மஹிந்த தரப்பிடம் நிதி பெற்றோமா? அடியோடு மறுக்கிறது புலிகள் அமைப்பு! யாழ்; உதயன்
நிலைமையைத் தெளிவுபடுத்தி தமிழ்ச்செல்வன் விசேட பேட்டி
"ஜனாதிபதித் தேர்தல் சமயத்திலும், பின்னரும் மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இரகசியமாகப் பேசி இணக்கத்துக்கு வந்தோம் என்றும், பெரும் தொகைப் பணத்தை மஹிந்த தரப்பிடமிருந்து கையூட்டாகப் பெற்றுக்கொண்டோம் என்றும் தென்னிலங் கையில் நடத்தப்படும் பிரசாரம் அப்பட்டமான பொய் யானது. தங்களின் அரசியல் அதிகாரப் போட்டிக்கு விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தும் தென்னிலங்கைச் சிங்களக் கலாசாரத்தின் வழமையான சித்து வேலைதான் இது.''இவ்வாறு திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உறுதிபடவும் தெரிவித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்."உதயன்',"சுடர் ஒளி' நாளிதழ்களுக்குத் தாம் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களைத் தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு மஹிந்த தரப்பினர் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பல கோடி ரூபா கையூட்டுக் கொடுத்து புலிகளுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தனர் என்றும்அந்த உடன்பாட்டின் அடிப்படையி லேயே தமிழர் தாயகத்தில் தேர்தல் பகிஷ் கரிப்பை அரங்கேற்றி, எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்க ளிக்க விடாமல் தமிழரைத் தடுத்து, மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத் தினர் என்றும் கடந்த சுமார் ஆறு மாதங்களாகத் தென்னிலங்கையில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது தெரிந்ததே. தென்னிலங்கையைக் கலக்கும் இந்த விவகாரத்தை ஒட்டி ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் மாறிமாறி பரஸ்பரம் குற்றம் சுமத்தி வருகையில் இவ்விடயம் குறித்து ஆராய நாடாளு மன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றிருக்கிறது. ஆனால் இன்றுவரை இவ்விடயம் குறித்து புலிகள் மூச்சே விடவில்லை.இவ்விடயத்தில் தங்களின் அசாதாரண அமைதி உட்பட சகல அம்சங்களுக்கும் தமிழ்ச்செல்வன் தமது பேட்டியில் "உதயன்', "சுடர் ஒளி' ஆசிரியருக்கு விளக்கமளித்தார்.அவர் கூறியவற்றின் தொகுப்பு வரு மாறு:ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரதான இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் சார்பிலுமே எங்களுடன் தொடர்புகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை பெரும்பாலும் கீழ் மட்டத்தில்தான் நடந்தன.மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஓர் அணி எங்களுடைய கீழ் மட்டத்தில் எமது நிர்வாக சேவைப் பிரிவு மட்டத்தில் வன்னிக்கு வந்து பேச்சு நடத்தி விட்டுச் சென்றது பற்றி எனக்குத் தெரியும்.அதில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் பஸில் ராஜபக்ஷ என்பவரும் வந்து சென்றார் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேல் அவ்விவகாரத்தில் ஒன்றுமில்லை. அந்த அணியின் கருத்துக்களை எமது நிர்வாக சேவைப் பிரிவினர் செவிமடுத்து எமக்குத் தகவல் தந்ததோடு விவகாரம் முற்றுப்பெற்று விட்டது.அதுபோலவே ரணில் பக்கத்திலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எங்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டன."தமிழர் தாயகத்தில் ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பு' என்ற எமது நிலைப்பாட்டைக் கைவிட வைப்பதற்கு பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் எல்லாம் எம்முடன் தொடர்பு கொள்ளப்பட்டமையும், நாம் எமது முடிவில் உறுதியாக இருந்தமையும் உங்களுக்கும் கூட நன்கு தெரிந்த விடயம்தான்.அவற்றை நான் விவரிப்பது அவசியமல்ல. என்றாலும் தென்னிலங்கை அரசியல் அதிகாரப் போட்டிக்கு தமிழர் விவகாரத்தை புலிகளின் தலையை போட்டு உருட்டுவது தென்னிலங்கை வழமை என்பதால் இதுகுறித்து நாங்கள் "ஸீரியஸாக' எடுக்கவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதிலளித்து நேரத்தைச் செலவிடுவதும் எமது வழமையல்ல, அது அர்த்தமற்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் தமிழர் தேசம் தொடர்பாக, ஈழத் தமிழர்களின் வழிகாட்டிகள், ஏக பிரதிநிதிகள் என்ற முறையில் ஒரு தீர்மானத்தை எடுத்து, மக்களை வழிப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடப்பாடு எமக்கு இருந்தது. சரியான அரசியல் பின்புல விவகாரங்களையும் கவனத்தில் எடுத்து நாம் அதனை மேற்கொண்டோம். எமது அரசியல் தீர்மானத்துக்காக யாரிடமோ நாம் பணம் வாங்கினோம் என்று கூறுவது எமது போராட்டத்தின் மகிமையையே கொச்சைப்படுத்தும் செயல்.அப்படியானால், இந்தச் செய்தி வெளிவந்த கையோடே ஒரு மறுப்பை வெளியிட்டிருக்கலாமே என்று எம்மிடம் நீங்கள் கேட்கலாம். நீங்கள் யாரும் (பத்திரிகையாளர்கள்) கேட்கவுமில்லை. நாம் பதிலளிக்கவுமில்லை.அத்தோடு இந்த விவகாரத்தில் எமது அமைப்பின் பெயர் இழுபட்டதால், இவ்விடயம் பற்றிய விவகாரம் தெற்கில் முற்றாக அம்பலமாகி, நிலைமை தெளிவாக ட்டும் என்று காத்திருந்தோம். எமது பெயரைப் பயன்படுத்தி யாரும் பணம் நிதி பெருமளவில் விளையாடியிருக்கக்கூடும். அது அம்பலமாகட்டும், யார் அப்படி எமது பெயரைப் பயன்படுத்தி நிதியை மஹிந்த தரப்பிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள் என்பவற்றை அறியவே நாம் பொறுத்துப் பார்த்திருந்தோம்.உண்மையில் அப்படிப் பணம் நிதி கைமாற்றம் ஏதேனும் தரப்பிடையே நடைபெற்றிருந்தால் அது பற்றிய உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கிறோம்.ஆனால் அத்தகைய சம்பவம் எதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் எந்தத் தொடர்புமே இல்லை என்பதை உறுதியாகக் கூறிவைக்க விரும்புகிறேன்.இப்படித் தெரிவித்தார் சு.ப. தமிழ்ச்செல்வன்.
No comments:
Post a Comment