்படு கொலைக்குள் சிக்கி அழிந்து கொண்டிருக் கும் தமிழினத்திற்கு நிம்மதியான ஒரு வாழ் வைப் பெற்றுத்தர சர்வதேச சமூகம் தவறி விட்டது. கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடைபெற்ற சமாதான முயற்சிகளின்போது ஸ்ரீலங்கா அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து தமிழர்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிசமைக்க உலகம் தவறி விட்டது.இப்போது போர் மீண்டும் தொடங்கி விட்டது.படுகொலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. காணாமற் போதல்கள் இன்னும் தொடர்கின்றன. ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களில் கொல்லப் பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் ஐயாயிரம் ஆகிவிட்டது.இருப்பினும், இந்த அரசை வழிக்குக் கொண்டுவர உலக சமூகம் எதுவும் செய்ய வில்லை அல்லது செய்ய விரும்பவில்லை. இத்தகைய நிலை இத்தகைய நிலை அமெரிக்கத் தமிழர் களை விசனத்திற்கும் சினத்திற்கும் உள்ளாக் கியிருக்கின்றது என்று உள்ளது.
Posted on : Wed Jul 25 8:21:24 EEST 2007 யாழ் உதயன்
கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்த படைக்கு மேலும் 30 ஆயிரம் பேர் அங்கிருந்து வடக்கு கிழக்கு கள முனைகளுக்குப் பலர்
கொழும்பில் பாதுகாப்பைப் பலப்படுத்து வதற்கென மேலும் 30 ஆயிரம் பேர் படை யில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.நேற்று தேசிய பாதுகாப்பு ஊடக மத் திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.கொழும்பில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படையி னரில் சிலர் வடக்கு கிழக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவென அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இத னால் கொழும்பின் பாதுகாப்பு நடவடிக்கை களுக்காக புதிதாகப் படையினர் சேர்க்கப்பட வுள்ளனர். மேலும் மன்னார் மடு தேவாலயப் பிர தேசம் யுத்தமற்ற சூனியப் பிரதேசமாக அறி விக்கப்பட்டிருப்பினும் அங்கு புலிகள் தங் களது தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இதனால் படை யினர் அங்கு பதில் தாக்குதல்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.அங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜயந்த விக்கிரம தெரி விக்கையில், கிழக்கு மாகாணத்தின் வவுணதீவு, வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய இடங் களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டு விட்டன. அதேபோல் மேலும் 10 பொலிஸ் நிலையங்களை கிழக்கில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டுள்ளது. மேலும் கறுப்பு ஜூலை தினத் தன்று கொழும்பில் தாக்குதல்களை மேற் கொள்ளவென புலிகள் கொழும்பிற்கு அனுப் பிவைத்திருந்த வெடிபொருள்கள் பாது காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டன. பொது மக்களின் உதவியினாலேயே இவற்றை நாம் மீட்க முடிந்தது.புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ள பல தந்திரோபாய வழிகளை கையாள்வர். இதில் பொதுமக்கள் அவதா னத்துடன் செயற்படவேண்டும் என்றார்.
Posted on : Wed Jul 25 8:12:54 EEST 2007 யாழ் உதயன்
அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் அடுத்த மாத நடுப்பகுதியில் முன்வைக்கப்படும் அமைச்சர் திஸ்ஸ விதாரண நம்பிக்கை
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண் பதற்கான அதிகாரப்பரவலாக்கல் யோசனைகளை அடுத்த மாத நடுப் பகுதி யில் அனைத்துக் கட்சிகளின் தெரிவுக் குழு முன்வைக்கும்.அனைத்துக் கட்சி தெரிவுக் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசி ரியர் திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரி வித்திருக் கிறார்.அதிகாரப்பரவலாக்கல் யோசனை கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. இக்குழுவுக்கு முன்மொழி யப்பட்ட சில விடயங்களில் பொது இணக் கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தற்போது தெரிவுக்குழு பிரதிநிதிகளுக்கு இடை யில் உள்ள முரண்பாடுகள் குறித்து கலந் துரையாடப்படுகின் றது. இக்குழு நாளாந்தம் கூடி ஆராய்ந்து வரு கின்றது. தீர்வு யோசனையின் இறுதி வடிவம் அனேகமாக அடுத்த மாத நடுப் பகுதியில் முன்வைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.
Posted on : Tue Jul 24 8:10:11 EEST 2007 யாழ் உதயன்
தமிழர்களுக்கு நில உரித்து எதுவுமில்லை; சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமுமில்லை
ஹெல உறுமயவின் தீர்வு யோசனையின் சாராம்சம் இது அனைத்துக்கட்சிக் குழுவுக்கு ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனை களின்படி தமிழர்களுக்கு இந்த நாட்டில் நில உரித்து இல்லை. அதனால் அவர்களுக்கு சுயாட்சி என்ற பேச்சுக்கே இடம்கிடையாது.இவ்வாறு தமது கட்சியின் தீர்வு யோச னைத்திட்டத்தை விளக்கியிருக்கின்றார் ஜாதிகஹெல உறுமயவின் பிரமுகரும் அக் கட்சியின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில.ஹெல உறுமயவின் தீர்வுத்திட்ட யோச னைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட் டம் ஒன்று கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தேசிய நூல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார்.தமிழர்கள்இந்த நாட்டின் சிறுபான்மை யினர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களுக்கு பிரஜாவுரிமை உண்டு. ஆனால் நில உரித்தோ, சுயாட்சி உரிமையோ அவர்களுக்கு இல்லை. சிங்களவர்களுக்கே உரித்தான ஒரே நாடு இது. தமிழர்களுக்கு சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது தான் எமது கட்சி முன்வைத்த தீர்வு யோச னையின் சாராம்சம் என்று விளக்கமளித் தார் அவர். ஜாதிக ஹெல உறுமய அனைத்துக்கட் சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முன்வைத் துள்ள யோசனைகளின் பிரகாரம் இந்நாட் டில் இரண்டு தேர்தல்கள் மாத்திரம் நடத் தப்படவேண்டும். கிராமசபைத் தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் மாத்திரமே அவை. இதன்மூலம் தேர்தல்களுக்காகச் செலவிடும் பாரிய நிதித்தொகையை மிச்சம் பிடிக்க லாம். என்றும் அவர் தெரிவித்தார்.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றவேண்டுமென்று பலரும் கூறுகின்றனர். ஆனால் ஹெல உறுமய நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு ஆதர வாகவுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவும் உடன்படிக்கையொன் றில் கைச்சாத்திட்டுள்ளன. அந்த உடன் படிக்கையில் உள்ள அம்சங்களில் கூடு தலானவை ஹெல உறுமய சமர்ப்பித்த யோசனைகளில் காணப்படும் விடயங் களே. அமைச்சர்கள் தொகை 20இற்கும் 25 இற்கும் இடையில் இருக்கவேண்டுமென எமது யோசனைகளில் உள்ளது. என்றும் அவர் சொன்னார்.
Posted on : Tue Jul 24 8:08:41 EEST 2007 யாழ் உதயன்
ஐ.நா. தலைமையகம் நோக்கி நாளை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளைக் கண்டித்தும் தமிழர் தாயகப் பகுதிகள் அரசி னால் சுவீகரிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக்கப்படுவதை எதிர்த்தும் ஜெனி வாவில் அமைந்திருக்கின்ற ஐக்கிய நாடு கள் சபையின் தலைமையகம் முன்பாக தமிழர்கள் ஒன்றுகூடி பேரணி ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.நாளை புதன்கிழமை நடைபெறவிருக் கின்ற இந்த எழுச்சிப் பேரணியில் சுவிஸில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் அனை வரையும் கலந்துகொள்ளுமாறு இப் பேரணியை ஏற்பாடு செய்திருக்கின்ற சுவிஸ் தமிழர் பேரவை கேட்டிருக்கின்றது.தாயகத்தில் தமிழ் உறவுகள் அரச பயங் கரவாதத்துக்கு இரையாகிக் கொண்டிருப் பதை ஐ.நா. உட்பட்ட சர்வதேசம் தடுத்து நிறுத்தவேண்டும் என்று இந்தப் பேரணி யில் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஏற் பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை ஈழத் தமிழர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு இன்னல்களையும் அரச ஒடுக்குமுறைகளையும் உலகறியச் செய்யும் நோக்குடன் சுவிஸில் தமிழர்கள் இந்த வாரம் முழுவதும் "சாவிலும் வாழ் வோம்' என்ற தொனிப்பொருளில் கவன யீர்ப்பு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Posted on : Tue Jul 24 8:09:10 EEST 2007 யாழ் உதயன்
லண்டனில் 29 தமிழ் அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதம்!
திருப்பி அனுப்ப வேண்டாமெனப் போராட்டம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட விருக்கின்றனர் எனக் கூறப்படும் 29 இலங் கைத் தமிழ் அகதிகள் லண்டனிலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய லண்டனில் இந்தத் தடுப்பு முகாமிலுள்ள 29 அகதிகளும் இன்று பிரிட் டனிலிருந்து மீளவும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே, ஜூலை 9ஆம் திகதி யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் அகதி கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற் கொண்டு வருகிறார்கள். சுப்பிரமணியம் அலோசியஸ் ஜூட் கிறிஸ்டி மற்றும் கோபாலசாமி இளையராஜா ஆகிய இந்த இரு தமிழர்களும் மோதல்கள் மிகுந்துள்ள வடக்கு இலங்கையிலிருந்து பிரிட்டன் வந்து அகதி அந்தஸ்து வழங்கும்படி சமர்ப் பித்திருந்த மனுக்கள் அதிகாரிகளால் நிரா கரிக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனி லுள்ள ஹொர்மொன்ஸ்வோர்த் அகதி முகா மில் தடுத்துவைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல மறுத்து உண்ணாவிரதம் ஆரம்பித் தனர். அதே முகாமிலிருந்து மேலும் 27 அகதிகள் கடந்த சனிக்கிழமை அவர்களுடன் சேர்ந்து சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர். இதனால் அதிகாரிகளுக்கு அகதிகள் பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.மோசமடைந்துவரும் அகதிகளின் உடல் நிலைஜூலை 9ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அகதிகள் இருவரும் எதுவித ஆகாராமோ, தண்ணீரோ அருந்தாமல் இருந்து வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமடைந்துவருவதாகக் கூறப்படுகின்றது.இலங்கையில் மோதல்கள் இடம்பெறுவதாலும், திரும்பிச் சென்றால் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படலாம் என்று அஞ்சுவதாலும் மீண்டும் இலங்கைக்குத் திரும்ப அவர்கள் மறுத்து வருகின்றார்கள்.அகதிகளைப் பார்ப்பதற்கு உறவினர்களும் நண்பர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். குறித்த இரு அகதிகளும் ஜூன் 24ஆம் திகதி நாடுகடத்தப்படவிருந்தனர். ஆனால் அவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்ட தால் நாடுகடத்துவது இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.ஏற்கனவே இவ்வாறு பிரிட்டனிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் அகதியொருவர் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.உயிருக்கு அஞ்சி அகதிஅந்தஸ்து கோரிவருபவர்கள் விடயத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மாறாக செயல்படுவதாக "எல்லைகள் அற்ற' மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.தாய்லாந்தில் உள்ள இலங்கை அகதிகள்இதேவேளை தாய்லாந்தில் தடுப்புமுகாங் களிலும் சிறைகளிலும் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கையர்கள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் எதுவும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்கள் என்று "ஏஸியன் ரிபியூன்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு முகாங்களிலும் சிறைகளிலும் வாடும் வெளிநாட்டவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு யு.என். எச்.சி.ஆர் போன்ற மனித உரிமை அமைப்புக்களுக்கும் அதிகாரிகள் அனுமதியளிக்கிறார்களில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கை மீண்டும் இணைத்து மாகாண சபைகளுக்கு அதிகபட்ச அதிகாரத்தை வழங்க இந்தியா வலியுறுத்தல்
[25 - July - 2007] தினக்குரல் -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இன நெருக்கடிக்கு காத்திரமான தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைத்தால் மட்டுமே சர்வதேச நிதியுதவி தொடருமென இணைத் தலைமை நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் கொழும்புக்கு கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் பிராந்திய வல்லரசான இந்தியா, இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி மாகாண சபைகளுக்கு அதிக பட்ச அதிகாரங்களை வழங்குமாறும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட வேண்டுமெனவும் கண்டிப்பான தொனியில் வலியுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தீர்வு யோசனைகளை துரிதமாக சமர்ப்பிக்க வேண்டுமென இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்து வருவதுடன் இதன் பின்னரே சமாதான முயற்சிகள் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமென சர்வதேச சமூகம் உறுதியாகத் தெரிவித்துவிட்டது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சியொன்றின் தலைவருடனான கலந்துரையாடலின்போது இந்தியாவின் எதிர்பார்ப்பு மற்றும் நிலைப்பாடு பற்றி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் இளைய சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்ததாகவும் அறிய வருகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி மாகாண மட்டங்களுக்கு மேலும் அதிகாரத்தைப் பரவலாக்கப்பட வேண்டுமெனவும் இந்தியா நிர்ப்பந்திப்பதாக இங்கு தெரிவித்துள்ள பசில் ராஜபக்‌ஷ இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட மாகாணங்களுக்குஅதிக அதிகாரங்கள் வழங்குவதை இந்தியா விரும்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பது மற்றும் சர்வகட்சிப் பிரதிநிதிகளின் தீர்வுத் திட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு குறித்தும் அங்கு ஆராயப்பட்டதாக மேலும் அறியவருகின்றது.
இதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட மற்றும் சில நாடுகள் இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை உடனடியாக வெளியிடுமாறு இலங்கைக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அறியவருகின்றது.
அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவை அழைத்து அமெரிக்காவின் அழுத்தம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளதுடன் விரைவில் தீர்வு யோசனையை வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இணைத் தலைமை நாடுகள் ஏற்கனவே இன நெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை உடன் வெளியிடுமாறும் அப்போதே நிதியுதவிகள் கிட்டுமென நிபந்தனை விதித்துள்ள நிலையில் இலங்கை பெரும் அழுத்தத்தில் சிக்குண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகஸ்ட் மாத நடுப் பகுதியில் இனநெருக்கடிக்கான தீர்வு யோசனைகளை வெளியிட முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். குடாநாட்டில் இடத்துக்கிடம் அதிகரித்த விலையில் பொருட்கள் விற்பனை
வீரகேசரி நாளேடு
யாழ். மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இடத்திற்கிடம் நேரத்திற்கு நேரம் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பொருட்களை நியாய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என யாழ் மாவட்ட செயலகம் விலை நிர்ணயம் செய்த போதிலும், அவை பத்திரிகை அறிக்கையாகவே இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். யாழ். மாவட்டத்தில் அரிசி, சீனி, கோதுமை மா, சோப் வகை , சமையல் எண்ணெய் வகை, பால்மா வகை, சிறுவர்களுக்கான உணவுப் பொருட்கள், கால் நடை தீவனங்கள் என்பன உட்பட உணவுப் பொருட்களும் அத்தியாவசிய பாவனை பொருட்களும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குத்தரிசி, நாட்டரிசி ஒரு கிலோ அரிசியின் தரத்திற்கு ஏற்ப 90 ரூபாவில் இருந்து 120 ரூபாவரையும் ஒரு கிலோ சீனி 65 ரூபாவில் இருந்து 75 ரூபா வரையும் சோப்பு வகை 28 ரூபாவிலிருந்து 35 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
சன்லைட் சோப் 32 ரூபாவுக்கும் அதிகமான விலையில் 400 கிராம் பைக்கட் பால்மா வகைகள் 195 ரூபாவுக்கு மேற்பட்ட விலையிலும் முட்டைக் கோழித்தீவனம் 50 கிலோ கிராம் மூடை 3500 ரூபாவுக்கு மேற்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. விலைகளில் நகரப் பகுதிக்கும் கிராம புறங்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் காணப்படுவதோடு, பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களும் தனியார் துறையுடன் போட்டி போட்டு அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். யாழ். மாவட்டத்தில் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட நியாய விலையில் விற்பனை செய்ய வேண்டும் என யாழ். மாவட்ட செயலகம் அறிவித்தல் செய்து பத்திரிகையில் அறிக்கைகள் விட்ட போதிலும் அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விலை அதிகரிப்பு தொடர்பாக சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அதிகாரி காரணம் கூறி தப்பிக் கொள்வதாகவும் பொதுமக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு பொருத்தமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பல நோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நிலை மாற்றப்பட்டு தனியார் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலைமையை சாதகமாக பயன்படுத்தி தனியார் துறையினர் பொருட்களை பதுக்கி வைத்து விரும்பிய விதத்தில் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்வதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் விலை அதிகரிப்பு தனியார் துறையினரின் ஏகபோக நிலை தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
விலை நிர்ணயத்தை கண்டிப்பான முறையில் கடைப்பிடிப்பதும் தனியார் துறையின் பொருட்கள் விநியோகத்தில் பெருமளவு தலையீடு செய்வதும் எதிர்பாராத பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எது எப்படி இருந்தாலும் சம காலச் சூழ் நிலையில் யாழ். மாவட்டத்தில் பொருட்களில் விலை அதிகரிப்பு பொதுமக்களுக்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
செய்தித் தொகுப்பு: ENB

No comments: