Thursday, 25 October 2007

கரும்புலி வீரர்களின் உடல்களை நிர்வாணப்படுத்தியமை குரூரம்!


கரும்புலி வீரர்களின் உடல்களை நிர்வாணப்படுத்தியமை குரூரம்!
ஐ.நாவிடம் விடுதலைப் புலிகள் முறைப்பாடு
யாழ்-உதயன் 24-10-07

அநுராதபுரம் வான்படைத்தளத்தை தாக்கியழித்த கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய ஸ்ரீலங்காவின் குரூர மான செயலானது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனிவா மாநாட்டு முடி வுகளுக்கு எதிரானது என்று ஐக்கிய நாடு கள் சபையிடம் தமிழீழ விடுதலைப் புலி கள் முறைப்பாடு செய்துள்ளனர்.ஐ.நாவின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச் சாளருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:அநுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது ஒக்ரோபர் 22 ஆம் திகதி கரும்புலிகள் தாக்குதல் நடத்திய பின்னர் மோதல் நடை பெற்ற பகுதியில் தமிழீழ விடுதலைப் புலி களின் 20 சடலங்களை அடையாளம் கண் டுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித் தது.உரிய மரபுகளைப் பின்பற்றிவரும் தமி ழீழ விடுதலைப் புலிகள் எமது போராளி களின் உடல்களை அனைத்துலக செஞ்சி லுவைச் சங்கத்தின் மூலமாக ஒப்படைக்கு மாறு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் போராளிகளின் உடல்களுக்காகக் காத்தி ருந்தபோது ஸ்ரீலங்கா இராணுவத்தின் செயற்பாடு எம்மை அதிர்ச்சியடைய வைத் துள்ளது.தாக்குதலில் உயிரிழந்த தமிழீழ விடு தலைப் புலிப் போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்தி அதனைப் பொதுமக்களின் பார்வைக்கு ஸ்ரீலங்கா இராணுவம் வைத்துள்ளது. அந்தப் படங்களை இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளோம். இது போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனிவா மாநாட்டின் முடிவுகளுக்கு எதிரானது என்பதனை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நாம் உறுதியாகக் கருதுகிறோம்.போரில் உயிரிழந்தோருக்கு பல்வேறு சமூகத்தினரும் உயரிய மதிப்பளித்து வருகின்றனர்.போரில் உயிரிழந்தோர் தொடர்பிலான ஜெனிவா மாநாட்டின் முடிவு சரத்து 130 ஐ நாம் சுட்டிக்காட்டுகிறோம்.உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளினது உடல்களை ஸ்ரீலங்கா இராணுவம் நிர்வாணப்படுத்தியமையானது அவர்களை நேசித்த குடும்பத்தினரைக் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.எமது இயக்க வரலாறு முழுமைக்குமே ஸ்ரீலங்கா இராணுவப் போர்க் கைதிகளையும் உயிரிழந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரையும் நாம் கௌரவத்துடனே நடத்தி மரியாதை செலுத்தியிருக்கிறோம் என்பதனையும் தங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: