Tuesday, 31 July 2007

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசத்தில் அமெரிக்க இராணுவத்தளம் அமைக்க சேவகம் செய்யும் இந்திய விஸ்தரிப்புவாத அரசு - ENB

சம்பூர் அனல் மின்நிலையம் குறித்து ஆராய்வதற்கு இந்திய அமைச்சர் வருகிறார்
வீரகேசரி

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கென இந்திய மின்சாரத் துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். அவர்கள் சம்பூர் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டதும் அங்கு அனல் மின் நிலையத்தை நிருமாணிக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் என்று மின்சக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
கஹவத்தையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது :
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டாவது அனல் மின் நிலைத்தின் செயற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் சம்பூர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அனல் மின்நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய இந்திய மின்சக்தி அமைச்சர் தலைமயிலான குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். இந்திய குழுவினர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதும் அனல் மின்நிலைய பணிகள் ஆரம்பமாகும்.
எதிர்வரும் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதி இலங்கையில் மின்சார உற்பத்திக்கு சவால் மிகுந்த காலமாக அமையும். கடந்த 10 வருடங்களில் 80 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய குக்குலேகங்கை மின் திட்டம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நாட்டின் வருடாந்த மின்சார தேவை 150 மெகாவோட்டுக்களால் அதிகரிக்கின்றது.
அதிகமான மின்சாரம் டீசல் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்நிலையில் டீசலின் விலை உயரும்போது அது மின்சாரக் கட்டணத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் மின்சார சபைக்கு தினம் ஐந்து கோடி ரூபா நட்டம் ஏற்படுகின்றது. இருப்பினும் மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.

No comments: