இதுதான் ஸ்ரீறிலங்கா அரசு இனப்பிரச்சனைக்கு 'அரசியல் தீர்வுகாணும் சீத்துவம்!-enb
செய்தி:யாழ் உதயன்
அரசின் சொந்தத் தீர்வு: மாகாண சபை நிர்வாக முறையும் + ஒன்றும்
ஜனாதிபதி தெரிவித்ததாக பிரதம நீதியரசர் தகவல்
நாட்டின் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அரசு சொந்தத் தீர்வு ஒன்றை முன்வைக்கும் என்றும் அது அரசமைப்புச் சட்டத்துக்கான 13 ஆவது திருத்தத்துடன்(அதாவது மாகாண சபைகள் நிர்வாக முறையுடன்) மேலும் ஒன்று சேர்க்கப்பட்டதாக அமையும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக யாழ்ப்பாண நீதி மன்ற வளாகத்தின் நவீன கட்டடத் தொகுதியை நேற் றுத் திறந்து வைத்துப் பேசுகையில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கூறினார். யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தின் நவீன கட்டடத் தொகுதி பிரதம நீதியரச ரால் நேற்றுத் திறந்துவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வைப வத்தில் பிரதம நீதியரசர் உரையாற்று கையில் தெரிவித்தாவதுஇந்த நவீன அடுக்குமாடி நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழாவானது உண்மையிலேயே யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமன்றி பொதுவாக எந்த வித இன சமூக கலாசார வேறுபாடின்றி முழு இலங்கை மக்களுக் கும் மற்றும் நீதியையும் சமாதானத்தையும் விரும்பும் உலக மக்கள் அனைவருக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்நத நிகழ்வாகும்.நீதி நியாயம் அதுவாக நிலை நிற்கவோ அல்லது நிலைநிறுத்தப்படவோ முடி யாது. அது மனிதனின் ஆத்மீக லௌகீக அபிவிருத்திக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய தேவைப்பாடாகும். நீதி பிரதானமாக சமாதானத்துடன் ஒன்றிணைக்கப்பட்டதாகும். ஆகவே இந்நிகழ்ச்சியின் கருப்பொருளாக நாங்கள் சமாதானத்தையும் நீதியையும் முன்நிறுத்தியுள்ளோம். சமாதான அமுலாக்கமானது சகல தரப் பினரதும் விருப்பு வெறுப்புக்களைக் கருத் தில் கொண்டு உணர்வு பூர்வமான முறை யில் அணுகப்பட வேண்டியதொன்றாகும். யுத் தம் வெடிப்பதற்கு இப் பிரதேச மக்கள் முகம் கொடுக்க வேண்டியிருந்த குறை பாடுகளை, காரணிகளை நாம் அடையாளம் காணுதல் வேண்டும். இவற்றுள் பெரும்பாலான குறைபாடுகள் ஏற்கனவே நிவாரணம் வழங்கப்பட்டுள்ள சட்ட மற்றும் அரசியல் சம்பந்தமானவையாகும். குறிப்பாக 1987ஆம் ஆண்டு கொண்டு வரப் பட்ட 13ஆவது அரசமைப்புத் திருத் தச் சட்டத்தைக் குறிப்பிடலாம். இத் திருத்தச்சட்டத்திற்கு 20 வருடங்கள் கடந்திருந் தாலும் பிராந்தியத்தின் மனிதாபிமான, பொருளாதார நல் வாழ்வுக்கு இட்டுச் செல் லும் வகையில் அதனைப் பூரண அமுலாக் கலுக்குச் சந்தர்ப்பம் கிட்டவில்லை.ஜனாதிபதியைச் சமூக சம்பந்தமான சந்திப்பொன்றில் சந்திக்க நேர்ந்தபோது இத் திறப்பு விழா பற்றியும் யாழ்ப்பாணத் தில் எங்கள் நிகழ்ச்சிகள் பற்றியும் என்னிடம் ஆவலோடு வினவினார். இந் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அரசினாலான சகல உதவிகளையும் செய்வதாக உறுதி யளித்ததுடன் , நாட்டின் இன்றைய பரிதா பகரமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஒரு பூரணமான சொந்தத் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைப்பதாகவும் கூறினார்.அவரது சொந்தத் தீர்வுத்திட்டம் பற்றி தொடர்ந்து கூறுகையில்,"நாங்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தை "மேலுமொன்று'டன் அதாவது நல்லெண் ணத்தையும் வேற்றுமைகளையும் நிவர்த்தி செய்வதற்கான ஆவலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இராஜதந்திர மட்டத்திலான மற்றும் நாட்டுத் தலைவர்களுக்கிடை யிலான கலந்துரையாடல்களில் வெளிப் பட்ட மேற்படியான ஒரு சொற்றொடரை அவர் பாவித்திருப்பார் என நான் நினைக் கின்றேன். ஜனாதிபதியால் பிரயோகிக்கப்பட்ட "மேலும் ஒன்று' (கடூதண் ணிணஞு) என்று கூறப் பட்ட பதத்தின் அர்த்தமானது, இப் பிராந்தியத்திலே அழித்து நாசமாக்கப் பட்டுள்ளவைகளை அரசமைப்பு மற்றும் சட்ட ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பு வதற்கு தேவைப்படும் வழிகோலும் நேர்மையும், உண்மையுமாகுமென நான் நினைக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment