Thursday, 23 August 2007

ஈழச்செய்திகள்; 230807

அனத்துப்பல்கலைகழக மாணவர் ஆர்ப்பட்டம் மீது ராஜபக்ச அரசின் வன்முறை

கொழும்பில் பல்கலை மாணவர்கள் பேரணி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீசிக் கலைப்பு! தடியடி ரகளையில் ஐந்து பேர் படுகாயமுற்றனர்

பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்தும் அரசின் திட்டம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும் பில் நேற்று நண்பகல் நடத்திய ஆர்ப் பாட்டப் பேரணி கண்ணீர்ப்புகைக் குண்டு வீசி அடித்துக் கலைக்கப்பட் டது. இதில் ஐவர் படுகாயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டுள்ளனர். லிப்டன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்துக்காகக் கூடிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர் அங்கிருந்து பேரணியாக ஜனாதிபதி மாளிகை நோக்கிச் செல்ல முயன்றபோதே இந்த ரகளை ஏற்பட்டது.கொழும்பு, கொள்ளுப்பிட்டிச் சந் திக்கு வந்த பல்கலை மாணவர்கள் உயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி மாளி கையை நோக்கிச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதற்குத் தடை விதித்தனர். மறிப்புத் தடைகளை ஏற் படுத்தினர். எனினும் அதனையும் மாண வர்கள் மீறி தாண்டிச் செல்லவே மாண வர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. தண்ணீர் புல்டோசர்கள் மூலம் தண்ணீரை பீச்சி யடித்தும் தடியடி நடத்தியும் அவர்க ளைத் தடுக்க முயன்றனர். எனினும் மாணவர்கள் ஆவேசத்தில் நின்றதால் இறுதியாகப் பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.இதனால் அல்லோலகல்லோலப்பட்ட மாணவர்கள் சிதறியோடவே பலர் இழுபறி நெரிசலுக்குள் சிக்கினர். மற்றும் பலர் தடியடிக்கு இலக்காகினர். ஐவர் மட்டும் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலை யில் மற்றும் நவலோ க வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டனர் என மாணவர் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவத்தால் நேற்று நண்பகல் கொள்ளுப்பிட்டி பகுதி எங்கும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது டன் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

வாழைச்சேனை தமிழ்ப் பிரதேசத்தில் அத்துமீறிய குடியேற்றத்துக்குத் தடை!

நாடாளுமன்றில் அடித்துக் கூறுகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஒற்றையாட்சி முறையின் கீழ் முன்வைக் கப்படும் எந்த ஒரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள். இந்த அரசிடம் தமிழ் மக் களுக்கு அவர்களின் அடிப்படை உரிமை களை வழங்குகின்ற அல்லது நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துகின்ற திட்டங்களும் இல்லை, அக்கறையும் இல்லை.இப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தினார்.இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வ கட்சி மாநாட்டில் சர்வகட்சிப்பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பாக சபையில் நேற்று ஏற்பட்ட சர்ச் சையின்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் கூற்றை முற்றாகவே தாங்கள் நிராகரிக்கின்றார்கள் எனவும், அதனை ஏற்கப் போவதில்லை என் றும் ஜே.வி.பி. உறுப்பினர் விமல் வீரவன்ஸ இங்கு கூறினார். திஸ்ஸ விதாரண நாட்டைப் பிரிக்கும் புலிகளுக்கு ஆதரவான கருத்தை முன்வைத்துள்ளார் என்றும் விமல் குற்றம் சாட்டினார்.இவ்வேளையில் ஆளும் கட்சியின் சார் பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜெய ராஜ் பெர்னாண்டோபுள்ளே எந்த ஒரு தீர் வுத்திட்டம் முன்வைக்கப்பட்டாலும் அது ஒற்றை ஆட்சி முறையின் கீழ்தான் அமை யும், இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று கூறினார்.இதன் பின்னரே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார்.இந்த அரசிற்கு பிரச்சினைகளைத் தீர்க் கும் எண்ணம் கிடையாது. இனப்பிரச்சி னைக்கு நிரந்தரமான தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்கும் யோக்கியதையும் இந்த அர சுக்கு இல்லை.இவர்களுடைய போக்கும் பேச்சும் நாட் டில் மீண்டும் ஒரு பாரிய யுத்தத்தையே வெடி க்கச் செய்யும்.இவர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டிருக் கும் ஒற்றையாட்சி முறையினால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. அதனை தமிழ் மக்கள் ஏற்கவும் தயாராக இல்லை. சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர் வையே நாம் எதிர்பார்க்கின்றோம். என் றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

வருட இறுதிக்குள் ரணிலை ஜனாதிபதியாக்க புலிகளைத் தூண்டுகிறாராம் சிவாஜிலிங்கம்!

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை இந்த வருட இறுதிக்குள் ஜனாதி பதியாக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் லண்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு புலிகளிடம் வேண்டுகோள் விடுத்தார் என ஆளுங் கட்சியின் பிரதம கொர டாவான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.ஆனால், அப்போது குறுக்கிட்ட எதிர்க் கட் சித் தலவைர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தவரே இந்தச் சிவாஜிலிங்கம்தான் என்று கூறினார்.நாடாளுமன்றம் நேற்றுக்காலை சபாநா யகர் தலைமையில் கூடியவேளை சபாநாயகர் அறிவித்தல்கள் சிலவற்றை விடுத்தார். அப்போது ஏற்கனவே சிவாஜிலிங்கத்தால் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட சிறப் புரிø ம பிரச்சினை, நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என் றும் சபாநாயகர் கூறினார்.அச்சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்தபோதே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறியவை வரு மாறு:சிவாஜிலிங்கத்தின் சிறப்புரிமை பற்றி இங்கு பேசப்படுகிறது. ஆனால், அவர் லண்டனில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு ரணில் விக்கிரமசிங் கவை ஜனாதிபதியாக்குமாறு புலிகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.இந்த வருட இறுதிக்குள் ரணிலை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றும் இல்லையேல் எஞ்சியுள்ள வடக்கையும் மஹிந்த ராஜபக்ஷ கைப்பற்றிவிடுவார் என்றும் அவர் கூறியிருக்கின்றார் என்றார் ஜெயராஜ்.அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோஸப் மைக்கல் பெ ரேரா, ""சிவாஜிலிங்கம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். அவர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூறிய கூற்றை அவர் இப்போது இங்கு இல்லாத நிலையில் கூறுவதும் விமர்சிப்பதும் அவரது சிறப்புரிமையை மீறும் செயல். ஏதோ ஒரு பத்திரிகையில் வந்த செய்தியைத் தூக்கிப்பிடித்துக்கொண்டு அமைச்சர் ஜெயராஜ் இப்படிக் கூறுவது சரியில்லை'' என்றார்.அப்போது சபாநாயகர், ""இது தொடர் பாக உங்களிடம் சரியான ஆதாரம் உள் ளதா? அதைக் காண்பிக்க முடியுமா?'' என்று ஜெயராஜிடம் கேள்வி எழுப்பினார்.""நிரூபிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்போது வேண்டும் என் றாலும் நான் அவற்றைக் காண்பிப்பேன்'' என்று ஜெயராஜ் பதிலளித்தார்.அப்போது ரணில் விக்கிரமசிங்க எழுந்து ""கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வடக்கு கிழக்குத் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தவர் இதே சிவாஜிலிங்கம் தான்'' என்றார்.

நாடாளுமன்றின் சிறப்புரிமைகளை பறிக்க உயர்நீதிமன்றம் முயல்கின்றது சபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சீற்றம்

நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளையும் அதிகாரங்களையும் உயர்நீதிமன்றம் படிப்படியாக பறிக்க முயல்கின்றது. இங்கு 225 உறுப்பினர்களால் மேற்கொள்ளளப்படும் விடயங்கள் மீது உயர் நீதிமன்றத்தில் இருவர் தீர்ப்பு வழங்குவதைத் தொடரவிடக்கூடாது. நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன் றத்தில் வலியுறுத்தினார்.அரச பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்கள் சேர்க் கப்படுவது தொடர்பாகப் பழைய மாணவர்கள் என்ற போர்வை யில் உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. அவற்றில் ஜயசிறி இந்தமான என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான் இந்த நாடாளுமன்றத்தில் கூறாத பல விடயங்கள், நான் கூறியவையாகத் திரித்துக் கூறப்பட்டுள்ளன. இது தனிப்பட்ட முறையில் எனது சிறப்புரிமைகளை மீறும் செய லாகும் என் றும் ரணில் விக்கிரமசிங்க சபையில் சுட்டிக்காட்டினார்.நேற்றுக்காலை நாடாளுமன்றம் கூடிய போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க சிறப்புரிமை மீறல் தொடர்பான விடயம் ஒன்றை அங்கு முன்வைத்தார்.அங்கு அவர் கூறியவை வருமாறு:முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்க் கப்படுவது தொடர்பாக உயர்நீதி மன்றம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிய வழி காட்டல்கள் தொடர்பாக நான் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்தேன். உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்கள் பின்பற் றப்பட்டால், அது இலவசக் கல்வி முறைக்கே ஆப்புவைக்கும் ஒரு காரணியாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டினேன்.பின்னர் இவ்விடயம் தொடர்பாக விவா தம் ஒன்றும் இங்கு நடத்தப்பட்டது. விவா தத்தின்போது சகல தரப்பு உறுப்பினர்களா லும் முன்வைக்கப்பட்ட கருத்துகளின்படி, ஏற்கனவே ரத்துச் செய்யப்பட்ட சுற்று நிரு பத்தில் காணப்படும் சில விடயங்கள் திருத் தப்பட்டு, 2008 ஆம் ஆண்டிற்கான மாண வர்கள் அனுமதியை மேற்கொள்வது என் றும், பின்னர் பொதுவான தேசிய கல்விக் கொள்கை ஒன்று வகுத்து அதனடிப்படை யில் உரிய ஏற்பாட்டை நாடாளுமன்றத் தில் சட்டமாக்கிய பின் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் முதலாம் தரத்துக்கு மாணவர் களை அதன் அடிப்படையில் சேர்த்துக் கொள் வது என்றும் இங்கு பொதுவான இணக்கம் காணப்பட்டது.நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்ஆனால், உயர்நீதிமன்றத்தின் வழிகாட் டல்கள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து இப்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட் டுள்ளது.இது நாடாளுமன்றத்தையே அவமதிக் கும் ஒரு செயலாகும். நாடாளுமன்ற நிலை யியல் கட்டளைகள் மற்றும் சிறப்பேற்பாடு களின்படி நாடாளுமன்றத்தில் பேசப்படும் விடயங்கள் குறித்தும் தீர்மானங்கள் தொடர் பாகவும் நாடாளுமன்றத்திற்கு வெளியே எவரும் விமர்சிக்கவோ கருத்துத் தெளி விக்கவோ முடியாது. வேடிக்கையானவையாக இருக்கின்றனஏற்கனவே இச்சபையில் இதுபோன்ற விடயங்கள் விவாதிக்கப்பட்டபோது அப் போது சபாநாயகராகவிருந்த அநுர பண்டார நாயக்கா உறுதியான தீர்ப்புகளை வழங்கி யுள்ளார்.இப்பொழுது இடம்பெறும் விடயங்கள் வேடிக்கையானவையாக இருக்கின்றன. இங்கே சபையில் நாம் பேசுகின்றோம். கல்வி அமைச்சர் விளக்கம் அளிக்கின்றார். பின் னர் ஒரு தீர்மானத்திற்கு வருகின்றோம். ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் ஒருவர் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கின்றார். உயர் நீதிமன்றம் கல்வி அமைச்சின் செய லாளரை உயர்நீதிமன்றத்திற்கு அழைக்கின் றது.அப்படியானால் கல்வி அமைச்சர் என்று ஒருவர் அவசியம் இல்லையே. இதில் இருந்து இது ஓர் அப்பட்டமான சிறப்புரிமை மீறல் என்பதும் நாடாளுமன்றம் அகௌர வப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் உறுதிப் படுத்தப்படுகின்றது.இந்தநிலை மீண்டும் ஏற்படக்கூடாது. இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றம் உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு அறிவிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும். என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை விடுத்து சர்வகட்சி குழுவை கலைக்க வேண்டும்

வீரகேசரி நாளேடு

சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கமான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உடனடியாக கலைத்துவிடவேண்டும். சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயற்பாடுகளை விடுத்து அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முன்வரவேண்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவேண்டு ம். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக இந்தியா தற்போது வழங்கிவரும் ஆதரவு குறித்து திருப்தியடைய முடியாது என்று ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இருப்பினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உடனடியா க தீர்க்கப்படவேண்டும். இந்த நாட்டில் வாழ்கின்ற இனம் என்ற அடிப்படையில் அவர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். எந்தவொரு இனமும் ஒடுக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை கூடவுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது :
இந்த நாட்டை இரண்டாக பிரிப்பதற்கு சர்வதேச சமூகம் பாரிய சதித்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழு நியமிக்கப்பட்டு அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.
முக்கியமாக அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் தீர்வு யோசனையை முன்வைக்க சர்வதேச சமூகம் பாரியளவில் முயற்சிக்கின்றது. முக்கியமாக சர்வகட்சி பிரதிநிதிகளின் செயற்பாடுகள் குறித்து ஜேர்மன் அவதானமாக இருக்கின்றது. இந்நிலையில் மொத்தமாக செயலிழந்துவிட்டதாக கருதப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மீண்டும் புத்துணர்ச்சி பெறப்போவதாக தெரிகின்றது. இதற்கு அனுமதிக்க முடியாது.
வெறுமனே சர்வதேசத்தை திருப்திபடுத்திக்கொண்டிருக்காமல் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் உடனடியாக கலைத்து விடவேண்டும். சர்வகட்சி பிரதிநிதிகள் தற்பேõதைய நிலையில் அர்த்தமற்றதாகிவிட்டது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளே அந்த குழுவில் உள்ளன. தற்போதைய தேவை பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுவதாகும். அதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். அதற்காக இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெறப்படவேண்டும். முக்கியமாக இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு குறித்து எம்மால் திருப்தியடைய முடியாது. எனவே இந்தியா பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் செயற்பாட்டுக்கு காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும்.
இதேவேளை சர்வதேச நாடுகள் பயங்கரவாதத்தை தோற்கடிக்க உதவிகளை வழங்கவேண்டுமே தவிர ஒருபோதும் இனப்பிரச்சினை தீர்வு செயற்பாட்டில் தலையிடக்கூடாது. அத்துடன் தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இதற்கு அராசங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். வடகிழக்கு துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். தமிழ் மக்களின் கல்வி மற்றும் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். இனப்பிரச்சினை ஏற்பட்டமைக்கான மூலகாரணத்தை நாம் தேடிப்பார்க்கவேண்டும்.

No comments: